Jump to content

இங்கிலாந்திடமிருந்து இலங்கை கற்கவேண்டிய பாடம் என்ன?குமார் சங்கக்கார

Recommended Posts

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் எனகுமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்

கல்ப்நியுசிற்கான தனது வாராந்த கட்டுரையில் குமார் சங்கக்கார  இதனை தெரிவித்துள்ளார்.

2015 உலக கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட அவமானத்தின் பின்னர் இங்கிலாந்து அணி கடந்துவந்துள்ள பாதை எதிர்காலத்திற்காக திட்டமிட விரும்பும் எந்த அணிக்கும் ஒரு சிறந்த பாடம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2019 உலக கிண்ணத்தை வெல்வதற்கு தாங்கள் விளையாடவேண்டிய விதத்தையும் அதற்கான வீரர்களையும் இங்கிலாந்து அணியினர் இனம்கண்டுகொண்டனர் எனவும் குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

2023 இல் இந்தியாவில்  இடம்பெறவுள்ள உலக கிண்ண போட்டிகளிற்காக தயாராகும் இலங்கை இங்கிலாந்து பயணித்த பாதையை பின்பற்றவேண்டும் என குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் போட்டிகள் இடம்பெறவுள்ளதால் சூழ்நிலைகள் ஆடுகளங்கள் எங்களிற்கு சாதகமாகயிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இலங்கை அணியிடம் திறமையுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் மிகவும் அவதானமாக திட்டமிட்டு முக்கிய குழுவை முன்னரே உருவாக்கவேண்டும் எனவும்குமார் சங்கக்கார  தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் வெற்றி மோர்கனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் குமார் சங்ககார குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீரர்களிற்கு நம்பிக்கையை வழங்கினார் வீரர்கள் தங்களிற்கு உரிய பாணியில் விளையாட அனுமதி வழங்கினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/60785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க‌ ஓய்வோடு இல‌ங்கை அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் விட்ட‌து / 

இனி இல‌ங்கை அணி ப‌ழைய‌ நிலைக்கு வ‌ரும் என்ப‌து க‌ற்ப‌னையில் தான் /

அப்கானிஸ் தான் அணியில் ப‌ல‌ வீன‌ம் ம‌ட்டை , அதையும் அந்த‌ அணி ச‌ரி செய்தா , ஆசியாவில் மூன்றாவ‌து பெரிய‌ அணி என்ர‌ பெருமையை அந்த‌ அணி பெரும் 😁😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

இதே இல‌ங்கை நாட்டில் , ப‌ளைய‌ சேர்ந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் ம‌லிங்காவுக்கு நிக‌ரா ப‌ந்து வீச‌க் கூடிய‌வ‌ர் , இல‌ங்கை அணியில் அந்த‌ திற‌மையான‌ வீர‌னுக்கு இட‌ம் கிடைச்ச‌தா 😠/

இங்லாந் திற‌மையான‌ வீர‌ர்க‌ளுக்கு அணியில் வாய்ப்பு குடுக்குது / இல‌ங்கை அப்ப‌டியா , அருவ‌ருக்க‌ த‌க்க‌ நாய‌ல் சிங்க‌ள‌ காட்டு மிராண்டிய‌ல் 😉😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இந்த உலக கிண்ணத்தில் இங்கிலாந்து அணியில் விளையாடியவர்களில் 4,5 பேர் இந்த நாட்டை சாராதவர்கள் 

ரோய் பிறந்தது தென்னாபிரிக்கா

ஸ்டோக் பிறந்தது நியூசிலாந்து

மொயினும் ரசீதும் கஸ்மீர் வம்சாவளி

ஆச்சர் பிறந்தது மேற்கிந்தியத் தீவில்

முத்தாய்ப்பாக இயன் மோர்கன் முன்பு அயர்லாந்து அணிக்கே விளையாடியவர்.

