• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும்

Recommended Posts

ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும்

%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-720x400.jpg

ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையுள்ள ஆறு மாத காலம் உத்தராயண காலமாகும். இது தேவர்களுக்கு ஒரு நாளின் பகல் பொழுதாகும்.

அடுத்து சூரியன் தெற்கு நோக்கிச் செல்லும் காலம் ஆடி முதல் மார்கழி வரையுள்ள ஆறு மாத காலம் தட்சணாயண காலமாகும். இது தேவர்களுக்கு இராப்பொழுதாகும். தட்சணாயணத்தின் தொடக்கதினம் ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலம் கோடைகால வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் பெருகும் இயல்புடையது.

இந் நாளில் ஈழத் தமிழ் மக்கள் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டிவகைகளை விசேடமாகச் செய்து குடும்ப விருந்தாக உண்டு மகிழ்தல், விசேட வழிபாடு செய்தல், உற்றார், உறவினர்களுக்கு இவ்வுண்டி வகைகளை வழங்கி நல்லுறவைப் பேணுவது வழக்கமாகும்.

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக் குற்றிச் செந்நெற்
பச்சையரிசி இடித்துத் தெள்ளி
வாசப் பருப்பை அவித்துக் கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரிற் சர்க்கரை யுங்கலந்து
தோண்டியில் நீர்விட்டு மாவை யதிற்கொட்டிச்
சுற்றிக் குழைத்துத் திரட்டிக் கொண்டு
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித் தட்டி
வெல்லக் கலவையை உள்ளேயிட்டுப்
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டுமா வுருண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்கவா யூறிடுமே
குங்குமப் பொட்டிட்டுப் பூமாலை சூடியே
குத்துவிளக்குக் கொழுத்தி வைத்து
அங்கிள நீர்பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வன்னப் பலாவிலை ஓடிப் பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டே
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளிவார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம்நல்ல
மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச்சுட ஊதிக் குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தந் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
– நவாலியூர் சோமசுந்தரப்புலவர்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • .adsBanner{ width: 100px; height:600px; position: fixed; z-index: 0; top:100px; display:none; } .ab-left { left:0;} .ab-right { right:0;} .counter{ position: absolute; top: 25px; right: 25px; font-size: 50px; z-index: 200; text-decoration: none; }         கழுகினால் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! டிக்கோயாவில் சம்பவம்       ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா மேற்பிரிவு தோட்டப் பகுதியில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளர் ஒருவர் மீது குளவி கூடு உடைந்து விழுந்ததில் குறித்த பெண் படுகாயமடைந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (22) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த குறித்த பெண் தொழிலாளர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். மரம் ஒன்றில் இருந்த குளவி கூட்டினை கழுகு ஒன்று கலைத்து விட்டமையினால் குளவி கூடு தேயிலை கொழுந்து பறித்த கொண்டிருந்த பெண்ணின் தலையில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் 1990 அவசர நோயாளர் காவு வண்டியின் ஊடாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.   -மலையக நிருபர் சதீஸ்குமார்- http://tamil.adaderana.lk/news.php?nid=124838  
