Jump to content

கடவுள் இருக்கிறாரா.............?


கடவுள் இருக்கிறாரா?  

22 members have voted

  1. 1. கடவுள் இருக்கிறாரா?

    • கடவுள் இருக்கார்
      9
    • கடவுள் இல்லை
      8
    • சொல்லத் தெரியவில்லை
      2
    • சொல்ல விரும்பவில்லை
      3

This poll is closed to new votes


Recommended Posts

கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்று ஆராய முன் நீங்கள் கடவுள் என்று எதை அல்லது யாரை கருதுகின்றீர்கள் என்ற விளக்கம் வேண்டும். இதன் பின்பே நீங்கள் விளங்கி வைத்திருக்கும் அல்லது குறிப்பிடும் கடவுள் இருக்கின்றாரா அல்லது இல்லையா என்பது பற்றி பதில் கூற முடியும். :D

எனவே, முதலில் கடவுள் என்று எதை அல்லது யாரை நீங்கள் கருதுகின்றீர்கள் என்பதை கூறிவிடமுடியுமா? :D

கடவுள் என்றால் பல பொருள் இருக்கின்றது.. உதாரணமாக கட + உள் = கடவுள் என்றும் கூறுவார்கள். அதாவது உனக்குள் நீ உள்ளே போய் உள்ளே கடந்து செல்லு என்பது இதன் அர்த்தம்!

Link to comment
Share on other sites

மேலும் தங்கள் அனைவருக்கும் சந்தேகம் இருந்தால் பகுத்தறிவை பயன் படுத்தும் முறை கட்டுரைக்கு வரவும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23001

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது பச்சைக்குழந்தைகள், வயோதிபர்களைக் காப்பாற்றாத கடவுள் அப்பொழுது என்ன செய்தார்?. ஜோசப் பராராஜ சிங்கம், நத்தாட் தினத்துக்கு தேவாலயத்துக்கு செல்லாமல் இருந்தால் ஒருவேளை உயிருடன் இருந்திருப்பார். நவாலி தேவாலயத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது கடவுள் என்ன செய்தார்?. கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இருக்கும் போதும் மக்கள் கொல்லப்படுகிறார்களே, அப்பொழுது கடவுள் என்ன செய்தார்?. புத்தர் என்ற கடவுள் வாராது இருந்தால் இன்று பெளத்தர்கள் தோன்றி இருக்கமாட்டார்கள். பெளத்தர்கள் வராது இருந்தால் தமிழர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள்.

உண்மையில் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் போது தான் கடவுளைக் காணலாம்.

பிறப்பு இறப்பு எல்லாம் சக்தியில் நிலை மாற்றங்கள். கடவுள் வந்து குண்டு போடவில்லை. மனிதனே மனதை அளக்க அடக்க சக்தியின்றி அழிவைத் தேடுக் கொள்வதற்கு கடவுள் என்றதை ஏன் குறை சொல்ல வேண்டும்..!

மனித மனம் பிறப்பையும் இறப்பையும் சமனாகக் கருதுமா..??! பிறப்பால் மகிழும் மனிதன்.. இறப்பால் ஏன் வருந்த வேண்டும்..! ஆக்கவும் அழிவும் இன்றேல் சக்கரம் இயங்காது.. சக்தி நிலைக்காது..!

மனிதனின் துன்பத்துக்கு மனித மனங்கள் கொண்டுள்ள எண்ணங்களும் நிலைகளும் தெளிவின்மைகளும் காரணம் அன்றி கடவுள் அல்ல..! துன்பத்தில் கடவுளைத் தேடும் மனிதன் இன்பத்தில் ஏன் அதை மறந்துவிடுகின்றான். சுயநலக்காரனின் சக்திக்கு ஆற்றல் குறைவானதால்..அழிவும் பொதுவாகிப் போனது போல..!

