15.07.1996 பார்த்திபனின் வரவு.   15.07.1996 பார்த்திபனின் வரவு. 12.07.1996 வெள்ளிக்கிழமை. காலைச்சாப்பாடு செய்து கொண்டிருந்தேன். வளமையைவிட வித்தியாசமாக வயிறு வலித்தது. கொஞ்சநேரம் வலி பிறகு ஏதுமில்லை. மதியத்திற்கு பிறகு என்னால் நிற்க இருக்க முடியாது விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. பின்னேரமாகியது. வலியில் மாற்றமில்லை. என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போகும்படி அழுதேன். ஏற்கனவே பலதடவைகள் மருத்துவமனை போய் வந்த அனுபவங்களைச் சொல்லி தாமதித்து போகலாம் என சொல்லப்பட்டத