ஏராளன்

''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

Recommended Posts

''பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும்'' - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ்

பிராமணர்கள்படத்தின் காப்புரிமைGODONG Image captionகோப்புப் படம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும்"

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொச்சியில் நடந்த தமிழ் பிராமணர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், தூய்மை, உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், பெரும்பான்மை சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு போன்ற தனித்துவம் மிக்க குணாதிசயங்கள் அனைத்தும் ஒருங்கே பிராமணர்களுக்கு உண்டு என்று அவர் பேசியுள்ளார்.

tamil brahmins global meetபடத்தின் காப்புரிமைHTTP://HIGHCOURTOFKERALA.NIC.IN Image captionநீதிபதி வி.சிதம்பரேஷ்

பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாக இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அஹிம்சாவாதிகள் என்று சிதம்பரேஷ் பேசியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

"அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது. ஆனால், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு தொடரவேண்டுமா? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதை இந்த சமூகம்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். குரல் உயர்த்திப் பேசவேண்டும். அழுகிற குழந்தைதான் பால்குடிக்கும்."

"நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சிதம்பரேஷ், டிசம்பர் 2012 முதல் நிரந்தரம் ஆக்கப்பட்டார்.

https://www.bbc.com/tamil/india-49093447

Share this post

Link to post
Share on other sites
56 minutes ago, ஏராளன் said:

முற்பிறவிகளில் செய்த நல்வினைகள் காரணமாக பிராமணர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்று கேரள மாநில உயர் நீதிமன்ற நீதிபதி வி.சிதம்பரேஷ் பேசியுள்ளார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிராணமார்களில் சில சிறந்த குணங்கள் இருப்பது உண்மைதான். அதற்காக அவர்களுக்குள் மட்டும்தான் சிறப்பான குணங்கள் இருப்பது என்பது படைத்தவனையே ஏளனம் செய்வதாகின்றது. 

ஆனால், அதற்காக அவர்கள் இரு முறை பிறந்தவர்கள் என்ற கூற்று இவர்களுக்குள்ளும் கிறுக்கர்கள் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகின்றது.  

Share this post

Link to post
Share on other sites

How dare?

எப்படீ பேசலாம்

Share this post

Link to post
Share on other sites

67294013_1061099587432438_37339300504293

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

பிராணமார்களில் சில சிறந்த குணங்கள் இருப்பது உண்மைதான்.

உலகிலே உள்ள துர் குணம்களை வைத்துகொண்டு வெளியால் நடிப்பவர்கள் . நாங்கள் கோவில் சென்று கும்பிடபோகும் பொழுது எமக்கு புரியாத மொழியில் இவங்களை யார் கத்த சொன்னது ?

Share this post

Link to post
Share on other sites

உந்த பிராமணியத்தை அழிக்க ஒரு இனத்தின் பல பிரச்சனைகள் ஒழியும்.

Bild

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
On 7/24/2019 at 10:57 AM, குமாரசாமி said:

.Bild

 மக்களே!   தயிர்ச்சாதம்,உழுந்துவடை சாப்பிட்டு உப்பிடி உடம்பு வருமா?:rolleyes:

Share this post

Link to post
Share on other sites

பிராமண குலத்திலிருந்து மாணவர்களாக வந்தவர்களோடு நாங்களும் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவவர்கள். எங்கள் பெரிசுகளின் கண்ணில்படாமல், ஒன்றாகக் குடித்துக் கும்மாளமடித்து ஊர் சுற்றினோம். ஒரே தொழிற்சாலையில் வேலைபார்த்து ஒரே வீட்டில் படுத்துறங்கினோம். குடும்பம் என்று ஆனபிறகு, டேய் மச்சான் என்று நாங்கள் விளித்த பிராமண நண்பர்கள்... கோவில்களில் பூசைகள் செய்யும்போது.... ஐயா வீபூதி! ஐயா சந்தனம்! ஐயா தீர்த்தம்! என்று என் நண்பனுக்கே பணிந்துபோகும் நிலமையை எங்கள் சமூகவிதி எங்களுக்கு ஏற்படுத்தி, ஊரோடு ஒத்துவாழ வைத்தது. 😌

இந்த அனுபவம் இங்கு எங்கள் கள உறவுகளுக்கும் இருக்கலாம். 🤣  

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Paanch said:

101% அக்மார்க்கு வார்த்தைகள் தோழர்..👌

Share this post

Link to post
Share on other sites
On 7/24/2019 at 7:15 AM, ஏராளன் said:

"நம்மை ஓரம்கட்ட அனுமதிக்கக்கூடாது; நாம் எப்போதுமே மைய நீராட்டத்தில் இருக்க வேண்டும்; தனிக் குரலில் பாடாமல் சேர்ந்து இசைக்க வேண்டிய காலம் வந்துவிட்டது," என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட் சிக்கு.... "ஜால்ரா" அடித்துக் கொண்டு, சுக போகங்களை அனுபவிக்க வேண்டும் என்று சொல்கிறார்.
உதாரணத்துக்கு... தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகளான...
நதிநீர், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஜல்லிக் கட்டு, மது விலக்கு, மணல் கொள்ளை..  போன்ற ஒட்டு மொத்த மக்களின் பிரச்சினைகளுக்கு... ஒரு பிராமணனாவது தெருவில் இறங்கி போராடினார்களா? 

ஆண்டாள் பற்றி, வைரமுத்து சொன்ன போது மட்டும்,
தெருவெல்லாம் பிராமணர் ஊர்வலம் போனது மட்டுமல்லாது...
தரக்குறைவான வார்த்தை பிரயோகம் செய்து, வைரமுத்துவை திட்டினார்கள்.
ஓசியில்.... சோறு தின்ன மட்டும், முன்னுக்கு நிற்கும்.... 
கெட்ட   குணமுடையவர்கள் தான், பிராமணர்கள்.    

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

Image may contain: 3 people, people smiling

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.