Jump to content

இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

EAST AND FUTURE SRILANKAN TAMIL POLITICS. V.I.S.JAYAPALAN 
இலங்கை தமிழர் அரசியலும் கிழக்கும். - வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
வரலாற்றில் போராடி மக்கள் உரிமைகளை மேம்படுத்தியபடி வாழ்வதுதான் போராட்ட அரசியலின் இராசதந்திர அடிப்படையாகும். அரசியல் பிரச்சினைகளில் ஏமாற்ற வாய்ப்பில்லாத வகையில் உள்ளிருந்தோ வெளியில் இருந்து தலையிட்டோ யார் தீர்க்க முன்வந்தாலும் ஏற்றுக்கொள்ளலாம்.
.
கிழக்கில் படுவான்கரை சென்றபோது சோமாலியாவுக்கு வந்துவிட்டேனோ என அதிற்ச்சி அடைந்தேன். அதேசமயம் இலங்கையில் மாவட்ட ரீதியாக கொழும்பில் அல்ல யாழ்பாணத்தில்தான் அதிகமான அதிகமான பணம் வங்கியில் உள்ளதாக தெரிகிறது. இப்போதுதான் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளும் இந்திய சர்வதேச உதவிகளும் கிழக்குகுநோக்கி வர ஆரம்பித்துள்ளது.

எதிர்கால தமிழர்கள் அரசியல் வடக்கின் செல்வம் கிழக்கின் வறுமை என்கிற இருமையை எதிர்கொள்வது முக்கிய சவாலாக இருக்கப் போகிறது. உண்மையில் எதிர்கால தமிழர் அரசியல் கிழக்கில் வறுமை ஒழிப்பும் இலங்கையில் மலைக தமிழர் முஸ்லிம்கள் மற்றும் முற்போக்கான சிங்களவர்களுடனான உறவும் - ஏனைய இனங்களின் அரசியல் - இந்தியா உட்பட இந்து சமுத்திர சர்வதேச அணி என்பவற்றின் மாறிவரும் நிலைபாடுகளும்தான் -சர்வதேசத்தின் இந்துசமுத்திர அரசியல்- தீர்மானிக்கப்போகிறது. போகிறது என்பது தெளிவாகிவருகிறது. ஆயுதம் கையில் இருந்த போது - 1987 மற்றும் ஜெனீவா 2006 காலக்கட்டங்களில் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் இந்து சமுத்திர அரசியலை நாம் இராஜதந்திர ரீதியாக கையாளவில்லையென நமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கால விமர்சகர்களும் இராஜதந்தரிகளும் சொல்லக்கூடும். இத்தகைய பல்வேறு அரசியல் இராஜதந்திர பிரச்சினைகளில் வடக்கை மையபடுத்திய நமது இராசதந்திர அணுகுமுறை தோற்றுப்போனது. இலங்கை தமிழர் போராட்டங்களும் அரசியலும் கிழக்கின் நிலைபாடு இன்றி வெற்றிபெறுகிற வாய்ப்பில்லை என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்தே வந்திருக்கிறது.

.

தமிழ் முஸ்லிம் உறவின் அமைப்பு தமிழரும் கிழக்கு மாகாண முஸ்லிம் தலைமையும் என்கிற வடிவத்தில்தான் இருந்தது. இப்ப மலையக +தெற்க்கு தமிழர்களும் இலங்கை தமிழர்களும் இலங்கை மற்றும் இந்துசமுத்திர அரசியலின் மேலோங்கிவரும் தாக்கத்தால் ஒருங்கிணைந்து வருகின்றார்கள். இங்குதான் மனோகணேசன் முக்கிய பாத்திரமாக மேம்படுகிறார். அதனால் எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவு தமிழர்களது வடகிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமையுடனான உறவு தெற்க்கு முஸ்லிம் தலைமையுடனான உறவு என பன்முகப்படும் என்பதை உணர்கிறேன்.