ஆனால் இத்தனை பேரும் இங்கிலாந்துக்கு விளையாட விரும்பி, சட்டபூர்வமாக ஐசிசி விதிகளுக்கு அமைய வதிவிட உரிமை பெற்று விளையாடினார்கள்.

அவர்களை, நிற, இன, மத, நாட்டுக் குரோதம் இன்றி திறைமை ஒன்றை மட்டுமே அடிப்படியாக கொண்டு விளையாடவும் அனுமதித்தார்கள்.

இலங்கையில் செத்தாலும் இந்த அணுகுமுறை வருமா? முஸ்லீமாக பிறந்த மொகமெட் டில்சானே, திலகரட்ன டில்சான் ஆகவேண்டிய நிலைமை.

நீங்களாவது, இங்கிலாந்தின் அணுகுமுறைய பின்பற்றுவதாவது.

சங்கா ஒரு அற்புதமான மனிதன். இனவெறி துளியும் இல்லாத மனிதன். ஆனால் இனவாதம்/ஊழல் புரையோடியுள்ள இலங்கை கிரிகெட் ஆளும் வர்கத்துக்கு இது செவிடன் காதில் 🐚

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த‌வ‌ர் என்று தான் அண்மையில் ர‌சித்தின் பாகிஸ்தான் நாட்ட‌வ‌ர்க‌ளுட‌ன் யூடுப்பில் ஒரு காணொளி பார்த்தேன் 😁😉

தென் ஆபிரிக்காவில் பிற‌ந்து இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் /

அதே போல‌ சிம்பாவே நாட்டில் பிற‌ந்தும் இங்லாந் அணியில் இட‌ம் பிடிச்ச‌ வீர‌ர்க‌ளும் இருக்கின‌ம் /

நாச‌மாய் போன‌ இல‌ங்கை அணியில் சிங்க‌ள‌ நாய‌லை த‌விற‌ வேர‌ ஆட்க‌ளுக்கு இட‌ம் இல்லை / 

முர‌ளித‌ர‌ன்
டில்ஷான் 
அருன‌ல்ட் த‌மிழும் சிங்க‌ள‌மும் க‌ல‌ந்த‌வ‌ர் 😁😉/
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரசீத் மீர்பூரி - பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் கஸ்மீரின் மீர்பூர் இவர் பூர்வீகம். மொயினும் அதே.

தெஆவில் பிறந்த வீரர்கள் அநேகருக்கு, பீட்டர்சன், டிரொட், ஸ்டிரெளஸ், ரோய் ... ஏதாவது ஒரு பெற்றோர் இங்கிலாந்தவராக இருப்பார்கள். எனவே இலகுவில் யூகே வாழ்வுரிமை பெற முடிகிறது.

ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பெற்றாருக்கு நியுசிலாந்தில் பிறந்தாலும், அவர் தந்தை இங்கிலாந்தில் ரக்பி கோச் வேலை பார்த்த போதே, சிறு பிராயம் முதல் இங்கேயே தங்கிவிட்டவர்.

ஆச்சர் மே இ தீ அணிக்கு 19 வயதுக்கு கீழபட்ட அணியில் விளையாடியவர். இவருக்கும் ஒரு பெற்றார் யூகே சிற்றிசன்.

மோர்கன் இரெட்டை குடியுரிமை உள்ளவர்.

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

அஞ்செலோ மத்யூஸ்- தாய் சிங்களம், தந்தை தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இனி மேல் கொஞ்சம்,கொஞ்சமாய்  இலங்கையணியிலும் மாற்றம் வரும் என்று நம்புறன் 

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்.?

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

Link to comment
Share on other sites

23 hours ago, goshan_che said:

ஆர்னல்ட் இருபக்கமும் தமிழர் - பூர்வீகம் மானிப்பாய். கொழும்பு சென் பீற்றர்ஸ் பள்ளி அணியை 94 இல் தலைமைதாங்கி ஜனாதிபதி கிண்ணத்தை வென்றவர். தெகிவளை பிரெசர் அவனிவுவில் அப்போது வசித்தர். அதே வீதியின் முடிவிலுள்ள மைதானத்தில் நானும் அவருடன் மென்பந்து ஆட்டம் ( சின்ன பையனாக) ஆடியுள்ளேன்.

