Jump to content

யாழில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி


Recommended Posts

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வாள்களுடன் சென்ற கும்பல் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

67174403_1596535840476703_81349102947794

இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் காவலில்  ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை வழிமறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60850

Link to comment
Share on other sites

கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

kodigamam.jpg

உயரிழந்த இளைஞனின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார்.

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த  செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே  வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

மானிப்பாய் - இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.  

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். 

அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

https://www.virakesari.lk/article/60852

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே  வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

மானிப்பாய் - இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.  

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். 

அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தாய்க்கு.... ஒரு பிள்ளையாக, துணையாக இருப்பதை விட்டுட்டு....
ஆவா  குழுவில் இணைந்து... மற்றவர்களை, ஏன்... வாளால் வெட்ட வெளிக்கிட  வேண்டும்.
இதனைப் பார்த்தாவது... ஆவா குழுக்கள் திருந்த வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

arrest.jpg

மானிப்பாய் துப்பாக்கிச்சூடு – நால்வர் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நால்வரும் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை)  யாழ்.போதனா வைத்தியசாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பார்வையிடுவதற்காக இன்று காலை அவர்கள் நால்வரும் வேறு சிலருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வந்திருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நால்வரும் உயிரிழந்தவருடன் அலைபேசி ஊடாக இறுதியாகத் தொடர்பு வைத்திருந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/மானிப்பாய்-துப்பாக்கிச்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுக்கள்வரை பிடித்து மக்கள் தர்ம அடிகொடுக்கும் போது அது பிழை மக்கள் சட்டத்தை கையில் எடுக்ககூடாது போலீசிடம் கள்வர்களை பிடித்து கொடுப்பதுதான் முறை என்ற களத்து நீதவானுகளுக்கு எடுத்தவுடன் போலிஸ் சுட முடியாது அப்படி சுடுவது என்றாலும் கால் முட்டிக்கு கீழேதான் சுட முடியும் எனும் முறை இருப்பது கூட தெரியவில்லையாக்கும் தமிழன் என்றால் எப்படியும் சுடலாம் ஆக்கும் உண்மையிலே செத்த பொடியன் ஆவா குரூப் தானா ?

Link to comment
Share on other sites

இவர்கள் ஆவா குழுவாக இருக்கவும் வாய்ப்பு இல்லை  இவர்களிடம் வாளும் இருந்திருக்க முடியாது. 

1. ஒரு குழுவை சேர்ந்த அனைவரும் ஒரே ஊரில் இருந்து வர முடியாது. அது நண்பர்களாகத்தான் இருக்க முடியும்  

2. மிகுதி ஐந்து பேரில் நால்வர் இறந்தவரை பார்க்க வந்துள்ளார்கள் என்பதும் அவர்கள் நண்பர்களே என கூறி நிற்கின்றது.

3. இந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு  அமைச்சர் ருவான் விஜயரட்ன உடனடியாக 'கருத்து' கூறியுள்ளார்.

உண்மையான ஆவா  குழுவை வழி நடாத்துபவர்கள், அரசை சார்ந்தவர்கள், அதை காப்பாற்ற ஒரு அப்பாவி இளையவரை கொலை செய்து மேலும் அப்பாவிகள் ஐவரின் வாழ்க்கையை நாசமாக்க முடிவு செய்து விட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

முதுகுப் பக்கத்தால் பாய்ந்த குண்டு : மருத்துவ அறிக்கையில் தகவல் 

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் கூறினர்.

 

மானிப்பாய் – இணுவில் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொடிகாமம், கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞன் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்த நீதிவான், கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தவிட்டார்.

அதனடிப்படையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை, முதுகெலும்பில் பட்டு திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் இளைஞனின் சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/60892

Link to comment
Share on other sites

ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

- புதிய காரணம் வெளியாகியது

யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை  முன்­பாக ஆவா குழு  உறுப்­பினர் எனக் கூறப்­படும்  இளைஞர் ஒருவர்  பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின்  தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு  மூன்று மோட்டார் சைக்­கிள்­களில்  இவர்கள் வந்­துள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களில் இருந்து சந்­தே­கிப்­ப­தாக  விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார்.

