Jump to content

பிணையில் வருகிறார் நளினி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

nalini--720x450.jpg

பிணையில் வருகிறார் நளினி?

முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு பிணையில் வெளியேவரும் நளினி உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கவுள்ளதாகவும், அவருக்கு தாய் மற்றும் உறவினர் ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் ,இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் பிணையில் வரும் நளினி ஊடங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும், கட்சித் தலைவர்களை சந்திக்க கூடாது என்றும் சிறைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில் நளினியின் பிணைகாலத்தை நீடிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னுடைய மகளின் திருமணத்திற்காக 6 மாதகாலம் பிணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைகளில் நளினிக்கு ஒருமாத காலம் பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

நளினியை பிணையில் அனுப்பும் விதிகளை சிறைத்துறை ஆய்வு செய்ததன் அடிப்படையில், இதற்கான நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நளினி இன்று பிணையில் வெளியில் வர வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பிணையில்-வருகிறார்-நளினி/

Link to comment
Share on other sites

மகளுக்கான மணமகனை தெரிவு செய்யப் போகிறார் நளினி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு, அவருடைய மகள் ஹரித்ராவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ஒரு மாதம் சிறையில் இருந்து வெளியே வருவதற்கான 'பரோல்' வழங்கப்பட்டிருக்கிறது. நளினி தரப்பில் 6 மாதம் 'பரோல்' கேட்கப்பட்டது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாதம் மட்டுமே வழங்கி உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, பரோல் திகதி மற்றும் நளினி தங்கும் இடம், இரண்டு நபர்களின் பிணை உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சிறைத்துறை கேட்டுள்ளதையடுத்து, நளினியின் தாய் பத்மா மற்றும் குடும்ப நண்பர் சத்தியவாணி ஆகியோரின் உறுதிமொழிப் பத்திரத்தை சிறை நிர்வாகத்திடம் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி ஒப்படைத்தார். இதுதவிர நாலைந்து மணமகன்களின் பொருத்தம் நன்றாக இருக்கிறது. நளினி வெளியே வந்தவுடன் மகளுக்கான மணமகனைத் தெரிவு செய்வார் என்று புகழேந்தி கூறியிருந்தார்.

இந்த வாரம் நளினி எப்போது வேண்டுமானாலும் பரோலில் வெளியே வருவார் என்ற நிலையில், அவருடைய அம்மா பத்மா விகடனிடம் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

http://www.thinakaran.lk/2019/07/23/கட்டுரைகள்/37525/மகளுக்கான-மணமகனை-தெரிவு-செய்யப்-போகிறார்-நளினி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

naline-1.jpg

நிபந்தனைகளுடன் வெளியில் வருகிறார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி பிணையில் வெளிவருகிறார்.

அவர் இன்று (வியாழக்கிழமை) வெளிவருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அவர் காலை 8.30 மணியளவில் வெளியில் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவ்வாறு வெளியில் வரும் நளினி, அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கக் கூடாது என்றும் ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நளினியின் பிணையை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்குமாறு அரசிடம் கோரவுள்ளதாக நளினி தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

மகளின் திருமணத்திற்காக ஒருமாதம் பிணைக்கோரி நளினி வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 23ஆம் திகதி அவர் பிணையில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவர் இன்று வெளியில் வரவுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நிபந்தனைகளுடன்-வெளியில்/

Link to comment
Share on other sites

தனது மகள் திருமணத்தை நடத்த பரோலில் வெளிவந்த நளினிக்கு தங்குவதற்கு யாரும் வீடு தரவில்லை.

தமிழ்தேசியம் பேசும் அமைப்புகளில் சுப.வீரபாண்டியன் தலைமையிலான திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர் மட்டுமே தனது வீட்டில் தங்கி திருமண வேலைகளை செய்ய நளினிக்கு உதவியிருக்கிறார்.

WhatsApp-Image-2019-07-25-at-5.05.58-PM.jpeg

https://www.thaarakam.com/news/81183?fbclid=IwAR1TzC6qsg9I0QDZOTi9CleJhxVtmpynL_wHAy88JOn32OLdmaVbFiPpnp4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.