• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அபராஜிதன்

பன்றி வத்தல்

Recommended Posts

ஊரிலிருந்து காட்டு பன்றி வத்தல் வந்திருக்கிறது .எப்படி சமைக்கிறதென யாருக்காவது ஏதும் ஐடியா இருக்கிறதா ? 

Share this post

Link to post
Share on other sites

இந்தமுறையில் சமைக்கலாம்.... வத்தல் இறைச்சியில்  மண் இருக்கலாம்,  கவனமாய் பார்த்து கழுவ வேண்டும். ஏற்கனவே வாட்டிய இறைச்சி என்பதால் அதிகம் அவிய விடத்தேவையில்லை. ருசி பார்த்து இறக்கினால் போதும்.....!   🐖

  • Like 2
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
52 minutes ago, அபராஜிதன் said:

யாழில் பன்றி சாப்பிடுற யாரும் இல்லை போல 

கோவில்கள் எல்லாம் கொடியேறுது மச்சத்தைப் பற்றி கதைக்க மாட்டார்கள்.

Share this post

Link to post
Share on other sites

தணலில், grill, முக்கியமாக நெருப்பு அதில் நேரடியாக தொடாமல் சுட வேண்டும். சிறிதளவு கொழுப்பு உருகும் தான்.

மேல் தோல் எரிந்து சிறிது கரியாக வாய்ப்புள்ளது, சுடும் வரையிலும் வத்தலை இடம் மாற்றி கொண்டிருந்தால் அவ்வளவு கரி பிடிக்காது. பிடித்த கரியை, கத்தியால் அல்லது washing sponge abrasive பாகத்தை கொண்டு சுரண்டி நீக்கவும்.      

பிரட்டல் கறியாகவோ அல்லது குழம்பு கறியாகவோ   சுவையும், மணமும் தூக்குவதுடன், texture மிகவும் வேறு  விதமாக, முற்றிய தேங்காய் வழுக்களிலும் கடினமானதாகவும், சவ்வு (grisle)  தன்மையில், அதைவிட மென்மையாகவும் இருக்கும்.  

வெட்டும் பொது எலும்பு  வந்தால் எறிந்து விடாதீர்கள், எவ்வளவு பெரிதாக இருப்பினும். சமையல் பாத்திரத்துள் அடங்குமாறு எலும்பை தறித்து கொள்ளுங்கள் எலும்பு பெரிதாக இருப்பின். வத்தலில் உள்ள எலும்பே கறியின் வாசனையை தூக்கிவிடுவது.   

நீங்கள் வழமையாக எப்படி இறைச்சி சமைப்பீர்களோ அப்படியே சமைக்கலாம்.

அல்லது, தாளிதம் இருமுறை. அதாவது தாளித்து, தாளித்த பத்திரத்தியே தாளித்ததுடன் கறியாக சமைத்து, சமைத்து முடியும் தறுவாயில், இரண்டாவது தாளிதம் (முதல் தலித்ததிலும் குறைவாக) வேறு ஓர் பாத்திரத்தில் தயாரித்து கறியுடன் சேர்க்கலாம்.

உங்களுடைய, இறைச்சி சமைக்கும் முறை என்னக்கு தெரியாது.

உங்களுக்கு இன்னும் காரசாரமான வாசனை வேண்டுமாயின், பெருஞ்சீரகம், மிளகு (சிறிதளவே),  கறுவா, சிறிதளவு ஏலக்காய் (சிறிதளவே), சிறிதளவு கராம்பு (சிறிதளவே) உடனடியாக வறுத்து, இடித்து (pestle and mortar இல்) அல்லது dry grider  இல் அரைத்து, மாவின் போன்ற தன்மையுள்ள தூளாக்கி, கறியை இறக்கும் தறுவாயில் கறியுடன் சேரத்து கலந்து , மெலிதான நெருப்பில் (கரி ஏற்கனேவே கொதித்துக்கொடு தான் இருக்கும்) ஓர் 5-6 நிமிடங்கள் (அதாவது இந்த spice இல் உள்ள வெக்கை அடங்க வேண்டும்).

எந்த இறைச்சியாயினும், சமையலின் ருசியானது, இறைச்சியின் flavour, spice இன் fragrance உடன் balance ஆக இருக்க வேண்டும். ஒன்றை மற்றொன்று விஞ்சக்கூடாது.     

இந்த முறை புதிதாயின், ஆட்டிறைச்சியை ஓர் முறை இந்த முறையில் சமைத்து பாருங்கள்.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
On 7/28/2019 at 5:32 PM, அபராஜிதன் said:

யாழில் பன்றி சாப்பிடுற யாரும் இல்லை போல 

இன்று வரைக்கும் இல்லை  இது நான் காட்டில் எடுத்த படம் 

DSCN0711.jpg

Edited by தனிக்காட்டு ராஜா

Share this post

Link to post
Share on other sites

காட்டுப்பன்றிகள் பார்த்து எவ்வளவு காலமாச்சு. படம் நல்லாயிருக்கு தனி......அந்த முன்னால இருக்கும் பன்றிக்கு கொஞ்சம் டை அடித்து விட்டு படம் எடுத்திருக்கலாம்....!   😂

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, suvy said:

