Jump to content

கடவுள் இருக்கிறாரா.............?


கடவுள் இருக்கிறாரா?  

22 members have voted

  1. 1. கடவுள் இருக்கிறாரா?

    • கடவுள் இருக்கார்
      9
    • கடவுள் இல்லை
      8
    • சொல்லத் தெரியவில்லை
      2
    • சொல்ல விரும்பவில்லை
      3

This poll is closed to new votes


Recommended Posts

கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்று ஆராய முன் நீங்கள் கடவுள் என்று எதை அல்லது யாரை கருதுகின்றீர்கள் என்ற விளக்கம் வேண்டும். இதன் பின்பே நீங்கள் விளங்கி வைத்திருக்கும் அல்லது குறிப்பிடும் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி பதில் கூற முடியும். :D

எனவே, முதலில் கடவுள் என்று எதை அல்லது யாரை நீங்கள் கருதுகின்றீர்கள் என்பதை கூறிவிடமுடியுமா? :D

கடவுள் என்றால் பல பொருள் இருக்கின்றது.. உதாரணமாக கட + உள் = கடவுள் என்றும் கூறுவார்கள். அதாவது உனக்குள் நீ உள்ளே போய் உள்ளே கடந்து செல்லு என்பது இதன் அர்த்தம்!

Link to comment
Share on other sites

மேலும் தங்கள் அனைவருக்கும் சந்தேகம் இருந்தால் பகுத்தறிவை பயன் படுத்தும் முறை கட்டுரைக்கு வரவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23001

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது பச்சைக்குழந்தைகள், வயோதிபர்களைக் காப்பாற்றாத கடவுள் அப்பொழுது என்ன செய்தார்?. ஜோசப் பராராஜ சிங்கம், நத்தாட் தினத்துக்கு தேவாலயத்துக்கு செல்லாமல் இருந்தால் ஒருவேளை உயிருடன் இருந்திருப்பார். நவாலி தேவாலயத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது கடவுள் என்ன செய்தார்?. கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இருக்கும் போதும் மக்கள் கொல்லப்படுகிறார்களே, அப்பொழுது கடவுள் என்ன செய்தார்?. புத்தர் என்ற கடவுள் வாராது இருந்தால் இன்று பெளத்தர்கள் தோன்றி இருக்கமாட்டார்கள். பெளத்தர்கள் வராது இருந்தால் தமிழர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள்.

உண்மையில் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் போது தான் கடவுளைக் காணலாம்.

பிறப்பு இறப்பு எல்லாம் சக்தியில் நிலை மாற்றங்கள். கடவுள் வந்து குண்டு போடவில்லை. மனிதனே மனதை அளக்க அடக்க சக்தியின்றி அழிவைத் தேடுக் கொள்வதற்கு கடவுள் என்றதை ஏன் குறை சொல்ல வேண்டும்..!

மனித மனம் பிறப்பையும் இறப்பையும் சமனாகக் கருதுமா..??! பிறப்பால் மகிழும் மனிதன்.. இறப்பால் ஏன் வருந்த வேண்டும்..! ஆக்கவும் அழிவும் இன்றேல் சக்கரம் இயங்காது.. சக்தி நிலைக்காது..!

மனிதனின் துன்பத்துக்கு மனித மனங்கள் கொண்டுள்ள எண்ணங்களும் நிலைகளும் தெளிவின்மைகளும் காரணம் அன்றி கடவுள் அல்ல..! துன்பத்தில் கடவுளைத் தேடும் மனிதன் இன்பத்தில் ஏன் அதை மறந்துவிடுகின்றான். சுயநலக்காரனின் சக்திக்கு ஆற்றல் குறைவானதால்..அழிவும் பொதுவாகிப் போனது போல..!