கிழக்கில் முஸ்லிம் தமிழ் நல்லுறவைப் பொறுத்து கல்முனை வடக்கு கோரிக்கையை முஸ்லிம்களும் தென்கிழக்கு மாகாணக் கோரிக்கையை தமிழரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என் நிலைபாடு, முஸ்லிம்கள் நிலதொடர்பற்ற தனி மாகாணம் கோரினாலும் தமிழர் அதனை திறந்த மனதுடன் பரிசீலித்து ஆதரிக்க வேண்டும். வடகிழக்கின் அரசியலை நாளை கொழுபு தீர்மானித்தாலென்ன சர்வதேச சக்திகள் தீர்மானித்தால் என்ன தமிழர் மலையக தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் நிலவும் நல்லுறவுதான் சுபீட்சத்தின் அழவுகோலாக அமையும். 
. 
வடகிழக்கு தமிழ் முஸ்லிம் உறவு கல்முனை வடக்கு பிரச்சினையை தாண்ட முடியாமல் தள்ளாடுகிறது. கல்முனை வடக்கு பிரச்சினையின் தீர்வு வடிவமே எதிர்காலத்தில் மூதூர் உட்பட சகல தமிழ் முஸ்லிம் பிரதேச பிரச்சினைகளின் தீர்வுக்கான முன் உதாரணமாகவும் வாய்பாடாகவும் அமையப்போகிறது. அதன் அர்த்தம் தமிழரைப் பொறுத்து மூதூரிலோ வேறு இடங்களிலோ மறுக்கும் எதனையும் கல்முனையில் கோர முடியாது என்பதாகும், முஸ்லிம் தலமைகளைப் பொறுத்து கல்முனையில் விட்டுக்கொடுக்க மறுக்கும் எதனையும் மட்டக்களப்பு மாவட்டத்திலோ வேறு இடங்களிலோ கோரமுடியாது என்பதாகும்.

கல்முனையை தொடர்ந்து வடகிழக்கில் குறிப்பாக முன்னர் முஸ்லிம் தமிழ் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மூதூரில் இரண்டு முஸ்லிம் பிரிவுகள்ம் (மூதூர், தோப்பூர்) ஒரு தமிழ் பிரிவும் (சம்பூர்) ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழரும் முஸ்லிம்களும் இணங்கி இந்த அரசின் காலத்திலேயே மூதூர் தோப்பூர் சம்பூர் பிரதேச செயலகங்களையும் பிரதேச சபைகளையும் பெற்றுவிடுவது நன்று. 
.
வடகிழக்கு தமிழ் அரசியலில் வடக்கில் முதலிலாவதாக உரிமைப் போராட்டம் இரண்டாவதாக அபிவிருத்தி என்றும் கிழக்கில் முதலாவதாக அபிவிருத்தி இரண்டாவதாக உரிமைப் போராட்டம் என்கிற சமூக பொருளாதார அரசியல் சிக்கல் உருவாகியுள்ளது. இந்த அரசியல் சிக்கலுக்கு அரசியல் தீர்வை கொண்டுவருவது தொடர்பாக 10 வருடங்களாக ரணில் அரசினால் தமிழர் கூட்டமைப்பு ஏமாற்றபட்டு வந்ததே காரணமாகும். ஏமாற்றப்பட்டபோதும் ரணில் அரசுக்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பு ஆதரவுக்குப் பதிலாக அபிவிருத்தியை விலையாக பெற்றிருக்க வேண்டும். இப்போதும்கூட இலங்கையின் சோமாலியாவாக சிதைந்துபோயிருக்கும் படுவான்கரை அபிவிருத்தி தொடர்பாக சர்வதேச உதவியுடன் ஒரு ஒருங்கிணைந்த சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை பெறுகிற அக்கறை கூட்டமைப்பிடம் காணமுடியவில்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. இதுவே கிழக்கில் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் பாரிய சிக்கலாகும். 
.
கிழக்கின் சில பகுதிகளின் சோமாலியா தன்மையை கண்டுகொள்ளாமைதான் இன்று கூட்டமைப்பு எதிர்கொள்ளும் சிக்கலாகும். இதனால் எதிர்கால அரசியல் முடிவுகளை அப்படியே கூட்டமைப்பிடம் கொடுத்து விடுவதில் பயனில்லை என்கிற முடிவை நோக்கி கிழக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ரணில் அரசுக்கு அளித்த ஆதரவுக்கு பிரதி உபகாரமாகவேனும் கிழக்கிற்க்கு பாரிய வறுமை ஒழிப்புக்கும் அபிவிருத்துக்கும் வழிவகுக்கும் விசேட திட்டமொன்றை கொண்டுவராமல் கிழக்கில் கூட்டமைப்பு அரசியல் தொடரும் வாய்ப்புகள் குறைந்து வருகிறது. 
.
அரசுக்கு ஆதரவு கொடுத்தவாறே சோமாலிய வறுமையில் வாடிய கிழக்கில் நிலமைகள் மாற்றமடைந்து வருகிறது. அரசியலில் வடக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு வெளியில் இருந்து உரிமைக்கு போராடுகிறதும் கிழக்கில் தமிழர் பிரதிநிதிகள் அரசுக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளித்து அமைச்சு பதவிகளை ஏற்க்கிறதும் என்கிற வடிவத்தை நோக்கியே ஈழ அரசியலில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது. ஒன்றுமில்லாமல் வெறுமனவே ரணில் அரசை ஆதரிப்பதைவிட தமிழர் கூட்டமைப்பின் உரிமைப் போராட்டத்துடன் கிழக்கின் அபிவிருத்தியை இணைப்பதால் ஒன்றும் குறைந்துபோகாது என்கிற கருத்து வலுவடைந்து வருகிறது. இதனை கூட்டமைப்பு இன்னும் கண்டுகொள்ளவில்லையென்பது வருத்தமாக உள்ளது.
.
பிரபாகரன் இல்லாத சூழலில் தமிழர் அரசியல் உரிமைக்கு உள்வாரி போராடங்களில் தங்கியிருக்கும் சூழலும் வல்லமையும் இல்லாது போய்விட்டது. அதனால் தமிழர் பிரச்சினை இது சமுத்திரம் சர்வதேசமென பரந்து வலிமை பெறுவது அவசியமாகின்றது. இந்து சமுத்திர சர்வதேச மயப்படும் தமிழர் அரசியலில் மலையகதமிழர்கள் முஸ்லிம்களுடனான அரசியல் உறவு முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் மகிந்தாவா ரணிலா என்கிற வாய்பாட்டுச் சிந்தனையின் அரசியல் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. 
.
புதிய சூழலில் வடக்கில் உரிமைப் போராட்டமும் அபிவிருத்தியும் கிழக்கில் அபிவிருத்தியும் உரிமைப் போராட்டமும், என்கிற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த குரலை எப்படி எதிர்கொள்வது என்பதில்தான் எதிர்கால தமிழரின் அரசியல் நிர்ணயமாகப் போகிறது.

