ஏராளன்

தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்

Recommended Posts

தர்ஜினி சிவலிங்கம்: உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் (நெட்பால்) தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் பங்கு பெற்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

வலைப்பந்தாட்டத் தொடர் ஒன்றில் 348 கோல்களை போட்டு, தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

375 முயற்சிகளில், 348 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டுள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் 304 கோல்களை வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.

யார் இந்த தர்ஜினி சிவலிங்கம்?

யாழ்ப்பாணம் - ஈவினை - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சிவலிங்கம் தம்பதியினருக்கு தர்ஜினி 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி பிறந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - வயாவிலான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தர்ஜினி சிவலிங்கம், அப்போது நாட்டில் நிலவி அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, குறித்த பாடசாலை 13 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தர்ஜினி சிவலிங்கம்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

இதனால் தர்ஜினி சிவலிங்கத்தின் கல்வி பொதுதராதர சாதாரண தரத்திற்கு பின்னர் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது.

எனினும், சில காலங்களின் பின்னர் அவர் தனது உயர்தர கல்வியை தொடர்ந்து, தேர்வில் சித்தி பெற்றதன் ஊடாக கிழக்கு பல்கலைக்கழக பிரவேசத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தர்ஜினி சிவலிங்கம் பொருளாதார பட்டப்படிப்பை நிறைவு செய்தமை விசேட அம்சமாகும்.

வலைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தமது விளையாட்டை பாடசாலை நாட்களிலேயே ஆரம்பிப்பது அனைவரும் அறிந்த நிலையில், தர்ஜினி சிவலிங்கம் தனது 23ஆவது வயதிலேயே வலைப்பந்தாட்ட விளையாட்டுக்கான பிரவேசத்தை பெற்றுள்ளார்.

தர்ஜினி சிவலிங்கத்தின் உயரம் 6 அடி 10 அங்குலம். அது வலைப்பந்தாட்ட போட்டிகளில் அவரை மேலோங்கி செல்ல உதவியது.

தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்ட அணிக்குள் பிரவேசித்த விதம்

2004ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தர்ஜினி சிவலிங்கம் விளையாடியுள்ளார்.

அன்றைய தினம் தர்ஜினியின் திறமைகளை நேரில் கண்ட அனைவரும், அவரின் திறமையை கண்டு வியப்படைந்துள்ளனர்.

அன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச, தர்ஜினி சிவலிங்கத்தை தேசிய அணியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய அணிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி சரியாக பிரகாசிக்காத போதிலும், தர்ஜினி சிவலிங்கம் மாத்திரம் தொடரில் 290 கோல்களை போட்டு உலக வலைப்பந்தாட்ட ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக தர்ஜினி சிவலிங்கம், 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னரான காலப் பகுதியில் தான் பணியாற்றிய வங்கி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி சிவலிங்கம், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியா லீக் போட்டிகளில் தொழில்சார் வலைப்பந்தாட்ட வீராங்கனையாக இணைந்துக் கொண்டுள்ளார்.

இலங்கை தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட ஆரம்பித்தார்.

தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முதலாவது இலங்கையர் என்ற பெருமை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இந்த போட்டிகளின் ஊடாக கிடைத்தது.

தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், ஆஸ்திரேலியாவில் மிக சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் பெண்படத்தின் காப்புரிமைTHARJINI SIVALINGAM/FACEBOOK

இதன்பின்னர் தர்ஜினி சிவலிங்கம் இலங்கை தேசிய அணிக்குள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை பெற தர்ஜினி சிவலிங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49071787

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, ஏராளன் said:

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார்.

பாராட்டுக்கள். மேலும் சாதனைகள் படைப்பீராக.

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுகள். இனம்காணப்படாமல் இருந்த இவரின் திறைமையை மட்டக்களப்பை சேர்ந்த ஒரு முன்னாள் பெண் வீராங்கனையே முதன்முதலில் வெளிகொணர்ந்தவர். 

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, goshan_che said:

பாராட்டுகள். இனம்காணப்படாமல் இருந்த இவரின் திறைமையை மட்டக்களப்பை சேர்ந்த ஒரு முன்னாள் பெண் வீராங்கனையே முதன்முதலில் வெளிகொணர்ந்தவர். 

#ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு

அறிவாளி
பிரோ /

இந்த‌ விளையாட்டில் , இல‌ங்கை  அணி பெண்க‌ள் ஒரு விளையாட்டில் ம‌ட்டும் தான் வென்ற‌வை , அவுஸ்ரேலியா போன்ர‌ நாடுக‌ளுட‌ன் விளையாடி ப‌டு தோல்வி அடைஞ்ச‌வை /

இந்த‌ விளையாட்டில் இவ‌ர்க‌ள் வ‌ள‌ர‌ நீண்ட‌ வ‌ருட‌ம் எடுக்கும் /

இங்லாந்
நியுசிலாந்
அவுஸ்ரேலியா
தென் ஆபிரிக்கா
ஜ‌மேக்கா / இந்த‌ நாட்டு பெண்க‌ள் இந்த‌ விளையாட்டில் மிக‌வும் திற‌மையான‌வை 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் தர்ஜினி.

Share this post


Link to post
Share on other sites

பாராட்டுக்கள் தர்ஜினி சிவலிங்கம்.......!  👍

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் தர்யினி சிவலிங்கம்!! 🙌

பையா, ஒரு விளையாட்டில் வென்றாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் அதற்கும் மேல் உள்ள சாதனை....! அதனைப் போற்றி வாழ்த்துவதில் தவறில்லை.!!

16 hours ago, ஏராளன் said:

ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் 304 கோல்களை வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, Paanch said:

வாழ்த்துக்கள் தர்யினி சிவலிங்கம்!! 🙌

பையா, ஒரு விளையாட்டில் வென்றாலும் வெற்றி வெற்றிதான். ஆனாலும் அதற்கும் மேல் உள்ள சாதனை....! அதனைப் போற்றி வாழ்த்துவதில் தவறில்லை.!!

 

அவான்ட‌ திற‌மை பாராட்ட‌ த‌க்க‌து ப‌ஞ் அண்ணா , ஆனா இந்த‌ உல‌க‌ கோப்பையில் இல‌ங்கை பெண்க‌ள் நிறைய‌ விளையாட்டில் ப‌டு தோல்வி அடைஞ்ச‌வை , அதை தான் மேல் எழுதி நான் 😁😉 /

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்..💐

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
4 minutes ago, nilmini said:

image.png

இமேஜ் டமேஜ்சாய் இருக்கு பார்த்து மனேஜ் பண்ணுங்கள் மின்மினி....!  😁

Share this post


Link to post
Share on other sites
On 7/23/2019 at 12:07 PM, suvy said:

இமேஜ் டமேஜ்சாய் இருக்கு பார்த்து மனேஜ் பண்ணுங்கள் மின்மினி....!  😁

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

Share this post


Link to post
Share on other sites
40 minutes ago, nilmini said:

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

https://postimages.org/

வாழ்த்துக்கள் தர்ஜினி சிவலிங்கம்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
13 hours ago, nilmini said:

படம் பதிவேற்றுக்கிர  லிங்கை ஒருக்கா பதிவிடுங்கோ தெரிந்த  ஆட்கள் 

unnamed.png

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

6.10 அடி உயரம்... பந்தைத் தொட்டால் பாயின்ட்டுதான்.. நெட்பாலில் சாதித்த ஈழத் தமிழ்ப்பெண்!

Tharshini Sivalingam

கிரிக்கெட் உலகக்கோப்பை நடந்துகொண்டிருந்த அதே நேரம், பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தொடரில் அதிக கோல்கள் அடித்து தமிழ் ஈழப்பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை படைத்தார். இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் விளையாட்டில் சாதிக்கத் தொடங்கிய தர்ஜினியின் பயணம் சாதனைகளால் நிரம்பியது.

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஜினி, 6.10 அடி உயரம். அசாதாரண தோற்றத்தைக் கொண்ட தர்ஜினிக்கு சிறுவயது முதலே கிண்டலும், கேலியும்தான் கேட்காத பரிசாக வந்து சேர்ந்தன. பள்ளிக்கூடங்களிலும், கல்லூரியிலும் வசைச்சொற்களை மட்டுமே கேட்டு வந்த அவர், வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலையில்தான் விளையாட்டை தேர்ந்தெடுத்தார். நெட்பால் விளையாடத் தொடங்கிய தர்ஜினிக்கு, அவரது உயரம் கைகொடுத்தது.

