Sign in to follow this  
தமிழ் சிறி

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர்

Recommended Posts

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் கனேடிய பிரதமர்

Trudeau.jpg

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை படுகொலையின்போது உயிரிழந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களையும் இடம்பெயர்ந்தவர்களையும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நினைவுகூர்ந்தார்.

ஈழத்தமிழர்களின் வாழ்வை புரட்டிப்போட்ட மிலேச்ச தனமான கறுப்பு ஜூலை இனப்படுகொலையின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் மக்களால் நினைவு கூரப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனேடிய பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கறுப்பு ஜூலை என்பது நாட்டில் பல தசாப்தங்களாக அமைதியின்மை மற்றும் அதிகரித்து வரும் பதட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை கலவரங்கள் மற்றும் கொடூரமான அழிவுகளின் ஒரு வாரமாகும்.

இதுவே 30 ஆண்டுகளாக நீடித்த ஒரு மோதலுக்கு வழிவகுத்தது, மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது மற்றும் இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களில் நீடித்த காயங்களை விட்டுச் சென்றது.

1983 இல் 1,800 க்கும் மேற்பட்ட தமிழர்களை வரவேற்க ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை கனடா அரசு செயல்படுத்தியது. தமிழ்-கனடியர்கள் ஒவ்வொரு நாளும் கனடாவுக்கு அளிக்கும் மகத்தான மிகப்பெரிய பங்களிப்புகளை காண்கிறோம்.

கறுப்பு ஜூலை கலவரத்தில் உயிரிழந்த குடும்பம், நண்பர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நாட்டில் அர்த்தமுள்ள நீதி, பொறுப்புக்கூறல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பாடுகளுக்கு கனடா தனது முழு ஆதரவையும் தொடர்ந்தும் வழங்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/canadian-pm-remembers-black-july/