குண்டு செய்யும் மனிதனும் அதை தலைல போடும் மனிதனும் அடுத்த மனிதனை மனிதனாக மதிக்க அவனின் வாழ்வுரிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளும் போது... மனிதரால் மனிதரில் தோன்றும் அழிவுகள் நிறுத்தப்படலாம்..! இதில் ஏன் கடவுளை அழைக்க வேண்டும். கடவுள் தான் எல்லா உயிர்களிலும் இயக்கும் சக்தியாக உள்ள போது.. அந்தச் சக்தியை துஷ்பிரயோகம் செய்யும் மனித மனங்களின் நிலைக்கு சக்தியைக் குறை சொல்ல முடியாது. தீயால் மூட்டவும் முடியும்.. தீயால் சமைக்கவும் முடியும்..! மனங்கள் கொண்ட சக்தி அமைதி பெறும் போது கடவுள் உங்களுக்குள்ளேயே இனங்காணப்படுவார்..! வெளியில் தேடப்பட வேண்டியதல்ல கடவுள் என்பது..! பிரபஞ்சமே கடவுள் தான்..! சக்தியின் இருப்பிடம் தான்..! :P :D

Link to comment
Share on other sites

வானவில்,

உண்மையில் மிகுந்த ஆர்வத்துடன் இதை உங்களுள் வினாவுகிறீர்களா அல்லது சும்மா பொழுதுபோக்கிற்கான பதிவா என்று தெரியவில்லை...ஒன்று மட்டும் நிச்சயம்: இங்கு நானோ அல்லது நெடுஸோ அல்லது வேறுயாருமோ விளக்கம் கூறி நீங்கள் உங்களுக்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. உண்மையில் அறியவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் என் ஆர்வத்திற்கு எட்டிவை இங்குள்ளன.

எனக்குள் ஏற்பட்ட கேள்வியைத்தான் உங்கள் எல்லோரிடமும் கேட்கிண்றேன், நான் எடுத்த முடிவு கடவுள் இல்லை என்பதுதான், ஆகெவேதான் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களிடம் இதை வினவினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ என்பது வேற விசயம்,மனிசன் கடவுள் என்று நடிப்பது தான் நிஜம்,கடவுளை வைத்து கணணியிலும்,வியாபாரத்திலும் இலாபம் தீட்டுவோர் பலர்,கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் மனிசன் இருக்கிறான்,அதில் நல்ல மனிசன் கெட்ட மனிசன் என்பது தான் பிரச்சினை

Link to comment
Share on other sites

கடவுள் இருக்கிறார் என்றாள், ஒரே சமயத்தில் எதற்க்காக நூற்றுக்கணக்காண கடவுள்களை வைத்து வழிபடுகிறீர்கள், ஒரு சமயத்துகுள்ளேயே ஆயிரம் சமயங்கள்...........? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மேல் பழியைப் போட்டுவிட்டு வலுசுலபமாக தப்பிக்கப் பார்க்கிறேம்.இவ்வளவு தூரம் எமது மககள் இறக்க காரணம் கடவுள் இல்லை.கந்தப்பு எங்கே மனச்சாட்சியை தொரிடு சொல்லுங்கள் பார்க்கலாம் நீங்கள் எழுதியது சர்யா என்று? எம் மீது முழு பிழையையும் வைத்துக் கொண்டு ஏன்கடவுளை நோவான்?

ஒவ்வோரு வீட்டுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் போய் ஓவ்வொருவர் குறை நிறை களைக் கேட்பது கடவுளின் வேலையல்ல.பதிலாக நாட்டுக்கொருவன் வீட்டுக்கொருவனாக படைத்துள்ளான்.அந்த நாட்டுக்காக எமது இனத்துக்காக படைக்கப்பட்டவர் தான் எமது தலைவர்.ஓட்டு மொத்த தமிழ் மக்களும் அவருடன் நின்று போராடி இருந்தால் இப்படி ஒரு இழப்பே இருந்திருக்காது.பக்கத்து ஊரில் மக்கள் இறக்கும் போது பக்கத்து வீட்டில் எமது உறவுகள் இறக்கும் போது நாங்கள் தப்பினால் போதும் என்று வந்தது மடடுமல்லாமல் இப்படி எமது துரொகத்தனத்தை கடவுள் மேல் பழியைப் போட்டு சுலபமாக தப்பிக்கப் பார்க்கிறோம்.ஆக கண்ணுக்குத் தெரியாத ஒருவரை எண்ணி புலம்புவதிலும் பார்க்க எமது கண் முன்னே கடவுளின் அவதார புருசன் இருக்கிறான்.யப்பானியர் மேல் குண்டுகள் போட்ட போது கடவுள் மேல் பழியைப் போட்டுவிட்டு இருக்கவில்லை?ஆக தமிழர்கள் தான்ல்லை;நாங்கள் தான்

Edited by eelapirean
Link to comment
Share on other sites

  • 16 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 04:39, ரஞ்சித் said:

கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை. 

