• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
ஏராளன்

பேலியோ, மருத்துவர் சிவச்சந்திரன் சிவஞானத்தின் முகநூல் குறிப்பு

Recommended Posts

பேலியோ! 
இந்த உணவுமுறையில் ஏதோ உள்ளது. 
பாடசாலைக்காலத்தில் ஒவ்வொருநாளும் கிரிக்கெட் விளையாடுவேன். பல்கலைக்கழகம் முடியும் வரை சைக்கிளில்தான் பயணம். அந்தக்காலத்தில்கூட ஒருதடவை 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்குபற்றுவோமே என பயிற்சிக்குப்போய் அந்தத்தூரத்தை ஓடிமுடிக்கவே கஸ்டப்பட்டு கடைசியில் அந்த ஆசையைக்  கைவிட்டிருந்தேன்.

இப்போது 37 வயதில் உடல் நிறை குறைக்கவென பேலியோ உணவு முறைக்கு மாறினேன். ஒரு மாதம்முன் உணவு தொடங்கிய புதிதில் 100 மீட்டர் ஓடவே நாக்குத் தள்ளியது. அதிக தூரங்கள் நடந்துதான் பயிற்சி செய்தேன். 
இப்போது சரியாக ஒரு மாதமாகிவிட்டது. இன்று 5 கிலோமீட்டரை எந்தக் களைப்பும் இல்லாமல் ஓடிவிட்டு வந்தேன். வழமையாக அதிக தூரம் ஓடினால் கால் வலி தொடங்கமுன் மூச்சு முட்டத்தொடங்கும்.  சுவாசவீதம் அதிகரிக்கும். இதயத்துடிப்பு எகிறும்

ஆனால் 5 கிலோமீட்டர் ஓடியபின்பும் என் சுவாசவீதமும், இதயத்துடிப்பும் ஓய்வாக இருக்கும்போது இருக்கும் நிலையிலேயே இருந்தது. 

நாங்கள் படித்த உடற்தொழிற்பாட்டையே முற்றாக மாற்றிப்போட்டுவிட்டது இந்தப்பேலியோ உணவுமுறை.
 
தொழில்முறையான விளையாட்டு வீரர்கள் இந்த உணவுமுறைக்கு மாறினால் பல சாதனைகளை இலகுவாகச் செய்யலாமென நினைக்கிறேன்.

இந்த உணவுமுறை பற்றிய மேலதிக தகவல்களை விரைவில் ஆறாவதறிவு இணையத்தளத்தில் எழுதுகிறேன்.

Share this post

Link to post
Share on other sites

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, ஏராளன் said:

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

தவறு ஏராளன்! பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

18 hours ago, ரதி said:

3 hours ago, Justin said:

தவறு ஏராளன்! பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

அண்ணை சொல்றன் என்று குறை நினைக்காதேங்கோ, ஆரோக்கியம் & நல்வாழ்வு முகப்புத்தக குழுவில் தான் நிறைய வாசித்து புரிந்துகொண்டேன். அவர்கள் உடற்பயிற்சியை கட்டாயமாக செய்ய வற்புறுத்துகின்றார்கள், குறைந்தது பத்தாயிரம் தப்படி நடைபயிற்சி.

இன்னொன்று மிக முக்கியமானது குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறும் முன்னர் இரத்த பரிசோசதனை கட்டாயம் செய்ய சொல்கிறார்கள், பின்னர் 30/60/100 நாட்களின் பின் இரத்தப் பரிசோதனை எடுத்து ஒப்பிடும் போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமான இன்னொன்று புரதம் எடுக்கும் போது எ.கா 60kg எடையுடைய ஒருவருக்கு 60g புரதம் ஒரு நாளைக்கு போதுமானது, 2/3 மடங்கு(100g-180g) எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
குளுக்கோசில் (காபோஹைதரேற்றில்) இயங்கும் உடலை கீற்றோனில் (கொழுப்பில்) சிறப்பாக இயங்க வைக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக பதிவிடுகிறார்கள்.

எனது சகோதரர் இவ்வுணவு முறைமூலம் உடல் எடை குறைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி உள்ளார்.

யாழிலுள்ள நீரிழிவு நோயாளிகளிற்கான சிறப்பு மருத்துவர் அரவிந்தனிடம் சென்ற நண்பருக்கு மருந்துகளிற்கு கட்டுப்படாத நிலைக்கு நீரிழிவு அதிகரித்து காணப்பட்டதை அடுத்து அவரை பேலியோ உணவு முறைகளை முயலுமாறு கூறி அனுப்பியுள்ளார்.

