Jump to content

ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக் தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்தது - காரணம் தெரியுமா?

சாய்ராம் ஜெயராமன்,பிபிசி தமிழ்
லக்ஷ்மன் முத்தையா Image captionலக்ஷ்மன் முத்தையா

இன்ஸ்டாகிராம் செயலிலுள்ள ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்த தமிழகத்தை சேர்ந்த கணினி பாதுகாப்பு ஆய்வாளரான லக்ஷ்மன் முத்தையாவை பாராட்டி ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 20 லட்சம் ரூபாய்) வெகுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட முறைகள் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து இதுபோன்ற வெகுமதியை பெற்றுள்ள லக்ஷ்மன், இம்முறை எதற்காக, எப்படி இந்த வெகுமதி வென்றுள்ளார் என்பதை அறிந்துகொள்வதற்காக பிபிசி தமிழ் அவரிடம் பேசியது.

அதிகரிக்கும் ஹேக்கிங் சம்பவங்கள்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களின் சேவைகளில் மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவருகின்றன. அதன் மூலம், எண்ணிலடங்கா புகைப்படங்கள், காணொளிகள் என பயன்பாட்டாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களது ஒப்புதல் இல்லாமலே பொதுவெளியில் வெளியாகும் ஹேக்கிங் சம்பவங்கள் அதிகரித்து வண்ணம் இருக்கின்றன.

ஹேக்கிங்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்நிலையில், தனது ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் பாதுகாப்பு குறைபாட்டை கண்டறியும் வல்லுநர்களுக்கு வெகுமதி அளிக்கும் வழக்கத்தை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், அதன் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட திட்டத்தின் மூலமாகவே லக்ஷ்மனனுக்கும் இந்த வெகுமதியை அளித்துள்ளது.

"நான் என்ன கண்டறிந்தேன்?"

20 லட்சம் ரூபாய் வெகுமதியை பெறுவதற்கு காரணமான கண்டுபிடிப்பு குறித்து லக்ஷ்மனிடம் கேட்டபோது, "சுருக்க சொல்ல வேண்டுமென்றால், மற்ற சமூக ஊடகங்களை போன்று இன்ஸ்டாகிராமிலும் மறந்து போன கடவுச் சொல்லை மாற்றியமைப்பதற்கான வழி உள்ளது. அதாவது, உங்களது பயனர் பெயரை பதிவிட்டு, அதோடு பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு சரிபார்ப்பு எண்ணை பெற்று, அதை உள்ளீடு செய்வதன் மூலம் கணக்கை மீட்டெடுக்க முடியும். இந்த வழியிலுள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி எந்த இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கையும் ஹேக் செய்யும் முடியும் என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியதன் மூலமே எனக்கு இந்த வெகுமதி கிடைத்துள்ளது" என்று அவர் கூறுகிறார்.

இலங்கை இலங்கை

ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் தனது கணக்கில் உள்நுழைவதற்கான கடவுச்சொல்லை மறந்துவிட்டு, தவறான கடவுச்சொல்லை ஒரு குறிப்பிட்ட முறைகளுக்கு மேலாக பதிவு செய்தால், அக்கணக்கு முடக்கப்படும். அதே போன்று, கடவுச்சொல்லை மாற்றுவதற்கு, பதிவு செய்த அலைபேசிக்கு வரும் எண்ணை பதிவு செய்யும் இந்த முறையில் ஹேக் செய்வதை தடுக்கும் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்படுத்தவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் உங்களது இன்ஸ்டாகிராம் செயலியின் கடவுச்சொல்லை மறந்துவிட்டு, புதிய கடவுச்சொல்லுக்காக வேண்டுகோள் விடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

அதன் பிறகு, உங்களது அலைபேசிக்கு ஆறு எண்கள் கொண்ட குறுஞ்செய்தி பாதுகாப்பு சரிபார்ப்புக்காக அனுப்பப்படும். அதை உள்ளீடு செய்வதன் மூலம் நீங்கள் புதிய கடவுச்சொல்லை ஏற்படுத்தி உங்களது கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும். இவ்வாறாக அனைத்து இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கும் அனுப்பப்படும் பாதுகாப்பு சரிபார்ப்பு எண்கள், அந்நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட பத்து லட்சம் எண்ணிக்கை கொண்ட தொகுப்பிலிருந்து எடுத்தாளப்படுகிறது.

