Sign in to follow this  
கிருபன்

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

Recommended Posts

கறுப்பு யூலையும்.இனவாத ஆட்சிகளும்.

July 22, 2019
wwew-696x319.jpg

தமிழ்பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான இனக்கலவரம் மற்றும் இனவாத அழிப்புகளில்  ஒன்றுதான் கறுப்பு ஜீலை என்று அழைக்கப்படுகிறது. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் ரீதியாக பேரினவாத சக்திகள் திட்டமிட்டு தமிழ் பேசும் மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடாத்தி இருக்கின்றது. 36 வருடங்கள் முன் 1983 ம் ஆண்டு ஜீலை மாதம் 23ம் திகதி மற்றுமொரு இனவாத வன்முறைகள் அரங்கேறப்பட்டன. பாரிய இழப்புக்களை தமிழ் சமூகம் சந்தித்திருந்தனர் . ஒரு நாட்டுக்குள்ளே  அகதிகளாக வாழ வைத்த கொடுமையும் அவ்வாண்டில் நடைபெற்றன . சுமார் 3,000 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். 

1983 கலவரத்த்திற்கு முன்னதாக. சிறுபான்மை இன மக்களுக்கு நடந்த துயரத்தையும் நாம் ஆழமாக பார்க்க வேண்டும்.

1915 இல் – முஸ்லிம் மக்கள் மீது ஏவப்பட்ட தாக்குதல். 

1949 இல் -மலையக  தமிழ் மக்களின் குடியுரிமை மறுப்பு.

1956 இல் -தனி சிங்கள சட்டம். 

1958 இல்- தமிழ் பேசும் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். 

1977 இல் -நடைபெற்ற வன்முறைகள். 

1981இல் -யாழ் நூலக எரிப்பு. 

இவ்வாறு ஏற்கனவே நடந்த இன வன்முறைகளினாலும், ஒடுக்குமுறைகளாலும், பாதிக்கப்பட்ட அனுபவத்தை சந்தித்து தமிழ் பேசும் மக்கள் தமக்கான பலமான அரசியல் தளமொன்றை நிர்மாணிக்கத்தொடங்கினார்கள்,ஆனால் ஏற்கனவே தமிழர்களுக்கான பிரதிநிதிகளான தமிழ் தலைமைகளால் இவ்வாறான அடக்குமுறையை எதிர்ப்பதற்கான அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்க்கோ அல்லது பலமான மக்கள் சக்திகளை திரட்டுவதற்கும்,  ஒருங்கிணைப்பதற்கும் அவர்களால் முடியவில்லை. அவர்களிடம் பலவீனமான அரசியல் மட்டுமே இருந்தது. 

அதன்பின் அக்கால கட்டத்தில்  சிறுசிறு ஆயுத இயக்கங்கள் உருவாகின, அவ்வியக்கங்களுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் மோதல்கள் வருவதுண்டு, ஆனால் அந்த இயக்கங்கள் உருவாகுவதற்கு காரணம், கொடிய அடக்குமுறைகளை எதிர்க்கவும், தமிழ்பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்கவுமே அவ் இயக்கங்கள் உருவாகின. அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான அமைப்பாகஉருவாக்குவதற்கு போராடி வந்தார்கள். ஆரம்பத்தில் சாதாரண சிங்கள மக்களை தாக்குவதற்கோ அல்லது  அவர்களது வாழ்க்கை இடையூறு விளைவிப்பதற்கு அவர்களுக்கு உடன்பாடு இல்லை .இவ்வாறு மக்களுக்காக போராடியவர்களை இலங்கை அரசு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது.யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் இலங்கை அரசாங்கம் இவ்வாறான நடைமுறையைத்தான் மேற்கொண்டு வருகின்றது என்பதை நாம் கண்கூட காணமுடிகின்றது.1983 இல் ஆட்சியிலிருந்த ஜே. ஆர் ஜெயவர்த்தனவுக்கும், தற்போதய ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனவும் அரசியல்ரீதியாக ஒரு வித்தியாசமுமில்லை, ஒரே முதலாளித்துவ கையாட்களாகவே உள்ளார்கள்.  தமிழ் பேசும் மக்களுக்கான தீர்வையோ அல்லது   மாற்று தீர்வு ஒன்றினை முன்மொழிவதற்கு உரிய ஏற்பாடுகளோ  அவர்களிடம் இல்லை. அதை நன்றாக இக்கால கட்டத்தில் வடகிழக்கில் நடைபெறும் போராட்டங்களில் நாம் அவதானிக்க முடிகிறது.

