• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

ஈழத்து இந்துக் கோயில்­களின் தொன்மை குறித்த ஆய்வு மாநாடு

Recommended Posts

ஈழத்து இந்துக் கோயில்­களின்  தொன்மை குறித்த ஆய்வு மாநாடு

தேசிய ஒரு­மைப்­பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய, விவ­கார அமைச்சின் வழி­காட்­டலில் இயங்கும் இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் இவ்­வ­ரு­டத்­திற்­கான ஆய்வு மாநாடு “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்­துக்­கோ­யில்கள் – தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” எனும் தொனிப்­பொ­ருளில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்து சம­யத்தைப் பொறுத்­த­வ­ரையில் கோயில்கள் பிர­தான இடம் வகிப்­பன. இந்து கலா­சாரம் கோயிலை மையப்­ப­டுத்­திய கலா­சா­ர­மா­கவே விளங்­கு­கின்­றது. அழிந்­த­னவும் அழி­யா­த­ன­வுமாய் விளங்கும் கோயில்கள் பற்றித் தொல்­பொ­ருட்கள், இலக்­கிய மர­பு­க­ளி­ன­டி­யாகச் செவ்­வை­யான முறையில் ஆராய வேண்­டி­யதும் அந்த ஆராய்ச்­சியின் முடி­வு­களை ஒழுங்­காகப் பதி­வு­செய்ய வேண்­டி­யதும் நமது பிர­தான கட­மைகள் என்­பதைச் சம­கால இலங்­கையின் சமூக அர­சியல் நிலை­மைகள் எமக்குத் துலாம்­ப­ர­மாக உணர்த்தி நிற்­கின்­றன. ஈழத்தில் இந்து சம­யத்தின் தொன்­மை­யையும் அங்கு அது பெற்­றி­ருந்த செல்­வாக்­கையும் உணர்த்­து­வ­ன­வாக அமை­கின்ற இந்­துக்­கோ­யில்­களை அவற்றின் வர­லாற்றுப் பெரு­மை­யோடு சான்­று­களின் ஊடாக மீட்­டெ­டுப்­பதே இந்த ஆய்வு மாநாட்டின் பிர­தான நோக்­க­மாகும்.

 

kovile.jpg

பூர்­வீகக் காலம் முத­லாக இலங்­கையில் இந்து சமயம் நில­வி­வ­ரு­கி­றது. அது இந்­துக்­க­ளது நம்­பிக்­கையில் மாத்­தி­ர­மன்றிச் சிங்­கள பௌத்த மக்­க­ளது நம்­பிக்­கை­யிலும் நிலை­பெற்று வந்­துள்­ளது. இன்றும் நிலை­கொண்­டுள்­ளது. திருக்­கே­தீஸ்­வரம், திருக்­கோ­ணேஸ்­வரம், கதிர்­காமம் முத­லான தலங்கள் கடல் கடந்து பர­விய பெருமை உடை­ய­னவாய்த் திகழ்ந்­தன. காலத்­துக்குக் காலம் அரி­ய­ணை­யே­றிய சிங்­கள, தமிழ் அர­சர்கள் புதி­ய­ன­வாகப் பல ஆல­யங்­க­ளையும் சதுர்­வேதி மங்­கலம் முத­லா­ன­வற்­றையும் நிறுவி அவற்றின் பிர­பா­ல­னத்தின் பொருட்டு மானி­யங்­க­ளையும் வழங்­கி­னார்கள். அநு­ரா­த­புரம், பொலன்­ன­றுவை, யாழ்ப்­பாணம், கோட்டை முத­லான இரா­ச­தா­னி­களில் அவ்­வாறு நிறு­வப்­பட்ட கோயில்கள் பல கில­ம­டைந்­து­விட்­டன. 

தொல்­பொருட் சின்­னங்­க­ளூ­டா­கவே அவற்றின் பெரு­மை­யையும் வர­லாற்­றையும் மீட்­டெ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஈழத்து இந்­துக்­கோ­யில்­களுள் பல தமக்­கான இலக்­கி­யங்­க­ளையும் பெற்று விளங்­கி­யுள்­ளன. அவ்­வா­றான இலக்­கியச் சிறப்­புற்ற கோயில்கள் கூடச் சில இன்று மண்­மே­டா­கவும் காடு­மண்­டியும் காட்­சி­ய­ளிக்­கின்­றன. அத்­தகு கோயில்­களை அந்த இலக்­கி­யங்­க­ளூ­டா­கவே மீட்­டெ­டுக்­கக்­கூ­டி­ய­தா­யுள்­ளது. எனினும் பல கோயில்கள் முற்­கா­லத்தில் போலவே இன்றும் பேரோடும் புக­ழோடும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளோடும் நிலை­பெற்­றுள்­ளன.