Edited by ஏராளன்
இரட்டைப் பதிவு நீக்கம்

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, ஏராளன் said:

நீங்கள் சொல்ற உணவு முறை தான், பெயர் தான் பேலியோ.

என்னால முடியல்ல ஏராளான்...நான் சொன்னது ஒவ்வொருவரும்,ஒவ்வொரு நாளும் சாப்பிடும் முறை பற்றி… பேலியோ டயட்டில் எது சாப்பிடோணும்/கூடாது என்பது பற்றியே உங்களுக்கு தெரியலை...யாழில் நவீனன்  இணைச்ச திரியை போய் வாசித்து பாருங்கோ...யார் எந்த டயட் இருந்தால் எனக்கென்ன?...வருத்தம் வந்தால் எனக்கென்ன?...சொன்னால் விளங்கிக் கொள்பவர்களுக்கும்/விளங்க முயற்சிப்பவர்களுக்கும் மட்டும் தான் சொல்லலாம்.

பி;கு நீங்களே டொக்டர் சிவச்சந்திரன்😀

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ஏராளன் said:

அண்ணை சொல்றன் என்று குறை நினைக்காதேங்கோ, ஆரோக்கியம் & நல்வாழ்வு முகப்புத்தக குழுவில் தான் நிறைய வாசித்து புரிந்துகொண்டேன். அவர்கள் உடற்பயிற்சியை கட்டாயமாக செய்ய வற்புறுத்துகின்றார்கள், குறைந்தது பத்தாயிரம் தப்படி நடைபயிற்சி.

இன்னொன்று மிக முக்கியமானது குறைமாவு நிறை கொழுப்பு உணவு முறைக்கு மாறும் முன்னர் இரத்த பரிசோசதனை கட்டாயம் செய்ய சொல்கிறார்கள், பின்னர் 30/60/100 நாட்களின் பின் இரத்தப் பரிசோதனை எடுத்து ஒப்பிடும் போது நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

முக்கியமான இன்னொன்று புரதம் எடுக்கும் போது எ.கா 60kg எடையுடைய ஒருவருக்கு 60g புரதம் ஒரு நாளைக்கு போதுமானது, 2/3 மடங்கு(100g-180g) எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
குளுக்கோசில் (காபோஹைதரேற்றில்) இயங்கும் உடலை கீற்றோனில் (கொழுப்பில்) சிறப்பாக இயங்க வைக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளதாக பதிவிடுகிறார்கள்.

எனது சகோதரர் இவ்வுணவு முறைமூலம் உடல் எடை குறைப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தி உள்ளார்.

யாழிலுள்ள நீரிழிவு நோயாளிகளிற்கான சிறப்பு மருத்துவர் அரவிந்தனிடம் சென்ற நண்பருக்கு மருந்துகளிற்கு கட்டுப்படாத நிலைக்கு நீரிழிவு அதிகரித்து காணப்பட்டதை அடுத்து அவரை பேலியோ உணவு முறைகளை முயலுமாறு கூறி அனுப்பியுள்ளார்.

தம்பி, நான் ஏன் குறை நினைக்கிறேன்? ஆனால் முகநூலில் மருத்துவம் பார்க்கும் நலவாழ்வுக் குழுவினர் இதயத்தசைக்கும் சிவப்பு இறைச்சிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களாக இருக்கும் போது அவர்கள் மேற்கொண்டு சொல்லும் எதையும் நான் அறிவியல் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அதை விடுங்கள், எதையும் நம்புவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம்! 

பேலியோ, கீற்றோ இரண்டிலும் உள்ள பிரச்சினைகளை நான் பல தடவைகள் எழுதி விட்டேன்! மாச்சத்தைக் குறைத்து கொழுப்பை கூட்டினால் கீற்றோன் கூடும், அதனால் உடலில் குளூக்கோஸ் கூடாது, குளூக்கோஸ் கூடா விட்டால் இன்சுலின் சுரந்தாலும் சுரக்கா விட்டாலும் பிரச்சினையில்லை! எனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது சரியே! ஆனால், சாப்பிடும் கொழுப்பில் இருக்கும் கொழுப்பமிலங்கள் எங்கே போய் படியும் என்றும் யோசிக்க வேண்டும். இதனால் தான் கொழுப்பு, அதுவும் LDL ஐக் கூட்டும் என அறியப் பட்ட நிரம்பிய கொழுப்பான தேங்காய் எண்ணை போன்றவற்றை நீண்ட காலம் எடுத்தால் நீரிழிவு குறைந்தாலும் இதய குருதிக்கலன் நோய்களில் இருந்து தப்ப இயலாது! இந்த நோய்கள் ஒரு மாதத்தில் வரும் நோய்கள் அல்ல, சில ஆண்டுகள் கழித்துத் தான் வெளித்தெரிபவை. 

