Sign in to follow this  
ampanai

தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா

Recommended Posts

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடுத்த மாதம் முதல் 50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவித்த தேசிய சகவாழ்வு, அரச கரும மொழிகள் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன், மலையக மக்களை, தேசிய நீரோட்டத்தில் இணைய விடாமல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தடுத்ததாகவும் குற்றம் சுமத்தினார்.

தேசிய தொலைக்காட்சியில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/31874

Share this post


Link to post
Share on other sites

தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதில் இழுபறி

தோட்டத்தொழிலாளர்களுக்கு 50ரூபா வழங்க திறைசேரியினால் தெரிவிக்கப்பட்ட 600 மில்லியன் ரூபாவை தருவதாக எழுத்து மூலம் அறிவித்தால் தேயிலை சபையினால் வாக்குறுதியளித்த  600 மில்லியனையும் விடுவிக்க தயார் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

up_contry.jpg

அத்துடன் இந்த அதிகரிப்பை தொழிலாளர்களின் சம்பளத்துடன் இணைப்பது பிரச்சினையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60687

Share this post


Link to post
Share on other sites

பிச்சைக்காரனுக்கே குறைந்தது 100 ரூபா கொடுக்காட்டி தூக்கி வீசுறாங்கள். 

அந்த நாட்டில் 50 ரூபாவுக்கு என்ன வாக்க முடியும்.

அமைச்சர் இன்னும் எந்த நாட்டில் வாழ்கிறார்..??! 

Share this post


Link to post
Share on other sites

50 ரூபா நாளாந்த மேலதிக கொடுப்பனவு, சம்பளம் அல்ல.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு முதுகெலும்பாய் இருக்கும் இந்த மக்கள் நீநீநீநீநீண்ட காலமாமக எல்லோராலும் புறக்கணிக்கப்படுபவர்கள்.      

Share this post


Link to post
Share on other sites

Hotel near Buckingham Palace serves $ 200 cup of Ceylon tea by P.M. David Silva & Sons

image_31ba59c2d4.jpg

The rare tea is weighed with scales and brewed in a silver tea pot. It’s served to customers using gold tweezers – Courtesy The Rubens At The Palace

 

CNN: It’s no secret that the British are very serious about their tea.

Now a London hotel has taken this dedication to new heights by offering what’s been dubbed the UK’s most expensive cuppa. The Rubens at The Palace is now serving a rare tea blend for £ 500 ($ 620) per pot, which works out to around $ 200 a cup.

http://www.ft.lk/front-page/Hotel-near-Buckingham-Palace-serves-200-cup-of-Ceylon-tea-by-P-M-David-Silva-Sons/44-682175

 

Share this post


Link to post
Share on other sites

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்க முடியாது – அமைச்சர் நவீன்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து கொடுப்பது முடியாத காரியம் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேயிலை சபையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.

50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அடுத்த முறை வேதன அதிகரிப்புக்கான பேச்சுவார்த்தை இடம்பெறும் போது அந்த ஐம்பது ரூபாயையும் சேர்த்து அதன் அடிப்படையிலேயே வேதனை அதிகரிப்பு கோரப்படும். அது முதலாளிமார் சம்மேளனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தாம் வழங்குவதாக ஒப்புகொண்ட 600 மில்லியன் ரூபாவை வழங்க தயாராக இருக்கின்ற போதும் திறைசேறி வழங்குவதாக ஒப்புக்கொண்ட 600 மில்லியன் ரூபாவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த தொகையை வேதனத்தோடு அல்லாமல் வேறு ஏதேனும் ஒரு வகையிலேயே வழங்க முடியும். அதேநேரம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு தேயிலை ஏற்றுமதியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைச்சர்களின் செலவினங்களை 15 சத வீதத்தால் குறைக்குமாறு திறைசேரி அறிவித்திருக்கிறது.

ஏப்ரல்21 தாக்குதலுக்குப் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை அவர்களுடைய வேதனத்துடன் இணைத்து வழங்குவது கடினமான காரியம். அதற்கு தம்மால் இணங்க முடியாது.  இதனை தாம் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/220589/பெருந்தோட்ட-தொழிலாளர்களுக்கு-50-ரூபாய்-மேலதிக-கொடுப்பனவை-வழங்க-முடியாது-அமைச்சர்-நவீன்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • கூட்டமைப்பு யார்,, இந்தியாவின் நிகழ்சித்திட்டத்தை செயற்படுத்தும் அவர்களது கைக்கூலிகள் அவர்களது ஆயிரமாயிரம் வெளிவராத இரகசியங்கள் இந்தியாவிடம் இருக்கலாம் அதை வைத்து அவர்களை இந்தியா தங்களுக்குச் சாதகமான காரியத்தைச் சாதிக்கலாம். இந்தியாவைப் புறமொதுக்குதல் என்பது கூட்டமைப்பையும் சேர்த்தே புறமொதுக்குதல் என்பதாகும்.
  • தமிழர்களின் ஆதரவு இல்லாது அரசாங்கம் அமைக்க முயற்சி செய்யுங்கள் என்று இந்தியாவும் ஆலோசனை கொடுத்திருக்கலாம் என்ற ஐயம் உள்ளது. அந்த கிந்தியனின் கைப்பொம்மையாக இருந்து தன் இனத்தையே காவுகொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப். தானும் அதற்குச் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று அதற்குள் மூக்கை நுளைத்திருக்கிறது. கோத்தபாயாவுக்கு தமிழர்கள் மட்டுமல்ல அனேக சிங்கள மக்களும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது, இன்றும் சிங்களவரோடு பழகும் தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மை.
  • கொச்சியை  பற்றி நிறைய தகவல்கள்.....நன்றி கிருபன்.....!  👍
  • கூட்டமைப்பே இந்தியாவின் கைப்பொம்மையாக உள்ளது இதற்குள் இந்தியாவை புறந்தள்ளுதல் என்பது எப்படி நடக்கும்? 😀 நான் இன்னொரு திரியில் எழுதியிருந்தேன், கூட்டமைப்பு சீனாவுடன் பேச்சு வார்த்தைகளை வைத்துக்கொண்டால் இந்தியா தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேச முன்வரலாம் என்று. சீனாவும் எம்மை அழித்த நாடு தான்.
  • அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் ,  இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் / அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் , இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் / உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் /  சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி /  இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா