ஈழப்பிரியன்

நெத்தலி கருவாடு பிரட்டல்.

Recommended Posts

இந்த நெத்தலி கருவாட்டை மிகவும் ருசியாகவும் சுலபமாகவும் செய்யலாம்.
நான் செய்த முறை.
அரை இறாத்தல் நெத்தலி (நான் வாங்கியது தலையில்லாதது)
பெரிய வெண்காயம் 3.
தக்காளி 1
தேவையான உப்பு
கொஞ்சம் இஞ்சி
சிறிது உள்ளி.
தேசிக்காய் 1
3 கரண்டி மிளகாய்த் தூள்.

செய்முறை:-
ஓரளவு சுடுநீரில் நெத்தலியை 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.அந்த இடைவெளியில் 3 பெரிய வெண்காயத்தையும் அரிந்து இரும்பு சட்டி அல்லது ஒட்டாத சட்டியில் போட்டு அரைவாசி வேகும் வரை வதக்கவும்.
அடுத்து தக்காளி சிறிதாக வெட்டி உள்ளி இஞ்சி கறிவேப்பிலை எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு வதக்கவும்.
ஊறப்போட்ட நெத்தலியை 3-4 தடவை கழுவி எடுத்து அதையும் சட்டியில் போட்டு வதக்கவும்.இதற்கு தண்ணீர் இல்லாதபடியால் கொஞ்சம் கூடுதல் எண்ணெய் தேவைப்படும்.ஒட்டாத சட்டி என்றால் நிறைய எண்ணெய் தேவைப்படாது.ஒரேயடியாக எண்ணெயை விடாமல் வத்தவத்த தேவைக்கேற்ப விடவும்.தூள் உப்பையும் தேவைக்கேற்க போடவும்.அடிப்பிடிக்காமல் அடிக்கடி பிரட்டவும்.
தூள் அவிந்த பின் சுவையைப் பார்த்து இறக்கி ஆறிய பின்னர் 1 தேசிக்காய் விடவும்.
வீட்டில் சிறியவர்கள் இல்லை என்றால் பச்சை மிளகாய் வெண்காயத்தோடு சேர்த்து வதக்கலாம்.
சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
நன்றி.

22963685-7-DD1-4401-A39-C-B7-D79598281-F

 • Like 8
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

நெத்தலி மீன் எப்பவும் சுவையானது. பார்க்க... நல்லாய் இருக்கு. 
மூன்று கரண்டி... மிளகாய்த் தூள் போட்டும், எதிர்பார்த்த நிறம் வரவில்லை.
ஈழப் பிரியன்... தேக்கரண்டியால்... மிளாகாய் தூளை  போட்டிருக்கிறார் போலை இருக்கு.  :grin:

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites

சிறி இதற்குள் தண்ணீர் விடுவதில்லை.ஆனபடியால் உறைப்பாகத் தான் இருக்கும்.

Share this post

Link to post
Share on other sites

உருளக்கிழங்கை காணோம்

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 minutes ago, colomban said:

உருளக்கிழங்கை காணோம்

கொழும்பான் இதற்கு உருளைக்கிழங்கு போடுவதில்லை.அது ருசியையே மாற்றிவிடும்.பொதுவாகவே உருளைக்கிழங்கு சாப்பிடுவது குறைவு.

Share this post

Link to post
Share on other sites

நல்ல ரெசிபி . எனக்கு சரிவாரதே இல்லை

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
5 minutes ago, nilmini said:

நல்ல ரெசிபி . எனக்கு சரிவாரதே இல்லை

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

நன்றி. கொழும்பில வெள்ளையா தலை இல்லாமல் வாங்கி வந்தேன் . அந்த படத்தையும் செய்தபின் சமைச்ச படத்தையும்  போடுகிறேன் 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Just now, nilmini said:

நன்றி. கொழும்பில வெள்ளையா தலை இல்லாமல் வாங்கி வந்தேன் . அந்த படத்தையும் செய்தபின் சமைச்ச படத்தையும்  போடுகிறேன் 

இலங்கையில் வாங்குவது மண் இருக்கும் .கவனம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் வாங்குவது மண் இருக்கும் .கவனம்.