images.jpg

பொதுவாக சிறு எண்ணிக்கையிலான பெளத்த இனவாதிகள் 1950களிலிருந்து தொடர்ச்சியாக தமிழ் பேசும் மக்கள்மீது தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். இந்த   இனவாத குழுக்களுக்கு அரசு பின்னணியில் ஆதரவு கொடுப்பது காலகாலமாக நடைபெறுகிறது. 1983 இல் நள்ளிரவில் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற இராணுவத்திற்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர்க்கும் நடைபெற்ற மோதலில்  13 ராணுவர்கள் உயிரிழந்தார்கள். மோதலை தொடர்ந்து மறுநாள் தென் இலங்கை பத்திரிகையில் இவ்வாறு செய்தி பிரசுரிக்கபடுகிறது “13 சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்”. மற்றும் பெளத்த இனவாதக் குழுக்கள் இனவாத தீயை நாட்டில் பல பாகங்களில் பற்ற வைக்கிறார்கள். சிங்களவர்களை தமிழர்கள் கொன்றுவிட்டார்கள், தமிழர்கள் திட்டமிட்டு சிங்களவர்கள்  அனைவரையும் அழிக்கப் போகிறார்கள்.என்று பொய்பிரச்சாரத்தை முதலில் தெற்கில் ஏற்படுத்தினார்கள். அதன்பின் கண்டி மற்றும் தமிழர்கள் வாழும் பல பிரதேசங்களுக்கு இனவாத பிரச்சாரம் பரப்பப்பட்டது. ஆனால் இலங்கை அரசாங்கமானது தனது அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு இவ்வாறான ஒரு சூழலை ஏற்கனவே திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தது. அந்த கனவு ஜுலையில் பலித்தது. அதன் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இறந்த இராணுத்தினர்களை கொழும்புக்கு கொண்டு வந்து ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. பொதுவாக இறந்த இராணுத்தினர்களை அவர்களது சொந்த பிரதேசத்தில் அடக்கம் செய்வார்கள், அவசரஅவசரமாக உத்தரவு பிறப்பித்தற்கு  காரணம் பொதுமக்களிடமிருந்து ஆவேசத்தை தூண்டுவதற்காவே. 

24ஜீலை  இலங்கை தெற்கு நகரத்தில்  ராணுவ அடக்கம் செய்வதற்கு அணிதிரட்டபட்டனர், ஆனால் இறந்த இராணுவ சடலங்கள் வருவதற்கு தாமதமாகின. 

இனவாதிகளும் கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்தார்கள், கூட்டத்தில் காத்திருந்த சிங்கள மக்களுக்கு பொய்பிரச்சாரத்தை பரப்பினார்கள், விடுதலை புலிகள் “அனைத்து சிங்கள மக்களையும் கொல்ல போகிறார்கள்” என வதந்திகளை கிளப்பினார்கள். 1983 ஜீலை கலவரம் வெடித்தது.இனவாத கும்பல்கள் கையில் கிடைத்த உபகரணங்கள், கத்தி, கம்புகள், பெற்றோல், எண்ணைக்கலன்கள், என்பனவற்றை பாவித்து தமிழர்களுடைய வர்த்தகநிலையங்கள், வீடுகள், வாகனங்கள் என அடித்து நொருக்கி தீயிட்டு கொளுத்தினார்கள், தமிழர்களுடைய சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவித்தனர், பார்க்கும் இடங்கள் எங்கும் அடிதடியாக இருந்தது, பெண்களை பாலியல் ரீதியாக தாக்கினார்கள், நாடே பதட்டத்தில் காணப்பட்டன. தமிழர்கள் தமது சொந்த பணத்தில் வியாபாரம் மற்றும் வாழ்க்கை நடத்தியவர்களை அடித்து விரட்டினார்கள், பல உயிர்சேதங்கள் ஏற்பட்டன. அகதி முகாமுக்குள் குடிபெயர்ந்த மக்களை கூட விட்டு வைக்கவில்லை, தேடி தேடி தாக்கினார்கள். 