ரவீந்திர புஸ்பகுமார, தாய் தமிழ், தந்தை சிங்களம்.

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

திற‌மையான‌ த‌மிழ் வீர‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி விட்டு , கிரிக்கெட் விளையாட‌ தெரியா முர‌ட்டு சிங்க‌ள‌ பாட‌சாலை ப‌ஸ்ச‌ங்க‌ளை ம‌னைதான‌த்துக்கை விடுவாங்க‌ள் , இது தான் அவா சொல்லுர‌ மாற்ற‌ம் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 😁😉 /

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பணக்காரர்களாகவும் மந்திரிகளின் உறவும் தேவை பையா.

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பகலவன் said:

கோசான் நாங்கள் மிக நெருக்கமாக இருந்திருக்கிறோம் ஒருவரை ஒருவர் அறியாமல். தெகிவளை நூலகத்தின் பின்பகுதியில் பிறேசர் மைதானத்தில் நான் விளையாடி இருக்கிறேன். 6 அடித்தால் ரசல் வீட்டுக்குள் தான் போய்விழும். மாலை நேரங்களில் பொம்மேரியன் நாய்க்குட்டியுடன் உலாவருவார் (சில நேரங்களில் அவரின் மனைவியும் கூட). நான் சமனை சந்திக்க அடிக்கடி வருவதுண்டு.

ரவீந்திர புஸ்பகுமார சொய்சாபுர தொடர்மாடியில் தான் குடியிருந்தவர், அவரையும் அடிக்கடி நான் வீதியில் பார்ப்பதுண்டு.

உண்மைதான் அண்ணா. சிலசமயம் உங்களை நேரில் கண்டால் அடையாளம் தெரியவும் கூடும்.

ஆர்னோல்ட் நேசனல் அணிக்கு ஆடத்தொடங்கிய சமயத்தில் நான் ப்ரேசர் கிரவுண்டுக்கு போறது குறைந்து விட்டது.

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

ரசள் ஆர்னோல்டின் தமையன் யூகேயில்தான் வசிக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பையன்26 said:

இல‌ங்கை கிரிக்கெட்டில் அர‌சிய‌ல் விளையாடுவ‌து ப‌ல‌ருக்கு தெரிந்து இருந்தாலும் , தெரியாது போல் ந‌டிப்பார்க‌ள் /

இப்ப‌ இல‌ங்கை அணியில் விளையாடும் வீர‌ர்க‌ளை விட‌ ப‌ல‌ த‌மிழ் வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடி திற‌மையை நிருபித்தும் அவ‌ர்க‌ளுக்கு அணியில் இட‌ம் இல்லை ,

இப்ப‌ இல‌ங்கை அணியில் இருக்கும் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ள் ப‌ல்லு இல்லாத‌ பாம்புக‌ள் 😁😉 /

இதை நீங்கள் மேலோட்டமாக பாக்கிறீர்கள். இலங்கையில் இபோதெல்லாம் 40 பேர் குழாமில், 20 பேர் குழாமில் சில தமிழ் தலைகள் தென்படும். ஆனால் 15 க்குள் வர மாட்டார்கள். 

உண்மையை சொல்லப் போனால் 15க்குள் வரும் தகுதி எம் வீரர்களுக்கு இல்லை என்பதே உண்மை. ஆனால் திறமை இல்லாமல் இல்லை. வடகிழக்கில் இருக்கும் ஒரே டேர்வ் பிட்ச் யாழ் சம்பத்தரிசியர் பிட்ச் மட்டுமே. மிகுதி எல்லா பாடசாலைகளும் மெட்டின் விரித்தே ஆடுவர். இந்த இரு ஆட்டங்களுக்கும் பாரிய வேறுபாடு. 

