Jump to content

மூடப்பட்டது பேராதனிய பல்கலைக்கழகம்


Recommended Posts

பேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

.peratahniya.jpg

பேராதனிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து குறித்த  பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/60802

 

 

மட்டு. பல்கலை.யினை மீண்டும் ஹிஸ்புல்லாவிடம்  கையளிக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் - ஆசுமாரசிங்க

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் சட்டத்துக்கு முரணான நிறுவனமாகும். மீண்டும் இந்த நிறுவனத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவுக்கு கையளிக்க எவராவது முயற்சிப்பார்களாக இருந்தால் அதனை தான் எதிர்ப்பதாகவும் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  பாராளுமன்ற மேற்பார்வைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

அலரிமாளிகையில் இன்று   இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த பல்கழைலகழகம் தொடர்பாக விளக்கமளித்த  அவர் மேலும் கூறியதாவது ;

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  பாராளுமன்ற மேற்பார்வைக்குழு மட்டக்களப்பு தனியார் பல்கலைகழகம் தொடர்பான  இறுதி அறிக்கையை கடந்த மாதம் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. 

இந்நிலையில் இந்த பல்கலைகழகம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை முன்னெடுப்பதற்கு அனுமதியும் கோரியுள்ளோம். ஆகவே அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர்களின் போது இது தொடர்பான விவாதத்தை  முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்றும்  அவர் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/60771

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ampanai said:

பேராதனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

--------

மட்டு. பல்கலை.யினை மீண்டும் ஹிஸ்புல்லாவிடம்  கையளிக்க முயற்சித்தால் கடுமையாக எதிர்ப்போம் - ஆசுமாரசிங்க

நல்ல முடிவு. சில சிங்கள அரசியல் வாதிகள், தமது வாக்கு வங்கி அரசியலுக்காக...
முஸ்லீம் பயங்கரவாதிகளிடம்.... ஒரு பல்கலைக் கழகத்தை,
ஒப்படைப்பது... தற் கொலைக்கு சமன்.  

Link to comment
Share on other sites

7 hours ago, ampanai said:

பேராதனிய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து குறித்த  பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

என்ன முறுகல், காரணமென்ன போன்ற விபரங்கள் இல்லாதா அரைவேக்காடு செய்திகளை  பிரசுரிப்பதில் வீரகேசரி முன்னிலை பெற்றுவருகிறது!

Link to comment
Share on other sites

மூடப்பட்டதற்கு அங்கு பூட்டப்பட இருந்த கண்காணிப்பு 'கமராக்கள்' சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் இடையிலான 'முறுகல் நிலை என சொல்லப்படுக்கின்றது  

During the last few days, students had protested against the installation of CCTV cameras within the university. Talks with the management in this regard were reported to have ended in a stalemate.

Vice-Chancellor Prof. Upul B. Dissanayake said the faculty will be closed temporarily until a final decision is taken over the matter.

http://www.sundaytimes.lk/article/1095822/management-faculty-of-peradeniya-university-closed-until-further-notice

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.