Sign in to follow this  
ampanai

சேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்

Recommended Posts

சேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம்  தெரிவித்துள்ளார்.

ranil.jpg

சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று  மாலை அலரிமாளிகையில்  இடம்பெற்றது. 

இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த கலந்துரையடலில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல மற்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்டோரும் கலந்துக்கொண்டனர்.  

இந்த சந்திப்பில்  சட்டத்தரணிகள் சங்கத்தினர்  சோபா உடன்படிக்கை தொடர்பிலும், மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மற்றும்  காணி விசேட திருத்தச்சட்டம் குறித்து பிரதமரிடம்  கலந்துரையாடினர். 

சோபா உடன்படிக்கையினூடாக அமெரிக்கா இராணுவத்தை இலங்கைக்கு கொண்வர அரசாங்கம் முயற்சித்து வருகின்றதாகவும் காணி விசேட திருத்த சட்டம் மற்றும் மிலேனியம்  சவால்கள் கூட்டு ஒப்பந்தத்தினூடாக நாட்டின்  காணி வளத்தையும் அமெரிக்காவுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக கடந்த காலங்களில் எதிரணியினர் குற்றுஞ்சுமத்தி  வந்தனர்.

இந்த நிலைமையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் பிரதமருடன் பேச்சுவார்ததை நடத்தியுள்ளனர்.

 

https://www.virakesari.lk/article/60704

Share this post


Link to post
Share on other sites

 

ஐக்கியதேசிய கட்சியை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க முயல்கின்றதா அமெரிக்கா- தூதுவரின் பதில் என்ன?

இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதிவழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆட்சியில் நீடிப்பதை உறுதி செய்யும் முயற்சிகளில் அமெரிக்கா ஈடுபடவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களே 2015 இல் புதிய அரசாங்கத்தை தெரிவு செய்தனர் இன்னும் சில மாதங்களில் அவர்களே புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முகநூல் உரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு அமெரிக்காவின் ஆதரவுள்ளது என தெரிவித்துள்ள அவர் மக்கள் தெரிவு செய்யும் எந்த அரசாங்கத்துடனும் அமெரிக்கா இணைந்து செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் சோபா உடன்படிக்கை குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு சீனா ஒரு காரணமல்ல என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

வலுவான சுதந்திரமான இறைமையுள்ள இலங்கையை  அமெரிக்கா ஆதரிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பிற்கான  இலங்கையின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

alina.jpg

இந்தோ பசுபிக்கின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இலங்கை மேலும் வலுவானதாக விளங்குவதை உறுதி செய்வதற்காகவே இலங்கையுடன் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/60643

 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this