குண்டு செய்யும் மனிதனும் அதை தலைல போடும் மனிதனும் அடுத்த மனிதனை மனிதனாக மதிக்க அவனின் வாழ்வுரிமையை மதிக்கக் கற்றுக் கொள்ளும் போது... மனிதரால் மனிதரில் தோன்றும் அழிவுகள் நிறுத்தப்படலாம்..! இதில் ஏன் கடவுளை அழைக்க வேண்டும். கடவுள் தான் எல்லா உயிர்களிலும் இயக்கும் சக்தியாக உள்ள போது.. அந்தச் சக்தியை துஷ்பிரயோகம் செய்யும் மனித மனங்களின் நிலைக்கு சக்தியைக் குறை சொல்ல முடியாது. தீயால் மூட்டவும் முடியும்.. தீயால் சமைக்கவும் முடியும்..! மனங்கள் கொண்ட சக்தி அமைதி பெறும் போது கடவுள் உங்களுக்குள்ளேயே இனங்காணப்படுவார்..! வெளியில் தேடப்பட வேண்டியதல்ல கடவுள் என்பது..! பிரபஞ்சமே கடவுள் தான்..! சக்தியின் இருப்பிடம் தான்..! :P :D

Link to comment
Share on other sites

வானவில்,

உண்மையில் மிகுந்த ஆர்வத்துடன் இதை உங்களுள் வினாவுகிறீர்களா அல்லது சும்மா பொழுதுபோக்கிற்கான பதிவா என்று தெரியவில்லை...ஒன்று மட்டும் நிச்சயம்: இங்கு நானோ அல்லது நெடுஸோ அல்லது வேறுயாருமோ விளக்கம் கூறி நீங்கள் உங்களுக்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. உண்மையில் அறியவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் என் ஆர்வத்திற்கு எட்டிவை இங்குள்ளன.

எனக்குள் ஏற்பட்ட கேள்வியைத்தான் உங்கள் எல்லோரிடமும் கேட்கிண்றேன், நான் எடுத்த முடிவு கடவுள் இல்லை என்பதுதான், ஆகெவேதான் கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களிடம் இதை வினவினேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ என்பது வேற விசயம்,மனிசன் கடவுள் என்று நடிப்பது தான் நிஜம்,கடவுளை வைத்து கணணியிலும்,வியாபாரத்திலும் இலாபம் தீட்டுவோர் பலர்,கடவுள் இருக்கிறாரோ இல்லையோ ஆனால் மனிசன் இருக்கிறான்,அதில் நல்ல மனிசன் கெட்ட மனிசன் என்பது தான் பிரச்சினை

Link to comment
Share on other sites

கடவுள் இருக்கிறார் என்றாள், ஒரே சமயத்தில் எதற்க்காக நூற்றுக்கணக்காண கடவுள்களை வைத்து வழிபடுகிறீர்கள், ஒரு சமயத்துகுள்ளேயே ஆயிரம் சமயங்கள்...........? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் மேல் பழியைப் போட்டுவிட்டு வலுசுலபமாக தப்பிக்கப் பார்க்கிறேம்.இவ்வளவு தூரம் எமது மககள் இறக்க காரணம் கடவுள் இல்லை.கந்தப்பு எங்கே மனச்சாட்சியை தொரிடு சொல்லுங்கள் பார்க்கலாம் நீங்கள் எழுதியது சர்யா என்று? எம் மீது முழு பிழையையும் வைத்துக் கொண்டு ஏன்கடவுளை நோவான்?

ஒவ்வோரு வீட்டுக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் போய் ஓவ்வொருவர் குறை நிறை களைக் கேட்பது கடவுளின் வேலையல்ல.பதிலாக நாட்டுக்கொருவன் வீட்டுக்கொருவனாக படைத்துள்ளான்.அந்த நாட்டுக்காக எமது இனத்துக்காக படைக்கப்பட்டவர் தான் எமது தலைவர்.ஓட்டு மொத்த தமிழ் மக்களும் அவருடன் நின்று போராடி இருந்தால் இப்படி ஒரு இழப்பே இருந்திருக்காது.பக்கத்து ஊரில் மக்கள் இறக்கும் போது பக்கத்து வீட்டில் எமது உறவுகள் இறக்கும் போது நாங்கள் தப்பினால் போதும் என்று வந்தது மடடுமல்லாமல் இப்படி எமது துரொகத்தனத்தை கடவுள் மேல் பழியைப் போட்டு சுலபமாக தப்பிக்கப் பார்க்கிறோம்.ஆக கண்ணுக்குத் தெரியாத ஒருவரை எண்ணி புலம்புவதிலும் பார்க்க எமது கண் முன்னே கடவுளின் அவதார புருசன் இருக்கிறான்.யப்பானியர் மேல் குண்டுகள் போட்ட போது கடவுள் மேல் பழியைப் போட்டுவிட்டு இருக்கவில்லை?ஆக தமிழர்கள் தான்ல்லை;நாங்கள் தான்

Edited by eelapirean
Link to comment
Share on other sites

  • 16 years later...
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 04:39, ரஞ்சித் said:

கடவுள் இல்லை, இருந்தால் தீமைகள் நடைபெற வாய்ப்பில்லை. 