இத்­தகு நிலையில் “இரு­பதாம் நூற்­றாண்­டுக்கு முற்­பட்ட ஈழத்து இந்துக் கோயில்­கள்–­தொல்­பொ­ருட்­களும் இலக்­கிய மர­பு­களும்” என்ற ஆய்­வுப்­பொ­ருண்­மையில் தொல்­பொருட் சின்­னங்கள், சாச­னங்கள், தமிழ், சிங்­கள, சமஸ்­கி­ருத, பாளி இலக்­கிய மர­புகள் மற்றும் வெளி­நாட்­ட­வர்கள் எழு­தி­வைத்த குறிப்­புக்கள் போன்­ற­வற்றை ஆய்வு மூலா­தா­ரங்­க­ளாகக் கொண்டு ஆய்வுக் கட்­டுரை சமர்ப்­பிக்க விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் பதி­னைந்தாம் திக­திக்கு முன்­ப­தாகத் தங்­களின் ஆய்வுக் கட்­டு­ரை­களைப் “பணிப்­பாளர், இந்து சமய, கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், இல. 248 1/1, காலி வீதி, கொழும்பு– 4” என்னும் முக­வ­ரிக்குப் பதிவுத் தபா­லிலோ அல்­லது hindudir@gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கோ அனுப்பி வைக்­கலாம்.

கட்­டுரை சமர்ப்­பிக்கும் ஆய்வாளர்கள் தமிழில் பன்னிரண்டு புள்ளியளவில் A4 அளவு தாளில் எட்டுப்பக்கங்களுக்கு மேற்படாமல் மேற்கோள், குறிப்புப்பட்டியல், உசாத்துணை நூற்பட்டியல், கட்டுரைச் சுருக்கம், கட்டுரையாளர் விபரம், மின்னஞ்சல் முகவரி என்பவற்றுடன் அனுப்பி வைக்க வேண்டும் என இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

https://www.virakesari.lk/article/60755

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • இந்திய அமைதிக்காகும் படை என்ற பேரில் ஏன் வரவைத்தோம்
  • ’மக்கள் அச்சப்படத் தேவையில்லை’   கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீன பெண், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்ஹ கூறியுள்ளார். கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தொற்றுக்குள்ளானவர்களின் அருகிலிருந்தால் மாத்திரமே வைரஸ் பரவுவதற்கான சாத்தியமுள்ளது. அருகிலிருந்து உரையாடுவதையோ, சன நெரிசல் மிக்க பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும். சனநெரிசல் மிக்க பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி சவர்க்காரம் பயன்படுத்தி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருத்தல் அவசியம்.  சீன பிரஜை ஒருவரே குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளார். இலங்கை பிரஜை எவரும் இதனால் பாதிக்கப்படவில்லை. இதனால் கொரோனா வைரஸ் நாட்டில் அதிகளவில் பரவுவதற்கான சாத்தியமில்லை” என்று டொக்டர் அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டியுள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மககள-அசசபபடத-தவயலல/150-244624
  • 61 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிப்பு   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று (28) நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் 4 பெண்கள் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.   -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-       http://tamil.adaderana.lk/news.php?nid=125081
  • கொரோனா வைரஸ் தாக்கம் - சீன எல்லையை மூடியது மொங்கோலியா!   சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து அந்நாட்டுடனான எல்லையை மொங்கோலியா மூடிவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து நாடுகளுமே தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்த வகையில் சீனாவின் அண்டை நாடான மொங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் ஊடுருவிடக் கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது. இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மொங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது தொடா்பாக அந்நாட்டு துணை பிரதமா் உல்சிசைகான் கூறியதாவது: சீனாவில் கொரோனா வைரஸுக்கு பலியாவோா் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. எனவே, சீனாவுடனான மொங்கோலியா எல்லையை மூட முடிவு செய்துள்ளோம். எனவே, அந்த எல்லை வழியாக மொங்கோலியாவில் இருந்து சீனா செல்லவும், சீனாவில் இருந்து மொங்கோலியா வருவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதுதவிர, மாா்ச் 2 ஆம் திகதி வரை மொங்கோலியாவில் பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மக்கள் அதிக அளவில் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வா்த்தக கூட்டங்கள், மாநாடு உள்ளிட்ட அனைத்துக்கும் இந்த தடை பொருந்தும் என்றாா் அவர். http://tamil.adaderana.lk/news.php?nid=125066
  • 'உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை'   நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். குறித்த ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக இன்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார். ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/உததரவ-பறபபகக-அதகரம-இலல/175-244663