இதை விட இங்கு சொல்ல எதுவும் இல்லை, என் உடற்பருமன் மருத்துவக் குறிப்புகள் சில நாட்களில் தொடரும் போது நிரூபிக்கப் பட்ட அடிப்படை விடயங்களை எழுதுகிறேன். மற்ற படி சிறந்த மகப்பேற்று மருத்துவரான சிவச்சந்திரனின் அனுபவம் என்பது தனிநபர் அனுபவம் மட்டுமே! விஞ்ஞானம் இன்னும் அவரது கருத்துகளை நிரூபிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை! 

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, ரதி said:

என்னால முடியல்ல ஏராளான்...நான் சொன்னது ஒவ்வொருவரும்,ஒவ்வொரு நாளும் சாப்பிடும் முறை பற்றி… பேலியோ டயட்டில் எது சாப்பிடோணும்/கூடாது என்பது பற்றியே உங்களுக்கு தெரியலை...யாழில் நவீனன்  இணைச்ச திரியை போய் வாசித்து பாருங்கோ...யார் எந்த டயட் இருந்தால் எனக்கென்ன?...வருத்தம் வந்தால் எனக்கென்ன?...சொன்னால் விளங்கிக் கொள்பவர்களுக்கும்/விளங்க முயற்சிப்பவர்களுக்கும் மட்டும் தான் சொல்லலாம்.

பி;கு நீங்களே டொக்டர் சிவச்சந்திரன்😀

பேலியோ உணவு என்னென்ன என்று சொல்லுங்கோ?
நான் அவரில்லை.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, Justin said:

தம்பி, நான் ஏன் குறை நினைக்கிறேன்? ஆனால் முகநூலில் மருத்துவம் பார்க்கும் நலவாழ்வுக் குழுவினர் இதயத்தசைக்கும் சிவப்பு இறைச்சிக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்களாக இருக்கும் போது அவர்கள் மேற்கொண்டு சொல்லும் எதையும் நான் அறிவியல் சார்ந்ததாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை! அதை விடுங்கள், எதையும் நம்புவதும் தொடர்வதும் உங்கள் விருப்பம்! 

பேலியோ, கீற்றோ இரண்டிலும் உள்ள பிரச்சினைகளை நான் பல தடவைகள் எழுதி விட்டேன்! மாச்சத்தைக் குறைத்து கொழுப்பை கூட்டினால் கீற்றோன் கூடும், அதனால் உடலில் குளூக்கோஸ் கூடாது, குளூக்கோஸ் கூடா விட்டால் இன்சுலின் சுரந்தாலும் சுரக்கா விட்டாலும் பிரச்சினையில்லை! எனவே நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது சரியே! ஆனால், சாப்பிடும் கொழுப்பில் இருக்கும் கொழுப்பமிலங்கள் எங்கே போய் படியும் என்றும் யோசிக்க வேண்டும். இதனால் தான் கொழுப்பு, அதுவும் LDL ஐக் கூட்டும் என அறியப் பட்ட நிரம்பிய கொழுப்பான தேங்காய் எண்ணை போன்றவற்றை நீண்ட காலம் எடுத்தால் நீரிழிவு குறைந்தாலும் இதய குருதிக்கலன் நோய்களில் இருந்து தப்ப இயலாது! இந்த நோய்கள் ஒரு மாதத்தில் வரும் நோய்கள் அல்ல, சில ஆண்டுகள் கழித்துத் தான் வெளித்தெரிபவை. 

இதை விட இங்கு சொல்ல எதுவும் இல்லை, என் உடற்பருமன் மருத்துவக் குறிப்புகள் சில நாட்களில் தொடரும் போது நிரூபிக்கப் பட்ட அடிப்படை விடயங்களை எழுதுகிறேன். மற்ற படி சிறந்த மகப்பேற்று மருத்துவரான சிவச்சந்திரனின் அனுபவம் என்பது தனிநபர் அனுபவம் மட்டுமே! விஞ்ஞானம் இன்னும் அவரது கருத்துகளை நிரூபிக்க ஆரம்பிக்கக் கூட இல்லை! 

