பெருமாள்

உலகக்கிண்ணத்தில் 8 கோடி அதிர்ஷ்டம் கிடைத்ததாம்; யாழ்ப்பாண அதிபரிடம் 92,000 ரூபா மோசடி!

Recommended Posts

யாழ்ப்பாணத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் தலையில் மிளகாய் அரைத்து, அவரிடமிருந்து 92,000 ரூபாயை சுருட்டியுள்ளனர் தொலைபேசியில் ஏமாற்றும் திருடர்கள்.

தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளும் எமகாதகர்கள், அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளது என கூறி பண மோசடியில் ஈடுபடுவது நீண்டகாலமாக நடந்து வருகிறது. எனினும், ஏமாற்றுக்காரர்களின் வலையில் சிக்குவதற்கு ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர்.

கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் அதிர்ஷ்ட சீட்டிழுப்பில் அவருக்கு 8 கோடி ரூபா கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் மெய்மறந்த அதிபரை, உடனடியாக தமக்கு 92,000 ரூபாய் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி நம்ப வைத்தனர்.

இதையடுத்து நெல்லியடியிலுள்ள கொமர்ஷல் வங்கி கிளையில் 92,000 ரூபாய் பணத்தை செலுத்தினார்.

பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், மேலும் இரண்டரை இலட்சம் ரூபாவை செலுத்தும்படி கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அதிபர், மீளவும் அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னர்தான் தனது தலையில் மிளகாய் அரைக்கப்பட்டதை உணர்ந்த அதிபர், நேற்று நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

http://www.pagetamil.com/65899/

Share this post

Link to post
Share on other sites

இவருடைய பொறுப்பில் ஒரு பள்ளிக்கூடத்தை விட்டு வைத்திருக்கினம் நான் பட்ட துன்பம் பெறுக இவ்வையகமே என அந்தாள் பள்ளிக்கூடத்தை யாருக்காவது விகிறன் எண்டு சொல்லி காசுபாக்கப்போகுது.

  • Like 1
  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, பெருமாள் said:

ப்படி வலையில் சிக்கி ஏமாந்துள்ளார் யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர்.

கரணவாய் பகுதியை சேர்ந்த இந்த அதிபரிடம் 8 கோடி ரூபா அதிர்ஷ்ட சீட்டு விழுந்துள்ளதாக கூறி, 92,000 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இந்தாளுக்கெல்லாம் அதிபர் பதவி தேவையா? உடனடியாக அதிபர் பதவியில இருந்து தூக்கப்பட வேண்டியவர். இவர் போதைப் பொருள் கடத்தத் தான் லாயக்கு.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரை என்பது போல் போட்டிக்காரர்கள் வெளிநாடு ஓடிவர இருந்த இலுப்பை பூக்களின் சாயம் வெளுக்குது அந்த அதிபரின் கடந்தகால பரீட்ச்சை தாள்கள் முதல் கொண்டு திரும்பவும் மறு பரிசோதனை நேர்முக தேர்வுகள் நடாத்தனும் அந்த பரீட்சையில் தோல்வி என்றால் நேரே தூக்கி ஜெயிலில் ஆயுள்தண்டனை குடுக்கணும் . ஒரு சந்ததியையே முட்டாள்கள் ஆக்கும் வேலையை செய்து இருக்கிறார் . 

Edited by பெருமாள்
  • Like 1

Share this post

Link to post
Share on other sites

"எட்டு கோடி இருக்கில்லையா? அதில் இருந்து 92,000 ஐ எடுத்துக் கொண்டு மிகுதியை செக்காக அனுப்பி விடு!" என்று சொல்லும் முன்யோசனையில்லாத ஆட்கள் அதிபராக வேறு இருக்கிறார்களா? கடவுள் தான் எங்கள் கல்வித் துறையயைக் காப்பாற்ற வேணும்!

  • Like 2
  • Haha 1

Share this post

Link to post
Share on other sites

இன்னொரு பக்கத்தால் புலிகள் பதுக்கிவைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் தாள் என்று ஒரு மூட்டை மிளகாயை அரைக்கவும் ஒரு கூட்டம் அலையுது.

அதுக்கு எந்த வலயப்பணிப்பாளர் மாட்டப்போறாரோ

Share this post

Link to post
Share on other sites

இது யாருக்கும் எப்போதும் நடக்க கூடியதுதான். எவ்வாளவு பெரிய சுழியனாக இருந்தாலும் சிலசமயம், மேலோட்டபார்வைக்கே தெரியும் ஓட்டைகள் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும்.

அந்த நேரத்தில் அவரவர் இருக்கும் மனோநிலை, அவசர பணத்தேவை, அல்லது திரில் எதிர்பார்க்கும் போக்கு, அவர்கள் பேசும் விதம், பேராசை இப்படி ஒரு விநோதமான கலவை சில நேரங்களில் சிலரை ஒரு மாயவலையில் வீழ்தி விடும்.