இந்த பூமியில் உள்ள  உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டுமே ஆறறிவு.

அது ஏன் என புரியவில்லையா?

அந்த ஆறாவது அறிவை வைத்து அழிவுகளை தானே செய்கின்றீர்கள்? இதற்கு கடவுள் வந்து விலக்கு பிடிக்க வேண்டுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இந்த பூமியில் உள்ள  உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டுமே ஆறறிவு.

அது ஏன் என புரியவில்லையா?

அந்த ஆறாவது அறிவை வைத்து அழிவுகளை தானே செய்கின்றீர்கள்? இதற்கு கடவுள் வந்து விலக்கு பிடிக்க வேண்டுமா?

உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? 

எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? 

அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? 

எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? 

அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன்   வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா?  சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா?
அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்?
இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது.

9 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்?

தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

சிறப்பு 👍
விருப்பு அடையாளம் முடிவுவடைந்து விட்டது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கணாங்குருவி கூடு • ShareChat Photos and Videos

இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட...
அந்த குருவிகள் எந்த யூனியில் 
படித்திருக்கும் என 
ஒரு கணம் சிந்திப்பேன்.
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

எப்படி முதலாவது சமயம் அல்லது மதம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது. உலகில் எழுத்து உருவாகிய போது, பல சமயங்கள், பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. என்றாலும், அவை எப்படி உருவாகியது என்பதை அவர்கள் மறந்தே விட்டார்கள். ஆகவே ஒரு ஊகத்தின் அடிப்படையில் தான் இதற்கு விடை தேட வேண்டியுள்ளது. கற்கால மனிதன் எவனுக்கும் மதம் என்ற ஒன்று இருக்கவில்லை. அந்த ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தார்கள். அன்றைய காலத்தில் உலகம் மிகவும் பயம் நிறைந்ததாக இருந்திருக்கும். காடுகள், கொடிய மிருகங்கள், இடி, மின்னல், மழை, வெள்ளம், புயல் மற்றும் பூமி அதிர்ச்சி போன்ற ஆபத்து நிறைந்த இயற்கை அனர்த்தங்கள், சூழ ஆதி கால மனிதர்கள் வாழ்ந்தார்கள். பகலெல்லாம் சூரியனின் வெளிச்சம், இரவெல்லாம் பயமுறுத்தும் இருட்டு. அந்த கும்மிருட்டில் கொடிய மிருகங்கள் மூலம் ஆபத்து, இந்த பயத்தினால் இரவானால் குகைகளினுள் குடியிருப்பு. பகல் வந்த பின்பு தான் அவர்களுக்கு உலகமே மீண்டும் தெரியும். அப்பொழுது தான், அவன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று, குழுவாக வேட்டையாடி, கிடைப்பதை ஒன்றாக பகிர்ந்து உண்டான். அவன் பயந்தது பெரும்பாலும் இயற்கைக்கு மட்டுமே. இந்த பயம் தான் முதலாவது சமயத்தை. கடவுளை உருவாக்கி இருக்கும் என நாம் இலகுவாக  ஊகிக்கலாம். இப்படியான பாதுகாப்பற்ற உலகில், மக்களுக்கு ஒரு பாதுகாப்பான உணர்வு ஒன்றை ஏற்படுத்தும் முகமாகவும் தமது கட்டுப்பாட்டில் அடங்காத சுற்றுப்புற சூழலையும் தம்மால் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும், அந்த மனித இனக்குழுவில் ஒருவரோ அல்லது ஒரு சிலரோ - இவைகளை பார்த்து பார்த்து அவர்களின் இந்த பய உணர்வை போக்கி ஒரு ஆறுதல் அளிக்க, அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்கள். அந்த விளக்கமே கடவுளை, மதத்தை உண்டாக்கியது எனலாம். 


