Sign in to follow this  
கிருபன்

ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..!

Recommended Posts

ஜெயலலிதாவுக்கு கோவையில் கோயில்..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கோவையில் 5 லட்சம் ரூபாய் செலவில் கோயிலில் அமைத்து தொண்டர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி 100வது வார்டுக்கு உட்பட்ட கணேசபுரம் பகுதியில், அ.தி.மு.க-வின் முன்னாள் கவுன்சிலர் வேணுகோபால் தலைமையிலான தொண்டர்கள் ‘அருள்மிகு ஈசப்பன், கால பைரவர் ஆஞ்சநேயர் திருக்கோயில்’ என்ற பெயரில் ஒரு கோயிலை அமைத்துள்ளனர்.

அந்தக் கோயிலில், சுமார் 8 டன் எடைகொண்ட ஒரே கல்லின் ஒருபுறம் கால பைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளின் உருவங்களும், மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில், அதிமுக தொண்டர்கள் இங்கு வந்து ஜெயலலிதா மற்றும் சுவாமிகளின் உருவச்சிலைக்கு கற்பூரம் காட்டி வழிபாடு நடத்துகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "இந்தப்பகுதியைச் சேர்ந்த தொண்டர்கள் நிதி திரட்டி, 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தக் கோயிலை அமைத்துள்ளோம். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தக் கோயிலை திறந்து வைத்தார்" என தெரிவித்தனர்.

 

 

https://www.virakesari.lk/article/60845

Share this post


Link to post
Share on other sites


நாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு பூங்காவை இல்லை குளத்தையும் சேர்த்து உருவாக்கினால் மக்களும் மண்ணும் பயன்பெறும். அம்மாவின் கோவிலும் கலகலப்பாக இருக்கும்.

Share this post


Link to post
Share on other sites
7 minutes ago, ampanai said:

நாட்டு நிலைமைக்கு ஏற்ப ஒரு பூங்காவை இல்லை குளத்தையும் சேர்த்து உருவாக்கினால் மக்களும் மண்ணும் பயன்பெறும். அம்மாவின் கோவிலும் கலகலப்பாக இருக்கும்.

ஜெயலலிதாவின்... கோயிலுக்கு  பக்கத்தில், ஒரு சினிமா தியேட்டரையும்  கட்டி விட்டால்...
அவர் நடித்த... பக்திப் படங்களை, பார்த்து ரசிக்கலாம். :grin:
 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

kovai-jj-2.jpg?itok=vxgM7n15

சைடில் என்ன..? வெற்றி வேலா..? 

Share this post


Link to post
Share on other sites


இப்படி கோயில்களை வைத்து ஒரு நூதனசாலையை  ஒரு இடத்தில்  அமைத்தால் மக்களுக்கு சரித்திரமும் புரியும், ஒரு இடத்திலேயே எல்லா தெய்வங்களை வழிபட்டதுமாக இருக்கும் 🙂 

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

kovai-jj-2.jpg?itok=vxgM7n15

சைடில் என்ன..? வெற்றி வேலா..? 

ஒரு பக்கம் வெற்றிவேல், மற்றப் பக்கம் அன்புமணி (ராமதாஸ்) 🤣

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

Bildergebnis für à®à¯à®¯à®²à®²à®¿à®¤à®¾à®µà¯à®à¯à®à¯ à®à¯à®µà¯à®¯à®¿à®²à¯ à®à¯à®µà®¿à®²à¯..!

தீபாராதனை நடக்கும் போது இந்த இசையை இசைக்கவும்.

 

Edited by குமாரசாமி

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this