இந்த பூமியில் உள்ள  உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டுமே ஆறறிவு.

அது ஏன் என புரியவில்லையா?

அந்த ஆறாவது அறிவை வைத்து அழிவுகளை தானே செய்கின்றீர்கள்? இதற்கு கடவுள் வந்து விலக்கு பிடிக்க வேண்டுமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

இந்த பூமியில் உள்ள  உயிரினங்களில் மனித இனத்திற்கு மட்டுமே ஆறறிவு.

அது ஏன் என புரியவில்லையா?

அந்த ஆறாவது அறிவை வைத்து அழிவுகளை தானே செய்கின்றீர்கள்? இதற்கு கடவுள் வந்து விலக்கு பிடிக்க வேண்டுமா?

உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? 

எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? 

அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரஞ்சித் said:

உண்மைதான். ஆனால், மனிதர்கள் இப்படி மிருகங்களாகத் தோன்றுவது யார் செய்த பாவம்? அப்பாவிகள் அழிக்கப்படுவது யார் செய்த பாவம்? 

எல்லாவற்றையும் படைப்பது இறைவன் என்றால், எதற்காக மனித வடிவில் அரக்கர்களைப் படைத்து உலவ விடுகிறார்? 

அதெல்லாம் இயற்கையின் படைப்பு. உலகில் உள்ள எல்லா நாடுகளும்,காலநிலைகளும்,மனித உருவங்களும் ஒரே மாதிரியாகவா இருக்கின்றன? ஐந்தறிவுடன்   வனத்தில் வாழும் விலங்கினங்களை பாருங்கள் ஒன்றை ஒன்று பிடித்து சாப்பிடுகின்றன அல்லவா?  சிங்கம் புலிகளுக்கு இரையாகும் மான் மரைகளைப்பற்றி நாம் எப்போவாவது கவலைப்பட்டதுண்டா? அந்த மான் மரைகளை நாம் காப்பாற்ற நினைத்தால் சிங்கம் புலிகளுக்கு உணவு என்ன? அவைகளை தாவரபட்சணிகளாக்க முடியுமா?
அதே போல் நாம் வீட்டில் வளர்க்கும் ஆடு மாடு கோழிகளை கொன்று உணவாக உண்கின்றோம். அந்த ஆடுமாடு கோழிகளுக்கும் ஆறறிவு இருந்தால் நம் கதி என்னவாக இருக்கும்?
இயற்கையின் படைப்பு அப்படி.அதிகம் சிந்தித்தால் நாம் வாழவே முடியாது.

9 hours ago, ரஞ்சித் said:

அண்ணை, 2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

மனிதனுக்கு மட்டும் ஏன் ஆற்றிவு? அதை ஒழுங்காக பிரயோகிக்காமல் அந்த இயற்கையின் மீது ஏன் பழியை போடுகின்றீர்கள்?

தவறாக நினைக்க வேண்டாம். நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற வட்டத்திற்குள் மட்டும் நின்று எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

2009 வரை கடவுள் என்றொரு சக்தி இருக்கிறதென்று நம்பியவன் நான். ஆனால், எதுவுமே அறியாத பச்சிளம் பாலகர்களும், வயோதிபர்களும், தாய்மார்களும் அடங்கலாக ஒன்றரை லட்சம் பேரைத் துடிக்கத் துடிக்கக் கொன்றபோது இந்த தெய்வங்கள் எல்லாம் எங்கே போய்விட்டன என்கிற கேள்வி எழுந்தது. அதன்பின்னர் கடவுளைத் தேடிச் செல்வதில்லை.  

சிறப்பு 👍
விருப்பு அடையாளம் முடிவுவடைந்து விட்டது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கணாங்குருவி கூடு • ShareChat Photos and Videos

இந்த தூக்கணாங் கூடுகளை கட்ட...
அந்த குருவிகள் எந்த யூனியில் 
படித்திருக்கும் என 
ஒரு கணம் சிந்திப்பேன்.
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.