Jump to content

அனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அனுராதா: தடைகளை தாண்டி பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது எப்படி?

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்
அனுராதாபடத்தின் காப்புரிமைANURADHA

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து வசதியே எட்டிப்பார்க்காத நெம்மேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான அனுராதா பவுன்ராஜ், கடந்த வாரம் நடைபெற்ற 'காமன்வெல்த் வெயிட்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியா சார்பாக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.

கடந்த பத்து ஆண்டுகளாக கடினமாக உழைத்து பளுதூக்கும் போட்டிக்காக தன்னை தயார்செய்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த அனுராதா, தஞ்சாவூரில் தோகுர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், விளையாட்டுத் துறையில் இருக்கும் ஆர்வம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் அனுராதாவை வெற்றியை நோக்கி செல்ல உதவியுள்ளது.

இளம்வயதில் தந்தை பவுன்ராஜ் இறந்ததால், அண்ணன் மாரிமுத்து படிப்பை நிறுத்திவிட்டு அம்மா ராணியுடன் கூலிவேலைக்கு செல்ல, அனுராதா படிக்கவும், விளையாட்டுத்துறையில் பங்கேற்கவும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது.

''பள்ளிப்படிப்பின்போது கைப்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. விளையாட்டுத்துறையில், குழு விளையாட்டில் சாதிப்பதைவிட தனி நபராக முயற்சி செய்தால், அரசு வேலை கிடைக்கும் என அண்ணனின் நண்பர்கள் பரிந்துரைத்தனர். கல்லூரியில் படிக்கும்போது, தமிழக அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்குபெற வாய்ப்புகள் இருப்பதை அறிந்த நான், முயற்சி செய்துபார்க்கலாம் என சேர்ந்தேன், தமிழக அளவில் வென்று இந்திய அளவில் போட்டியிட தேர்வானேன்,'' என்கிறார் அனுராதா.

உறவினர்களின் கேலிபேச்சை சுமப்பதில் இருந்த சிரமம் பளுதூக்குவதில் இல்லை: தங்கம் வென்ற அனுராதாபடத்தின் காப்புரிமைANURADHA

2009ல் அனுராதா முதன்முதலில் இந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று 35 கிலோபிரிவில் முதல் இடத்தை வென்றபோது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

''எங்கள் ஊரில் பயிற்சி மையங்கள் கிடையாது. பளு தூக்கும் விளையாட்டில் பங்கேற்கும் ஆண்களை பார்ப்பது கூட அரிது. எனக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் இல்லை. முதல்முறை கிடைத்த வெற்றி, நான் மேலும் பளுதூக்கும் போட்டியில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதித்துவிட்டது. பட்டமேற்படிப்பு படிக்கும்போது, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்திய அளவிலான கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றேன்,'' என அவரது பதக்க பட்டியலைப் பற்றி பேசினார் அனுராதா.

''ஜிம் போக வேண்டும் என முடிவு செய்தபோது மிகவும் தயக்கமாக இருந்தது. எங்கள் ஊரில் பேருந்து வசதி இல்லை. நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லவேண்டும். ஜிம்மில் பெண்கள் கிடையாது. ஆண்கள் மட்டுமே இருப்பார்கள். தொடக்கத்தில் நான் பயிற்சி முடிக்கும்வரை காத்திருந்து அண்ணன் என்னை அழைத்துச் செல்வார். என் ஊரிலும், வெளியிடங்களிலும் எனக்கு ஏற்படும் தயக்கத்தை நான் துடைத்துவிட்டு முன்னேறவேண்டும் என முடிவுசெய்த பிறகு, என்னை நோக்கி வந்த எல்லா கிண்டல் பேச்சுகளை கையாள தெரிந்துகொண்டேன்,'' என்றார் அனுராதா.

உறவினர்கள் பலரும் பளுதூக்கும் போட்டியில் அனுராதா பங்கேற்பதை விமர்சித்தபோதும், அவரது ஊக்கம் குறையவில்லை. ''பளுதூக்கும் போட்டி என்பது ஒரு விளையாட்டு என்ற புரிதல் பலருக்கும் இல்லை. அதிலும் பெண்ணாக இருப்பதால், இதில் பங்கேற்றால், என் உடல் மாறிவிடும் என பலர் குறைகூறுவார்கள். அவர்களின் வார்த்தைகளை சுமப்பதுதான் சில காலம் சிரமமாக இருந்தது. தொடர்ந்து நான் சாதனைகளை குவித்ததால், அவர்கள் மௌனமாகிவிட்டார்கள்,''என்கிறார் அனுராதா.

பட்ட மேற்படிப்பை அடுத்து பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான மையத்தில் பளுதூக்கும் போட்டிக்கான பயிற்றுநர் பாடதிட்டத்தை படித்தார். 2017ல் உதவிஆய்வாளர் வேலைக்கான தேர்வு வந்தபோது, அதில் தேர்வாகி வேலைக்கு சென்றால், அண்ணன் மற்றும் தாய் ராணிக்கும் உதவமுடியும் என்பதால், தனது விளையாட்டு ஆர்வத்திற்கு விடுப்பு கொடுத்திருந்தார்.

உறவினர்களின் கேலிபேச்சை சுமப்பதில் இருந்த சிரமம் பளுதூக்குவதில் இல்லை: தங்கம் வென்ற அனுராதாபடத்தின் காப்புரிமைANURADHA

''காவல்துறையில் பணிபுரிவோருக்கான விளையாட்டுப் போட்டியில் பளுதூக்கும் போட்டி இருந்ததால், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. என் திறமையை கேள்விப்பட்ட மூத்த அதிகாரிகள் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தார்கள். தேசிய அளவில் தங்க பதக்கம் வென்றதால், கமான்வெல்த் போட்டியில் பங்கேற்க அடுத்த வாய்ப்பு என்னை தேடிவந்தது. அடுத்த இலக்கு ஒலிம்பிக்ஸ்தான்,'' என சொல்லும்போதே அனுராதாவின் உறுதி அவரது வார்த்தைகளில் தெரிகிறது.

பெண்கள் விளையாட்டுதுறையில், அதிலும் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க குறைவான எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள் என்று கூறும் அனுராதா, ''பஞ்சாப்பில் படித்த சமயத்தில் அங்குள்ள பதின்பருவ பெண்கள் ஆர்வத்துடன் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்பதை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்ததது. எத்தனை வாய்ப்புகள் உள்ளன, நம் கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் மிகுந்த திறமையுடன் இருந்தாலும், இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், கிராமங்களில் முடங்கிவிடுகிறார்கள் என்பதை உணர்ந்தேன்,''என்கிறார்.

தற்போது அனுராதாவின் வெற்றிகளை கண்ட அவரது நெம்மேலிப்பட்டி கிராமத்தில் பெண்குழந்தைகளை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்த பெற்றோர்கள் தயக்கம் காட்டுவதில்லை என்று கூறும் அவர், ''கல்வி என்பது வெறும் ஏட்டுக்கல்வி அல்ல, விளையாட்டும் சேர்த்துத்தான் என்ற புரிதல் குறைவாக உள்ளது. உடல்நலன் இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என்பதை வலியுறுத்தவேண்டும்,''என்கிறார்.

https://www.bbc.com/tamil/sport-49065142

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.