யாழின் பல புகழ்பெற்ற கிரிகெட் ஆட்டக்காரர் எல்லாம் கொழுப்பில் சோபிக்க முடியாமல் போனதுண்டு. 

இப்போது கொழும்பில் உள்ளதை போல வசதிகள் எம்மண்ணில் வருமோ அப்போது தகுந்த திறைமை மட்டுமல்ல, தகுதியும் எம் வீரர்களுக்கு வரும். இலங்கையில் மாகாண மட்டத்தில் 1ஸ்ட் கிளாஸ் கிரிகெட் அணிகளை நிறுவி, ஒவ்வொறு மாகாணத்துக்கும் ஒரு அணியை அமைத்து, வளங்களை பகிர்ந்து போட்டிகளை  நடத்தும் போது, எம்மில் இருந்தும் திறைமையானவர்கள் வருவார்கள். ஆனால் இதை ஒரு போதும் இனவாதம் செய்யவிடாது.

1ஸ்ட் கிளாஸ் கிரிகெட்டை கொழும்பு, கண்டி, குருநாகல, களுத்துறை, காலி மாவட்டத்தில் உள்ள அணிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தி, எமது பிரதேசத்தில் ஒரு வலுவான கிரிகெட் கட்டமைப்பே இல்லாமல் பார்த்துகொண்டால் -எந்த திறைமையான வீரனையும் 40க்குள் எடுத்துவிட்டு, 15க்குள் வர தகுதியில்லை என இலகுவில் கழித்துவிடலாம்.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செய்வதும் இதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

http://www.mathisutha.com/2019/07/tamileelam-cricket.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

இந்த போட்டியில் பங்கு பற்றியவர்கள் எல்லோரும் மேலே ஏராளன் இணைத்த கட்டுரையை ஒருதரம் படியுங்கள்.

ஏழு மாவட்டத்திலும் ஏழு ரேப்வ் மைதானம், ஏழு அணிகள் - ஒரு 1ம் தர போட்டி - எம்மால் உருவாக்க முடியாதா?

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மாகாணங்கள்  (county) மட்டத்தில் U15 அணிக்காக ஒரு சில தமிழ் பிள்ளைகள் விளையாடிகினம். நானறிந்த மூன்று நாலு பேர் துவக்க ஆட்ட காரர்கள். இங்கிலாந்து கிரிக்கெட் சபை திறமைக்கு முதலிடம் கொடுக்கிறது.
http://buckscb.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4178855?from=results&result_id=3737572&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/3820213?from=results&result_id=3737599&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/bowling_stats/4441974?from=results&result_id=3737586&rule_type_id=179
http://ecbu15cup.play-cricket.com/website/player_stats_widget/batting_stats/4092824?from=results&result_id=3737688&rule_type_id=179

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

நான் வாசித்து என‌து க‌ருத்தையும் ப‌திவுட்டுள்ளேன் அந்த‌ திரியில் 😁😉 /

எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எங்கே?

விளையாட்டு திட‌லுக்கை போய் பாருங்கோ பிரோ / ஏராள‌ன் அங்கையும் இந்த‌ ப‌திவை இணைத்துள்ளார் 😁😉 /

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

சொய்சாபுரவின் நடுவில் இருக்கும் சிறிய புல்வெளியிலும் விளையாடியுள்ளேன். ஆனா புஸ்பகுமார அங்கு இருந்த விடயம் தெரியாது. மஹேலவுடன் அணியில் இடம்பெற போட்டியிட்ட அவிஸ்க குணவர்தன அண்டெர்சன் தொடர்மாடியில் வசித்தார்.

விளையாட்டு சம்பந்தமான திரியில் வேறு கதைக்க விரும்பவில்லை. நாங்கள் அடிக்கடி வீடியோ கடையடி சொய்சாபுர சலூன் அந்த  பெரிய புத்தர் சிலையடி, மைதானத்தின் பி புளக் பக்கம் இருக்கும் மரத்தடியில் தான் இருந்து கதைப்போம். கட்டாயம் உங்களை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அது ஒரு காலம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.