நான் வழமையாக இப்படியான இடங்களில் வலு அவதானமாக இருப்பேன். ஆனால் ஒருமுறை ஒரு Pub இல் reverse auction எனும் ஒரு வகை சுத்து மாத்தில் £10 ஐ இழந்துள்ளேன். 

10 ரூபாயை புத்தி கொள்முதல் என்று விட்டு விட்டேன். ஆனாலும், சே நம்மை முட்டாளக்கி விட்டனர் என்ற கடுப்பு ஒரு வாரத்துக்கு இருந்தது 😂

வெளிநாடுகளில் இப்படி பணத்தை இழப்பார்கள் ஏராளம். நைஜீரியா ஈமெயில், பங்கு சந்தையில் அடுத்த ஆப்பிள் போல அள்ளலாம், HMRC இல் இருந்து அழைப்பு இப்படி பலவகை. 20 வருடங்களுக்கு முன் 10 பவுண் கொடுத்து படித்த பாடம், இன்றுவரை என்னை காப்பாற்றி வருகிறது 😂 

வெளிநாடுகளில் இப்படி பணத்தை இழப்பவர்களை victims என்றே பார்ப்பார்கள் ( கீழே இணைப்பை பாக்கவும்). நம் ஊரில் இயலாத பிள்ளைகளையே, மொக்கன், வலசு என்று இகழ்கிற ஆக்கள் நாங்கள். 

பாவம் இந்த அதிபர், பேஜ் தமிழ், யாழ் என செய்தியாகி,  தோச்சு தொங்க விடப்படுகிறார் 😂

பள்ளிகூடத்தில பொடியள் என்ன வாங்கு வாங்கப்போறாங்களோ? அவமானத்தில் தற்கொலைக்கு முயலாதவரை ஓகே.

https://www.dailymail.co.uk/news/article-6824093/How-fake-taxmen-targeted-64-year-old-mourning-mothers-death-scam-19-000.html 

  • Like 4

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, goshan_che said:

நீங்கள் சொன்ன பிறகு யோசித்துப் பார்த்தேன்! நாம் நக்கல் அடிப்பது தவறு தான். அவர் காவல் துறைக்குப் போனதை யாரோ பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்து விட்டு அவரது தனிப்பட்ட துன்பத்தை தமிழ் பக்கத்திற்கு செய்தியாக விற்று விட்டார்கள். 

ஆனால், இப்படிப்பட்ட நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கையில் ஒருவர் என்ன தான் பணத்தேவையில் இருந்தாலும் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டும். நான் கருதுவது பணத்தேவை அவசரம் என்பவற்றை விட சும்மா  இருந்து உழைப்பின்றி காசு பார்க்கும் ஆசை தான் இதில் விழுபவர்களின் பொதுவான குணமாக இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய hedge fund மோசடியாளரான பேர்னி மடொf இடம் ஏமாந்தோர் தங்கள் முதலீட்டுக்கு பெரிய இலாபத்தை அவர் தருகிறார் என்றதும் "அதெப்படி மற்றவன் 3% இலாபம் தரும் போது பேர்னி மட்டும் 10% தர முடிகிறது?" என்று கேள்வி கேட்கவில்லை. "who cares? நமக்குக் காசு" என்று விட்டு தங்கள் வாழ்நாள் சேமிப்பை அப்படியே கொண்டு போய் அவரிடம் முதலிட்டார்கள்! இது பேராசை என்று தான் நினைக்கிறேன்! அமெரிக்காவில்  ஏமாற்றுப் பேர்வழிகள் பற்றி எச்சரிக்கும் அரசு விளம்பரங்களில் இப்படி சொல்வார்கள்: "If something is too good to be true, probably it isn't"

உண்மையான வரிகள்!  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Justin said:

பொலீஸ்காரரே கம்பளைண்ட் எழுதின கையோடு, பேப்பர் காரருக்கு போன் போட்டு நியூஸ் குடுப்பினம். ஒரு போத்தல் மெண்டிசுக்காக 😂.

யோசித்துப் பார்த்தால் இதன் அடிப்படை பேராசைதான். 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இதே போல டயலொக்ல அதிஸ்ரம் விழுந்திருக்கு காசு 25000 போடுங்கோ, 10 லச்சம் வரும் என்று போன் பண்ணி ஆசை காட்டுவினம். சில பெண் பிரசுகள் நம்பி கடைக்கு வந்து கேப்பினம் EZ Cash 25000 போடவேணும் என்று, உடன டயலொக் முகவருக்கு அடிச்சு விளக்கம் கேட்டால் தெளிவா விளக்கம் சொல்லுவான். பரிசு விழுந்தால் காசு டயலொக் தரும், உங்களிடம் வாங்காது. எனறாலும் அடுத்த கடையில் போய் காசை குடுத்து ஏமாந்தவையும் இருக்கினம்.

இப்பிடியான ஏமாற்றும் பேர்வழிகளின் அழைப்புக்கு திருப்பி அழைக்கமுடியாது.
காவல்துறை நினைத்தால் குற்றவாளிகளை கைது செய்யமுடியும்.

Edited by ஏராளன்
சிறு திருத்தம்.

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.