• Topics

 • Posts

  • கலையரசனை தேசியப் பட்டியில் நியமித்தது ஏன்? துரைராஜசிங்கம் விளக்கம் August 9, 2020   தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியல் பட்டியல் அம்பாறை மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பிரதேச சபை தவிசாளரும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசன் நியமிக்கப்படடு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கட்சி செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசு கட்சி காரிலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் இவ் அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.   இடம்பெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவைக் கண்டுள்ளது அதேவேளை எமது கட்சி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். இதற்கான பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டுள்ளன எது எப்படியிருந்தபோதும் எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.   குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பெறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன். ஏந்த விதத்திலும் இவ்வாறான அறிக்கைகள் விடுவது கட்சியின் கட்டுக்கோப்பிற்கும் விசுவாசத்திற்கும் எதிரானது கட்சியினுடைய தலைமையிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது அந்தவகையில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம். இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் ஜனநாயக அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைவர் சம்மந்தன் ஜயாவை சந்தித்து மக்கள் எனக்கு ஆணை வழங்கவில்லை என்ற அடிப்படையிலே பொதுச் செயலாளர் பதவியை நான் துறக்க அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்   இதற்கு அவர் உடனடியாக பல தேர்தல் கடமைகள்பொதுச் செயலாளருக்கு இருப்பதாகவும் இது தொடர்பாக எமது பொதுச் சபை தான் முடிவு எடுக்கவேண்டும் என்பதால் நீங்கள் பதவியை துறக்ககூடாது என கட்டளையிட்டதன் அடிப்படையில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது இதனை யாருக்கு வழங்குவது என பல்வேறு கருத்துப்பரிமாற்றப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசிய பட்டியல் தயாரிக்கும் போது சிலருக்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது.   இருந்தபோதும் இப்போது இருக்கின்ற நிலமையிலே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது. ஆகவே இதில் சம்மந்தப்ப ட்டவர்களை அழைத்து இந்த விடயங்களை தெரிவித் தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். இதற்கமைய நேற்று சனிக்கிழமை சம்மந்தன் ஜயா வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது இதன்போது தலைவருக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இதற்கமைய தேசிய பட்டியலை அம்பாறையிலுள்ள அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பதற்கமைய முடிவின் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை நான் அம்பாறை மாவட்ட த்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையைச் உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான தவராசா கலையரசன் பெயரை பரிந்துரை செய்து தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளேன்” என அறிவித்தார்.   http://thinakkural.lk/article/61205  
  • உரிமை எல்லாம் இல்லை என்று எப்பவோ தலீவர்  சொல்லி விட்டார். நீங்கள் இன்னும் உரிமை வாங்க காத்திருக்கிறீர்கள் போலிருக்கு.
  • அம்பாரை மாவட்டத்தின் தென்பகுதியான அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் வரையான கரையோரப் புகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கூட்டமைப்பினால் வழங்கபபடவில்லை..  ஆங்கு ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் இருந்தார்.   இம்முறையும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தும் அவர் தெரிவாகவில்லை.   அம்பாரைத் தமிழர்களின் ஒற்றுமையின்மையால் இருந்ததையும் இழந்துபோனார்கள்.
  • விக்கினேஸ்வரனுக்கு வெட்டிய குழியில் தானே விழுந்து விட்டார். அல்லது விழுத்தப்பட்டுவிட்டார்.
  • உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து கொடுத்து தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ள வடக்கு,கிழக்கு மக்கள் August 9, 2020 தாயகன் இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள்,விருப்பு வாக்குகள் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டங்களிலும் தோல்வி கண்டவர்கள் திண்டாட்டங்களிலும் உள்ளனர். இப் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இலங்கை வரலாற்றில் என்றுமில்லாத பல சாதனைகள், சோதனைகள், வேதனைகளுடனேயே நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதன் தாக்கங்களிலிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும் வாக்காளர்களான மக்களும் விடுபடுவதற்கு முன்பாகவே புதிய பாராளுமன்றத்தில் ஆட்சியமைக்கப்போகும் அரசின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளார். இந்த தேர்தலைப் பொறுத்த வரையில் மக்களின் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல செய்திகளை எச்சரிக்கைகளை ,தண்டனைகளை கொடுப்பதாகவே அமைந்துள்ளது. இதில் இலங்கையின் பழமைவாய்ந்த கட்சியும் பிரதான இரு கட்சிகளில் ஒன்றுமான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒருநாள் நீதிபதிகளான வாக்காளர்கள் மரண தண்டனையே கொடுத்து விட்டனர்.   இதில் வடக்கு, கிழக்கு தமிழ்,முஸ்லிம் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புத் தொடர்பில் மட்டும் பார்ப்போம் , மக்களின் தீர்ப்பு தொடர்பில் முதலில் வடக்கு மாகாணத்தை பார்த்தால் அங்கும் பிரதான கட்சியான தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்களின் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. அக்கட்சி வடக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 13 ஆசனங்களில் 9 ஆசனங்களை கைப்பற்றியிருந்த நிலையில் இம்முறை 6 ஆசனங்களை மட்டுமே வெற்றிகொண்டுள்ளது. 3 ஆசனங்களை இழந்துள்ளது. அத்துடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு தெரிவாகி வந்தவருமான மாவை சேனாதிராஜா கூட மக்களால் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.   அதேவேளை இம்முறை வடக்கில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் வெற்றிபெற்ற ஸ்ரீதரன்,சுமந்திரன்,சித்தார்த்தன் ஆகியோருக்கான வாக்குகளில் கூட பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் ஸ்ரீதரன் 72058 விருப்பு வாக்குகளைப்பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தார் .ஆனால் இம்முறை ஸ்ரீதரன் பெற்ற வாக்குகள் 35,884.சுமந்திரனுக்கு கடந்த முறை 58043 வாக்குகள். இம்முறை 27,834வாக்குகள்.சித்தார்த்தனுக்கு கடந்த முறை 53740 வாக்குகள் . இம்முறை 23,840 வாக்குகள். கடந்த முறை 58782 விருப்பு வாக்குகளிப்பெற்று இரண்டாமிடத்தை பெற்றிருந்த மாவை சேனாதிராஜா,43289 விருப்பு வாக்குளைப் பெற்றிருந்த சரவணபவன் ஆகியோர் இம்முறை படு தோல்வியடைந்துள்ளனர்.   அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட அங்கயன் கடந்த முறை தேர்தலில் 17309 வாக்குகளைப்பெற்று தோல்விகண்ட நிலையில் இம்முறை 36,365 விருப்பு வாக்குகளைப்பெற்று யாழ் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோன்று கடந்த தேர்தலில் 16399 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றி பெற்றிருந்த ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இம்முறை 32,146 விருப்பு வாக்குகளிப்பீர் மீண்டும் வெற்றியடைந்துள்ளார். அத்துடன் கடந்த தேர்தலில் மிகக்குறைந்தளவான வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இம்முறை 31,658 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார். அது மட்டுமன்றி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை மட்டுமே வடக்கில் பெற்றிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. கட்சி இம்முறை 2 ஆசனங்களையும் கடந்த முறை எந்தவொரு ஆசனத்தையும் பெறாத கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி இம்முறை 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன.   