தொடர்ந்து உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் ஜே ஆர் ஜெயவர்த்தன அதை பற்றி கவலை படவில்லை, “சண்டை என்றால் சண்டை” “சமாதானம் என்றால் சமாதானம்” என்ற பிடிவாதமாக இருந்தார், அம்மக்களின் வாக்குகளை பெற்று பதவியில் இருந்து கொண்டு படுமோசமானஅரசியல் பேசினார் அவர், இப்போதும் இலங்கையில்  இவ்வாறான சக்திகள் உள்ளன என்பதை 2009 யுத்தமுடிவில் பார்த்திருந்தோம். 

1983 யூலை  தொடர்தினங்களாக கலவரம் தொடர்வதால்  பொருளாதார சிக்கல் வந்துவிடும் என்ற நோக்கத்திற்காக மட்டுமே ஊரடங்கு சட்டம் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த  பொலிசாரும், இராணுவமும் முன்வரவில்லை வேடிக்கை பார்த்தனர், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரியோகம் நடத்தவில்லை, அதற்கான காரணங்களும் உண்டு, அவ்வாறு நடைபெற்றால் சிங்கள மக்களின் ஆதரவு  முக்கியம் மற்றும் அரசு சரிந்துவிடும் என்ற எண்ணங்களும் இருந்தன. அது மட்டுமல்ல ராணுவத்தினரது மிக கொடூரமாக வட பகுதியில் பழிக்குப்பழி என்று 50க்கும் மேற்பட்ட அப்பாவி போதுமக்களைளை கண்மூடித்தனமாக கொன்றார்கள்.

July-1983.jpg

ஜீலை கலவரம் நடந்து கொணடிருக்கும்போது தமிழ் மக்களுக்கு அடைக்கலமும் பாதுகாப்பும் வழங்கிய சிங்கள மக்கள் அநேகமானவர்கள் உள்ளனர். அவர்களுடைய உயிரைக் கூடப் பணயம் வைத்து, பல தமிழ்க் குடும்பங்களைப் பாதுகாத்த சிங்கள மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். தற்போது தமிழ்த்தேசியவாதிகள் தாம்தான் என பறைசாற்றிக்கொள்பவர்கள் இவ்வாறான  சகோதரத்துடன் பழகும் சிங்கள மக்கள் பற்றிய தவறான பதிவுகளையும் பிரச்சாரத்தயும் நிறுத்தபடவேண்டும்.ஜுலை கலவரத்தில் நடைபெற்ற மற்றுமொரு இனவாத தாக்குதல்  வெலிக்கடைச்சிறைச்சாலையில்இடம்பெற்றிருந்தன, 1983 ஜூலை 25-27 ஆம் திகதிகளில் இலங்கை அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள் சித்திரவதைகள், கொலைகள். என தொடர்ச்சியாக அதிகரித்தன. அத்தாக்குதலில் முதல் நாளில் 35 தமிழ் அரசியல்  கைதிகள் கொல்லப்பட்டனர், மிகமோசமான படு கொலைகள் வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தன. என்பதையும் உறுதியாக கூறமுடியும். இனவாத கும்பல்கள் சிறையில் இருக்கும் சக சிங்கள கைதிகளுக்கு திட்டமிட்டு இனவாத மூளைச்சலவை செய்தனர். தமது வெறியை தமிழ் கைதிகள் மேல் காட்டினர்.உடனடியாக கட்டைகள், கத்திகள், இரும்புக்கம்பிகள் என்பவற்றை கொண்டு தமிழரசியல் கைதிகளை தாக்கினார்கள், நிர்வாணபடுத்தினார்கள், சித்திரவதைப்படுத்தினார்கள், கொன்றுகுவித்தார்கள். இவ்வாறான வன்முறைகளை ஏன் அதிகாரிகளால் தடுக்கமுடியவில்லை?நீதி துறையின் கட்டுபாட்டில் எவ்வாறு இவ்வாறான  அநீதிகள் நடந்தன. இவர்களுக்கு தாக்க கூடிய அதிகாரம் யார் கொடுத்தது, தாக்க கூடிய பொருட்கள் முக்கியமாக சிறைச்சாலையில் எவ்வாறு கிடைத்தது, இது திட்டமிட்டபடு  கொலைகள் என தயங்காமல் கூறலாம்.எஞ்சியிருந்த தமிழரசியல் கைதிகளையும் கொல்வதற்கு மறுநாள் தயாராகினர்கள், அச்சத்துடன் இருந்தார்கள் அக்கைதிகள்,  அவர்கள் தற்பாதுகாப்பிற்காக கையில் கிடைத் சாப்பாட்டுதட்டு போர்வை கள் என்பன வைத்திருந்தார்கள். 