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?படத்தின் காப்புரிமைFACEBOOK

இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், ஒரு இன்ஸ்டாகிராம் பயனரின் கணக்கோடு தொடர்புடைய அலைபேசி எண்ணுக்கு அந்த பத்து லட்சம் தொகுப்பிலிருந்து எந்த எண்கள் சரிபார்ப்புக்காக அனுப்பப்படுகிறது என்பதை கண்டறிவதன் மூலம் அந்த கணக்கை ஹேக் செய்ய முடியும். இந்த பாதுகாப்பு குறைபாட்டை நிரூபிப்பதற்காக, நான் 1,000 மைக்ரோ கணினிகளை பயன்படுத்தி ஒரே சமயத்தில் இரண்டு லட்சம் எண்களை உள்ளீடு செய்தேன்" என்று லக்ஷ்மன் விளக்குகிறார்.

ஒரே சமயத்தில் 1,000 கணினிகள் எப்படி சாத்தியம்?

ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு இரண்டு லட்சம் புதிய கடவுச்சொல் கோரிக்கைகளை அனுப்பவது சாத்தியமா? இதுபோன்ற இயல்புக்கு மாறான செயல்பாட்டின்போது, அக்கணக்கு உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு முடக்கப்படாதா? என்று அவரிடம் கேட்டபோது, "நீங்கள் ஒரேயொரு கணினியில்/ ஐபி முகவரியில் இருந்து நூற்றுக்கும் குறைவான தவறான கடவுச்சொல்லை உள்ளீடு செய்தாலே அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஆனால், இதுவே வேறுபட்ட கணினி/ ஐபி முகவரியிலிருந்து ஒரே இன்ஸ்டாகிராம் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற முயற்சித்தால் அதை தடுக்கும் தற்காப்பு அமைப்பு இன்ஸ்டாகிராமிடம் இல்லை என்பதையே இதன் மூலம் நான் நிரூபித்து காண்பித்தேன்.

இலங்கை இலங்கை

ஒரே நேரத்தில் ஆயிரம் உண்மையான கணினிகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, அமேசான் நிறுவனத்தின் மேகக்கணினியக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதன் மூலம் சில நிமிடங்களுக்கு 1,000 மைக்ரோ கணினிகளை வாடகைக்கு எடுத்து இதை நிகழ்த்தினேன். இதற்காக நான் சுமார் 3,500 ரூபாய் மட்டுமே செலவிட்டிருப்பேன்" என்று தனது கண்டுபிடிப்பை விளக்குகிறார் லக்ஷ்மன்.

தனது பணிசார்ந்த வாழ்க்கையில் ஏற்றத்தை அடைவதற்காக, இதுபோன்ற மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாட்டை கண்டுபிடிக்கும் பணியில் சில ஆண்டுகளாக இடைவேளைக்கு பிறகு, கடந்த மார்ச் மாதம் களத்தில் இறங்கியதாக கூறுகிறார் இவர். "இரண்டு மாதகால கடுமையான சோதனைகளுக்கு பிறகு இன்ஸ்டாகிராமிலுள்ள இந்த குறைபாட்டை கடந்த மே மாதம் கண்டறிந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அனுப்பினேன். நான் அனுப்பிய தகவல்கள் போதுமானதாக இல்லாததால், ஃபேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையின்படி, எனது சோதனை தொடர்பான செய்முறை காணொளியையும், மேலதிக விளக்கத்தையும் ஜூன் மாதம் அனுப்பிய நிலையில், கடந்த 10ஆம் தேதி எனக்கு இந்த வெகுமதி அளிக்கப்படுவதாக ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது."

அடுத்தது என்ன?

தமிழக இளைஞருக்கு 20 லட்சம் வெகுமதி கொடுத்த ஃபேஸ்புக் - காரணம் என்ன தெரியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காரைக்குடியை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மன் முத்தையா, அங்கு தனது பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரில் 2014ஆம் ஆண்டு கணினி பொறியலில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

அதன் பிறகு 2015ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனத்தில் இணையதள வடிவமைப்பாளராக பணியாற்றிய இவர், அதற்கடுத்த ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து 'நெட்மை சாஃப்ட்' எனும் மின்னணு பாதுகாப்பு மற்றும் இணையதள வடிவமைப்பு நிறுவனத்தை சென்னையில் தொடங்கி நடத்தி வருகிறார்.