அது மட்டுமன்றி இம்முறை தேர்தலில் புதிதாக களமிறங்கிய வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய முன்னணி ஒரு ஆசனத்தை பெற்றுள்ளது. அதேவேளை கடந்த முறை ஒரு ஆசனத்தைப்பெற்றிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை படு தோல்விகண்டுள்ளது. வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை ஒரு ஆசனத்தை இழந்துள்ளது. அத்துடன் வாக்குகளிலும் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த தேர்தலில் 34620 வாக்குளைப் பெற்றிருந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் இம்முறை 25,668 வாக்குகளையும் கடந்த தேர்தலில்26397 வாக்களைப்பெற்றிருந்த செல்வம் அடைக்கலநாதன் இம்முறை 18,563 வாக்களையுமே பெற்றுள்ளனர். கடந்த முறை இக்காட்சியில் போட்டியிட்டு 25027 வாக்குகளை பெற்றிருந்த சிவசக்தி ஆனந்தன் இம்முறை கட்சி மாறி தமிழ் மக்கள் தேசிய முன்னணியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி கண்டுள்ளார். அதேவேளை கடந்த முறை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தோல்விகண்டிருந்த வினோநோகராதலிங்கம் இம்முறை போட்டியிட்டு 15,190 வாக்குகளைப்பெற்று வெற்றியடைந்துள்ளார்.   அத்துடன் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. இம்முறை வன்னி மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு-தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியிடமிருந்தே இந்த ஆசனத்தை ஈ.பி.டி.பி.வெற்றி கொண்டுள்ளது. முஸ்லிம் மக்களை பொறுத்த வரையில் கடந்த முறை வெற்றி பெற்ற ரிசாத் பதியுதீன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ரிசாத் கடந்த முறை 26291 ஆக்குகளிப்பெற்ற நிலையில் இம்முறை 28,203வாக்குகளையும் கடந்த முறை 7298 வாக்குகளை பெற்றிருந்த காதர் மஸ்தான் இம்முறை 13,454 வாக்குகளைப் பெற்றுள்ளார்.இவ்விருவரும் கடந்த முறை பெற்ற வாக்குகளைவிட இம்முறை அதிகமாகவே பெற்றுள்ளனர். வடக்கின் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் தமது உரிமைக்கும் அபிவிருத்திக்கும் சம அந்தஸ்து வழங்கியுள்ளனர் என்பது தெளிவாகின்றது.அதாவது யாழ் ,கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது உரிமைக் குரலுக்கு விக்னேஸ்வரன்,கஜேந்திரகுமார்,சுமந்திரன்,ஸ்ரீதரன், சித்தார்த்தன் ஆகியோரையும் அபிவிருத்தி புரட்சிக்கு டக்ளஸ் தேவானந்தா ,அங்கயன் ஆகியோரையும் தெரிவு செய்துள்ளனர். அதேபோன்று வன்னி மக்கள் தமது உரிமைக்குரலுக்கு சார்ள்ஸ் நிர்மலநாதன்,செல்வம் அடைக்கலநாதன்,வினோநோகராதலிங்கம் ,ரிசாத் பதியுதீன் ஆகியோரையும் அபிவிருத்திக்கு காதர் மஸ்தான் ,திலீபன் ஆகியோரையும் தெரிவு செய்துள்ளனர். குறிப்பாக வடக்கு மக்களின் தீர்ப்பால் இம்முறை வடக்கிற்கு இரு அமைச்சர்கள், ஒரு பிரதி அமைச்சர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கிழக்கு மாகாண மக்களின் தீர்ப்பை பார்த்தோமானால் அங்கும் தமிழ் தமிழ் தேசியக்கூட்டமைப்பே தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் திருகோணமலையில் ஒரு ஆசனத்தயுமென 5 ஆசனங்களை பெற்றிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு இம்முறை 3 ஆசனங்களை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் அம்பாறை மாவட்டத்தையும் பறிகொடுத்துள்ளது. அது மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு புதியவர்களே மக்களால் தெரிவு செய்யப்பட்டுமுள்ளனர். கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு ஆசனங்களை பறித்தெடுத்த தமிழ் மக்கள் அதற்கு பதிலாக அரசு சார்பான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை சேர்ந்த முன்னாள் கிழக்கு முதலமைச்சரான பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனையும் கடந்த முறை தமிழ் தேசியக்கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39321வாக்குகளை