Jump to content

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கரகுவா புரட்சியின் 40 ஆண்டுகள்: சான்டினிஸ்டாகளின் கதை

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூலை 18 வியாழக்கிழமை, மு.ப. 07:17Comments - 0

சில கதைகள் சொல்லப்படாமல், தூசி மறைத்துக் கிடக்கின்றன. வரலாற்றின் விந்தையும் அதுவே. சில கதைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றன. சில கதைகள் சொல்லப்படுவதற்காகக் காத்துக் கிடக்கின்றன. சில கதைகள் சொல்லப்படாமல் மறைக்கப்படுகின்றன. இன்றும் சில கதைகள் சொல்லப்பட இயலாமல் அந்தரிக்கின்றன. இவ்வாறு கதைகள் எங்கும் நிறைந்திருக்கின்றன.   

அவ்வாறு சொல்லப்படுவதற்காய் காத்திருக்கும் கதைகளைச் சொல்வதற்கான காலமும் களமும் முக்கியமானவை. களமும் காலமும் பொருந்திவரும் போது சொல்லப்படும் கதைகள் பெறுமதிமிக்கனவாகின்றன. இன்று சொல்லப்போகும் கதையும் காலமும் களமும் பொருந்திவந்த கதைதான்.   

இன்றைக்குச் சரியாக 40 ஆண்டுகளுக்கு முன்னர், மத்திய அமெரிக்காவின் சின்னஞ்சிறிய நாடுகளில் ஒன்றான நிக்கரகுவாவில் நீண்டகாலப் புரட்சியின் விளைவால், சர்வாதிகார ஆட்சி ஒழிக்கப்பட்டது.   

கியூபப் புரட்சிக்குப் பிறகு, இலத்தீன் அமெரிக்காவில் (மத்திய அமெரிக்கா, தென்னமெரிக்கா இரண்டும் இணைந்த) இன்னொரு புரட்சிக்குச் சாத்தியமே இல்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், இந்தப் புரட்சி சாத்தியமானது. தனக்கெனத் தனித்தன்மைகளைக் கொண்ட இப்புரட்சி நினைவுகூரப்பட வேண்டியது.  

image_57cf179533.jpg 

மத்திய அமெரிக்காவின் மிகப் பெரிய நாடாக நிக்கரகுவா, வடக்கே ஹெண்டூரஸ்ஸையும் தெற்கே கோஸ்டரீகாவையும் மேற்கே பசுபிக் கடலையும் கிழக்கே கரீபியக் கடலையும் எல்லைகளாகக் கொண்டது. ஆறு மில்லியன் மக்கள் தொகையையுடைய நாடு; முதலில் ஸ்பானியர்களின் கொலனியாதிக்கத்துக்கு உட்பட்டது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் வந்த நிக்கரகுவா, 1979இல் புரட்சியினூடாகச் சர்வாதிகாரி துரத்தப்படும் வரை, அமெரிக்காவின் கைப்பாவை அரசாகவே இருந்தது.   

சான்டினிஸ்டாப் புரட்சியின் கதை  

மிக நீண்ட காலமாக நிக்கரகுவா, ஒரு பரம்பரை ஆட்சியில் சிக்கித் தவித்தது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கம் தொட்டு, பல இலத்தீன் அமெரிக்க நாடுகளைக் குடும்ப ஆட்சிகள் தலைமுறை தலைமுறையாக ஆண்டன. அதைப்போலவே, நிக்கரகுவாவில் ‘சமோசா’ பரம்பரையின் ஆட்சி, 1936 முதல் இருந்தது.   

தனியார் சொத்துடைமைக்கும் தனிச் சொத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து, சந்தைப் பொருளாதாரத்தையும் பரந்துபட்ட வணிக நோக்கிலான விவசாய முறையையும் அடிப்படையாக இந்த ஆட்சி கொண்டிருந்தது. அதிகாரம் படைத்த ஒரு சிறு குழு, நாட்டின் பெரும்பான்மையான பொருளாதார வளங்களைக் கட்டுப்படுத்தி, அதன் பலன்களை அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில், நிக்கரகுவாவில் கொள்கைகள் அமைந்திருந்தன.   