இனவாதிகள் இரண்டு நாட்களின் பின்னர் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்தினர்கள். இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இனவாதிகளால் தாக்கி , மொத்தமாக 53 கைதிகள் சிறைச்சாலையில் மட்டும் கொல்லப்பட்டனர். . ஒருவாரத்தில்தமிழர்களது இரத்தங்கள்  சிந்தவைத்து குளிர்காய்ந்தஇனவாதிகள்.  இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்ட ஈட்டை கொடுக்கவில்லை, இன்றுவரை சர்வதேச விசாரணைகூட நடக்கவில்லை. 

மீண்டும் ஓரு ஜுலை கலவரத்தை உருவாக்கும் பேரினவாத மற்றும் துவேச வாதிகளை நாம் இனங்கணுபோம், அச்சக்திகளைஎதிர்த்து தோழமையுடன் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளை வெல்வதற்கு நாம் ஐக்கியப்படுவோம்.

 

http://ethir.org/black-july1983/

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • " இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்!"  எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழர் பிரச்சனைக்கு  தீர்வு தரப்போவதில்லை என இது மீண்டும் உறுதிப்படுத்தும் சரி, அதனால் மக்களுக்கு என்ன பயன்? தெரியவில்லை. ஆனால், தொடர்ந்தும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே பயன்கள் கிடைக்கலாம். 
  • கல்கி ஆசிரமத்தில் வருமானவரித் துறை சோதனை: 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் பறிமுதல் கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையில் 800 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, அங்கிருந்து 90 கிலோ தங்க நகைகள்44 கோடி இந்திய ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்,  சித்தூர் மாவட்டம் வரதய்யபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயற்படுகிறது. 1980 ஆம் ஆண்டு இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் ஆரம்பித்தார். அப்போது அவர் தனது பெயரை கல்கி பகவான் என மாற்றினார். இந்த ஆசிரமத்துக்கு ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. அதேபோன்று  சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. இந்த ஆசிரமம் வெல்னஸ் குழுமம் என்ற பெயரில் கட்டுமானம்,  விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆசிரம நிர்வாகம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும்  நன்கொடையாக வரும் பணத்தை அரசிடமிருந்து மறைத்து வேறு தொழில்களில் முதலீடு செய்வதாகவும் வருமானவரித் துறைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில் வருமானவரித் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில், அந்த ஆசிரமத்தின் மீது கூறப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் சித்தூர் வரதய்யபாலத்திலுள்ள அந்த ஆசிரமத்தின் தலைமையிடம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அந்த ஆசிரமத்தின் கிளைகள் என மொத்தம் 40 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 400 பேர் கடந்த 16ஆம் திகதி ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில், இதுவரை அந்த ஆசிரமம், 800 கோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமானவரித் துறை கண்டறிந்துள்ளது. அதேபோல கணக்கில் வராத 44 கோடி இந்தியப் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 28 கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள 90 கிலோ தங்க நகைகள், 5 கோடி இந்தியப் ரூபாய் மதிப்புள்ள வைர நகை, 20 கோடி வெளிநாட்டுப் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் வெல்னஸ் குழுமம் தனது பெயரிலும், பினாமி பெயரிலும் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் வைத்திருப்பதும், டுபாய்,  சிங்கப்பூர், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 100 கோடி இந்தியப் ரூபாய்  முதலீடு செய்திருப்பதும் வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.  வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக வருமானவரித் துறையினர், விஜயகுமாரின் மகன் கிருஷ்ணா, அவர் மனைவி ப்ரீத்தா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வருமான வரித் துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சோதனையில் கிடைத்த பணம், நகை, ஆவணங்கள் அடிப்படையில் நடைபெறும் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு கிருஷ்ணா, ப்ரீத்தா மற்றும் வெல்னஸ் குழும நிர்வாகிகளுக்கு வருமானவரித் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள், ஓரிரு நாள்களில் விசாரணைக்கு முன்னிலையாவார்கள் என வருமானவரித் துறை  தகவல்கள் தெரிவிக்கின்றன. http://athavannews.com/கல்கி-ஆசிரமத்தில்-வருமான/
  • வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்? இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும்? அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை? இவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன. இச்சந்திப்பானது இக்கட்சிகளாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒன்றல்ல... யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே தமிழ்க் கட்சிகளுடன் பல தடவை தொடர்பு கொண்டு கலந்துபேசி ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவையே அந்த ஆறு கட்சிகளுமாகும். மேற்படி கூட்டுச் சந்திப்பில் பங்கேற்று கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டவர்கள் சி.வி. விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோராவர். ஒரேயொரு கட்சி பொது உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாமல் வெளியேறி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) அந்தக் கட்சி! எனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐந்து கட்சிகளால் மட்டுமே பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வர முடிந்திருக்கிறது. இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்னொரு வேளையில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் செயற்பட்டவர்களாவர். ஆகவே பிளவடைந்து போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மீண்டும் ஒன்றுசேர்ந்து விட்டதென்று அவசரப்பட்டு நினைத்து தமிழர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளக் கூடாது! பல வருடங்களாக ஆளுக்கொரு திசையில் சிதறுண்டு கிடந்த இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலாவது பொது இணக்கப்பாடொன்றுக்கு இப்போது முன்வந்திருப்பதை முதலில் பாராட்டியாக வேண்டும்.ஆனாலும் இந்தப் பாராட்டுக்குரியவர்கள் இக்கட்சிகளின் தலைவர்களல்லர்! யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகளையே முதலில் பாராட்டியாக வேண்டும். எவ்வாறிருந்த போதிலும் கடந்த வார சந்திப்பைப் பொறுத்தவரை இக்கட்சிகளின் தலைவர்கள் ‘இன்றைய அரசியல் நிலைவரத்தின் சூழ்நிலைக் கைதிகள்’ என்றும் கூற முடியும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதனால் இத்தலைவர்களால் நீண்ட காலத்துக்கு ஆளுக்கொரு திசையில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே வடக்கு, கிழக்குத் தமிழ்ச் சமூகம் இக்கட்சிகள் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது. 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இவர்களது 'உறங்கு நிலை' குறித்து தமிழர்கள் மிகவும் சலிப்படைந்திருக்கிறார்கள். ‘அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள்’ என்ற வெறுப்பு முத்திரை தமிழ் அரசியல் தலைவர்கள் மீது குத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்கையில், இக்கட்சிகள் தமிழ்ச் சமூகத்துக்கு சாக்குப் போக்குக் காட்டுவதற்காவது பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.