அந்த ஆதி மனிதனிடம் தன்னைப் பற்றியும் தான் வாழும் சூழ்நிலை பற்றியும் பல பல கேள்விகள் கட்டாயம் மனதில் எழுந்திருக்கும். எது இயற்கையின் பருவ கால சுழற்சியை கட்டுப்படுத்துகிறது? - கதிரவனின் நாளாந்த அசைவா?, விண்மீன்களின் அசைவா?, கடந்து செல்லும் கால நிலைகளா? .... எது தமது சுற்றுப்புற சூழலை கட்டுப்படுத்துகிறது? - எது அல்லது  யார் வெள்ளத்தை, மழையை, புயலை, வறட்சியை ஏற்படுத்துகிறது? / ஏற்படுத்துகிறார்கள்? ... எது கருவுறுதலை கட்டுப்படுத்துகிறது? - தமது இனத்தின்?, தமது வளர்ப்பு பிராணியின்?, தமது வளர்ப்பு பயிரின் செழிப்பை? ... தமது இனக் குழுவின் நிரந்தரத்தை அல்லது இருப்பை நிலைநாட்ட எப்படியான அறநெறி அல்லது ஒழுக்க நெறி தேவை? ...  எல்லாத்திற்கும் மேலாக, முக்கியமான கேள்வி, ஒரு மனிதன் இறந்ததும் அவனுக்கு என்ன நடக்கிறது? .. . விஞ்ஞான காலத்திற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த இவர்களால் இவைகளுக்கு ஒரு விடை அல்லது தீர்வு காணமுடியாது. ஏன்? இன்றும் கூட, கடைசிக்கு முதல் கேள்விக்கு - அறநெறி அல்லது ஒழுக்க நெறிக்கு - இன்னும் விவாதித்துக்கு கொண்டு இருக்கிறோம், கடைசி கேள்விக்கு - மறுமைக்கு - இன்னும் ஒரு ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த இரு கேள்விக்கும் [கட்டாயம் இறுதி கேள்வியான மறுமைக்கு] ஒரு ஊகத்தின் அடிப்படையிலாவது ஒரு முன் எச்சரிக்கையாக ஒரு பதில் வேண்டும். ஆதி மனித இனக் குழுவில் ஒரு சிலர் தமது தனிப்பட்ட  அனுமானத்தின் அடிப்படையில் விடை கண்டார்கள். அதுவே, முதலாவது கடவுள் மற்றும் கடவுள் நம்பிக்கை அமைப்பு முறை [சமயம்] தோன்றவும், முதலாவது சமய குருமார் அமைப்பு தோன்றவும், கடவுளை சாந்தப்படுத்த முதலாவது வழிபாட்டு சடங்குகள் தோன்றவும், கருவுறுதல் மற்றும் சுற்றுப்புற சூழல் அம்சங்களை கட்டுப்படுத்தும் முதலாவது சடங்குகள் தோன்றவும், இனக்குழு உறுப்பினர்களின் நடத்தை எதிர்பார்ப்புகளை விளக்கும் முதலாவது அறிவுறுத்தலும் அதற்கான  ஒழுக்கநெறி தோன்றவும் வழிசமை த்தது.  

 

ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை!

உலகின் முதல் நாகரிகம் கண்ட சுமேரியரின் இலக்கியத்தில் இருந்து இலகுவாக இதற்கு உதாரணம் கொடுக்கலாம்.


நன்றி 


கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, kandiah Thillaivinayagalingam said:

ஆகவே சுருக்கமாக கடவுளை மனிதன் தான் உண்டாக்கினான். அன்றைய சூழலில், ஒரு கட்டுப்பாட்டை, ஆறுதலை, நம்பிக்கையை ஏற்படுத்த ஒரு சிலர் செய்த சூழ்ச்சி என்று கூட சொல்லலாம். அதனால் அந்த ஒரு சிலர் சாதாரண மனிதர்களுக்கும், கடவுளுக்கும் இடையில் ஒரு தூதுவராக , குருவாக தன்னை திடப்படுத்திக் கொண்டான். அவனுக்கு கடவுள் என்று ஒன்று இல்லை என்று நன்றாகத் தெரியும், ஆனால் இருக்கு என்றால்த் தான் அவனின் இருப்பும் இருக்கும். அது தான் உண்மை!

உண்மை.

இருந்தாலும் ஒரு கேள்வி.

இந்த பூகோளத்தை தவிர்த்து  அனைத்தையும் மனிதனே உருவாக்கினான். நேரகாலங்களை உருவாக்கியது முதல் ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டியது வரைக்கும் மனிதனின் செயல்கள் தான்.அப்படியிருப்பினும் மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்கலாம் என நம்புகின்றீர்களா அல்லது அது பற்றி ஏதாவது ஊகிக்கின்றீர்களா?

இடையூறு செய்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடையூறு ஒன்றும் இல்லை

பிரபஞ்சத்துக்கு இன்றைய எம் நிலையில் [முப்பரிமாண உலகம்], அறிவில், எல்லை இது தான் என வரையறுக்கமுடியாது.  

பிரபஞ்சம் 45 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் செல்கிறது. என்றாலும் இன்னும் அது வரையறுக்கப்பட்டதா அல்லது எல்லையற்றதா என்பதை அது எமக்கு இன்னும் சொல்லவில்லை. அதற்கு அப்பால் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கொண்டே இருக்கிறது?  ஒன்று நிச்சயம்: பிரபஞ்சத்திற்கு ஒரு விளிம்பு இல்லை. இயற்பியல் எல்லை இல்லை - சுவர் இல்லை, எல்லை இல்லை, பிரபஞ்சத்தின் விளிம்புகளைச் சுற்றி வேலி இல்லை.

அப்படித்தான் மனிதனை மீறிய சக்தி ஒன்று இருக்க இல்லையா என்ற கேள்வியும் விடை இல்லாமல் தொடர்கிறது. 

ஆனால் அதற்காக, அதற்கு ஒரு உயிர் கொடுத்து, உருவம் கொடுத்து, பெயர் கொடுத்து, கொள்கை கொடுத்து சமயங்கள்  உண்டாக்குவதால், பிரச்சனை வளருமே ஒழிய தீராது. 

"அன்றும் திரு உருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திரு உருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட்கு என் உரைக்கேன்
எவ்வுருவோ நின் உருவம் ஏது."

மிகவும் எளிய பாடல் இது. அன்று உன் திரு உருவம் காணாமலே உன் மேல் காதல் கொண்டேன். இன்றும் உன் திரு உருவம் காண்வில்லை 
என்னிடம், "உன்னுடைய தலைவனின், இறைவனின் உருவம் என்ன " என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன் என்கிறது இந்த பாடல் 

அதாவது மனிதனை மீறிய சக்தியை, சத்தியாகவே நிறுத்திவிட்டார். அதைத்தான் என்னால் இன்று கூற முடியும். 

அதை கடவுளாக்கி , உருவம் கொடுத்து, பிரச்சனைகளை, அடிபிடிகளை வளர்ப்பதால் உண்மையான மனிதனுக்கு பிரயோசனம் இல்லை 

உதாரணமாக, யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர் கைப்பற்றி ஆண்ட காலத்தில், கிராமவாசிகளை ஓர் இடத்தில் கூடச் சொல்லி, பின் கிறிஸ்தவ மதப் போதகர், உங்கள் பொய் கடவுளான சிவன் முருகன் போன்றோரை நீங்கள் நிராகரித்து எங்கள் உண்மைக் கடவுளான ஜேசுவை ஏற்றுக் கொள்ளுங்கள் என கேட்டனர். இது ஒரு வேண்டுகோள் அல்ல, இது ஒரு போர்த்துக்கேய அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ஒரு கட்டளை.- பைபிளுடன் தொடங்கு, அது வெற்றி தரவில்லை என்றால், வாளை பாவி என்பதாகும் - அபராதம் அல்லது உடல் ரீதியான தண்டனை போன்றவற்றுக்கு எதிரான பயம், அந்த கிராம வாசிகளை, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கொண்டாட்ட நாட்களிலும் ஒழுங்காக கிறிஸ்தவ ஆலயங்களுக்கு போகவைத்தது.