இதில் குறிப்பாக, நிலச் சொந்தக்காரர்களாக ஒரு சிலரே இருந்தார்கள். அவர்கள் கோப்பி, பருத்தி, சீனி, புகையிலை போன்றவற்றை உற்பத்தி செய்யும் பாரிய பண்ணைகளை நடத்தி வந்தார்கள். கால்நடைகளும் பெரிய பண்ணைகளில் வளர்க்கப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தன.   

வெளியிலிருந்து பார்க்கும்போது, நிக்கரகுவா ஒரு வெற்றிகரமான சந்தைப் பொருளாதார மாதிரியைக் கொண்டிருப்பதாகவும் இதன் பலன்களை மக்கள் அனுபவிக்கிறார்கள் போன்றதுமான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதையே, 1960களிலும் 1970களிலும் பத்திரிகைகளும் ஆய்வாளர்களும் எழுதினார்கள். ஆனால் நிக்கரகுவாவின் கதையோ வேறு.   

இங்கு பெரும்பான்மையான மக்களுக்கு நிலம் சொந்தமாக இருக்கவில்லை. கிராமப்புறங்களில் 90 சதவீதத்துக்கும்  மேற்பட்டவர்கள் நிலமற்றவர்கள்; நிலமின்மையும் வாழ்வாதாரங்களுக்கான வழியின்மையும் மோசமான வறுமைக்கு வழிவகுத்தன.   

இவை 1950களின் இறுதிப் பகுதியிலும் 1960களின் தொடக்ககாலத்திலும் ‘சமோசா’ குடும்ப ஆட்சிக்கெதிரான சிந்தனைகளுக்கு வித்திட்டிருந்தன. 1959இல் கியூப்பப் புரட்சியின் வெற்றி, நிக்கரகுவாவின் பல்கலைக்கழகங்களில் பயின்று கொண்டிருந்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தைக் கொடுத்தது. 

1961ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி, ‘சான்டினிஸ்டா தேசிய விடுதலை முன்னணி’ (FSLN) உருவாக்கப்பட்டது. 18 ஆண்டுகளின் பின்னர், 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி, சர்வாதிகாரி ‘சமோசா’ நாட்டைவிட்டு ஓட, FSLN ஆட்சியைப் பிடித்தது. இந்தப் புரட்சியானது 42 ஆண்டுகால ‘சமோச’ குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது.   

20ஆம் நூற்றாண்டின் தொடக்கில், நிக்கரகுவா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்பித் தலைமை தாங்கியவர் ஓகஸ்டோ சான்டினோ. அவர், நிக்கரகுவா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது நினைவாகவே, ‘சான்டினிஸ்டா’ என்ற பெயர், புரட்சியாளர்களால் தமது அமைப்புக்குச் சூட்டப்பட்டது.   

நிலச்சீர்திருத்தத்தின் பயன்கள்   

சமோசாவின் ஆட்சிக்காலத்தில் 70 சதவீதமான விவசாயிகள் வெறும் நான்கு சதவீதமான நிலத்திலேயே விவசாயம் செய்தார்கள். அதிகாரத்தில் உள்ள நிக்கரகுவாவின் 2,000 பேர், நிக்கரகுவாவின் மொத்த நிலத்தில் 50 சதவீதமான நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். 85 சதவீதமான மக்களுக்குச் சொந்தமாக இருந்தது வெறும் ஐந்து சதவீதமான நிலம் மட்டுமே.  

image_e865e5288f.jpg

1979இல் புரட்சியில் வெற்றி பெற்று, சான்டனிஸ்டாவின் தலைவர் டானியல் ஒட்டேகாவும் அவரது ஒன்பது தளபதிகளும் சமோசா ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் நிலச் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார்கள்.   

