Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது.

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/community/01/220933?ref=home-top-trending

Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சாண்  என்ன முழம் என்ன !

இலங்கையில் பௌத்தம் மட்டும் இருக்கவேண்டும், 
சிங்களம் மட்டும் பேசப்படல் வேண்டும்,
சிறுபான்மை இனமக்கள் அழிக்கப்படல் வேண்டும்,
ஒற்றையாட்சி மட்டும் நீடிக்க வேண்டும்  

இதற்காக எவ்வளமும் கடன் படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

அமெரிக்காவே இவ்வளவு கடன் தான் வைத்திருக்கு அதுவும் டாலரில்.
அதைப்பற்றி எவனும் பேசுறானில்லை.
நம்ம கடனைப்பற்றியே பேசுகிறான்.

இப்படிக்கு

இலங்கை.

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இவனுகள் சொல்றதை நம்ப முடியுமோ?
யார் அதிக கடன் வாங்கினவை என்டு எல்லாருக்கும் தெரியும் தானே!

2014 இல் 11 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது என்றால் ஓரளவு நம்பலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த அற்புதன் தினமுரசு பத்திரிகையில் இந்திய தேர்தல் ஒன்றில் கணிப்பீடுகளை துல்லியமாக தினமுரசுவில் அறிவித்து இருந்தார் தேர்தல் முடிந்தபின் ஒரு வாசகர் கேள்வி கேட்கிறார் எப்படி உங்களால் இவ்வளவு துல்லியமாக நான்கு மாதம்களுக்கு முன்பே சொல்ல முடிந்தது பதில் எனக்கு பிடிக்காதா ஆட்களின் வெற்றி தோல்வி நிலவரம்களை வெளியில் நின்று அலசி ஆராய்ந்து முடிவுகளை அறிவித்தன் அதாவது பிடிக்காத  ஆளை வெல்லும் உண்மையான சந்தர்பங்களை பார்த்தார் பிடித்த வைகோ போன்றவர்களின் பலவீனமான பக்கம்களையும் சேர்த்தார் விளைவு துல்லியமான எதிர்வு கூறல் செய்ய அவரால் முடிந்தது .

ஆனால் இங்கு இலங்கையரசு கடனில் மிதக்குது என்றவுடன் ஈழப்பிரியன் உங்களை அல்ல வல்லரசு நாடுகளும் கடன் வாங்குது என்று அறிவிருந்தும் தங்கள்  மனசின் விருப்பத்தை பூர்த்தி செய்ய சிலர் விளைகின்றனர் முடிவு எப்படி என்று இப்ப உங்களுக்கு புரிந்து இருக்கும் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் உறவுகள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பிறந்த நாடு அதுஎன்பதை மறந்து எப்படா விழும் ஏறி மிதிக்கலாம் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

எங்கள் உறவுகள் அங்கே இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பிறந்த நாடு அதுஎன்பதை மறந்து எப்படா விழும் ஏறி மிதிக்கலாம் என்று சிலர் காத்துக் கிடக்கின்றனர்

உறவுகள் வாழ்வதால் தான் இங்கு சொல்கிறம் இவ்வளவு கடனை வைத்துகொண்டு தமிழர் வாழ்ந்த பூமியை இடையில் வந்த சிங்களவர் ஆட்சி புரிகிரம் என்று தாங்களும் கடனாளியாகி தமிழரையும் கடனாளி ஆக்கி மதனமுத்தா கூத்து அடிக்கினம் எங்கையோ போகவேண்டிய நாட்டை இனதுவேசத்தால்  சொறிலங்கா ஆக்கி வைத்திருக்கும் பெருமை இனவாத சிங்களவர்களையே சாரும் . இவ்வளவு பட்டும் திருந்துவதுக்கு எந்த வழி வகையும் இல்லாமல் தொடர்ந்து நாட்டை நாசம் பண்ணிக்கொண்டு இருக்கினம் அபிவிருத்தி என்பது துளியும் யோசிக்காது பானின் விலையை ஏத்தி போட்டு இப்போதைக்கு இறக்கி வைத்து இருக்கலாம் கிட்டடியில் ஒரேயடியா ஏத்த வேண்டி வரும் இதை பார்த்து விட்டு கொஞ்சம்  பானின் விலை க்கும் கடனுக்கும் என்ன சம்பந்தம் என்று கம்பு சுழட்ட வருவினம் காத்து கொண்டு இருக்கிறன் . 

Link to comment
Share on other sites

ஒரு நாள் சிங்கப்பூர் இலங்கையை பார்த்து வியந்தார்கள். இன்று, உலகமே சிங்கையூரை பார்த்து வியக்கின்றது!

உலகின் மிகவும் வளம் படைத்த நாடுகளில் ஒன்று வெனிசுவேலா. இன்று கடன், பிழையான வழி நடத்தல் என்பன காரணமாக மிகவும் வறுமை நாடாக மாறியுள்ளது. சிம்பாவே இன்னொரு உதாரணம்.

இலங்கை எந்தப்பாதையில் செல்கின்றது என்பது தெளிவு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.