Share this post


Link to post
Share on other sites

அஞ்சலிகள்

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • சுமந்திரனின் சுயரூபத்தை படத்தின் மூலம் தத்ரூபமாக காட்டியுள்ளனர்.
  • (ஆர்.யசி) அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட எவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அடையாளம் காணப்பட்டால் நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்வோம் என பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகன தெரிவித்தார். பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மக்களுக்கு தவறான முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.   அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகளின் போது அதிகளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் இவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடந்துகொண்டதாக பாரியளவில் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நெருக்கமான செயற்பட்டு வருகின்ற பொது சுகாதாரத்துறை சங்கத்தின் பரிசோதகர் உபுல் ரோகனவிடம் இது குறித்து வினவிய போதே அவர் இதனைக் கூறினார்.   இது குறித்து அவர் மேலும் கூறுகையில். கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் நாம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அளவுக்கு அதிகமான தியாகங்களை செய்துள்ளோம். நாம், சுகாதார அதிகாரிகள், பாதுகப்பு படையினர், பொதுமக்கள் என அனைவரும் தியாகங்களை செய்தே இப்போது வரையில் இலங்கையில் மிக மோசமான தாக்கங்கள் எதுவும் ஏற்படாத வகையில் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இதில் சகல மக்களும் தமது மத, சம்ரதாயங்களை மறந்து தமது உறவினர் எவரும் உயிரிழந்தால் ஒரு நாளிலேயே உடலை அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதனை எவரும் எதிர்க்காது ஒரே நாளில் உடல்களை தகனம் செய்ய இணங்கினர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் அவர்களின் மத நடைமுறையை கூட ஏற்றுக்கொள்ளாது உடல்களை எரிக்க வேண்டும் என கூறியிருந்தோம். தந்தை தாய் உயிரிழந்தால் கூட அவர்களின் பிள்ளைகள் பார்வையிட முடியாத கட்டாயம் இருந்தது. அவ்வாறெல்லாம் மக்கள் செயற்பட்ட வேளையில் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ஐந்து மாவட்டங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு பொதுமக்களை ஒன்றுதிரட்டி கூட்டம் கூட வைத்து கொவிட் -19 சட்ட திட்டங்களை மீறி, சமூக இடைவெளியை கருத்தில் கொள்ளாது மிகவும் மோசமாக செயற்பட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக பொதுமக்கள் எமக்கு எதிராக கருத்துக்களை முன்வைக்க ஆரபிதுள்ளனர். இந்த நிலைமைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த சுகாதார அதிகாரிகளை கூட அமைச்சரின் தரப்பில் பலர் அச்சுறுத்தியுள்ளனர். இந்த செயற்பாட்டை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இப்போது நாட்டில் கொவிட் -19 வைரஸ் பரவல் கட்டுபாட்டில் உள்ளது, ஆனால் இவர்களின் செயற்பாடு காரணமாக எதிர்வரும் தினங்களில் குறித்த பகுதிகளில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தொண்டமான் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சட்ட திட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுப்போம். கேள்வி:- பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர் இதில் கலந்துகொண்டனர், அவர்களிடம் இது குறித்து பேசவில்லையா? பதில்:- இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சகலருக்கும் கூறுவது ஒன்றுதான், தவறான முன்னுதாராணமாக எவரும் நடந்துகொள்ள வேண்டாம். அரசியல் செய்ய பல சந்தர்ப்பங்கள் கிடைக்கும், ஆனால் இவ்வாறான வைரஸ் தொற்றுப்பரவல் ஏற்பட்டால் அனைவருமே பாதிக்கப்பட்ட வேண்டும். இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். கேள்வி:- மலையகத்தில் தொற்றுநோய் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? பதில் :- ஆம். பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மலையகத்தில் மட்டுமல்ல நாடு பூராகவும் சுகாதார பரிசொதகர்களின் சங்க உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/83208
  • ஓ! இவர்தான் அந்த 50,000 மோசடிக்காரரா? கஜேந்திரகுமாரின் தோழர் தானே?
  • ஒரு நாட்டின் ராஜதந்திரி தனது நாட்டினை பிரதிநித்துவம் செய்பவர், உடைகளில் கவனமாக இருப்பார்கள். அதுவே சம்பிரதாயமும்... இந்த மனிசன்... போட்டு இருக்கிற டெனிம் டௌசரும், ட்ரைனிர் சூவும்.... சிவப்பு டீ சேர்ட்டும்.... போக்கெட்டுக்குள்ள கையும்... ஆள் இந்தியாவை கடுப்பேத்த வந்து நிக்கிற பாகிஸ்தான் உளவு நிறுவன ஆள் போலை கிடக்குது.  ஒஸ்மானியா கல்லூரிக்கு போயிருக்க வேண்டியவர், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு போயிருக்கிறார்.  எலி என்ன கோவணத்தோட திரியுது??🤔
  • -க. அகரன்   வவுனியாவில், சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களின் போராட்டம், இன்றுடன் (01) 1200 நாள்களை எட்டியது.   இதையொட்டி, அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக, இன்று (01) பிற்பகல் 12.15 மணியளவில், போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, “எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே”, “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்”, “ஓமந்தையில் கையளிக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே?” போன்ற பல்வேறான கோசங்களை எழுப்பியவாறு, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சமூக இடைவெளிகளை பேணி, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டக்காரர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடையதும் பிரித்தானியாவின் உடையதும் கொடிகளையும், சிங்கள மக்களுடன் வாழ பாக்கியம் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க அருகதையற்றவர்கள் என்ற வாசகம் தாங்கிய பதாதையும் தாங்கியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேசாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் உடையை அணிவித்து போன்றதான புகைப்படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தனர். இதன்போது, அதிகளவிலான புலனாய்வாளர்கள் இந்தப் போரட்டத்தை புகைப்படம் எடுத்ததுடன், அங்கு பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/வன்னி/கணமலபனர-உறவகளன-பரடடம-1200ஆவத-நள-எடடயத/72-251187