FSLN புரட்சியின் மிக முக்கியமான அம்சங்களில், விவசாயச் சீர்திருத்தம் முக்கியமானது. ஏனெனில், நிலப் பங்கு கிடைக்கும் நிலை, மற்றவர்களுக்கான நிலப் பலன்களை முதன்மைப்படுத்தியதாக விவசாயச் சீர்திருத்தம் ஒருபுறம், பல்லாயிரக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டதோடு, இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு நிலங்களையும் நீண்ட காலத்துக்கான வாழ்வாதாரத்தையும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளையும் மீட்டுக் கொடுத்தது.   

அவ்வகையில், ஏராளமான நிக்கரக்குவா நாட்டினர் இன்றும் சண்டினீஸ்டா புரட்சிக்கும் அதை சாத்தியமாக்கியவர்களுக்கும் நன்றி உடையவர்களாக இருக்கிறார்கள். அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த மத்திய அமெரிக்க நாடுகளில் ஒரு புரட்சியை செய்து, அமெரிக்கா சார்பான ஒரு சர்வாதிகாரியை பதவியில் இருந்து அகற்றுவது என்பது, மிகவும் கடினமான காரியம் என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் நன்கு அறிவர்.   

அதேவேளை 1959இல் கியூபப் புரட்சியின் பின்னர், தனது கொல்லைப்புறத்தில் இவ்வாறானதொரு புரட்சி நடைபெற்று விடக்கூடாது என்பதில் அமெரிக்கா கண்ணும் கருத்துமாக இருந்தது. இவ்விரண்டு தடைகளையும் தாண்டிய 1979இல் நிக்கரகுவாவில் siddhargal ஒரு புரட்சியைச் செய்து சர்வாதிகாரியைத் துரத்தி, ஆட்சியைக் கைப்பற்றி நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார் என்பது, அந்தப் புரட்சியின் மகத்துவத்தைச் சொல்லப் போதுமானது.   

ஆட்சியைப் பிடித்த சில நாள்களிலேயே சண்டினிஸ்டா நிலச்சீர்திருத்தத்துக்கான நிக்கரகுவா நிறுவனத்தை உருவாக்கினார்கள். அதன் மூலம் நில உரிமையை எவ்வாறு பரந்துபட்ட ஜனநாயகம் ஆக்குவது தொடர்பான கொள்கை முடிவுகளையும் நடைமுறைகளையும் சிந்திப்பதற்கான வழியை அமைத்தார்கள்.   

அதைத் தொடர்ந்து, 1981ஆம் ஆண்டு விவசாயிகளுக்கும் பயிர் செய்பவருக்குமான தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள். இதன் மூலம் விவசாய சீர்திருத்தத்தை, நிலப்பங்கீடு மூலம் முன்னெடுப்பதற்கான கூட்டு முயற்சி அரசாங்கத்தினதும் விவசாயிகளினதும் நிலச் சொந்தக்காரர்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது.   

இதன் விளைவால், பயிர் செய்யப்படாமல் தரிசு நிலங்களாகக் கிடந்த ஏராளமான நிலங்கள், பயிர் செய்யப்பட்டன. 1990ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்து, சண்டினிஸ்டா பதவியை இழந்த போது, பயிர் செய்யக்கூடிய மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதமான நிலங்கள் விவசாய சீர்திருத்தத்தின் மூலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, நிலமற்ற ஏழை விவசாயிகளின் கைகளில் இருந்தன. இது சண்டினிஸ்டா அப்புரட்சி தனது பத்தாண்டு கால ஆட்சி காலத்தில் நிகழ்த்திய முக்கியமான மாற்றம். இந்த மாற்றம் வெறுமனே ஒரு பொருளாதார மாற்றமாக மட்டுமன்றி நிக்கராகுவா சமூகத்தின் அடிப்படைகளை மாற்றி அமைத்த ஒரு செயற்பாடு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.   

