Sign in to follow this  
தமிழ் சிறி

லண்டனில் இலங்கைத் தேநீர் ஒன்றின் விலை £166.66

Recommended Posts

luxury-hotel-The-Rubens-720x377.jpg

லண்டனில் இலங்கைத் தேநீர் ஒன்றின் விலை £166.66

பிரித்தானியாவிலுள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் (Five-star luxury hotel) தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகின்றது.

லண்டனிலுள்ள பாக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே உள்ள ரூபென்ஸ் (The Rubens) நட்சத்திர விருந்தகத்திலேயே

இங்குதான் தேநீர் ஒன்று £166.66 விற்பனை செய்யப்படுகிறது. இங்கு தேநீர் வெள்ளை நிறக் குடுவையில் பரிமாறப்படுகிறது. சாதாரண தேநீர் தூளை கொண்டு இந்த தேனீர் போடப்படுவதில்லை.

இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் ‘கோல்டன் ரிப்ஸ்’ எனும் பிரத்தியேக தேயிலையால் தேநீர் தயாரிக்கப்படுகின்றது.

இதன் தனிச்சுவை உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி, சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

விலை உயர்வாக இருந்தபோதும் வாடிக்கையாளர்கள், இந்த தேநீரை ஒரு முறை சுவைத்துவிட்டால் மீண்டும் எப்போது சுவைப்போம்? என தோன்றும் அளவிற்கு சுவை நாக்கில் ஒட்டுக் கொள்ளும் என கூறப்படுகின்றது.

luxury-hotel-The-Rubens-2.jpg

luxury-hotel-The-Rubens-3.jpg

luxury-hotel-The-Rubens-4.jpg

luxury-hotel-The-Rubens-5.jpg

http://athavannews.com/தேனீர்-ஒன்றின்-விலை-200-டொலர/

Share this post


Link to post
Share on other sites

ஆனால், சம்பளத்தை 50ரூபாவால் கூட்டி கொடுக்க மனம் இல்லை. காரணம், அவர்களும் தமிழர்கள் என்பதால்.   

Share this post


Link to post
Share on other sites

ஐரோப்பிய ஒன்றியம்  தென்னமெரிக்க நாடுகளிலிருந்து  கோப்பி,கொக்கோ மற்றும் வாழைப்பழங்களை இறக்குமதி செய்கின்றது. அதனை இங்கு விற்பனை செய்யும் போது அந்த தென்னமெரிக்க தொழிலாளர்களின் நலனுக்காக ஒரு சிறு தொகையை கூட்டியே விற்பனை செய்கின்றார்கள்.

Share this post


Link to post
Share on other sites
19 hours ago, ampanai said:

ஆனால், சம்பளத்தை 50ரூபாவால் கூட்டி கொடுக்க மனம் இல்லை. காரணம், அவர்களும் தமிழர்கள் என்பதால்.  

அதுவல்ல காரணம்; அவர்களுக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்பதே

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • கோட்டா விவகாரம்: குடியுரிமை இழந்தவர்களின் பெயர்கள் மாத இறுதியிலேயே பதிவிடப்படும் – அமெரிக்க தூதுவர் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பதிவு, பெரும்பாலும் மாத இறுதியிலேயே பதிவு செய்யப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா பி டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் பதிவேட்டில் இல்லை என்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் “குடியுரிமையை கைவிடுவது என்பது ஒரு நிர்வாக செயன்முறை ஆகும். அதன் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிரகாரமே குடியுரிமையை கைவிட வேண்டும்” என கூறினார். இதேவேளை எவ்வாறாயினும், தனது நாட்டின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என குறிப்பிட்ட அவர், கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்குகள் குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்திருந்தார். 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 தொடக்கம், ஜூன் 30 வரையான காலப்பகுதியில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பெயர் பட்டியலை கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்தினால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தனது அமெரிக்க குடியுரிமை துறப்பு ஆவணம், மே 3ஆம் திகதி அமெரிக்க அரசாங்கத்தினால் உறுதி செய்யப்பட்டதாகவும் ஏப்ரல் 17ஆம் திகதியிலிருந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவராக கணிக்கப்படமாட்டார் என்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் கூறியிருந்தார். இந்த ஆவணம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தநிலையில், அமெரிக்க அரசாங்கத்தின் பதிவாளர் வெளியிட்ட முதலாவது காலாண்டில் அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என கடந்த வாரம் பல சர்ச்சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கோட்டா-விவகாரம்-மாத-இறுத/
    • சவேந்திரசில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள்- கனடா இலங்கையின் புதிய இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு எதிராக நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகள் உள்ளதாக  கனடா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக  தூதரகம் தெரிவித்துள்ளது. அவரது நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/63011
    • தேவையான மிகவும்  பயனுள்ள கருத்தாடல் நன்றி  சகோ... நேரம்  கிடைக்கும்  பொது  இது  தொடர்பான  கருத்தாடலை  வாசித்து  எழுதுகின்றேன்.
    • எழும்பி போய் கிழிக்கிற அளவுக்கு பலம் இருக்கிறதா நான் நினைக்கல
    • நீதிக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் – தலதா அத்துகோரள     சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்துள்ளார். சட்டவிரோத போதைப் பொருட்கள் மற்றும் ஆட்கடத்தல் போன்ற குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சட்டவிரோதமான போதைப் பொருட்களை நாட்டிற்குக் கொண்டு வருவதை முற்றாக இல்லாமல் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சில அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பின்னிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். இரத்தினபுரி மாவட்டத்தின் சமூக சேவையாளர்கள் 120 பேருக்கு சமாதான நீதவான் நியமனம் வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சமாதான நீதவான்களின் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் தலத்தா அத்துகோரள குறிப்பிட்டார் http://www.dailyceylon.com/188149/