Link to comment
Share on other sites

திரு மோகன் அவர்களுக்கு

யாழ் இணையம். 

முகப்பில் ஒரு பதிவை இடுவதோ தூக்குவதோ உங்கள் உரிமை. எனினும் “உங்கள் கட்டுரைக்கு முன்னமே பதிவான கட்டுரைகள் இருக்க உங்கள் கட்டுரை முகப்பில் இருந்து தூக்கபட்டுவிட்டது என பிறர் சுட்டிக்காட்டுகிறார்கள் என்கிற கவலையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, poet said:

முகப்பில் ஒரு பதிவை இடுவதோ தூக்குவதோ உங்கள் உரிமை. எனினும் “உங்கள் கட்டுரைக்கு முன்னமே பதிவான கட்டுரைகள் இருக்க உங்கள் கட்டுரை முகப்பில் இருந்து தூக்கபட்டுவிட்டது என பிறர் சுட்டிக்காட்டுகிறார்கள் என்கிற கவலையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் நான் ஒட்டும் பதிவுகளும் முகப்பில் தனியான பகுதியில் காட்டப்படுவதில்லை என்பதால் வாசிப்பவர்கள் குறைவுதான். அதுக்காக மோகன் வேண்டுமென்றே முகப்பில் இருந்து தூக்கிவிட்டார் என்று சஞ்சலப்படுவதில்லை😁

ரஜினியின் வார்த்தைகளில் சொன்னால் “ சிஸ்டம் சரியில்லை”😂

Link to comment
Share on other sites

நான் சஞ்சலப் படவில்லை கிருபன். எனக்கு எழுதியவற்றை திரும்ப வாசிக்கவே நேரமில்லாத ஓய்வு ஒளிச்சல் இல்லாத வாழ்வு. என் நண்பர்கள் சுட்டிக் காட்டும்போது சிலசமயம் தெரிவிக்கிறேன். கோபிக்கவேண்டாம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.