• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
ரதி

குவேனியின் கதை

Recommended Posts

அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. 
கைகள் தறியில் லயித்திருந்தாலும்,
மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது!
பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது!
அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும்,
சொற்கள் இடம்மாறும்!
கால்கள் தடுமாறும்!!
பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று...
கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 
10 இன்பமயமான வருடங்கள்... 
அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...!
இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை.
அரசகுமாரி அவள்..
அரண்மனை தோட்டகாரன் மகன் அவன்..! காதலுக்கு தெரியுமா சாதி பேதம்...
மொட்டாகி முகிழ்ந்து மாலையாக காத்திருந்தது அவர்களது காதல்....
அன்றைய சந்திப்பு அதிவிசேசமானது!
அவளது தந்தையிடம் அனுமதி பெறவென்று அவன் சென்றிருந்தான்.
தாயிடம் அவள் ஏலவே சொல்லியிருந்தாளாயினும் தந்தையின் கோபம் அவள் அறியாததல்ல..
மனம் படபடக்க காத்திருந்தாள்!
ஆஹ் . 
அதோ இலை அசைகிறது, 
அவன் வந்து விட்டான் என எழுந்... 
அய்யோ அது வள்ளி அல்லவா.. 
வள்ளியின் நடையில் ஏன் அவசரம், கண்ணில் கலவரம்?
நடக்கக் கூடாதது ஏதோ நடந்து விட்டது, 
" முருகா " .........
என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்! 
அந்தோ,! 
இடியை இறக்கினாள் தோழி!
அவள் மாறனின் தலை தந்தையின் வாள்வீச்சில் தனியாகி விட்டாதாம்...
அதிர்ச்சியில் உறைந்தாள்..
அழுகை வரவில்லை..
உணர்ச்சிகள் திடீரென மரத்துவிட்டன அவளுக்கு...
அடக்கிய உணர்ச்சிகள் யாவும் தந்தையின் மீதும், தன்னை வாழவிடாத அந்த ராஜ்ஜியத்தின் மீதும் அனலாய் திரும்பியது..
கண்ணகியல்லவே அவள் கனலாய் பொழிந்து அந்த மண்ணை அழிக்க..
காத்திருந்தாள்..!
அன்றிலிருந்து சரியாக ஒரு மாதம் கழிந்து....
********************

.... அவள் அந்த மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்...
தூரத்தில் வந்து கொண்டிருந்தது, அந்த இளவரசனையும், அவனது எழுநூறு தோழர்களையும் ஏற்றிய கப்பல்...
அவனது பெயர் விஜயன்.!!
பின்னுரை!
மாறனின்_தலை_அவனது உடலிலேயே அன்று இருந்திருப்பின், இலங்கையின் இன்றைய சனாதிபதி சம்பந்தராகவும்,🤣 பிரதமர் சுமந்திரனாகவும் 😂இருந்திருக்கக் கூடும்!!🙄

 

ஆக்கம் பேரின்பராஜா சஜிதன்  மூலம் முகப்புத்தகம் 
 

இந்த கதையை வாசிக்கவே கண்ணைக் கட்டுதே!

  • Like 4
  • Haha 1
  • Sad 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு பெண்ணின் தனிப்பட்ட குரோதம் காலம் கடந்தும் ஒரு இனத்தையே பலியெடுத்துக் கொண்டிருக்கு......!   🤨

Share this post


Link to post
Share on other sites
17 hours ago, ரதி said:

முருகா " .........
என்றவளின் குரல் முருகனுக்கு கேட்டிருந்தால் ஒருவேளை முள்ளிவாய்க்காலில் மூன்று லட்சம் பேர் இறந்திருக்க தேவையில்லாமல் இருந்திருக்கும்! 

எதற்கெடுத்தாலும் யாராக இருந்தாலும் அழிவுகள் என்று வரும் போது சைவக் கடவுள்களை சாடுறது மிகவும் வலிக்கிறது.

 

Share this post


Link to post
Share on other sites
Quote

கேள்வி: சங்கம் எனும் வார்த்தைக்கும் இடைச்சங்கம் கடைச்சங்கம் போன்றவற்றிற்கும் தொடர்புண்டா?

கௌத்தம சன்னா: சங்கம் என்கிற வார்த்தையே தமிழ் கிடையாது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததை செய்தவர்கள் பிக்குகள்தான். பிற்காலத்தில் சைவர்கள் அதனை கழகங்களாக மாற்றினார்கள். சங்கம் என்பது பாலி சொல்.ஒரு வேளை ஆதி தமிழ்ச்சொல்லாககூட நாம் வைத்துக்கொள்ளலாம். அதற்கு உள்ளே இருந்தவர்கள் யாரென்றால் பௌத்தர்கள்தான். முதன் சங்கத்தை சிவன் உருவாக்கியதாகவும்  இரண்டாம் சங்கத்தை முருகன் உருவாக்கியதாகவும்,  மூன்றாம் சங்கத்தை பாண்டியன் உருவாக்கியதாகவும் சொல்லப்படுவது பின்னாளில் உருவாக்கிவிட்ட கதைகள்தான்.

பௌத்தம் தமிழர்கள் ஆதியில் பின்பற்றிய மதம். தமிழர்களால்தான் உலகம் முழுவதற்கும் பௌத்தம் சென்று சேர்ந்தது என்பதையே நம்ப மறுக்கிறார்கள். இதனை மட்டுமாவது தமிழர்கள் புரிந்துக்கொண்டால்தான் இந்த உலகத்துடன் போட்டிப்போட முடியும். ஆசியாவின் பண்பாடு பௌத்ததின் மூலமாக தமிழர்கள் கொண்டு சேர்த்தார்கள். இது எவ்வளவு முக்கியமான ஓர் தகவல்.

 

தமிழர்கள் பெளத்த மதத்தைப் பரப்பி சிங்கள இனைத்தையே உருவாக்கி இன்று அவர்களாலேயே அழிக்கப்படுகின்றார்கள் என்பது வினோதமாக/விசித்திரமாக உள்ளது!

Share this post


Link to post
Share on other sites

தமிழர்களது அழிவுக்கு,அழிந்து கொண்டு இருப்பதற்கு  யாருடைய சாபம் தான் காரணமாய் இருக்க வேண்டும்...அது குவேனியாய் இருக்கலாம் அல்லது வேறு யாராகவும் இருக்கலாம் 

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

எதற்கெடுத்தாலும் யாராக இருந்தாலும் அழிவுகள் என்று வரும் போது சைவக் கடவுள்களை சாடுறது மிகவும் வலிக்கிறது.

 

விரும்பினாலும்,விரும்பா விட்டாலும் தமிழர்களும்,சைவ கடவுளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this