வழக்கமான உணவு முறையில் குறைவாக LDL உள்ளதா? பேலியோ/குறைமாவு நிறை கொழுப்பு உணவு எடுக்கும்போது HDL அதிகரிக்கிறதே!

Share this post

Link to post
Share on other sites
On 7/21/2019 at 9:28 PM, ரதி said:

ஏராளன் ,இவருடைய மு.பு இருந்தால் சொல்லுங்கோ. இவர் ஒரு முட்டாள் தனமான முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்று...உடம்பை குறைக்க வேண்டும் என்றால் சோத்தையும்,காப்பையும்,சீனியையும் குறைத்தாலே உடம்பு தானாக குறையும்...எந்த டயட்டும் எடுத்தவுடன் 3,5 கிலோ குறையும்...உடம்பை குறைக்கிறேன் பேர் வழி இன்னும் கொஞ்ச காலத்தில் பார்த்தாள் கிழவன் மாதிரி இருப்பார்...நிறைய மரக்கறி,மீன் ,இல்லை குழைகளோடு ஒரு சொட்டு சாதம் சாப்பிடலாம்...அத்தோடு உடற் பயிற்சியும் செய்ய வேண்டும்...அதை விடுத்து இலங்கையில் இருந்து கொண்டு பேலியோ ,மண்ணாங்கட்டி என்று கொண்டு 😐

மொட்டைக்கறுப்பன் புழுங்கல் அரிசிச்சோறு விக்கனம் இல்லை எண்டுறாங்கள் தங்கச்சி!
 உங்கடை ஒப்பீனியன்/அட்வைஸ் என்ன தங்கச்சி? 😎

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ஏராளன் said:

வழக்கமான உணவு முறையில் குறைவாக LDL உள்ளதா? பேலியோ/குறைமாவு நிறை கொழுப்பு உணவு எடுக்கும்போது HDL அதிகரிக்கிறதே!

ஏராளன்,

பேலியோ டயற் பற்றிய எந்த விஞ்ஞான முறைப்படியான ஆய்வும் இது வரை 6 மாதத்திற்கு மேல் பின் தொடரப் படவில்லை!  உடல் எடை குறைதல், நீரிழிவு மறைதல் என்பன அந்த குறுகிய காலத்தில் நடக்கின்றன. நீங்கள் சொல்லும் HDL அதிகரிப்பும் இந்த குறுகிய கால ஆய்வுகளில் எல்லாவற்றிலும் நிரூபிக்கப் படவில்லை! ஏனெனில் உண்ணும் கொழுப்பின் வகையைப் பொறுத்தே இந்த LDL, HDL அதிகரிப்பு நிகழ்கிறது. பேலியோ முறையிலும் சிலர் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளை மட்டும் எடுப்பதால் HDL அதிகரிக்கலாம். ஆனால், அதிகம் சிவப்பு இறைச்சியும் ஆரோக்கியமற்ற எண்ணை வகைகளையும் உள்ளெடுப்போர் தங்கள் இதய குருதிக்கலன்களில் கொழுப்புத் திட்டுகளை (atheroma) நீண்ட காலப் போக்கில் உருவாக்கிக் கொள்வர். இது 1948 இல் இருந்து ஆயிரக்கணக்கான நபர்களில், இன்றும் மூன்றாம் தலைமுறையாகத் தொடரும் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டுள்ள மருத்துவ உண்மை. இதை மறுக்கும் தகுதியான ஆய்வு எதுவும் நான் காணவில்லை! முகநூல் அனுபவங்கள் சாட்சியங்கள் ஆய்வு என்று நான் எடுத்துக் கொள்வதில்லை!

நான் LDL அதிகரிக்க காரணம் என்று சொன்னது தேங்கயெண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பு எடுக்கலாம் என்றும் சிவப்பு இறைச்சி தாராளமாகச் சாப்பிடலாம் என்றும் பேலியோ சொல்வதால். 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிரம்பிய கொழுப்பும் மிருகக் கொழுப்பும் LDL, TG ஐ அதிகரிப்பதுடன் இதய குருதிக் கலன் நோய்களோடு நேரடியான தொடர்புடையவாக அடையாளம் காணப்பட்ட காரணிகள். இந்தத் தகவலை நிராகரிக்கும் எந்த முறைப்படி செய்யப் பட்ட ஆய்வையும் நான்  காணவில்லை.

  • Like 2

Share this post

Link to post
Share on other sites

நன்றியண்ணை கருத்து பகிர்வுக்கு.
மேலும் சந்தேகங்கள் வந்தால் கேட்கிறேன்.

