Sign in to follow this  
ampanai

இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும்

Recommended Posts

இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று  அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள்  சுடுநீரை  ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதை  முதலில் சிங்கள சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள், ஏன் தமது மதவெறிகளைத் தூக்கிவைத்துவிட்டு நியாயபூர்வமாக இந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

https://www.virakesari.lk/article/61049

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, ampanai said:

இலங்கையில் இந்து மதத்தையும் தழிழர்களையும் அழிக்கும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. ஆகவே இந்து மதத்தையும் தமிழர்களையும் பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும். இனிமேலும்இந்தியா மௌனமாக இருக்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் சபையில்  வலியுறுத்தினார்.

வட ஹிந்தியன் இந்து, இந்துவா என்ற பெயர்களில் காலங்காலமாக செய்துவருகிற பிரதான வேலை ஹிந்தி திணிப்பும், சமஸ்கிருத திணிப்பும் மட்டும் தான். வட ஹிந்தியனுக்கு, வட ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களுக்கு இந்துக்களைப் பற்றி, குறிப்பாக சைவர்களைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லை. இந்த அடிப்படை அறிவு சிறிதரனுக்கு இல்லையென்று விளங்குகிறது.

கூட்டமைப்பு என்ற போர்வையில் ஹிந்திய அரச பயங்கரவாதக் குழுக்களின் கைக்கூலிகளாக இருந்த சித்தார்த்தன், சுரேஷ், சம்மந்தன், மாவை போன்றவர்களின் கூட்டுவைத்த சிறீதரனுக்கும் ஏதாவது அந்த தொற்று நோய் ஏற்பட்டுவிட்டதோ?

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ampanai said:

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசம் இன்று  அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்து மக்களுக்கு கிருத்தியங்களைச் செய்ய முடியாதுள்ளது. கடந்த 16ஆம் திகதி ஆதீனத்துக்கான உரிமையாளர் ரமணியம்மாள் மற்றும் அகத்தியர் ஆகியோர் அங்கு சென்றபோது அவர்கள் மீது காடையளர்கள்  சுடுநீரை  ஊற்றியுள்ளனர். ஜுலை கலவரம் இடம்பெற்று 36 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இன்னமும் அரங்கேற்றப்படுவது மிகவும் வேதனைக்குரியதாகும். நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு இன்னும் எந்தளவு தூரம் பயணிக்கவேண்டியுள்ளது என்பதை  முதலில் சிங்கள சமூகத்தினர் சிந்தித்துப் பார்க்க  வேண்டும்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரர் மற்றும் அத்துரலிய ரத்ன தேரர் போன்றவர்கள், ஏன் தமது மதவெறிகளைத் தூக்கிவைத்துவிட்டு நியாயபூர்வமாக இந்துக்களுக்காக குரல்கொடுக்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதுசரி உங்கள் மறவன் புலவு சச்சியும் ,சிவ சேனையும் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த கிண்ணியாப்பிரச்சினைக்கு சிவ சேனை இறங்கி அடிக்கும் அடியில சிங்கள காடையர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள் என்று பார்த்தால் , சிவசேனையும் சச்சியும் பம்முறார்கள் ..
கிறிஸ்த்தவர்களோடு மல்லுக்கட்டத்தான் துணிவு வரும்போல ...

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this