இது ஒரு சிறு உதாரணமே. ஆகவே தான் சத்தியை, அதை முழுதாக அறியும் மட்டும் அதை  'மனிதனை மீறிய சக்தி'யை விட்டுவிடுவோம் 

நன்றி   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இந்தக் கேள்விக்கு, "உண்டென்பார்க்கு உண்டு; இல்லையென்பார்க்கு இல்லை", "ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே" என்றெல்லாம் சுற்றி வளைக்காமல் பின்வருமாறு சொல்ல விரும்புகிறேன் :

ஆதி காலந்தொட்டே பெருந்திரள் சமூகத்தில், "நமக்கு மேல் ஒரு சக்தி நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. அதுதான் கடவுள்" எனப் பொதுவாக வரையறுத்து, ஒவ்வொரு இனக்குழுவும் தாம் விரும்பிய வடிவம் கொடுத்து, சிலர் தமக்கு வசதியான சட்ட திட்டங்களை வகுத்து மத நூல்களை உருவாக்கி வாழ்கின்றனர். இந்த 'கடவுள்' வரைமுறையை வைத்து "கடவுள் இருக்கிறாரா, இல்லையா ?" என்பதற்கு எனது பதில், "கடவுள் இல்லை, இல்லவே இல்லை" என்பதே.

           நாம் இறை மறுப்பைப் பேசுகிற போது கடவுளை நம்புகிற சிலரது மனம் புண்படுமே என்றால் (இக்களத்தில் அந்தப் பிரச்சினை வருவதில்லை), அதற்கு என்னிடம் எப்போதும் பதில் கிடையாது. Christopher Hitchens டம் கடன் வாங்குவதுண்டு : "That's offensive is not an argument".

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

'குமாரசாமி' க்கான பதில் தொடர்கிறது"  

ஒன்று மட்டும் உண்மை அந்த சத்திக்கு 

ஒரு விளிம்பு இல்லை. இயற்பியல் எல்லை இல்லை - சுவர் இல்லை, எல்லை இல்லை,  விளிம்புகளைச் சுற்றி வேலி இல்லை.

ஆனால் அதை கடவுளாக்கி, உருவம் கொடுத்து , சமயம்  என்ற வேலி போட்டு, ஒவ்வொருவரும் தங்கள் எல்லையை பெரிதாக்க, எத்தனையோ தந்திரங்கள், ஏமாற்றுக்கள், பயமுறுத்தல், பரிசளிப்புக்கள் , உதவிகள் என வேஷம் போட்டு , தங்கள் எல்லைக்குள் இழுப்பதை இன்று காண்கிறோம். உதவிக்கரங்கள் ரத்தம் படிந்தவை யாகின்றன . கொல்லுவது மட்டும் ரத்தம் படிவதில்லை, அவனின் , மொழி, பண்பாட்டை மறக்கச் செய்வதும் அப்படியே.

 

நான் பிறந்து வளர்ந்த இலங்கையை எடுத்துக்கொண்டால், சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப்பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப்பட்ட தமிழ் பரவர் அல்லது பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப்பிரிவு மூடப்பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப்பட்டார்கள். வீட்டிலே தமிழ் பேசினாலும் பிள்ளைகளின் பாடசாலை மொழி சிங்களம் ஆனது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்பது வரலாறு ஆகும்.  எனவே தமிழர்கள் நாளடைவில் ஒருமைப்படுத்தல் (Assimilation) மூலம் சிங்களவர்களாக மாறினார்கள். அதாவது தமிழர் என்ற ஒரு இனமே அங்கு சாக்கடிக்கப் பட்டது.   இந்த இனப்படுகொலைக்கு காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!! அவர் கத்தோலிக்க பள்ளிக் கூடங்களில் கற்கை மொழியாக இருந்த தமிழ் மொழியை அகற்றி விட்டு சிங்களத்தை புகுத்தினார். இதன் விளைவாக தமிழ்க் கத்தோலிக்கர்கள் சிங்களக் கத்தோலிக்கர்களாக மாற்றம் அடைந்தனர். [This historic process was embraced by the educational policies of a local Bishop Edmund Peiris who was instrumental in changing the medium of education from Tamil to Sinhalese]