இந் நிலையில் மானிப்பாய் - இணுவில் சம்­பவம் தொடர்பில்  கொல்­லப்­பட்ட ஆவா குழு உறுப்­பி­ன­ருடன் அப்­ப­கு­திக்கு  வந்து, பொலிஸ் துப்­பாக்கிச்  சூட்டை அடுத்து, தப்­பி­யோ­டிய 5 ஆவா குழு உறுப்­பி­னர்­களில் இரு­வரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருந்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர வீரகேச­ரிக்கு கூறினார். 

அடை­யாளம் காணப்­பட்­டோரைக் கைது செய்­யவும் ஏனை­யோரை அடை­யாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்  இவ்­வ­ரு­டத்தில் நேற்று வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்டும் யாழ். குடா­நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.

நேற்று முன்­தினம் இரவு 8.40 மணி­ய­ளவில், யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த ஆவா குழு­வினர் மீது பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர். ஆவா குழு இணுவில் பகு­தியில் வீடுகள் மீது தாக்­குதல் நடத்த வரு­வ­தாக மானிப்பாய் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய, முன் கூட்­டியே பிர­தே­சத்தின்  உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைப்­படி,  கோப்பாய், மானிப்பாய் உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களின்  உத்­தி­யோ­கத்­தர்­களை உள்­ள­டக்­கிய  குழு­வினர் இரவு நேர விஷேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளனர்.

இதன்­போது பொலிஸார் பல இடங்­க­ளி­லிலும் பாதை­களில் வாக­னங்­களை சோதனை செய்­துள்­ளனர். அதன்­ப­டியே இணுவில் இணைப்பு வீதி­யிலும் பொலிஸ் குழு­வொன்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன்­போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் வேக­மாக வரு­வதை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை நிறுத்­து­மாறு சமிக்ஞை காண்­பித்­துள்­ளனர். ஆனால் அதனை பொருட்­ப­டுத்­தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்­டார் சைக்­கிளில் முன் நோக்கி பய­ணிக்­கவே, பொலிஸார், தமது தற்­காப்பு அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்­கத்தை உடைய மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞர் மீது துப்­பாக்கி தோட்­டாக்கள் இரண்டு பாய்ந்­துள்­ளன.

 இத­னை­ய­டுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பா­டின்றி அருகில் இருந்த மதி­லுடன் மோதி விழுந்­துள்­ள­துடன், குண்­ட­டி­பட்ட இளை­ஞனும் படு­கா­ய­ம­டைந்­துள்ளான். இத­னை­ய­டுத்து 22 வய­தான கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த  செல்­வ­ரத்­தினம் கவிகஜன் எனும் அந்த இள­ஞனை பொலிஸார் யாழ். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்,  எனினும் அங்கு சிகிச்சைப் பல­னின்று அவ்­வி­ளைஞன் உயி­ரி­ழந்­துள்ளார்.

இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரி­சோ­த­னைகள் யாழ். வைத்­தி­ய­சா­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­போது துப்­பாக்கிச் சூட்­டினால் அதிக இரத்தம் வெளி­யே­றி­யதால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னி­டையே துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கு மேல­தி­க­மாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயு­தங்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர். மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­கடும் போலி­யா­னது என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்ள பொலிசார் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்­பினர் ஒரு­வ­ரி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.

இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய  மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/60924

Link to comment
Share on other sites

சேதி உண்மையா இருந்தா நல்லது நடக்குது என்டு இருக்கலாம்.

Link to comment
Share on other sites

This is the sixth controversial killing by the SL Police within the last four years of the so-called ‘good governance’ rule.

Each time, when people mobilise against the Sinhala-Buddhist chauvinism, such killings take place to instill a fear psychosis among the young Tamils, grassroots activists in Jaffna said pointing to the active participation of Tamil youth in Neeraaviyadi and Kanniyaa protests in the recent days.

