Sign in to follow this  
ampanai

தீர்வு கிடைக்கும் வரை அமைச்சு பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் - ஹக்கீம்

Recommended Posts

அண்மைக் காலமாக முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் எமக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் எந்தவொரு முஸ்லிம் உறுப்பினரும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்  கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

hakeem.jpg

அத்துடன் கிழக்கில் முஸ்லிம் - தமிழ் தரப்பினருக்கும் எழுந்துள்ள பிரச்சினைகளில் எமக்கு ஒரு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் முஸ்லிம் உறுப்பினர்களின் நிலைப்பாடு குறித்து அறிவிக்க நாளை பிரதமருடன் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீடம் இன்று பிற்பகல் கட்சி தலைமையகமான தாருஸமாலில் கூடியது. கட்சியில் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் அங்கத்தவர்கள் கூடி இன்று பல தீர்மானங்களை எடுத்திருந்தனர். இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று தேசிய பாதுகாப்பு உறுதிப்பட்டு இருந்தாலும் கூட அவ்வாறு இல்லை என கூறிக்கொண்டு நாட்டினை நாசமாக்க ஒரு சிலர் முயட்சித்து வருகின்றார். தேர்தலை இலக்கு வைத்து சில நாசகார செயல்களை செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு அரசாங்கம் இடமளிக்கக் கூடாது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/60898

Share this post


Link to post
Share on other sites

சம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்...இந்த அமைச்சர்களில் சிலர் தெரிந்தும்/தெரியாமலும் தீவிரவாதத்திற்கு துணை போயிருந்தும் இப்படி துணிவாய் ஹக்கீம் கதைக்கிறார் என்றால் எவ்வளவு மனா உறுதி இவருக்கு இருக்க வேண்டும் 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, ரதி said:

சம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்...இந்த அமைச்சர்களில் சிலர் தெரிந்தும்/தெரியாமலும் தீவிரவாதத்திற்கு துணை போயிருந்தும் இப்படி துணிவாய் ஹக்கீம் கதைக்கிறார் என்றால் எவ்வளவு மனா உறுதி இவருக்கு இருக்க வேண்டும் 

சரியாக... சொன்னீர்கள் ரதி.  எங்களது  அரசியல்வாதிகள் சூடு, சொரணை இல்லாமல்,
தமிழ்மக்கள் மீது... இழிவான அரசியலை செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களால்... இதுவரை... தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட  நீண்டகால பாதிப்புகள் மிக அதிகம்.

Share this post


Link to post
Share on other sites
14 hours ago, ரதி said:

சம்மந்தன்,கூட்டமைப்பு போன்றன இவர்களது சிறுநீரை குடிக்க வேண்டும்..

சம்பந்து இதை வாசித்தால் போட்டிருக்கும் யட்டியிலேயே கழிந்து விடுவார் ...வயசு போன மனுசனை பிடித்துக்கொண்டு வந்து எங்கடை ரதி அக்கீ பண்ணவைக்கிற வேலை 

Share this post


Link to post
Share on other sites

கள்ளக்காணி பிடிக்கிறதுக்கு லைசன்ஸ் கேக்கிறாங்க இந்த முஸ்லீம் அரசியல் கேடிகள்!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இந்த வீரகேசரிகாரனுக்கும் குசும்பு கூடிபோச்சு தீர்வு கிடைக்கும்வரை என்று போட என்னடா ஒரே இரவிலை முஸ்லீம் எல்லாம் மாறிட்டான்களோ நானும் சம்பந்தன் போல் கனவு காண தொடங்கி விட்டன் .............சை 😏

Share this post


Link to post
Share on other sites

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஒருவார காலம் அவகாசம்

முஸ்லிம்கள் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஒருவாரத்துக்குள் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்றையதினம் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்திருந்தனர்.

இதன்போது இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டதாக, இந்த சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உபத்தலைவருமான எச்.எம்.எம் ஹரிஸ் தெரிவித்தார்

http://www.hirunews.lk/tamil/220830/முஸ்லிம்-நாடாளுமன்ற-உறுப்பினர்கள்-அரசாங்கத்துக்கு-ஒருவார-காலம்-அவகாசம்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this