Share this post

Link to post
Share on other sites
On ‎7‎/‎23‎/‎2019 at 5:48 AM, ஏராளன் said:

பேலியோ உணவு என்னென்ன என்று சொல்லுங்கோ?
நான் அவரில்லை.

ஏன் நீங்கள் தானே யஸ்டினின் திரியில் நவீனன் இணைத்த பேலியோ சம்மந்தமான கட்டுரையை கொண்டு வந்து இணைத்தீர்கள். வாசிக்கேல்லையா? 

On ‎7‎/‎23‎/‎2019 at 12:50 PM, குமாரசாமி said:

மொட்டைக்கறுப்பன் புழுங்கல் அரிசிச்சோறு விக்கனம் இல்லை எண்டுறாங்கள் தங்கச்சி!
 உங்கடை ஒப்பீனியன்/அட்வைஸ் என்ன தங்கச்சி? 😎

என்னைப் பொறுத்த வரை நீங்கள் சொன்ன அரிசியில் சமைத்த சோறு செமிபாடு  அடைய அதிக நேரம் எடுக்கும் ... அநேகமாய் இங்கு வேலை முடிந்து போய் பின்னேரம் அல்லது இரவு உதை சாப்பிட்டால் செமிக்காது ...நான் பாசுமதி தான். ஆனால் இடைக் கிடை வரகு,சாமை,தினை  போன்றவற்றில் தான் சோறு சமைப்பது.
என்ட  சித்தப்பா ஒருவர் இங்கு லண்டனுக்கு வந்து 30 வருசத்துக்கு மேல் இருக்கும்...குத்தரிசி மட்டும் தான் சாப்பிடுவார்...சாப்பாட்டில் வலு கவனம்...ஆனால், உலகத்தில் இல்லாது வியாதி எல்லாம் அவருக்கு இருக்கு...இத்தனைக்கும் குடி, சிகரெட் ஒன்றும் இல்லை...அவருக்கு பெரிதாய் உடம்பும் இல்லை.

நான் நினைக்கிறன் இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் அதிக வியர்வை வெளியேறுவதால் செமிபாடு அடைவது விரைவாக இருக்கும்...அத்தோடு சீனியும் உறிஞ்சி எடுக்கப்பட்டு விடும் 

இது ஏன் எனறு எனக்கும் விளங்கவில்லை ...யாராவது மருத்துவம் தெரிந்தவர்கள் தான் பதில் சொல்லோணும் 

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் தானே யஸ்டினின் திரியில் நவீனன் இணைத்த பேலியோ சம்மந்தமான கட்டுரையை கொண்டு வந்து இணைத்தீர்கள். வாசிக்கேல்லையா? 

என்னைப் பொறுத்த வரை நீங்கள் சொன்ன அரிசியில் சமைத்த சோறு செமிபாடு  அடைய அதிக நேரம் எடுக்கும் ... அநேகமாய் இங்கு வேலை முடிந்து போய் பின்னேரம் அல்லது இரவு உதை சாப்பிட்டால் செமிக்காது ...நான் பாசுமதி தான். ஆனால் இடைக் கிடை வரகு,சாமை,தினை  போன்றவற்றில் தான் சோறு சமைப்பது.
என்ட  சித்தப்பா ஒருவர் இங்கு லண்டனுக்கு வந்து 30 வருசத்துக்கு மேல் இருக்கும்...குத்தரிசி மட்டும் தான் சாப்பிடுவார்...சாப்பாட்டில் வலு கவனம்...ஆனால், உலகத்தில் இல்லாது வியாதி எல்லாம் அவருக்கு இருக்கு...இத்தனைக்கும் குடி, சிகரெட் ஒன்றும் இல்லை...அவருக்கு பெரிதாய் உடம்பும் இல்லை.

நான் நினைக்கிறன் இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் அதிக வியர்வை வெளியேறுவதால் செமிபாடு அடைவது விரைவாக இருக்கும்...அத்தோடு சீனியும் உறிஞ்சி எடுக்கப்பட்டு விடும் 

இது ஏன் எனறு எனக்கும் விளங்கவில்லை ...யாராவது மருத்துவம் தெரிந்தவர்கள் தான் பதில் சொல்லோணும் 

ரதி  ,

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில்  பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது.  

3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில  பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும்  போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில்  குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே?   முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!