இலங்கையில் தமிழனுக்குத்தான் மண் இல்லை. நெத்தலிக்காவது இருக்கிறதே.!

இங்கு யேர்மனியில் பூனை உணவுக்குவரும் நெத்தலியில் ஒரு மண்கூட இல்லையாம். அத்தனை சுத்தமாம். ஒரு தமிழ்கடையில் இரு நுகர்வோர் கதைத்தபோது கேட்டேன்.

 • Thanks 1
 • Haha 2

Share this post

Link to post
Share on other sites

உண்டன வெங்காயம் போட்டு  மாதத்தில் ஒரு தடவையாவது சமைக்கும் சாப்பாடு இது. சிவத்த அரிசிமா புட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Paanch said:

இலங்கையில் தமிழனுக்குத்தான் மண் இல்லை. நெத்தலிக்காவது இருக்கிறதே.!

இங்கு யேர்மனியில் பூனை உணவுக்குவரும் நெத்தலியில் ஒரு மண்கூட இல்லையாம். அத்தனை சுத்தமாம். ஒரு தமிழ்கடையில் இரு நுகர்வோர் கதைத்தபோது கேட்டேன்.

பாஞ்ச் நல்லகாலம் நெத்தலிக்கு மாதிரி தமிழனுக்கும் தலைக்குள் மண் இல்லையே என்று சந்தோசப்படுங்க.
மண் இருந்தால் மனிதன் பேசிப்பேசி கழுவி தின்பான்.
பூனை கழுவி தின்னுமோ?அல்லது
பூனைக்கு மண் போடும் என்று கழுவி வைப்பானோ?
பூனைக்கு இதனால் ஏதாவது வருத்தம் வந்தால் இருந்த இடத்திலிருந்தே பூனை லோயருக்கு அடித்து சொல்லிப் போட்டு எப்போ பணம் வரும் என்று காத்திருப்பான்.

7 hours ago, நிழலி said:

உண்டன வெங்காயம் போட்டு  மாதத்தில் ஒரு தடவையாவது சமைக்கும் சாப்பாடு இது. சிவத்த அரிசிமா புட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

நானும் 3 பெரிய வெண்காயம் போட்டேன்.இருந்தும் இன்னொன்று போட்டிருக்கலாம் போலத் தான் இருந்தது.
இதுவரை நெத்தலி பிரட்டல் கறியாகத் தான் வீட்டில் செய்வார்கள்.
இம்முறை இப்படி செய்து பார்க்கலாம் என்று முயற்சித்தேன்.
கை நிறைய பலன்.மிகவும் உருசியாக இருந்தது.
நன்றி நிழலி.

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ஈழப்பிரியன் said:

பாஞ்ச் நல்லகாலம் நெத்தலிக்கு மாதிரி தமிழனுக்கும் தலைக்குள் மண் இல்லையே என்று சந்தோசப்படுங்க.

ஒரு அறிவிலியைப் பார்த்துத் தலைக்குள் ஒரு மண்ணும் இல்லையே என்று ஆன்றோர் கூறுவது எதனால்.......??????🤔

Share this post

Link to post
Share on other sites

அருமையான அயிட்டம், செய்து அசத்தியிருக்கிறீங்கள் ஈழப்பிரியன்......!  👍

ஊரில் முன் நெஞ்செலும்பு தெரிய வாறவர்களை நெத்தலிப் பயில்வான் என்று சொல்லுறது வழக்கம்.....! 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
On 7/21/2019 at 9:51 PM, ஈழப்பிரியன் said:

சோறு புட்டு இடியப்பம் பாண் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்..
நன்றி.