நிகரகுவாவில் ஏற்பட்ட புரட்சியைத் தாங்க இயலாத அமெரிக்கா, அதற்கு எதிராகப் பல கூலிப்படைகளை ஏவி ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் தலைவர்களைக் கொலை செய்வதற்கும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. இதன் விளைவால் ஒருபுறம் இந்தக் கூலிப் படைகளுடன் போரிட்ட வண்ணமே தங்கள் ஆட்சியை நடத்தி வந்தார்கள். இது பொருளாதார, சமூக ரீதியாக அரசாங்கத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருந்த அதே நேரம், அவர்களால் செய்யக் கூடியது என நினைத்த பல விடயங்களைச் செய்ய இயலாமல் போவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் பாரிய நெருக்கடிகளுக்குள்ளும் சென்றுவிட்டார்கள். தங்களால் இயலுமான மாற்றங்களை செய்தார்கள் என்பதை மறக்க முடியாது.  

நிக்கரகுவாவின் புரட்சியைப் பற்றிப் பேசுகின்ற போது, இரண்டு விடயங்கள் மிகவும் முக்கியமாகப் பேசப்பட வேண்டும். 

அதில் முதன்மையானது, புரட்சியில் பெண்களின் பங்களிப்பு. போராளிகளாகவும் செயற்பாட்டாளர்களாகவும் அவர்களின் பங்கு பெரிது. அதிலும் குறிப்பாகப் போராடும் பெண்கள், எழுதிய கவிதைகள் வாழ்வையும் போராட்டத்தையும் அவற்றின் பிரிக்கமுடியாத இயல்பையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துபவை.   

அதேபோல, நிக்கரகுவாவில் புரட்சிக்குப் பங்களித்த விடுதலை இறையியல் கோட்பாடும் அதை முன்தள்ளி, தேவாலயங்களைப் புரட்சிகரப் போராட்டத்தில் பங்காளியாக்கிய தன்மையும் கவனிப்புக்குரியவை. 

விடுதலை இறையியலை முன்னெடுத்து, போராட்டத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர் பாதிரியாரும் கவிஞருமாகிய ஏர்னெஸ்டோ கார்டினல். சான்டினிஸ்டா ஆட்சியில், பண்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.   

நிக்கரகுவாவின் புரட்சியை நினைவுகூரும் போது, மூன்று விடயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. முதலாவது, பெண்களின் பங்களிப்பு; இரண்டாவது, விடுதலை இறையியலும் பண்பாட்டுத்தளத்தில் அதன் புரட்சிகர பங்களிப்பும் ஆகும். மூன்றாவது நிலப்பங்கீடு ஏற்படுத்திய மாற்றம்.   

புரட்சியை ஏன் நினைவுகூர வேண்டும் என்ற வினாவுக்கான பதிலை இலகுவாகச் சொல்வதென்றால், சான்டினிஸ்டாகள் தேர்தலில் தோல்வியடைந்து, 20 ஆண்டுகளின் பின்னர், நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. 

இப்போது 40சதவீதமான நிக்கரகுவா விவசாயிகள் மீண்டும் நிலமற்றவர்களாக மாறியுள்ளனர். உணவுப்பாதுகாப்பும் வறுமையும் முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. வெளிநாட்டு முதலாளிகள் நிலச் சொந்தக்காரராகி உள்ளனர். மீண்டும் கட்டற்ற சுரண்டலும் நிலப்பறிப்புகளும் நடந்துள்ளன. இவையே சான்டினிஸ்டப் புரட்சியின் சாதனைகளையும் தலைமுறை தாண்டியும் தக்க வைக்கும்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிக்கரகுவா-புரட்சியின்-40-ஆண்டுகள்-சான்டினிஸ்டாகளின்-கதை/91-235497

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.