Sign in to follow this  
தமிழ் சிறி

தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ!

Recommended Posts

IMG_7585-720x450.jpg

தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ!

நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கமென்றும் அதைவிடுத்து அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது தனது நோக்கமல்லவென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால்தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால்தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்றுசேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும்.

நான் நாடு முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க்க முயல்கிறேன். அது வடக்காக இருந்தால் என்ன கிழக்காக இருந்தால் என்ன மலையகமாக இருந்தால் என்ன இலங்கைத் தீவுக்குள் எங்கிருந்தாலும் தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டும்.

ஆனால் மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றார் என குற்றச்சாட்டுக்கள் முன்னைவக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகின்றேன். எனக்கு தலைமை தேவையில்லை.

நான் தலைவர்களை மேடையில் அமர்த்திவிட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்” என மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழ்-தலைமைகளுக்கு-தலைவன/

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ!

அது தெரிந்த விடயம் தானே!

அமைச்சு நாற்காலி தான் மனோ கணேஷனின் பிரதான நோக்கம் என்கிறது பலருக்கும் தெரிந்த விடயம் தானே!

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this