22963685-7-DD1-4401-A39-C-B7-D79598281-F

ச்..சா நெத்தலி கருவாட்டை பாக்க நிலாவரை கிணறுமாதிரி வாய் ஊறிக்கொண்டே இருக்குது.....நாசமறுப்பார் வாயை கட்டிப்போட்டுட்டாங்கள்..🤬

21 hours ago, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்து பாருங்கள்.நல்ல ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்.
வடை செய்த மாதிரி செய்து போட்டு படத்தையும் போடுங்கோ.
சீனர்களின் கடைகளில் வாங்கினால் மண் இருக்காது.
அதுவும் தலையில்லாதது வாங்கினால் மண்ணே இருக்காது.
எதுக்கும் இரண்டு மூன்று தடவைகள் கழுவவும்.

நல்ல சத்து ஓகே....ஆனால் நெத்தலியிலை பயங்கர கொலஸ்ரோல் எண்டு கதைக்கிறாங்கள் எல்லே?????

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

நெத்தலியில் இருப்பது  unsaturated fat . இது ரத்தத்தில் இருக்கும் கூடாத கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று அகற்றும். என்றபடியால் உயர்  ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உப்பு இருப்பதால் கொதி தண்ணீரில் நன்றாக கழுவி சமைத்தால் சரி 

 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

நாங்கள் உப்பில ஊற வைத்த  நெத்தலியை இப்படி  பிரட்டுவதுண்டு  உருளைக்கிழங்கு போட்டு அதிகாலை தண்ணீச்சோறும் வடித்த சோறை எடுத்து அதற்கும் கொஞ்சம் தேங்காய் பூவைப்போட்டு  சோற்றில் பிசைந்து இந்த பிரட்டலை வைத்து சாப்பிடுவது இதற்கு நிகர் இதுதான் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

பார்க்க நால்லாத்தான் இருக்கு. கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டிருந்தால் கலர் நன்றாக இருக்கும்.  எனக்கு இப்போதெல்லாம் இந்த நெத்தலி கருவாடு எல்லாம் பிடிப்பதே இல்லை. ஆனாலும் என்ன செய்யிறது மனுசனுக்குச் சமைச்சுக் குடுக்கிறதுதான்.

ஆனால் உடன் நெத்தலி  பொரியல் எண்டால் அவ்வளவுதான். போகவரச் சாப்பிடுவன்.  

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 7/22/2019 at 8:06 AM, ஈழப்பிரியன் said:

1.jpg

2.jpg

3.jpg

நல்ல ரெசிப்பி . சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது. நன்றி 

 • Like 4
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, nilmini said:

1.jpg

2.jpg

3.jpg

ஆஹா... நில்மினி, சொன்ன மாதிரி நெத்தலி கருவாடு செய்து... படத்தையும் போட் டு விட்டீர்கள். :)
பார்க்க வடிவாக இருக்குது. அது என்ன வெள்ளையாக.. இருப்பது கோதுமை மாவில் அவித்த புட்டா? 

இதனை... நில்மினி செய்தவாரா? அல்லது அவரின் அம்மா செய்தவாரா.. என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.  :grin:

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites
On 7/23/2019 at 6:53 AM, குமாரசாமி said:

நல்ல சத்து ஓகே....ஆனால் நெத்தலியிலை பயங்கர கொலஸ்ரோல் எண்டு கதைக்கிறாங்கள் எல்லே?????

நீங்கள் பேதி தந்ததும் கொஞ்சம் வயிற்றோட்டமாக இருந்தது.

டாக்கர் நில்மினியின் மருந்தில் குணமாகிவிட்டது.

On 7/23/2019 at 10:37 AM, nilmini said:

நெத்தலியில் இருப்பது  unsaturated fat . இது ரத்தத்தில் இருக்கும் கூடாத கொழுப்பை ஈரலுக்கு கொண்டு சென்று அகற்றும். என்றபடியால் உயர்  ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. உப்பு இருப்பதால் கொதி தண்ணீரில் நன்றாக கழுவி சமைத்தால் சரி 

நன்றி நில்மினி.

