• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoji are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Topics

  • Posts

    • ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நவீன மழை நீர் சேகரிப்பு திட்டத்தை சென்னை மாநகராட்சி நடைமுறைப்படுத்திவருகின்றது. இந்த நவீன முறையின் நன்மைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு கோடை காலத்தில் தமிழகத்தில் வறட்சி, தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர்மட்டம் குறைவு போன்றவற்றை தவிர்க்க தமிழக அரசு நிர்வாகம் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைக்க பொதுமக்களின் முயற்சிகள் ஒருபுறமிருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள் , பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனி , அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது சென்னை மாநகராட்சி. பாலிஸ்டெரையன் எனும் மக்காத தடிமனான இந்த கலன்களில் நான்கு பக்கமும் சிறு துளைகள் இருக்கும். நான்கு அடி உயரம் மற்றும் இரண்டரை அடி அகலம் கொண்ட கலன்களை மக்காத துணியை கொண்டு மூடி பின்னர் பூமிக்கு பத்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி இறக்கப்படும். அதன் மேலே கூழாங்கற்கள் , ஜல்லி கற்கள், மணல் போன்றவைகள் கொண்டு நிரப்பப்படும். பெய்கின்ற மழைநீர் , இதுபோன்ற இயற்கை வடிகட்டி அடுக்குகள் வழியாக வடிகட்டப்பட்டு நேரடியாக நிலத்திற்குள் சென்று சுத்தமான தண்ணீராக சேகரிக்கப்படும். அறுபது டன் எடையைக் கூட சாதாரணமாக தாங்கும் தன்மைக் கொண்ட இந்த கலன்களை கொண்டு பிரதான சாலைகளுக்கு அடியில் கூட மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க முடியும் என்கிறார் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ள சிவராம். தற்போது நடைமுறையில் உள்ள உறைகிணறு சேமிப்பு முறையில் மழைநீர் ஒரு வழியாக மட்டுமே நிலத்திற்கு செல்லும் ஆனால் இந்த கலன்களில் நான்கு பக்கமும் துளைகள் உள்ளதால் பூமியின் அடியில் நான்கு பக்கங்கள் வழியாகவும் மழைநீர் செல்லும் என்பதால் கணிசமாக மழைநீரை நிலத்தடியில் சேகரிக்க வழிவகை செய்கிறது. இதுபோன்ற நவீன கலன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படாத காரணத்தினால் தற்போதைக்கு ஜெர்மனி நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறும் சிவராம், அறுபதாயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த மழைநீர் சேகரிப்பு கலன்களின் ஆயுட்காலம் குறைந்தது 50 ஆண்டுகள் என்கிறார். முதற்கட்டமாக சென்னையில், இரண்டாயிரம் இடங்களில் இதுபோன்று அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுகளில் மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களிலும் சாலைகளிலும் கூட இத்திட்டம் அமைக்கப்படவுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் பெய்த சிறு அளவு மழைக்கே சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது என்றால் நீண்ட காலம் பயன் தரக்கூடிய இது போன்ற தொலைநோக்கு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகரம் முழுவதும் நடைமுறைப்படுத்தினால் கணிசமான நிலத்தடி நீர் வளத்தை எதிகாலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை...! https://www.polimernews.com/dnews/89337/ஜெர்மன்-முறையில்-மழை-நீர்சேகரிப்பு..!-சென்னையில்பணிகள்-தீவிரம்
    • விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஏர்பஸ் நிறுவனம், துபாய் ஏர்ஷோ விமான கண்காட்சியில், 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. புகழ்பெற்ற துபாய் ஏர்ஷோ துபாயில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. இதில், உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களான போயிங், ஏர்பஸ் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த  எமிரேட்ஸ் விமான நிறுவனம், 50 ஏ350 ரக விமானங்களை 16 பில்லியன் டாலர்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதேபோல, ஏர் அரேபியா நிறுவனம் 120  ஏ320நியோ ரக விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதன் மூலம் போட்டியில் போயிங்கைவிட ஏர்பஸ் முந்தியுள்ளது. அதேசமயம், வரும் வியாழக்கிழமை வரை துபாய் ஏர்ஷோ நடைபெற உள்ள நிலையில், புதிய ஆர்டர்களை பெறமுடியும் என போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்பார்ப்பில் உள்ளன. https://www.polimernews.com/dnews/89370/30-பில்லியன்-டாலர்கள்மதிப்பிலான-விமான-ஆர்டரைபெற்ற-ஏர்பஸ்
    • இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இவ்வருட இறுதியில் வருகிறது என முன்பே தெரியும். பொது வேட்பாளரை நிறுத்துவதா இல்லையா என்பதை முன்கூட்டியே கலந்தாலோசித்து இருக்க வேண்டும். அப்படி செய்யாமல் தமிழ் மக்கள் பேரவை, இறுதி நேரத்தில் தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான கதையை ஆரம்பித்த போது தெற்கில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பித்து விட்டது.  இதில் 5 கட்சிகள், மாணவர்கள் வெளிப்படையாக கூடியது மட்டுமில்லாமல் 13 அம்ச கோரிக்கையை உருவாக்கும் போது அக்கோரிக்கையை காட்டியே நாடு பிரியப்போகுது என்ற பிரச்சாரம் தெற்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பின் விக்னேஸ்வரன் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ், ஆங்கிலத்தில் ஐக்கியம் என்றும் சிங்களத்தில் உள்ள சொல் ஒற்றையாட்சியை குறிப்பது போல் உள்ளது என கூற விக்னேஸ்வரன் இவ்வாறு கூறினார் என சொல்லி சஜித் நாட்டை பிரிக்க துணைபோகிறார் என தெற்கில் பிரச்சாரம் நடந்தது. 13 கோரிக்கைகளை ஏற்காவிட்டால் தாம் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என கூறியவர்கள், பின் யார் வரக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சஜித்தை ஆதரிப்பதாக கூறிய போது, சஜித் தமிழர்களின் 13 கோரிக்கைகளையும் ஏற்று விட்டார், அதனால் தான் கூட்டமைப்பு அவரை ஆதரித்தது என பிரச்சாரம் செய்தார்கள். ராஜபக்சக்களை தோற்கடிப்பது பற்றி சுமந்திரன் கூறிய கருத்தை திரிவுபடுத்தி சிங்களவர்களை தோற்கடிப்பது பற்றி அவர் கூறியதாகவும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. என்னைப்பொறுத்தவரை கூட்டமைப்பு சஜித்தை ஆதரிக்குமாறு கோர முன்னரே தெற்கில் இனவாதப்பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை திரட்டி விட்டார்கள். பொதுவேட்பாளர் பற்றிய பேச்சை ஆரம்பித்தவர்கள், 13 கோரிக்கைகளை உருவாக்கியவர்கள் கோத்தபாயவை வெல்ல வைப்பதற்காகவே அதை ஆரம்பித்தார்கள் என்பது எனது எண்ணம். அது பற்றி முன்பே எழுதியிருந்தேன்.
    • தென் சீனக் கடல் பகுதியில் ராணுவ பலத்தை காட்டும் வேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் சீனா கூறியுள்ளது. சரக்கு போக்குவரத்திற்கு மிகமுக்கியமான கடல் வழியான தென் சீனக் கடலுக்கு, சீனா முழுஉரிமை கொண்டாடுவதை அமெரிக்கா ஏற்கவில்லை. இந்த நிலையில் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரும் நேற்று பாங்காக்கில் சந்தித்துப் பேசினர். அப்போது தென்சீனக் கடல், ஹாங்காங் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சீனாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான் ((Wu Qian)) தெரிவித்துள்ளார். தென்சீனக் கடலில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் சீனா உறுதியாக இருப்பதாகவும், அந்த பகுதியில் தனது ராணுவ பலத்தை காட்டி பதற்றத்தை தூண்டும் வேண்டும் வேலையை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மார்க் எஸ்பரிடம் வெய் ஃபெங் கூறியதாக வூ கியான் கூறியுள்ளார். https://www.polimernews.com/dnews/89354/ராணுவ-பலத்தை-காட்டும்வேலையை-நிறுத்துமாறுஅமெரிக்காவிடம்-கூறிய-சீனா   Beijing tells US to stop 'flexing muscles' in South China Sea as it sends new carrier   China's Defense Minister told his US counterpart that Washington must stop "flexing its muscles" in the South China Sea when the two met Monday, according to a spokesman for Beijing. At the same time, China announced that its new domestically produced aircraft carrier was headed to the South China Sea for training and research purposes. US Defense Secretary Mark Esper and Chinese Defense Minister Wei Fenghe met Monday in Bangkok, where the two were attending a meeting of defense officials from the Association of Southeast Asian Nations (ASEAN) and other countries.   Wei and Esper discussed a host of issues -- including the political unrest in Hong Kong and the status of the South China Sea, Chinese Defense Ministry spokesman Wu Qian said. Much of the international community views China's maritime claims in the region as excessive and a violation of international law. The US also accuses China of militarizing islands in the sea, and regularly sails warships in the region as part of operations to challenge Beijing's claims and ensure "freedom of navigation."   https://www.cnn.com/2019/11/18/asia/south-china-sea-intl-hnk/index.html
    • வன்முறைகளால் பாதிக்கப்பட்டால் ’சிறிகொத்தாவுக்கு அறிவிக்கவும்’ தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதிகளில் இடம்பெற்று வரும் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான, சிறிகொத்தாவுக்கு அறிவிக்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளரும் கல்வி அமைச்சருமான, அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் அன்னம் சின்னத்துக்கு வாக்களித்த, ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வன்முறைகளுக்கு இலக்காகி, அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதைத் தடுப்பதற்கான பொறுப்பு கட்சிக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, அவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பவர்கள் கட்சியின் தலைமையகத்தின் தொலைபேசி இலக்கமான 0112-2889378, 077-9215299 என்ற இலக்கங்களுக்கு அழைத்து அறிவிக்குமாறும் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/வனமறகளல-பதககபபடடல-சறகததவகக-அறவககவம/175-241198