  • Like 3
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
22 hours ago, Justin said:

நீங்கள் சொல்வது உண்மை...ஆனால் குத்தரிசி சாப்பிட்டுக் கொண்டு உடம்பில் கவனமாய் இருப்பவர்களுக்கும் இதயம் சம்மந்தமான  வருத்தம் வருகின்றதே!....அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீங்கள்?

Share this post

Link to post
Share on other sites

நண்பர் ஒருவரின் கேள்வி

"பேலியோல கீடோசிஸ்ல உடம்பு இருக்கு ஓகே.. அசிடோசிஸ் வந்து விடாதா என்று ஐயம் தெரிவித்தார். டயாபடிஸ் பேஷண்ட்க்கு பேலியோ கொடுத்தா கீட்டோ அசிடோசிஸ் வந்து கோமா போய்டுவாங்களே "என்றார்

எனது பதில் 

கீடோசிஸ்ல மூன்று நமக்கு தெரியும் 

ஒன்று 
நீரிழிவு நோயாளிக்கு 
ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும் போது உடலில் உள்ள கொழுப்பு உருகி கீடோன்கள்  ரத்தத்தில் அதிகமாகி விடும். உடலுக்கு எதை எரிபொருளாக உபயோகிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டு மூளை ஷட் டவுன் ஆகி கோமாவுக்கு போகிறார். இது டயாபடிக் கீடோ அசிடோசிஸ் அல்லது நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் கீடோ அமிலத்தன்மை. உடனே கண்டுபிடித்து இன்சுலினும் பாட்டில் பாட்டிலாக க்ளூகோஸ் ஏற்றி காப்பாற்ற வேண்டும் 

இரண்டாவது கீடோசிஸ் 
நியூட்ரிசனல் கீடோசிஸ் அல்லது உணவு முறையால் வரும் கீடோசிஸ் 

நீங்கள் உங்கள் உணவில் மாவுச்சத்தை 70 சதவிகிதம் எடுப்பதற்கு பதில் கொழுப்பு உணவை எடுத்தால் மாவுச்சத்தை 5 சதவிகிதத்திற்கும் கீழ் குறைத்தால் உங்கள் உடல் கீடோன்கள் (90%) + ஃபேட்டி அமிலங்கள் + கொஞ்சூண்டு க்ளூகோஸ் கொண்டு இயங்க ஆரம்பித்து விடும். 
இதற்கு பெயர் " நியூட்ரிசனல் கீடோசிஸ் அல்லது உணவு முறையால் வரும் கீடோசிஸ்" 

இதில் நமது உடலுக்கு கீடோன்கள் எரிபொருளாகி விடுவதால் ரத்தத்தில் அபாயகர அளவுகளுக்கு செல்லாது. 

மூன்றாவது 
ஸ்டார்வேஷன் கீடோசிஸ் 
அல்லது பட்டினியில் வரும் கீடோசிஸ்

நீங்கள் தாய்லாந்து குகை போல எங்கோ சென்று மாட்டிக்கொண்டால் உங்களை காப்பாற்றுவது இது. உங்கள் உடலில் உள்ள கடைசி பொட்டு கொழுப்பும் புரதமும் இருக்கும் வரை உடல் இந்த கீடோசிஸில் இயங்கும். 
உண்மையில் உயிரை காக்கும் மகத்தான வேலையை இந்த கீடோசிஸ் செய்கிறது. 

நமது பாஷையில் சொல்ல வேண்டுமெனில் 

முதல் கீடோசிஸான 
டயாபடிக் கீடோ அசிடோசிஸ் என்பது 
சுனாமியில் ஸ்விம்மிங்கை போடுவது போல  

டேண்ஜரானது..

இரண்டாவது கீடோசிஸான 
நியூட்ரிசனல் கீடோசிஸ் 
சீசனில் குற்றாலத்தில் போடும் இதமான குளியலைப் போன்றது

அலாதி சுகமானது

மூன்றாவது கீடோசிஸான 
ஸ்டார்வேசன் கீடோசிஸ்

ஆள் அரவமற்ற புல் பூண்டு கூட இல்லாத பாலைவனத்தில் உங்களை காப்பாற்றும் பாலைவனப் பூஞ்சோலை போன்றது..

