Jump to content

வருகிறது செயற்கை சிறுநீரகம்? மருத்துவ உலகின் அடுத்த புரட்சி!


Recommended Posts

இந்த உண்மை எனக்கு உரைத்தபோதுதான் செயற்கை சிறுநீரகத்துக்கான கண்டுபிடிப்புகளைத் தொடங்க முடிவுசெய்தேன்!

அமெரிக்கர்களை அச்சுறுத்தி வரும் மிக முக்கியமான பாதிப்பு, சிறுநீரகப் பிரச்னைகள். `அமெரிக்காவில் சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களில் 20 சதவிகிதம் பேர் ஒவ்வொரு வருடமும் இறக்கின்றனர்' என்கிறது சமீபத்திய ஓர் ஆய்வு.

"அடுத்த 5 ஆண்டுகளில், இந்தச் செயற்கை சிறுநீரக கண்டுபிடிப்பு மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்!''

சிறுநீரகப் பாதிப்பில் மிகமுக்கியமானது சிறுநீரக செயலிழப்பு. அதற்கான நிரந்தரத் தீர்வாக செயற்கை சிறுநீரகங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் அமெரிக்காவின் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலர் ஈடுபட்டு வந்தனர். தற்போது அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

செயற்கை சிறுநீரகம் உருவாக்குவதற்கான மருத்துவக் குழுவைத் தொடங்கிய வில்லியம் ஃபிஸ்ஸெல் அதுகுறித்துப் பேசும்போது, "இன்றைக்கு நான் வீட்டுக்குப் போகும்போது என்னுடைய கார் விபத்துக்குள்ளாகி, அதனால் எனக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு விட்டதென்று வைத்துக்கொள்வோம். எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்தப் பிரச்னையை என்னால் சரிசெய்ய முடியாது.

சொல்லப்போனால் இப்போது பள்ளி செல்லும் வயதிலுள்ள என்னுடைய குழந்தை, அவனுடைய பள்ளிப்படிப்பை முடிக்கும்வரைகூட நான் உயிருடன் இருக்கமாட்டேன். அந்த அளவுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ளன. இந்த உண்மை எனக்கு உரைத்தபோதுதான் செயற்கை சிறுநீரகத்துக்கான கண்டுபிடிப்புகளைத் தொடங்க முடிவுசெய்தேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசியவர், "நாங்கள் உருவாக்கும் சிறுநீரகம் அனைத்து நாட்டினருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டுமென்ற நோக்கில் பணிகளைத் தொடங்கினோம். அதாவது, `யுனிவர்சல் கிட்னி'தான் எங்கள் நோக்கம். அதிலும் இப்போது வெற்றிகண்டுவிட்டோம். செல்ஃபோன் டெக்னாலஜி மற்றும் பிளாஸ்டிக் மூலமாக இந்தச் சிறுநீரகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல செயற்கை சிறுநீரகத்தை உருவாக்க நிதி உதவி தேவைப்படுகிறது. இப்போது கண்டறியப்பட்டுள்ள செயற்கை சிறுநீரகம் வரும் ஆண்டில் மனிதர்களுக்குப் பொருத்தப்பட்டு அதன் திறன் முழுவதுமாக ஆராயப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தச் செயற்கை சிறுநீரகம் மருத்துவ உலகின் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 

https://www.vikatan.com/health/medicine/vanderbilt-doctor-creates-artificial-kidney

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.