எல்லாம் இந்த கடவுளின் செயலோ??   
 

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடவுளை விட.. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை விட மனிதர்கள் பயப்பட வேண்டியது அவரவர் மனசாட்சிக்கே.. ஏனெனில் மனசாட்சிதான் எப்பொழுதும் எங்களுடன் வரும்.. 

மனசாட்சிக்கு விரோதமாக, பிழையாக செயற்படும் மனிதர்கள்.. கடவுளுக்கு தாங்கள் உண்மையாகவும் பக்தியுடனும் இருப்பதாக காட்டுவதெல்லாம் பொய்யான ஒன்று என்றுதான் நான் நினைப்பதுண்டு

Edited by P.S.பிரபா
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி வெங்காயங்களுக்கே வரமுடியும்.   யார் அல்லது எது கடவுள் என்ற வரைவிலக்கணத்தைச் சரியாகக் கூறாமல் அவர், அவள் அல்லது அது இருக்கிறதா? என்று எப்படிக் கூறமுடியும்?  பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரன் என்கிறது திருவாசகம்.   ஆக, கடவுள் இருக்கிறாரா? அல்லது கடவுளில் நாமிருக்கிறோமா என்ற கேள்வியே மிகச் சரியானது.  நாமிருப்பதால் நம்மில் கடவுள் இருக்கிறார் என்பதே சரியான விடையாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை ஆராய்வதை விட.....
எம்மை ஆளும் சக்தி ஒன்று இருக்கின்றது என நான் நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பை நாம் காணவில்லை.......தீப்பட்டியில் குச்சியை உரசினால் (கல்லுடன் கல்லை உரசினாலும்) நெருப்பு நாம் காணும்படி உண்டாகின்றது......அக்  குச்சி எரிந்ததும் நெருப்பும் காணாமல் போய் விடுகின்றது......அதற்காக நெருப்பு இல்லை என்று சொல்ல முடியுமா.........! 

இப் பிரபஞ்சத்தின் சக்திக்குள் (இதை கடவுள் என்றும் பெயரிட்டு அழைக்கலாம்) நாம் உள்வாங்கப் பட்டிருக்கின்றோம்...... அது எம் மனங்களின் மூலம் எம்மை இயக்குகின்றது.......மனமானது நாம் செய்யும் செயல்களில் நன்மை தீமைகளை பகுத்தறிந்து அந்தந்த அளவு சுக துக்கங்களை எமக்கு அளிக்கின்றது......!

அதனால்தான் பரீடசைகளில் இரவு பகலாய் ஊண்  உறக்கமின்றிப்  படித்து எழுதுபவனை விட கொஞ்சம் முயற்சி செய்து பிட் அடித்து + பார்த்து எழுதுபவன் அதிக புள்ளிகள் பெறுகிறான்...... குதிரை ஓடுகிறவன் முயற்சி இன்றியே " இன்ன காரியம் இவன் செய்வான் என்று அறிந்து அக் காரியத்தை அவன் கண் விடுதல்" எனும் பெரியோர் வாக்குக்கு இணங்க அதிக பெறுபேறு அடைகின்றான் ........ எந்தத் தகுதியும் இன்றிப் பெரும் பெரும் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள் போல் ..........!

இச் செயல்களுக்கு ஒரு நாமம் தேவைப்படுகின்றது அதுக்குத்தான் "கர்மா" என்று நாமம் போட்டு விட்டிருக்கிறார்கள்.......!  

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.