பொதுநிலைப்பாடொன்றுக்கு வர முடியாமல் போயிருப்பின், இனிமேல் வரப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இக்கட்சிகளால் தமிழ் மக்கள் முன்பாக முகம் கொடுக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விடும் என்பதுதான் உண்மை! ஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தல் வரை இக்கட்சிகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமா? இல்லையேல் களநிலைவரத்துக்கு ஏற்றபடி நிபந்தனைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றங்கள் செய்யப்படுமா? இல்லையேல் ஒருசில கட்சிகள் இணக்கப்பாட்டில் இருந்து வெளியேறி விடுமா? இவையெல்லாம் பொதுவாக எழுகின்ற வினாக்கள்! இக்கட்சிகள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் (கோரிக்கைகள்) சாத்தியப்பாடுடவையா அல்லது இன்றைய காலத்துக்குப் பொருத்தப்பாடுடவையா என்பதெல்லாம் வேறு விடயங்கள். ஆனால் குறைந்த பட்சம் இந்த ஐந்து கட்சிகளாவது எதிர்வரும் காலத்தில் இணக்கப்பாட்டுடன் ஒருமித்து செயற்பட வேண்டுமென்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். ஏனெனில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ் மக்களை அதிகம் சலிப்படைய வைத்திருக்கின்றன என்பதை இக்கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்துக்கு அப்பால் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய மற்றொரு விடயம் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகளும் முன்வைத்துள்ள முன்நிபந்தனைகளை இருபிரதான வேட்பாளர்களில் எவர் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்? தவிர்க்க முடியாமல் எழுகின்ற வினா இது! தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் உள்ளடங்கியுள்ள அம்சங்களில் அதிகமானவை பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாமை’ தரக் கூடியவையாகும்.இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருகின்ற துணிச்சல் மிக்க வேட்பாளர் எவருமே இருக்கப் போவதில்லை. அவ்வாறு எந்த வேட்பாளராவது இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்வாரானால், அவர் அரசியலில் தனக்குரிய புதைகுழியை தோண்டிக் கொள்வதற்கு ஒப்பான செயல் அதுவாகும். இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்! https://www.thinakaran.lk/2019/10/22/ஆசிரியர்-தலைப்பு/42433/தமிழ்-அரசியல்-கட்சிகளின்-அடுத்த-கட்ட-நகர்வு-எது
  • ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு ரணில் அழைப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக 13 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய ஆவணத்தை தயாரித்துள்ள ஐந்து தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், கட்சிப் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு சந்திப்பைப் கோரினார். அவர் நேரத்தை வழங்கியதும் அவரைச் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன், ”முன்வைக்கப்பட்ட 13 கோரிக்கைகளை ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரிப்பதால், தமிழ் கட்சிகள் மனம் தளராது. எந்தவொரு பிரதான வேட்பாளரும் எங்களை மகிழ்விக்கமாட்டார்கள் என்பதை அறிந்தே இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சிங்கள மக்களுக்கு அறிவுறுத்துவதே இதன் நோக்கம். ஒரு நோய் இருந்தால், அதனைக் குணப்படுத்த சரியான மருந்து கொடுக்க வேண்டும். தவறான மருந்தை வழங்குவதன் மூலம் நோயை குணப்படுத்த முடியாது. ஒரு சிறுபான்மைக் குழுவான தமிழ் மக்கள், தங்கள் விவகாரங்களைக் கவனிக்கும் உரிமை இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு நெருங்கியவர்கள் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்துள்ளனர். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக அதனை நிராகரித்தார். சஜித் பிரேமதாசாவுக்காக பரப்புரை செய்யும் அமைச்சர் கபீர் காசிம் அத்தகைய நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஐந்து-தமிழ்க்-கட்சிகளின்/
  • ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர். இலங்கைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரும் இவர்கள் இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு அதற்கு முன்னதாக அவர்கள் கொழும்பில் ஊடகங்களை சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/ஐரோப்பிய-ஒன்றியத்தின்-பி/