Jump to content

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் குழப்பதை ஏற்படுத்த முயற்சி


Recommended Posts

திருகோணமலையில் இன மோதலை ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு சீர்குலையும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், 

கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அது அமைந்துள்ள இடத்துக்கு கோகிலா ரமணி என்ற பெண் உரிமை கோரியுள்ளார். அத்துடன் இராவண சேனை என்ற அமைப்பும் இன்னொரு அமைப்பும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து மக்களை அழைத்துவந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இன முறுகல் நிலையை ஏற்படுத்தின. 

நான் அம்மாவட்ட எம்.பி.என்ற அடிப்படையில் கன்னியா வெந்நீரூற்று விடயத்தில் தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துமாறு கூறினேன். இதனையடுத்து நான் இனமோதலையும் இனவாதத்தையும் தூண்டுவதாக இந்த அமைப்புக்கள் என் மீது குற்றம் சாட்டியுள்ளன. நாம் இம்மாவட்டத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் வாக்குகளையும் பெற்றவன் என்ற அடிப்படையில் இது எனது சிறப்புரிமையை மீறுவதாகவுள்ளது. 

அத்துடன் எதிர்வரும் 31 ஆம் திகதி மீண்டும் ஒரு குழப்ப நிலையை அப் பகுதியில் ஏற்படுத்த இவர்கள் முயற்சிக்கின்றனர். இவர்களின் செயற்பாடு திருகோணமலையில் இன மோதலை  ஏற்படுத்தினால் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்டுள்ள அமைதிக்கு அழிவையே ஏற்படுத்தும்.

 

https://www.virakesari.lk/article/61222

Link to comment
Share on other sites

23 hours ago, ampanai said:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார். 

அப்பிடியே இவர் சொன்ன விஷயத்தை திருப்பி போட்டா உண்மை உரைக்கப்படும்!

Link to comment
Share on other sites

தொல்லியல் திணைக்களம் தான் இவற்றுக்கு வித்திடுகின்றது...

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

சைவ யாத்திரிகளை சிங்கள காவல்துறையும், குழுக்களும் மிரட்டினார்கள் 

[Fri, 13 Sep 2019, 20:04 GMT]

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.