முன்னதாக, 2013ஆம் ஆண்டு டிசம்பரில், ஒரு ஃபேஸ்புக் பயனரால் பிளாக் செய்யப்பட்ட ஒருவர், தொடர்ந்து தன்னை பிளாக் செய்தவருடன் தொடர்பு கொள்ளும் வகையிலான பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்ததற்காக 4,500 டாலர்கள் வெகுமதியும், 2015ஆம் ஆண்டு பிப்ரவரியில், ஒரு ஃபேஸ்புக் பயனர் மற்றொருவரின் கணக்கிலுள்ள புகைப்படங்களை அழிக்கக் கூடிய குறைபாட்டை கண்டறிந்ததற்காக 12,000 டாலர்களும், அதே ஆண்டு மார்ச் மாதம் ஒருவருக்கு தெரியாமலேயே அவரது ஃபேஸ்புக் செயலியில் பதிவேறியுள்ள புகைப்படங்களை, அதே அலைபேசியில் பதியப்பட்டுள்ள மற்ற செயலிகளின் தயாரிப்பாளர்கள் பார்க்கக் கூடிய குறைபாட்டை கண்டறிததற்காக 10,000 டாலர்களும் என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா.

"தொழிற் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவது மட்டுமின்றி, கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலுள்ள குறைபாட்டை கண்டறிந்து வெளிப்படுத்துவது மக்களுக்கு பலனளிக்கும் என்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு, எனது பணியை உத்வேகத்துடன் தொடருவதற்கு உதவுகிறது" என்று பெருமையுடன் கூறுகிறார் லக்ஷ்மன் முத்தையா.

https://www.bbc.com/tamil/science-49064934

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள்.

"என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா"

இவ்வாறான நோக்கத்துடன் ஒரு நிறுவனத்தையே நாம் ஆரம்பிக்கலாம். அதாவது, பெரிய நிறுவனங்களில் உள்ள 'ஓட்டைகளை' கண்டு அவர்களுடன் ஒரு சட்ட ஆலோசகர்கள் ஊடாக வெகுமதியை பெறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ampanai said:

பாராட்டுக்கள்.

"என இதுவரை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்புகளிலுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்ததன் மூலம் மட்டும் பல்லாயிரக்கணக்கான டாலர்களை அந்நிறுவனத்திடமிருந்து வெகுமதியாக பெற்றுள்ளார் லக்ஷ்மன் முத்தையா"

இவ்வாறான நோக்கத்துடன் ஒரு நிறுவனத்தையே நாம் ஆரம்பிக்கலாம். அதாவது, பெரிய நிறுவனங்களில் உள்ள 'ஓட்டைகளை' கண்டு அவர்களுடன் ஒரு சட்ட ஆலோசகர்கள் ஊடாக வெகுமதியை பெறலாம்.

தமிழ் இளையோர் மற்றும் ஆர்வமுடையோர் குழுக்களாக இயங்குதல் பலனளிக்கும்.

நாங்கள் சிகரங்களை (கல்வி, பொருளாதாரம், அறிவியல், ஆரோக்கியம்) அடையும்போது மண்ணும் மக்களும் ஓரளவு பாதுகாக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

இன்றைய உலகின் தங்கம் : பாவனையாளர்களின் தரவுகள்  

தமது தரவுகளை பாதுகாப்பது ஒவ்வொரு நிறுவனத்தின் கடமை

அவ்வாறாக, தரவுகளை பாதுகாப்பதில் உள்ள ஓட்டைகளை அறிந்து அதை தெரியப்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.  

செலுத்திய பணம் : 700 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் 
பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் : 147 மில்லியன்கள் 
பாதிக்கபட்ட அமெரிக்கர்கள் பெறக்கூடிய தொகை : 20000   அமெரிக்க டாலர்கள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கூட பணம் சம்பாதிக்கலாம். 

 

 

Link to comment
Share on other sites

புதிய தொழில்நுட்பங்கள் புதிய எல்லைகளை தொட திறவுகோல்களாக உள்ளன.

எம்மவரில் பலரும் புலம்பெயர்ந்த நாடுகளில் முன்னேற இவ்வாறான புதிய தொழில்நுட்பங்களும் ஒரு காரணம்.

அவ்வாறான ஒன்று எயர் பி அன்  பி.

உல்லாச விடுதிகளின் வியாபார திட்டமிட்டலை இந்த வடிவமைப்பு ஆட்டம் காண வைத்துள்ளது. அதில் இணைந்து வீடுகளை / அடுக்குமாடி கட்டிட அறைகளை வாடகைக்கு கொடுத்த ஒருவர், அதில் பணம் உழைப்பவர்களுக்கு உதவும் ஒரு தளத்தை ஆரம்பித்து பிரபல்யம் அடைந்ததுடன் அதிக பணமும் சேர்க்கும்  திட்டமிடலை உருவாக்கி உள்ளார். 

https://yourfrontdesk.co/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.