ampanai

அமெரிக்காவில் நான் தொடுத்த வழக்கிற்கும் இலங்கை தேர்தலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - லசந்தவின் மகள்

Recommended Posts

தனது தந்தையாரான சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷவிற்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்காவின் மத்திய கலிபோர்னியாவில் மாவட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக தன்னால் தொடுக்கப்பட்ட வழக்கிற்கும் இலங்கையில் நடத்தப்படக் கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் இதுவரை எந்த தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி வேட்பாளரை இதுவரையில் அறிவிக்கவுமில்லை என்றும் அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க கூறியிருக்கிறார்.

lasantha-wickrematunge-daughter.gif

பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். 

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களைப் பயன்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுப்பது பொருத்தமானது என்று கூட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நினைத்தார். எனக்கு தெரிந்தவரை அவரை வேட்பாளராக எந்த கட்சியும் அறிவிக்கவில்லை என்றும் 2009 ஜனவரியில் கொடூரமாக கொல்லப்பட்டதாக விக்கிரமதுங்கவின் மகள் கூறியிருக்கிறார்.

இலங்கையில் வழக்கை தாக்கல் செய்யாமல் அமெரிக்காவில் தாக்கல் செய்ததின் காரணங்கள் எவை என்று அகிம்சாவிடம் கேட்ட போது, இலங்கை நீதிமன்றங்களில் கோத்தாபய தனித்துவமான விலக்கீட்டு உரிமையை அனுபவிக்கிறார் போன்று தெரிகிறது. பல ஊழல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகளில் அவர் கைது செய்யப்படுவதை தடுத்து குற்றவியல் விசாரணைகளையும் நிறுத்தியதன் மூலம் நூற்றாண்டுக்கும் அதிகமான கால பாரம்பரியத்தை இலங்கை நீதித்துறை மீறிவிட்டது.

கோதாபய சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதியான விசாரணையை இலங்கையில் எதிர்பார்ப்பது பயனற்றது என்றே நான் நம்புகிறேன் என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

கோதாபய மீதான வழக்கிற்கு அரசியல் சாயம் பூசுவது ஏன் வசதியாக இருக்கின்றது என்பதை என்னால் விலங்கிக் கொள்ள கூடியதாக இருக்கிறது. எனது தந்தையின் மரணத்திற்கு பொறுப்பானவர் என்று நான் நம்புகின்ற நபர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் நீதியை பெறுவது சாத்தியமில்லை என்ற எனது நிலைப்பாட்டை பலப்படுத்துவதாகவே அது அமையும். எனது நடவடிக்கையால் தாங்கள் விரும்புகின்ற வேட்பாளர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் ஏதோ சில வழிகளில் பாதிக்கப்படக் கூடும் என்று சிலர் கவலைக் கெண்டுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்.

மஹிந்த ராஜபக்ஷவை தவிர வேறு எவராவது இலங்கையின் ஜனாதிபதியாக வருவது என்ற யோசனை கூட ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தோன்றிய புதியதொரு சாத்தியப்பாடாகும். இப்போது 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக எனது குடும்பமும் நானும் பல்வேறு சட்ட நிறுவனங்கள் உட்பட சகல வகையான அதிகாரிகளையும் சந்தித்து பேசி அவர்களது உதவியின் மூலம் நீதியை பெறுவதற்கான சாத்தியப்பாடு இருக்கின்றதா என்பது குறித்து முயற்சித்துக் கொண்டே வருகின்றோம். அது நீண்ட தேடலாகவே இருக்கிறது என்று அகிம்சா கூறியிருக்கிறார்.

கேள்வி : 2015 தேர்தல்களில் உங்களது தந்தையாரின் கொலை முக்கியமான ஒரு பிரசார சுலோகமாக இருந்தது. அந்த தேர்தலுக்கு பிறகு கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் பதவியிலிருந்தும் விலகவேண்டி ஏற்பட்டது. பதவிக்கு வந்த அரசாங்கத்திற்கும் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை இல்லை என்று நீங்கள் உணர்கிறீர்களா?

பதில் : இந்த கொலையை விசாரணை செய்த பொலிஸ் அதிகாரிகள் அசாதாரணமான துணிச்சலை வெளிக்காட்டினார்கள் உண்மையை வெளிக் கொணர்ந்து வழக்கை பூரணப்படுத்துவதில் அவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கினார்கள். அவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து போராடவில்லை, அரசாங்கத்துடன் போராடுகிறார்கள் என்பதை அடிக்கடி நான் உணர்ந்தேன்.அரசாங்கத்தின் பல நிறுவனங்கள் கொலையை விசாரணை செய்த விசாரணையாளர்களுக்கு தேவையான சான்றுகளை வழங்க மறுத்திருந்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?

மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது.

கேள்வி : நீங்கள் அமெரிக்காவில் தொடுத்த வழக்கு வெற்றி பெறாமல் போகக் கூடும் என்றும் உங்களது தந்தையாரின் கொலைக்கு கோதாபய ராஜபக்ஷ ஒரு போதுமே கிறிமினல் பொறுப்புக் கூறலைக்கப்படாமல் போகலாம் என்றும் கவலைப்படுகிறீர்களா?

பதில் : அரசியல அனுகூலத்துக்காக ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கு முன்னுரிமை கொடுக்க கூடிய ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கையில் என்றாவது ஒரு நாள் தெரிவு செய்யப்படுவார்கள் என நான் நம்புகிறேன். அத்தகைய நேரம் வரும் வரை சுயாதீனமான நியாயாதிக்கமொன்றில் சிவில் நடவடிக்கைகயை முன்னெடுப்பதே நீதியான விசாரணைக்கு எமக்கு இருகக்கூடிய ஒரே வாய்ப்பாகும்.