The latest police crime has also taken place while the United Nations Special Rapporteur on Rights to Freedom of Peaceful Assembly and Association, Clément Nyaletsossi Voule, was visiting the peninsula.

The Sinhala policemen in the area are known for rogue behaviour. Recently, they had severely beaten up a Tamil motorcyclist, a mason worker, who had stopped his bike to talk to a friend near a petrol-shed.

The occupying SL military and the police were imposing stringent practices at will in the Tamil areas using the Emergency Regulations, the people complain.

The SL Police shot and killed two Tamil students in October 2016, at a time when the expansive set of regulations were not in force.

The students were subjected to a hate crime by the Sinhala policemen at Kokkuvil. The students had failed to stop at a previous roadblock and became victims to a premeditated act of vengeance.

The SL Police comprising overwhelmingly Sinhala personnel in the predominantly Tamil area, behave like an occupying force of the unitary state of genocidal Sri Lanka. The SL State has been refusing to allow the establishment of a Provincial Police Force even to the extent of devolution envisaged by the 13th Amendment.

In July 2017, a 24-year-old youth from Thunnaalai in Vadamaraadchi South-West was shot and killed while he was escaping a police hunt after illegal sand scooping in Kudaththanai. The SL Police was meting out a systematic ‘collective punishment’ for several months as the people of Thunnaalai had smashed a police post after the brutal killing, which they interpreted as a planned encounter.

Similarly, a 32-year-old Tamil man was shot and killed by the SL Police within the premises of a Catholic church at Mallaakam in June 2018. The man was trying to protect his nephew from an opposing gang.

Link to comment
Share on other sites

மானிப்பாய் இளைஞன் சுட்டுக்கொலை  ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

 

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.

அவர்களில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் நான்காவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.

பொலிஸாரின் கண்ணில் தென்பட்டுத் தப்பித்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/60979

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கொல்லப்பட்ட இளைஞனின் முகனூல் பக்கம். அவரால் அவரது முகனூலில் பதியப்பட்ட இறுதிப் படமும் வாள்களுடன் இருக்கும் படம் தான். அவர் கொல்லப்பட்டதன் பின்னர் அவரது முகனூலில் எழுதப்பட்டு இருக்கும் அஞ்சலியை வாசிக்கும் போதே..... வருகுது.

தமிழ் சினிமாக்களில் காட்டப்படும் ரவுடியிசத்தை உண்மையான ஹீரோயிசம் என நினைத்து இந்த பிள்ளைகள் அனியாயமாக நாசமாகின்றனர்.

https://www.facebook.com/mhafijalee.sharu?epa=SEARCH_BOX

Link to comment
Share on other sites

மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை ; கைதான சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறிலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து வாள்களையும் மீட்டிருந்தனர். 

இந்த நிலையில் மானிப்பாயில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த கும்பலுக்கு பாதை காண்பிப்பதற்கு வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே இவ்வாறு இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம், நாவாந்துறை அராலி வீதி வசந்தபுரத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து சூடு இடம்பெற்றதும் மோட்டார் சைக்கிளைக் கைவிட்டுத் தப்பிச் சென்ற இளைஞனின் பணப்பையை (பேர்ஸ்) சம்பவ இடத்தில் தவறிய நிலையில் பொலிஸார் மீட்டிருந்தனர்.

மானிப்பாய் சுதுமலை தெற்கு ஐங்கரன் வீதியைச் சேர்ந்த சிவசுந்தரராஜா சானுசன் (வயது – 18) என்ற இளைஞனே இவ்வாறு தனது பணப்பையைத் தவறவிட்டுச் சென்றார். அவரது அடையாள அட்டையை வைத்து சந்தேகநபரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபரை மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முற்படுத்தினார்.

அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் ஏனைய சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பிலும் எந்தத் தகவலையும் சானுசன் தெரிவிக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னலையில் இன்று மாலை முற்படுத்தினர்.

மேலும் சந்தேகநபர்களைக் கைது செய்யவேண்டியுள்ளதாகப் பொலிஸார் மன்றுரைத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிவான், சந்தேகநபர்கள் மூவரையும் வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

https://www.virakesari.lk/article/61065

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.