மூன்றிலுமே கீடோன்கள் / தண்ணீர் தான் இருக்கிறது 

ஆனால் இருக்கும் இடத்தை பொறுத்தும் அளவைப்பொறுத்தும் 

அபாயமாகவோ
அலாதி சுகமாகவோ
உயிர் காப்பதாகவோ அமைகிறது

நன்றி 
                                                             
Dr.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்  
சிவகங்கை

Share this post

Link to post
Share on other sites
On 7/25/2019 at 2:37 PM, ரதி said:

நீங்கள் சொல்வது உண்மை...ஆனால் குத்தரிசி சாப்பிட்டுக் கொண்டு உடம்பில் கவனமாய் இருப்பவர்களுக்கும் இதயம் சம்மந்தமான  வருத்தம் வருகின்றதே!....அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீங்கள்?

ரதி, இதைப் பற்றி சில தடவைகள் கருத்தாடியிருக்கிறோம். ஊரில் உடம்பு வாசி என்று அழைக்கப் படுவது, உயிரியலில் ஜீன்களால் கட்டுப் படுத்தப் படும் பரம்பரையியல்பாக  (genotype) அடையாளம் காணப் பட்டிருக்கிறது. மனிதர்கள் விலங்குகள் போல குடும்பத்திற்குள் உறவுகளுக்குள் கூடி இனப்பெருக்கம் செய்யாத இனமாக இருப்பதால், மனித இனம் out-bred ஆக இருக்கிறது. இதனால் எங்கள் ஜீன்களில் பல்லினத் தன்மை (diversity) காணப்படுகிறது. இது பெரும்பாலும் மனித இனம் தப்பி வாழ உதவும் நல்ல விடயம் தான்! உதாரணமாக எச்.ஐ.வி வைரஸ் தொற்றினாலும் எயிட்ஸ் நோய் வராத மனிதர்கள் இருக்கிறார்கள்! கொலஸ்ட்ரோல் குருதியில் 300 ஐத் தாண்டினாலும் இதய நோய் வராத மனிதர்கள் இருக்கிறார்கள். இந்த ஜீன்களின் பல்லினத் தன்மையின் தீய பக்கம், சிலரில் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் மட்டுமே இதய குருதிக் கலன் நோய்களைத் தடுக்கப் போதுமானவையாக இருப்பதில்லை! இதனால் தான் உணவுக்கட்டுப்பாட்டுடன் மட்டும் நிற்காமல் உடற்பயிற்சி, மன அழுத்தம் குறைத்தல் என்பவற்றையும் கடைப்பிடிக்க வேண்டுமென்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்!   

  • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 7/22/2019 at 3:34 PM, Justin said:

பேலியோ டயற் என்பது உணவில் மாச்சத்தைக் குறைப்பது மட்டுமல்ல,  இறைச்சியையும் கொழுப்பு வகைகளையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வதுமாகும்! இறைச்சியிலும் இதயத்திற்கு ஆபத்தான சிவப்பிறைச்சிகளையும், ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் உண்ணுமாறு வலியுறுத்துவது தான் பேலியோ உணவு முறையை ரதி சொன்ன முறைகளில் இருந்து வேறுபடுத்துகிறது. கலோரியை எரிக்கும் உடற்பயிற்சியையும் பேலியோ உணவு முறை வலியுறுத்துவதில்லை! 

சாவை வருந்தி அழைக்கும் செய்முறை.

எப்படி உணவு முறையானது?

On 7/24/2019 at 9:07 PM, Justin said:

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

2. தீட்டாத அரிசியில் இருக்கும் நார்த்தன்மை உணவோடு சேர்ந்து எமக்குள் உள்நுழையக் கூடிய நச்சுத் தன்மையான பொருட்கள் குடலினால் உறிஞ்சப் படுவதைக் குறைக்கும். இதனால் பெருங்குடல் புற்று நோய் (colon cancer) போன்ற நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். நார்த்தன்மை குறைவான உணவுகளோடு அதிகம் இறைச்சியையும் உண்பதால் மேற்கு நாடுகளில்  பெருங்குடல் புற்று நோய் ஒரு பரவலான புற்று நோயாக உருவாகி வருகிறது.  

3. இது இன்னும் ஆய்வில் இருக்கும் ஒரு விடயம்: நார்த்தன்மையான உணவுகளால் குடலில் இருக்கும் சில  பற்றீரியாக்கள் பெருகி நன்மையடைவதால் எங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளிலும் விளைவுகள் ஏற்படும். அனேகமாக நன்மையான விளைவுகளே! Probiotic yogurt என்று வெளிநாடுகளில் விற்கிறார்கள். அதில் இருப்பது இப்படியான நல்ல விளைவுகள் தரும் குடல் பக்ரீரியாக்கள் தான். நார்த்தன்மையான தீட்டாத அரிசியும் ஏனைய மரக்கறி பழ வகைகளும்  போதியளவு உட் கொண்டால் probiotic yogurt அவசியமில்லை.

