Jump to content

தமிழர் பிரதிநிதிகள் மக்களிற்கு துரோகம் செய்து சொத்து சேர்க்கிறார்கள்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். நேற்று (19) இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

குறித்த ஊடக சந்திப்பு நேற்று பிற்பகல் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று 879 நாளாக எமது தொடர் போராட்டம் இடம்பெற்ற வருகின்றது. இன்றுவரை எமது நிலை தொடர்பில் தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர். இந்த நிலையில் எமது அமைதிவழி போராட்டங்களை குழப்பும் வகையில் எமது கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்து வருகின்றது. இவை திட்டமிட்டு எம்மீது திணிக்கப்படுகின்றமையை உணர்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.

எமது அரசியல் தலைமைகள் அரசாங்கத்துடன் ஒத்து செயற்படுவதனாலேயே அவர்கள் மனோகணேசன் அவர்கள் அழைத்தபோது சென்றிருக்கவில்லை. உண்மையில் அவர்கள் அங்கு சென்றிருந்தால் அவர்களிற்கு சங்கடமான நிலை ஏற்பட்டிருக்கும் எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பிலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் எனவும், விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் அவர் குறித்த ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் எமது பிள்ளைகளின் விடிவிற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் தெரிவித்தார்.

எமது அரசியல் தலைமைகள் சொத்துக்களை சேர்கின்றார்களோ தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள். அவர்கள் மக்கள் நலன் சார்ந்து செயற்படவில்லை எனவும் தெரிவித்தார். அவர்கள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

http://www.pagetamil.com/65886/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை காணாதவர்களாக, 30 பேர்வரை உயிர் துறந்துள்ளனர்…

July 20, 2019

Missing-People-relatives-protest-in-kiliபோராட்டங்களை குழப்பும் வகையில் கோயில்கள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த லீலாதேவி ஆனந்தநடராஜா, 879 நாளாக தமது தொடர் போராட்டம் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இன்றுவரை தமது நிலை தொடர்பாக தீர்வு வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை. இதுவரை 30 பேர்வரை தமது பிள்ளைகளை காணாதவர்களாக உயிரை மாய்த்துள்ளனர் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் தலைமைகள் ஒன்றுபட்டு ஒரே அணியாக தேர்தலில் களம் இறங்க வேண்டும். விட்டுக்கொடுப்புக்களை செய்ய வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டது. அவர்கள் தமது சுயநலம் சார்ந்து செயற்படுகின்றனர். இந்த நிலையில் தமது பிள்ளைகளின் விடிவிற்காகவும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு ஓர் பொது அணி தேவைப்படுகின்றது. அவ்வாறு அனைத்து தரப்பும் ஓரணியில் திரண்டு செயற்படுவதே பொருத்தமானது எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். #காணாமல்ஆக்கப்பட்டவர்களின்உறவினர்கள் #கிளிநொச்சி #தமிழ்தேசியகூட்டமைப்பு

 

http://globaltamilnews.net/2019/126971/

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

ஒவ்வொரு வரவு செலவு திட்டத்திற்கும், காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்படுவதற்கும் அரசுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தனர். அவ்வாறு அவர்கள் தமது சுயநலத்தினை கருத்தில்கொண்டு செயற்பட்டமையால் அவர்களிற்கு வரபிரசாதங்கள் பல வழங்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாறு கிடைத்த அனைத்தையும் அவர்கள் சொத்தாக்கியிருப்பார்கள்.

கடந்த கிழமை வடபகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 80 கோடி ரூபா கொடுத்து கொழும்பில 40 பேர்ச் காணி கொள்வனவு செய்துள்ளதாக செய்திகள் வந்திருந்தன. எங்கிருந்து இந்தப் பணம் கிடைத்துள்ளது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு இருக்கும் தெளிவு மாற்று என்று சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் போச்சே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.