Jump to content

சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சவூதியில் அமெரிக்க படைகள் மீளக் கால்பதிப்பு

July 21, 2019

saudi.jpg?resize=660%2C371அதிகரித்து வரும் அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்காவின் நலன்களை பாதுகாத்து கொள்வதற்காக அமெரிக்க படைகள் சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு வருவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

வளைகுடா கப்பல் போக்குவரத்து பாதைகளில் பாதுகாப்பு தொடர்பாக ஈரானோடு அதிகரித்து வருகின்ற பதற்றங்களின் மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதேச பாதுகாப்பையும், நிரந்தரத்தையும் உறுதிப்படுத்தி கொள்வதற்கான இந்த நடவடிக்கைக்கு அரசர் சல்மான் அனுமதி வழங்கியுள்ளதை சௌதி அரேபியா உறுதி செய்துள்ளது.

ஈராக் குவைத்தை ஆக்கிரமித்தபோது, 1991ம் ஆண்டு பாலைவன புயல் நடவடிக்கையோடு சவூதி அரேபியாவில் கால் பதித்த அமெரிக்க படைகள் 2003ஆம் ஆண்டு ஈராக் போர் முடிவடைந்த பின்னர் அங்கிருந்து வெளியேறிய பின்னர் சவூதி அரேபியாவில் கால்பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்க படைகள்   #சவூதி அரேபியா #கால்பதிப்பு #வளைகுடா #ஈராக்

http://globaltamilnews.net/2019/127041/

Link to comment
Share on other sites

இஸ்லாமியர்களின் புனித மண்ணில் எவ்வாறு கிறிஸ்தவர்கள் கால் பாதிக்கலாம்?  

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இஸ்லாமியர்களின் புனித மண்ணில் எவ்வாறு கிறிஸ்தவர்கள் கால் பாதிக்கலாம்?  

கிறித்துவர்களின் கோவில்களில் எப்படி இசுலாமியர்கள் குண்டு வைக்கலாமோ அப்படித்தான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து வரும் 10 - 15 வருடங்களுக்கு சவூதியில், அமெரிக்க படைகள் இருக்கும் என்று நம்பலாம்.

Link to comment
Share on other sites

16 hours ago, ampanai said:

இஸ்லாமியர்களின் புனித மண்ணில் எவ்வாறு கிறிஸ்தவர்கள் கால் பாதிக்கலாம்?  

இன்னொரு திரியில் முன்னர் எழுதியிருந்தேன், சவுதி அமெரிக்காவின் நட்பு நாடு என்று.

சவுதி பெயருக்கு தான் இஸ்லாமிய நாடு, அமெரிக்கா பெயருக்கு தான் கிறிஸ்தவ நாடு. அந்நாடுகளில் நடப்பவை வேறு ஆட்சி. 😎

Link to comment
Share on other sites

சிரியாவில் அமெரிக்க படைகள் தோற்று விட்டன, காரணம் உருசியா.

ஏற்கனவே யேமனில் சவூதியும் ( அமெரிக்கா) ஈரானும் (உருசியா?) மோதுகின்றன.

ட்ரம்ப் மீது நம்பிக்கையில்லா பிரேரணை (impeachment) வந்தால், ஈரான் மீது தாக்குதல் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/21/2019 at 2:15 PM, ampanai said:

இஸ்லாமியர்களின் புனித மண்ணில் எவ்வாறு கிறிஸ்தவர்கள் கால் பாதிக்கலாம்?  

On 7/21/2019 at 4:00 PM, Paanch said:

கிறித்துவர்களின் கோவில்களில் எப்படி இசுலாமியர்கள் குண்டு வைக்கலாமோ அப்படித்தான்!  

On 7/21/2019 at 5:18 PM, தமிழ் சிறி said:

அடுத்து வரும் 10 - 15 வருடங்களுக்கு சவூதியில், அமெரிக்க படைகள் இருக்கும் என்று நம்பலாம்.

அமெரிக்காவும் பிரிட்டனும் மத்திய கிழக்கில் கால் வைத்தபடியால் தான் முஸ்லீம்கள் இவ்வளவிற்கு முன்னேறியிருக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

2 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் பிரிட்டனும் மத்திய கிழக்கில் கால் வைத்தபடியால் தான் முஸ்லீம்கள் இவ்வளவிற்கு முன்னேறியிருக்கின்றார்கள்.

இவர்கள் அங்கு எண்ணையைத் தோண்டத் தோண்ட, எண்ணை அவர்களை விண்ணைநோக்கிச் செல்வத்தால் வளர்த்துள்ளது.

பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.