Jump to content

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் துவங்கியது


Recommended Posts

பால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்... கொதித்தது தமிழகம். தேர்வை ரத்துசெய்தார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை வீசிக் கொண்டிருப்பதைப் பார்த்து பலரும் கலங்கி நிற்கும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) சட்டத்திருத்தம் என்கிற பெயரில் அடுத்த அஸ்திரத்தைப் பாய்ச்சியிருக்கிறது பி.ஜே.பி அரசு.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் இந்தச் சட்டம் பயங்கரவாதிகளுக்கு எதிரானதாகத் தோன்றும். அத்தோடு நின்றுவிட்டால் பராவாயில்லை. ஆனால், பொடா, தடா சட்டங்கள் போல இதையும் அப்பாவிகள் மீதும் பாய்ச்சுவார்கள். குறிப்பாக, தமிழகத்தில் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் போர்க்குரலை ஒடுக்கும் வகையில், இந்த என்.ஐ.ஏ களத்தில் இறக்கிவிடப்படும் ஆபத்து காத்திருக்கிறது’’ என்கிற கலவரமான பேச்சுகள் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன.

தேசியப் புலனாய்வு முகமை தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து, புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி யிருக்கிறது மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்தபோதே காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தைக் கண்டு யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. இதுவரை இந்த அமைப்பு தனிப்பட்ட முறையில் யாருக்கு எதிராகவும் செயல்பட்டதில்லை. இதுவரை 272 வழக்குகளை விசாரித்து அதில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில், ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுதத் தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுடன், பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இணையக் குற்றங்களையும் இந்த அமைப்பு விசாரிக்கும்’’ என்று அறிவித்தார்.

அமித் ஷா தந்துள்ள இந்த விளக்கம்தான் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘‘இந்தச் சட்டத்திருத்தம் கருத்துச் சுதந்திரத்துக்குக் கல்லறை கட்டும் முயற்சி. இனி என்.ஐ.ஏ நினைத்தால் யாருடைய சமூக வலைத்தளத்திலும் நுழைந்து ஆராய முடியும். மத்திய அரசுக்கு எதிராகத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகளை அடியோடு ஒழிப்பதற்கே, இணையதளக் குற்றங்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கின்றனர். இந்த நாட்டின் அதிகாரமிக்க அமைப்பாக இனி என்.ஐ.ஏ மாறும். இந்த அமைப்புக்கு என்று தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்றும் சொல்கிறது சட்டத் திருத்தம். வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிரான குற்றச்செயல்களை மேற்கொள்வோரைக் கைது செய்யும் அதிகாரத்தையும் என்.ஐ.ஏ அமைப்புக்குத் தருகிறது இந்தச் சட்டத்திருத்தம். ‘இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்’ என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சொன்னாலும், ஓர் அமைப்புக்கு இத்தனை அதிகாரம் ஆபத்தை ஏற்படுத்திவிடாதா என்கிற கேள்வியும் எழுகிறது’’ என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன்
 
சிவா, சுப.உதயகுமார், வானதி சீனிவாசன்

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, ‘‘என்.ஐ.ஏ சட்டம் குறித்தே வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதற்குள் இந்த மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டுவருகிறது?’’ என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். அதேபோல இந்தச் சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று பலரும் சுட்டிக்காட்டிப் பேசினார்கள். குறிப்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘‘இஸ்லாமியர்களை அச்சுறுத்தவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகள் இந்த அமைப்பால் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டபோது, அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ஒவைசியின் கேள்விக்குப் பதில் அளித்த அமித் ஷா, ‘‘பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் மதம், இனம் பாகுபாடு பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம். இது இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லவேண்டாம்’’ என்றார். “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகியிருந்த ரோகிணி சலியன், ‘இந்த வழக்கில் அமைதியாகப்போகும்படி என்னை என்.ஐ.ஏ அதிகாரிகள் வற்புறுத்தினர்’ என்று சொல்லிவிட்டு வெளியேறியிருக்கிறாரே?’’ என்று அமித் ஷாவிடம் சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘‘இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், கருத்துக் கூற முடியாது’’ என்று பின்வாங்கினார் அமித் ஷா.