On 7/27/2019 at 1:08 PM, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் உப்பில ஊற வைத்த  நெத்தலியை இப்படி  பிரட்டுவதுண்டு  உருளைக்கிழங்கு போட்டு அதிகாலை தண்ணீச்சோறும் வடித்த சோறை எடுத்து அதற்கும் கொஞ்சம் தேங்காய் பூவைப்போட்டு  சோற்றில் பிசைந்து இந்த பிரட்டலை வைத்து சாப்பிடுவது இதற்கு நிகர் இதுதான் 

ராசா முன்னர் பிரட்டல் கறியாக வைத்தே சாப்பிட்டோம்.இடையிடை பொரித்து சாப்பிடுவது.இது தான் முதல்முறையாக எண்ணெயில் வதக்கி எடுத்தது.நன்றாகவே இருந்தது.நன்றி.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 7/27/2019 at 2:15 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பார்க்க நால்லாத்தான் இருக்கு. கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டிருந்தால் கலர் நன்றாக இருக்கும்.  எனக்கு இப்போதெல்லாம் இந்த நெத்தலி கருவாடு எல்லாம் பிடிப்பதே இல்லை. ஆனாலும் என்ன செய்யிறது மனுசனுக்குச் சமைச்சுக் குடுக்கிறதுதான்.

ஆனால் உடன் நெத்தலி  பொரியல் எண்டால் அவ்வளவுதான். போகவரச் சாப்பிடுவன்.  

இதுவும் முழுக்கவும் எண்ணெயில் செய்கிறபடியால் பொரியல் மாதிரியே இருக்கும்.நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

9 hours ago, nilmini said:

1.jpg

2.jpg

3.jpg

நல்ல ரெசிப்பி . சூப்பர் டேஸ்ட்டாக இருந்தது. நன்றி 

நில்மினி வீட்டிலே நெத்தலி இருந்தபடியால் உடனேயே செய்து பார்த்திருக்கிறீர்கள்.நல்லது .

இந்தமுறை செய்தது எனது மகனும் விரும்பி சாப்பிட்டான்.எதுவாக இருந்தாலும் எண்ணெய் சேர்த்தால் தனிசுவை தானே.

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, தமிழ் சிறி said:

ஆஹா... நில்மினி, சொன்ன மாதிரி நெத்தலி கருவாடு செய்து... படத்தையும் போட் டு விட்டீர்கள். :)
பார்க்க வடிவாக இருக்குது. அது என்ன வெள்ளையாக.. இருப்பது கோதுமை மாவில் அவித்த புட்டா? 

இதனை... நில்மினி செய்தவாரா? அல்லது அவரின் அம்மா செய்தவாரா.. என்று எனக்கு சந்தேகமாக இருக்கு.  :grin:

சிறி
நில்மினி வீட்டில் கோதுமைப் புட்டு அவிப்பாங்கள் என்று நம்புகிறீர்களா?
நோ நோ நெவர்.

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, ஈழப்பிரியன் said:

ராசா முன்னர் பிரட்டல் கறியாக வைத்தே சாப்பிட்டோம்.இடையிடை பொரித்து சாப்பிடுவது.இது தான் முதல்முறையாக எண்ணெயில் வதக்கி எடுத்தது.நன்றாகவே இருந்தது.நன்றி.

எங்களுக்கு  அப்படியே துடிக்க துடிக்க மீன் கிடைப்பதால்  ருசி பிரமாதமாக இருக்கும்

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி
நில்மினி வீட்டில் கோதுமைப் புட்டு அவிப்பாங்கள் என்று நம்புகிறீர்களா?
நோ நோ நெவர்.

ஈழப்பிரியன்... அவித்த கோதுமை மாவில்... இடியப்பம், புட்டு  செய்தால், நல்ல சுவையாக இருக்கும்.
வறுத்த கோதுமை மா...   பித்தம் (தலை இடிக்கும், சத்தி வரும்)   என்று சொல்வார்கள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.