  • கல்வி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் சிறுபான்மை சமூகம் சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை       புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க தயார் ஆனால் எமது சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நடவடிக்கைகளுக்கு நான் எனது எதிர்ப்பினை தெரிவிப்பதில் பின் நிற்க மாட்டேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் ஆரம்ப பிரிவு பாடசாலையில் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா ஒன்றை திறந்து வைத்து அங்கு உரையாற்றிய பொழுதே மேற்கண்டவாறு கூறினார். இப்பாடசாலையின் அதிபர் என். நவரட்னம் தலைமையில் நடைபெற்ற இவ் வைவைபவத்தில் மலையக ஆசிரியர் முன்னணியின் பொதுச் செயலாளர் ரவிந்திரன் மற்றும் நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி அதிபர் ரவிச்சந்திரன் உட்பட பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் கலந்துக்கொண்டனர். அங்கு இராதாகிருஷ்ணன் தொடர்ந்து உரையாற்றுகையில் புதிய அரசாங்கம் பல புதிய நடவடிக்கைககளை எடுத்து வருகின்றது. அதனை நான் வரவேற்கின்றேன். ஆனாலும் அண்மையில் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கல்வி மறுசீரமைப்பு ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் நியமித்தது. அந்த ஆணைக்குழுவில் உறுப்பினர்களாக சிறுப்பான்மை மக்கள் சார்பாக எவரும் நியமிக்கப்படவில்லை. இது எங்களுக்கு வேதனையாக இருக்கின்றது.. கல்வி அபிவிருத்தி என்பது ஒரு சமூக பிரச்சனையாகும். அனைத்து சமூகமும் கல்வியில் அபிவிருத்தியடைந்தால்தான் அந்த சமூகம் முன்னேற்றம் அடையும். அந்த கல்வியை அபிவிருத்தி செய்யும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ளாதது சிறுபான்மையினரை ஓரங்கட்டும் செயலாகும். எதிர்வரும் காலங்களில் சிறுபான்மை மக்களை புறக்கணிக்காமல் சமவுரிமை வழங்கி அவர்களின் அபிவிருத்தியிலும் சம பங்கு வழங்க வேண்டும். ஒரு பாடசசாலையின் வளர்ச்சி பாடசாலை பிள்ளைகளின் தொகையை மாத்திரம் வைத்து அபிவிருத்தியடைந்த பாடசாலையாக கருத முடியாது. பாடசாலையின் நடவடிக்கைகளில் மாணவ மாணவிகளின் திறமைகளை வைத்தே அபிவிருத்தியடைந்த பாடசாலையாக கருத முடியும். பாடசாலைகளில் கல்வியில் மாத்திரமல்லாமல் விளையாட்டு, கலை கலாச்சாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும். இந்த பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரிக்கு ஒரு வரலாறு இருக்கின்றது. நானும் இந்த கல்லூரியின் பழைய மாணவன்தான். இந்த கல்லூரியில் கல்வி கற்றவர்கள் பலர் அரசியல்வாதிகளாகவும் வைத்தியர்களாகவும் பொறியியலாளர்களாகவும் சட்டத்தரணிகளாகவும் சிறந்த வர்த்தகர்களாகவும் சிறந்த கலைக்கலாச்சார விளையாட்டு வீரர்களாகவும் இருக்கின்றார்கள். பாடசாலையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. ஆனாலும் பாடசாலையின் அபிவிருத்திக்கு அரசியல் ஆதரவு தேவை. அரசியல் ரீதியாகவும் எனது தனிப்பட்ட பழைய மாணவன் என்ற ரீதியாகவும் இந்த கல்லூரியின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் என்றார்.   -மலையக நிருபர் தியாகு- http://tamil.adaderana.lk/news.php?nid=124832
  • பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்கின்றேன்       குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென்று பிரதமர் தெரிவித்துள்ளதை வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறைச்சாலைகள் பஸ்ஸில் நேற்று (21) பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையை ஆற்றுவதற்கு முயற்சித்தார். அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஒழுங்குவிதிகள் முன்மொழிகள் மீதான விவாதத்தில் உரையாற்றினார். குரல் பதிவுகள் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென பிரதமர் கூறுகின்றார். இதனை வரவேற்கின்றேன். அந்த ஆணைக்குழுவுக்கு தேவையான கோப்புகளை வழங்குவேன். இது தொடர்பாக ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோருகிறேன் என்றும் அவர் குறிப்பிடார். குரல் பதிவுகள் வெளியிட்டு எவரது குடும்ப வாழ்க்கையை அல்லது எவரது அமைதியை சீர்குழைப்பதற்கு நான் இதனை செய்யவில்லை என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாதுகாப்பு கருதியே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாக கூறினார். குரல் பதிவுகள் வெளியானது தொடர்பாக தன்னுடன் தொலைபேசி உரையாடல்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மிக முக்கியமான குரல் பதிவுகள் பல தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை ஹாட் டிஸ்களில் இட்டு நாட்டுக்கு வெளியே பாதுகாப்பு பெட்டகங்களில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். நான் நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்துவதற்கு பல விடயங்கள் உள்ளன. என்னுடன் கதைத்தவர்கள் என கூறப்படும் உளவாளிகள், தகவல்களை வழங்குபவர்கள், அரசியல்வாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், மதத் தலைவர்கள், நீதிபதிகள், நீதிமன்றதுடன் தொடர்புடைய உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பாக மக்கள் கேட்டிருப்பார்கள் என்றும் அவர் கூறினார். எனது தொலைபேசி, மடிக்கணனி மற்றும் தரவு உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பாராளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைகளை மீறி கடந்த 4 ஆம் திகதி பொலிஸார் எனது வீட்டுக்கு வந்து எடுத்துச் சென்றுள்ளனர். ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வருவதற்கான போராட்டம் தொடர்பான இந்த குரல் பதிவுகள் வெளியாகியுள்ள அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். நான் வேண்டுமென்றே இதனை செய்யவில்லை. அத்துடன் என்னிடமிருக்கும் நாட்டுக்கு வெளிவராத , மறைக்கப்படும் உரையாடல் பதிவுகளையும் நான் சபையில் சமர்பிக்கின்றேன். என்னுடன் கதைத்த நீதிபதிகள், பிரதம நீதியரசர்கள், அரச தலைவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அத்துடன் அரசியல்வாதிகள், அவர்களின் மனைவிகள், பிள்ளைகளும் அதற்குள் அடங்குவர். இவர்களின் குரல் பதிவுகளையும் சபையில் சமர்பிக்கின்றேன். சொன்னதை இல்லையென்று கூறிபவர்கள் இருப்பதால் நான் அதற்கான ஆதரங்களை வைத்திருந்தேன். எனது கருத்துக்களுக்கு சாட்சி கேட்பதால் தேவையான சாட்சிகளை வைத்திருந்தேன். எனக்கு யாரிடமிருந்தும் நற்சான்று தேவையில்லை. சில நீதிபதிகளுக்கு வழக்கு தீர்ப்புகளை வழங்குவதில் அச்சம் இருந்தது. சரத் அம்பேபிட்டியவுக்கு நடந்ததை போன்று தமக்கும் நடந்துவிடுமோ என அஞ்சினர். இதனால் இந்த விடயங்கள் தொடர்பாகவே கதைத்தோம். வேறு எந்த அழுத்ததையும் பிரயோகிக்கவில்லை. நான் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்திலேயே இருந்து செயற்படுகின்றேன். செல்வந்தர்களின் பக்கம் இன்றி அப்பாவி மக்களின் பக்கமே இருந்து செயற்பட்டேன். நான் சுயாதீனமாக போட்டியிடுவேன். என்னை வீட்டுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை. சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. நீதியின் பக்கத்தில் உண்மையாக இருந்தவன் என்ற திருப்தியுடன் இருப்பேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார். (அரசாங்க தகவல் திணைக்களம்)   http://tamil.adaderana.lk/news.php?nid=124814&mode=lead
  • இன்று முக்கிய குரல்பதிவுகளை வெளியிடுவேன் – நாடாளுமன்றில் அதிரடியாக அறிவித்தார் ரஞ்சன்!   by : Jeyachandran Vithushan நாடாளுமன்றில் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக தன்னிடம் இருக்கும் பல குரல் பதிவுகளை சமர்ப்பிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இதனை தெரிவித்தார். அரச தலைவர்கள், நீதிபதிகள், அமைச்சர்கள், அமைச்சர்களின் குடும்ப உறவுகள் என அனைவரின் குரல் பதிவுகளும் உள்ளன என ரஞ்சன் ராமநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். அத்தோடு அவற்றினை சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதாகவும் குரல் பதிவுகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது, போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் அவற்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறு காஞ்சனா விஜயசேகர தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, இந்த குரல்பதிவுகள் அடங்கிய இறுவெட்டு மற்றும் வன் தட்டு ஒரு குறிப்பிட்ட வங்கியில் பாதுகாப்பு லொக்கரில் இருப்பதாகவும் இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக சமர்ப்பிப்பதாகவும் கூறினார். http://athavannews.com/இன்று-முக்கிய-குரல்பதிவு/
  • அவரது சிங்களத்தை கேட்டிருந்தால் உங்களுக்கு விளங்கி இருக்கும் அவர் சிங்களம் கதைக்கிறாரா இல்லை வேறு ஏதும் மொழி பேசுகிறாரா என்று।