அமித் ஷாவின் பதிலில் தமிழகத்தைச் சேர்ந்த சமூகப்போராளிகளுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் சந்தேகிக் கின்றனர். ‘‘தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு எதிராகப் போராடுவோரும்,

பி.ஜே.பி-யின் சித்தாந்த அணுகுமுறைகளைக் கடுமையாக எதிர்க்கும் பலரும் ‘அர்பன் நக்சல்’ என்று வர்ணிக்கப்படுகின்றனர். தமிழ்த்தேசியம் பேசுவோர் தீவிரமாகக் கண்காணிக்கப் படுகின்றனர். இந்த நிலையில் என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பது மேலும் அச்சமூட்டுகிறது’’ என்கின்றனர், தமிழகத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்.

நம்மிடம் பேசிய தமிழ் உணர்வாளர்கள் சிலர், ‘‘மாநில காவல்துறையின் அனுமதி இல்லாமலே ஒருவரை என்.ஐ.ஏ கைதுசெய்து விசாரிப்பதற்கு இந்தச் சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது. அதேபோல், சமூக ஊடகங்களில் பதிவிடும் கருத்துகளை வைத்து ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தவும் முடியும். நாட்டிலேயே சமூக ஊடகங்களில் பி.ஜே.பி-யையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சிக்கும் மாநிலங்களில் தமிழகமே முன்னிலையில் இருக்கிறது. அந்த வகையில் அதை முடக்கும் பொருட்டு தமிழகத்துக்காகவே இந்தச் சட்டத்திருத்தம் வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. குறிப்பாக, தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய வாய்ப்புள்ளது. அமித் ஷா ஏற்பாட்டில் நடக்கும் ‘ஆபரேஷன் தமிழ்’ ஆகத்தான் இதைப் பார்க்கிறோம்’’ என்றனர்.

இந்தச் சட்டத்திருத்தம் குறித்து மாநிலங்களவை தி.மு.க தலைவரான திருச்சி சிவாவிடம் கேட்டோம். ‘‘கள்ளநோட்டு அச்சடிப்பு, சைபர் க்ரைம், ஆயுதக்கடத்தல், வெடிமருந்து தயாரிப்பு போன்ற சில குற்றங்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் கூடுதலாக விசாரிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவந்திருக்கிறார்கள். இதன் மூலமாக மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் அதிகாரிகள் தன்னிச்சையாக யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இதற்கு முன்பு என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிப்பதற்குத் தனி நீதிமன்றம் இருந்தது. இப்போது அதிலும் மாற்றம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே செயல்பட்டுவரும் செஷன்ஸ் கோர்ட்டுகளை இனி என்.ஐ.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றப்போகிறார்கள்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிற அளவுக்கோ, சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகளால் விசாரிக்க முடியாத வழக்குகளையோ, இந்திய நாட்டின் எல்லையோரத்தில் நாடு கடந்து நடக்கக்கூடிய பயங்கரவாதத்தையோ, என்.ஐ.ஏ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காகப் பழிவாங்கும் விதமாக இந்தப் புதிய சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். கடந்த காலத்தில் தடா, பொடா சட்டங்கள் தோல்வியைச் சந்தித்தன. இப்போது மீண்டும் என்.ஐ.ஏ-க்கான புதிய சட்டத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் நான் பேசினேன். ஆளும் பி.ஜே.பி அரசு நிச்சயமாக இதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் நம்மிடம், ‘‘நீதிமன்ற நடவடிக்கைகள் ஏதுமில்லாமல், எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் சிறையில் வைத்திருக்க முடியும் என்கிற அதிகாரத்தை என்.ஐ.ஏ-வுக்கு இந்தச் சட்டத்திருத்தம் வழங்கியுள்ளது. மீத்தேன், கூடங்குளம் அணு உலை, நியூட்ரினோ போன்ற பல்வேறு அழிவுத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகிறோம். வருங்காலங்களில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு என்.ஐ.ஏ-வின் இந்தச் சட்டத்திருத்தம் பயன்படுத்தப்படலாம். இது ஜனநாயகத்தையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு நெருக்கடியை உருவாக்கும் சதித்திட்டம்தான் இது’’ என்றார்.

மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயனிடம் பேசினோம். ‘‘இந்தச் சட்டத்திருத்தத்தை முழுமையாக நான் இன்னும் படிக்கவில்லை. பொதுவாக, நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகள்தான். வாழ்வாதாரத் துக்காக பங்களாதேசத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கு வங்கத்துக்கும் அசாமுக்கும் நிறைய பேர் வந்துள்ளனர். இவர்களை எல்லாம் எல்லையைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்புவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்வாதாரத்துக்காக உலகம் முழுவதும் இந்தியர்களும் சீனர்களும்தான் அதிகமாகப் பரவியிருக்கின்றனர். மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்களை இதுபோல திருப்பி அனுப்பினால் என்னாகும்? ‘எல்லோருக்கும் ஒரு தேச உரிமை உண்டு’ என்று ஐ.நா. கூறியிருக்கிறது. தேசிய புலனாய்வு முகமையின் சட்டம் அதையெல்லாம் கேள்விக்குறியாக்குகிறது. இவ்விவகாரத்தைத் தீர்க்க விசாலமான பார்வை தேவை’’ என்றார்.

தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘தொழில்நுட்ப வசதிகளாலும் நவீன ஆயுதங்களாலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பயங்கரவாதம். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இப்போதிருக்கும் சட்டங்களின் மூலம் முற்றிலுமாக பயங்கர வாதத்தை ஒழித்துவிட முடியாது. எனவே, என்.ஐ.ஏ-வில் புதியச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் வாயிலாகவே இன்று சமூகத்தின் அமைதியைக் குலைத்துவிட முடியும் என்பதற்கு, சமீபத்திய சில வழக்குகளே உதாரணமாக இருக்கின்றன. எந்தவொரு சட்டத்திருத்தமும் செய்யப் படும்போது, ‘இது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தப் படும்’ என்று எதிர்க்கட்சியினர் கூறுவது வாடிக்கைதான். இதற்கான பதில்களை சட்டத்திருத்த விவாதத்தின்போதே அமித் ஷா மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். எனவே, பொதுமக்கள் இதுகுறித்து எந்தவித அச்சமும் அடையத் தேவையில்லை!’’ என்றார்.

தீவிரவாதிகளை ஒடுக்கக் கடுமையான சட்டங்கள் தேவைதான். ஆனால், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கான கறுப்புச் சட்டமாக அதைப் பயன்படுத்தாமலிருக்க வேண்டும். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில்கூட இப்படி கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வந்து எதிர்க்கருத்து சொல்பவர்களை முடக்கினார்கள். ஒருகட்டத்தில் அவர்களே அத்தகைய சட்டத்தைத் திரும்பப் பெற்ற வரலாறு இங்கே உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது.

பி.ஜே.பியை எதிர்ப்போர் யார்?

பத்திரிகையாளர்கள் பட்டியல் தயார்!

பி.ஜே.பி-க்கு எதிராக எந்தெந்த ஊடகங்கள் செயல்படுகின்றன, எந்தெந்தப் பத்திரிகையாளர்கள் இதில் முன்னணியில் உள்ளனர் என்று பட்டியல் தயாரிக்குமாறு பி.ஜே.பி தலைமை, தமிழகத்திலுள்ள ஒரு பத்திரிகையாளரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது. சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் நீளமான ஒரு பட்டியலைத் தயாரித்து டெல்லியில் ஒப்படைத்துவிட்டு, தமிழக ஊடகங்களை முடக்க சில ஆலோசனைகளையும் வழங்கியிருப்பதாக ஊடக வட்டாரத்தில் ஒரு தகவல் பரவிக்கொண்டிருக்கிறது.

https://www.vikatan.com/government-and-politics/politics/nia-amendment-bill-amit-shah-attack

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாஜிக்களிடம் பாடம் படித்தவர்கள், அவர்களின் அழிவிலிருந்து பாடம் படிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/20/2019 at 8:51 AM, ampanai said:

சாணக்கியத்தனம் நிறைந்த அந்தப் பத்திரிகையாளர் 

யாரது ..? நெறியாளராக .. ஒன்டுக்கும் உதவாத விவாத நிகழ்ச்சிகளில் பாண்டியா போல சிக்ஸ் அடித்து ஆடுவாரே அவரா..? 😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.