கேள்வி : கலிபோர்னியாவில் நீங்கள் தொடுத்த வழக்கு வெற்றிகரமான முடிவைக் எட்டுமேயானால் , இந்த வழக்கின் சான்றுகளின்; அடிப்படையில் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்காக குற்றவியல் வழக்கை தொடர்வதன் மூலம் அமெரிக்க அரசாங்கம் தனது சொந்த பிரஜையை பொறுப்புக்கூற வைக்குமா?

பதில் : எனது தந்தையாரின் கொலையுடன் கோதாபய ராஜபக்ஷவிற்கு இருக்கக்கூடிய தொடர்பு பற்றி நீதிமன்றத்தில் தீர்க்கமான சான்றுகளை நாம் முன்வைப்போம். அதற்கு பின்னர் குற்றவியல் செயன்முறைகள் தொடங்கும். குற்றவியல் விசாரணைக்கான சரியான இடம் இலங்கைதான். ஆனால் அமெரிக்க அரசாங்கம் அதன் சட்டங்களின் கீழ் அத்தகைய குற்றச் சாட்டுகள் பொருத்தமானவை என்று பரிசீலிக்கும் என நான் நம்புகிறேன்.

கேள்வி : நீங்கள் தொடுத்திருக்கும் வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தால் நஷ்ட ஈடுகளை கோதாபயவிடமிருந்து கோரமுடியும். அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. அந்த நாட்டில் அவரது சொத்துக்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?

பதில் : எனது தந்தையார் கொல்லப்பட்ட நேரத்தில் கோதாபய ராஜபக்ஷவின் சொத்துகள் குறித்து விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். லொஸ் ஏஞ்சசில் உள்ள வீடொன்றை 2006 ஆம் ஆண்டில் பௌத்த பிக்கு ஒருவருக்கு கொள்வனவு விலையில் மூன்று மடங்கு அதிக விலைக்கு அவர் விற்பனை செய்ததை தந்தையார் கண்டுப்பிடித்தார். நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்வதால் அவரது சொத்துகளின் தற்போதைய நிலைப்பற்றி நான் இதுவரை அறிந்தவற்றை கூறமுடியாது.

 

https://www.virakesari.lk/article/60648

 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
6 hours ago, ampanai said:

பத்திரிகையொன்றுக்கு நேற்று புதன்கிழமை பிரத்தியேக பேட்டியொன்றை அளித்திருக்கும் அகிம்சா, கோதாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக வருவதை தடுப்பதற்கான அரசியல் நோக்கத்துடனேயே அமெரிக்காவில் வழக்கு தொடுத்திருப்பதாக கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தன்னால் கலிபோர்னியாவில் வழக்கு தொடுக்கப்பட்டதன் பின்னரே கோதாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அறிவிப்பை செய்தார். 

கோத்தா தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாக முன்னரே கூறி வந்தவர். அதற்கு தடையாக உள்ள அமெரிக்க குடியுரிமையை துறக்கும் முயற்சியை மார்ச் மாதம் ஆரம்பித்தார். இவர் வழக்கு தொடுத்தது ஏப்ரல் மாதம். :grin:

Edited by Lara

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனது தந்தையாரின் நெறுங்கிய நண்பர்களில் ஒருவர். இராஜதந்திர விலக்கீட்டு உரிமையை கோதாபய ராஜபக்ஷ கோருவதற்கான வழிகளை தேடுவதன் மூலமாக இந்த வழக்கில் குற்றப்பழியிலிருந்து அவரை விடுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறதா?

மறுபுறத்திலே அதிர்ஷ்ட வசமாக ஜனாதிபதி மற்றும் முக்கியமான அமைச்சர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அவர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது நீதியை விரும்புகிறார்கள் போல் தெரிகின்றது.

இலங்கை அரசியலில் இரணிலுக்கு ஒரு தனி இடம் உண்டு.
முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவால் வளர்க்கப்பட்டவர் ரணில்.
அவர் நரி என்றால், இவர் அவருக்கே பாடம் எடுக்கும் நரி.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Topics

  • Posts

    • கோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பதிவு, பெரும்பாலும் மாத இறுதியிலேயே பதிவு செய்யப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பதிவேட்டில் இல்லை என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் “குடியுரிமையை கைவிடுவது என்பது ஒரு நிர்வாக செயன்முறை ஆகும். அதன் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிரகாரமே குடியுரிமையை கைவிட வேண்டும்” என கூறினார். இதேவேளை எவ்வாறாயினும், தனது நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்திருந்தார். 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பட்டியலை கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். இந்த ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என கடந்த வாரம் பல சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கோட்டா-விவகாரம்-மாத-இறுத/
    • சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக  கனடா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/63011
    • தேவையான மிகவும்  பயனுள்ள கருத்தாடல் நன்றி  சகோ... நேரம்  கிடைக்கும்  பொது  இது  தொடர்பான  கருத்தாடலை  வாசித்து  எழுதுகின்றேன்.
    • எழும்பி போய் கிழிக்கிற அளவுக்கு பலம் இருக்கிறதா நான் நினைக்கல
    • நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் – தலதா அத்துகோரள     சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோதமான போதைப் பொருட்களை நாட்டிற்குக் கொண்டு வருவதை முற்றாக இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சில அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தின் சமூக சேவையாளர்கள் 120 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சமாதான நீதவான்களின் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தலத்தா அத்துகோரள குறிப்பிட்டார் http://www.dailyceylon.com/188149/