காட்டுப்பன்றிகள் பார்த்து எவ்வளவு காலமாச்சு. படம் நல்லாயிருக்கு தனி......அந்த முன்னால இருக்கும் பன்றிக்கு கொஞ்சம் டை அடித்து விட்டு படம் எடுத்திருக்கலாம்....!   😂

அது பெரிய குடும்பம் அண்ண எங்களை கண்டது என்ன கொடுப்பியள் என கேட்க நாங்க உப்பு பிஸ்கட்டை உடைச்சி போட்டோம்

DSCN0712.jpgDSCN0714.jpg

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

அதுகளாவது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும், நம்ம சனம் இரண்டுக்கு மேல போகாது....!   😁

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, suvy said:

அதுகளாவது பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழட்டும், நம்ம சனம் இரண்டுக்கு மேல போகாது....!   😁

ஹாஹா ஒரே கேள்வி யாரு வளர்க்கிற அந்த கால பாட்டிகளுக்கு பிறகு தான் இப்ப உள்ள ஆட்கள் ஓலை குடிசைக்குள் ஒன்பது பத்து பிள்ளைகள் 

Share this post

Link to post
Share on other sites
On 8/2/2019 at 10:32 AM, தனிக்காட்டு ராஜா said:

அது பெரிய குடும்பம் அண்ண எங்களை கண்டது என்ன கொடுப்பியள் என கேட்க நாங்க உப்பு பிஸ்கட்டை உடைச்சி போட்டோம் 

DSCN0712.jpgDSCN0714.jpg

கிராமத்தை அல்லது ஊரை அண்டியுள்ள காடா?

வெகு சாதாரணமாக வளர்ப்பு பிராணிகள் போல, மனிதர்களுடன் ஏலவே பரீட்சயமானதைப் போல, அதுவும் குட்டிகளுடன், உலாவுகின்றன?

அல்லது, காட்டுப் பன்றியுடன் (wild boar) கலப்பினம் உள்ள வளர்ப்பு பன்றிகளா?

பிடரியில் இருந்து வால்  வரைக்கும் உள்ள திரட்டு உரோமத்தையும் கவனித்தேன்.

வழமையாக, காட்டுப் பன்றிகள் (wild boar) மனிதர்களின் சகவாசத்தை விரும்பாது, ஆக்ரோசம் அடைவதுடன், எதிர்க்கவும் துணியும். பிடரி தொடங்கி வால்  வரையுள்ள உரோமத் திரட்டு, நீண்ட brush போல சிலிர்ப்படைந்து, விறைத்து நிற்குக்கும்.

ஆண் காட்டுப் பன்றிக்கு தந்தமும் (உண்மையில் அவை கூரிய பற்களே). 

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Kadancha said:

இவை அனைத்தும் ஆக்ரோசமுடைய காட்டுப்பன்றிகள் தான் ஆனால் கதிர்காமம் நடந்து செல்லும் போது ஓர் இடம் இருக்கிறது  அந்த இடத்தில் இவை  சில நேரம் அண்டி வரும் சில நேரம் ஓடிவிடும் சிலபேரின் கவடுகளை கிழித்து சென்ற சம்பவங்களும் உண்டு . குட்டிகளின்முதுகில் இந்த கோடுகள் உள்ளது வளர்ந்தவுடன் மறைந்து செல்கிறது போல 500 கிலோவுக்கும் கூடுதலான பன்றிகளும் உண்டு

இது கொஞ்சம் ஆக்ரோசமாக இருந்தது அதனால் வாகனத்தில் இருந்தோம்

20170114-152248.jpg

Share this post

Link to post
Share on other sites

இவர்களும் இணைய தயாராகி ஆக்றோசமாக இருந்தார்கள்  குமண சரணாலயம் செல்லும் போது எடுத்த படங்கள் நமது யாழ்கள நண்பர் இருவருடன் 

20170114-151345.jpg20170114-151056.jpg

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவை அனைத்தும் ஆக்ரோசமுடைய காட்டுப்பன்றிகள் தான் ஆனால் கதிர்காமம் நடந்து செல்லும் போது ஓர் இடம் இருக்கிறது  அந்த இடத்தில் இவை  சில நேரம் அண்டி வரும் சில நேரம் ஓடிவிடும் சிலபேரின் கவடுகளை கிழித்து சென்ற சம்பவங்களும் உண்டு . குட்டிகளின்முதுகில் இந்த கோடுகள் உள்ளது வளர்ந்தவுடன் மறைந்து செல்கிறது போல 500 கிலோவுக்கும் கூடுதலான பன்றிகளும் உண்டு

பண்டி வத்தல் கறி கதிர்காம யாத்திரையிலை வந்து நிக்குது......கவனம் அங்காலை பள்ளிவாசலுக்கை கொண்டு போயிடாதேங்கோ.....😁

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, குமாரசாமி said:

பண்டி வத்தல் கறி கதிர்காம யாத்திரையிலை வந்து நிக்குது......கவனம் அங்காலை பள்ளிவாசலுக்கை கொண்டு போயிடாதேங்கோ.....😁

இல்லை அது ஹராம் ஆச்சே இனி நிலங்களை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் கிழக்கில் பண்டிதான் வளர்க்க வேண்டும் அண்ணே

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this