பெற்று வெற்றியடைந்திருந்த நிலையில் 52 நாள் ஆட்சி மாற்றத்தின்போது மஹிந்த ராஜபக்ச தரப்புக்கு தாவிய வியாழேந்திரன் இம்முறை ”மொட்டு”சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நிலையில் 22,218 வாக்குகளையளித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இவர்கள் இருவரும் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டவர்களாகவே இருந்தனர். அதேவேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தாய்க்கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா வடக்கில் யாழ் மாவட்டத்தில் படுதோல்விகண்ட நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரான துரைரட்ண சிங்கம் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுதோல்வி யடைந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் போட்டி ,பிரசாரம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒரு ஆசனத்தையும் இல்லாமல் செய்து விட்டது. எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டுமென்ற சிந்தனையில் செயற்பட்ட கருணாவினால் அம்பாறை மாவட்ட தமிழர் பிரதிநிதித்துவமே பறிபோயுள்ளது. திருகோணமலை மாவட்டத்தை பொறுத்த வரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழர் பிரதிநிதித்துவத்தை கடும் சவாலுக்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார். எனினும் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் 33834 வாக்குகளை பெற்றிருந்த இரா.சம்பந்தன் இம்முறை 21422 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலும் பெரும் வாக்கு வீழ்ச்சியைக்கண்டுள்ளது. வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விக்னேஸ்வரன்,சுமந்திரன்,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சித்தார்த்தன்,ஸ்ரீதரன், டக்ளஸ் தேவானந்தா ,அங்கயன் இராமநாதன் என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பலமானவர்களாக உள்ளநிலையில் கிழக்கு மாகாணத்தில் இரா.சம்பந்தனை தவிர ஏனைய இருவரில் ஒருவர் புதியவராகவே உள்ளார். மற்றயவரான கோவிந்தன் கருணாகரன் பல வருடங்களுக்கு முன்னர் முன்னாள் எம்.பி.யாக இருந்துள்ள நிலையில் கிழக்கு தமிழர் பிரதிநிதித்துவம் மிகவும் பலவீனமான நிலையிலேயே உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்களைப்பொறுத்தவரையில் கடந்த முறை போன்றே இம்முறையும் தமது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துள்ளனர் . மட்டக்களப்பில் கடந்த தேர்தலில் இரு ஆசனங்களை பெற்றுக்கொண்ட முஸ்லிம் மக்கள் இம்முறை ஒரு ஆசனத்தை இழந்து ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளனர்.திருகோணமலையில் கடந்த முறை இரு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் இம்முறையும் இரு ஆசனங்களையும் தக்க வைத்துள்ளனர். திகாமடுல்ல மாவட்டத்தில் [அம்பாறை]கடந்த முறை 3 ஆசனங்களை பெற்றிருந்த முஸ்லிம் மக்கள் இம்முறை 4 ஆசனங்களைப் பெற்றுள்ளனர். மட்டக்களப்பில் இழந்த ஒரு ஆசனத்தை திகாமடுல்லவில் பெற்று சமப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் பிரதி நிதித்துவம் கட்சிகள் மாறினாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எனவே வடக்கு,கிழக்கு மாகாணத்தைப்பொறுத்த வரையில் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் பிரதிநிதித்துவங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளபோதும் வடக்கைப் பொறுத்தவரையில் அவை முன்னர் போல் ஒரு கட்சியிடமில்லாது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.இது வடக்கிற்கு புதிய அனுபவம்.பிரதிநிதிதித்துவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் தெரிவுகள் சிறப்பானவை. இவர்கள் தமக்குள் உள்ள பகைமைகள்,தலைக்கனங்கள் ,போட்டிகளை மறந்து ஒன்றுபட்டு செயற்படுவார்களேயானால் உரிமைகள்,அபிவிருத்திகளை பெறுவது ஒன்றும் கடினமான விடயமாக இருக்காது   http://thinakkural.lk/article/61032