இலங்கையில் நிலவிய அமைதியற்ற சூழலால், இடம் பெயர்ந்துகொண்டே இருந்தது அவரது குடும்பம். கல்லூரிப் படிப்பை சரியாகத் தொடர முடியாத நிலையிலும், தர்ஜினி கண்ட கனவு, தமிழ் பேராசியராக பணிபுரிய வேண்டும் என்பதே. போராட்டங்களுக்கு மத்தியில் படிப்பைத் தொடர்ந்த தர்ஜினிக்கு, இலங்கை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் நெட்பால் பற்றிய அறிமுகம் கிடைத்தது. உயரமான தோற்றம் விளையாட்டில் சாதிக்க உதவும் எனப் பயிற்சியாளர் திலகா ஜினதாசா ஊக்கமளிக்க, நெட்பால் விளையாடத் தொடங்கினார் தர்ஜினி.

Tharshini Sivalingam

முதலில் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி, பின் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார். நெட்பால் பற்றிய அனுபமில்லாத அவருக்கு, இந்த உயரம்தான் மிகப்பெரிய ப்ளஸ். இந்த உயர்த்தைக் காரணம்காட்டி வசைச்சொற்களை மட்டுமே பரிசாகப் பெற்று வந்த தர்ஜினி, ``எனக்கு ஏன் இப்படி?" என்று கேட்பதை விட்டுவிட்டு ``எனக்கு மட்டும்தான் இப்படி" என மாற்றி யோசித்தார். முறையான பயிற்சி மேற்கொண்ட அவர், நெட்பால் விளையாட்டில் முழு ஈடுபாடு செலுத்தினார்.

 

2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பையில் இலங்கை அணி சோபிக்கவில்லை. ஆனால், அந்தத் தொடரில் மொத்தம் 290 கோல்கள் அடித்த தர்ஜினி, சர்வதேச நெட்பால் நட்சத்திரமாக கவனம் ஈர்த்தார். `தர்ஜினி தொட்டால்.. கோல் நிச்சயம்' என சொல்லும் அளவுக்கு இலங்கை அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்தார்.

ஆனால், இலங்கை நெட்பால் அமைப்பில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக 2015 முதல் 2017 வரை தேசிய அணியில் விளையாட தர்ஜினி தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பிய அவர், தனது வழக்கமான ஆட்டத்தைத் தொடர்ந்தார். 2018 நெட்பால் ஆசிய கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இந்த ஆண்டு, இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற பெண்களுக்கான நெட்பால் உலகக்கோப்பையில் அசத்திய தர்ஜினி, இத்ந்த தொடரில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையானார்.

 

375 வாய்ப்புகளில் 348 முறை கோலாக்கினார் தர்ஜினி. அதுமட்டுமின்றி, சிங்கப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் 77 கோல்கள் அடித்து, ஒரே போட்டியில் அதிக கோல் அடித்த வீராங்கனையாகவும் உலக சாதனை படைத்தார்.

இந்த உலகக்கோப்பையில் இலங்கை அணி 15-வது இடத்தையே பிடித்தது. எனினும், ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியை கோல் அடிக்கவிடாமல் திக்குமுக்காட வைத்துவிட்டார் தர்ஜினி!

நாற்பது வயதாகும் இந்த நெட்பால் நட்சத்திரம், உலகக்கோப்பை தொடரோடு தனது விளையாட்டுப் பயணத்துக்கு ஓய்வு அறிவித்துவிட்டார். இளம் வீராங்கனைகளுக்கு ரோல் மாடலாக இருக்கும் தர்ஜினி நெட்பால் விளையாட்டிலிருந்து விடைபெற்றிருக்கலாம், ஆனால், இலங்கை நெட்பால் மகளிர் அணிக்கு இதுவே தொடக்கம்!

https://www.vikatan.com/sports/sports-news/the-40-year-old-tallest-netballer-tharjini-sivalingam-an-inspiration

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.