ஆனால் நீங்கள் சொல்வது போல, வெள்ளை அரிசி சாப்பிடும் அதே அளவில்  குத்தரிசி சாப்பிட முடியாது! என் அனுபவத்தில் பாஸ்மதியின் மூன்றிலொரு பங்கு குத்தரிசி சாப்பிட்டால் வயிறு நிரம்பி விடும். அது நல்லதும் தானே?   முயற்சி அதிகமற்ற உணவுக் கட்டுப் பாடு!

நீங்கள் சொல்லுவதும், இந்த ஆய்வும் ஏறத்தாழ ஒன்றா?

Share this post

Link to post
Share on other sites
On 7/24/2019 at 10:07 PM, Justin said:

பாசுமதி, மற்றும் தீட்டிய அரிசிகளை விடவும் தீட்டாத குத்தரிசி, மொட்டைக்கறுப்பன் அரிசிகள் ஆரோக்கியமானவை. (ஆனால் இவற்றையும் கூட அதிகமாக உட்கொண்டால் அது மிகையான மாச்சத்தை உள்ளெடுப்பதாகவே அமையும்). தீட்டாத அரிசிகளில் இருக்கும் முக்கியமான நன்மைகள்:

1. நார்த்தன்மை அதிகம் என்பதால் சமிபாடடைய அதிக நேரம் எடுக்கும். இதனால் உடலில் குளூக்கோஸ் உடனடியாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நிலைமைகள் ஏற்படாது. மாச்சத்துள்ள உணவுகள் எவ்வளவு வேகமாக குளூக்கோசை அதிகரிக்கின்றன என்று கணிக்கும் அளவீட்டை கிளைசீமிக் இண்டெக்ஸ் (Glycemic Index - GI) என்று அழைப்பர்.GI 55 இற்குக் கீழ் உள்ள மாப்பொருட்கள் நீரிழிவு வரும் வாய்ப்பைச் சிறிது குறைக்கின்றன. தீட்டிய வெள்ளை அரிசியின் GI 79, தீட்டாத அரிசியின் GI 55. வெள்ளை பாஸ்மதி அரிசியை விட பிறவுண் நிறமான தீட்டாத பாஸ்மதி அரிசி GI ஐப் பொறுத்த வரை ஆரோக்கியமானது. அதுவும் ஏறத்தாழ GI 55 தான்.  

மூல நோய் உள்ளவர்கள் நார்த்தன்மை அதிகமுள்ள உணவுப்பொருட்களை உண்டு விட்டு சிரமப்படுவார்கள்.

Share this post

Link to post
Share on other sites
On 7/22/2019 at 4:34 PM, Justin said:

ஆரோக்கியம் அற்ற தேங்காய் எண்ணை போன்ற நிரம்பிய கொழுப்பமிலங்களையும் 

ஊரிலுள்ளவர்கள் தேங்காயெண்ணையை தவிர்த்து நல்லெண்ணையை (எள்ளெண்ணை) பயன்படுத்தலாம்.

வெளிநாடுகளில் வசிப்போர் ஒலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். அல்லது சூரியகாந்தி எண்ணை, கொல்சா (கனோலா) எண்ணை போன்றவற்றை பயன்படுத்தலாம்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, ஏராளன் said:

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

இணைப்பிற்கு  நன்றி ஏராளன்.

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, ஏராளன் said:

கொழுப்பு என்றால் என்ன? கொலஸ்டிரால் என்றால் என்ன? கொழுப்பு தான் மாரடைப்பிற்கு காரணமா?

https://doctorarunkumar.com/paleo-lchf-diet/fat-cholesterol-heart-disease-hypothesis/

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

3 minutes ago, குமாரசாமி said:

இணைப்பிற்கு  நன்றி ஏராளன்.

நானும் இப்ப தான் பார்த்து முடித்து பதில் போட மேலே நீங்களும் பதில் போட்டிருக்கிறீர்கள்.சிரிப்பாக இருந்தது.வயதொற்றுமை போல இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி ஏராளன்.

நானும் இப்ப தான் பார்த்து முடித்து பதில் போட மேலே நீங்களும் பதில் போட்டிருக்கிறீர்கள்.சிரிப்பாக இருந்தது.வயதொற்றுமை போல இருக்கும்.

இருக்கும்...இருக்கும்....வருத்தம் வயது எல்லா ஒற்றுமையும் இருக்கும்...😄

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.