Jump to content

மொரோக்கோ ஒட்டகமும் நானும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டு குடும்பத்தோடு மொரோக்கோ ( Morocco ) போய்வந்தது. ஆனால் அதை பயனாக கட்டுரையாக எழுதும் மனநிலை இல்லை ஆதலால் அங்கு நடந்த ஒருசில விடயங்களை மட்டும் எழுதுகிறேன். அங்கு மூன்று நகரங்களுக்குச் சென்றிருந்தோம். முதலில் சென்றது ( Rabat ) ராபற் என்னும் நகருக்கு. அங்கு நாம் தங்கி இருந் இடம் மெதீனா (medina ) என்று அழைக்கப்பட்டது.

சுற்றிவர பிரமாண்டமான கோட்டைச் சுவர்கள் போன்ற மதில்களின் உள்ளே வீடுகள் தொடராக அமைக்கப்பட்டிருந்தன. முற்காலத்தில் படையெடுப்புக்களுக்குப் பயந்து,தம் பெண்கள் பிள்ளைகளைக் காப்பதற்காக இப்படியான அமைப்புக்களையே மொறோக்கோ இன மக்கள் கட்டியிருந்தார்கள். வீடுகள் நாற்சார் வீடுகள் போல் தொடராகக் கட்டப்பட்டிருந்ததால் அவற்றுக்கான வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கு மேற்தளமே பயன்பட்டது. கரையோரமாக இருக்கும் வீடுகளைத் தவிர மற்றவருக்கு வெளிப்பக்க யன்னல் கிடையாது.  வீடுகள் இரு மாடிகள் அல்லது மூன்று மாடிகளைக் கொண்டதாகவும் இருந்தது. மழை , குளிர் காலங்களில் அவற்றிலிருந்து தப்ப மேற் பரப்பில் மூடுவது போன்றும் வெய்யில் காலத்தில் திறப்பது போன்றதுமான தறப்பாள்கள் அல்லது தகரங்களாலான தடுப்புக்கள் இருந்தன.

கிட்டத்தட்ட ஆயிரம் வீடுகள் அதற்குள் இருந்தது. சிறிய ஒழுங்கையால் போய்த்தான் வீடுகளை அடையவேண்டும். எத்தனையோ தடவைகள் இடதும் வலதுமாகத் திரும்பித்தான் நாங்கள் தங்க்க்கும் இடத்தை அடைந்தோம். சிறியவர்கள் சிலர் மட்டும் பந்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். அந்தச் சிறிய இடம் தான் அவர்களுக்கு விளையாடுவதற்கு ஏற்றாற்போல் இருந்தது. பெரிய காணி பூமிகள் கொண்ட எமது நாடு அந்த நேரத்தில் என் நினைவில் வந்துபோனது.

நாம் தங்கி இருந்த இடம் முன்னர் மன்னனின் அமைச்சர் தங்கிய இடம் என்று கூறி ஒரு பிரெஞ்சு குடும்பம் அதை வாங்கி பராமரித்து வருகின்றது. வீடு முழுவதும் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதனால் வெய்யில் காலத்துக்கு எந்தவிதக் குளிரூட்டிகளும் தேவையற்ற ஒரு இடமாக மிக அழகாகக்  கட்டப்பட்டிருந்தது. மொட்டை மாடியை  உணவகமாக்கி இருந்தனர். சுற்றிவர அழகாக செடி, கொடி மரங்களுடன் செவ்வரத்தம் பூக்கன்றுகள் நிறைந்தும் காணப்பட்டன.

மூன்று நாட்கள் நாம் அங்கு தங்கி இருந்தோம். முதல் நாள் அந்தப் பிரெஞ்ச் பெண்ணே எமக்குக் காலை உணவைப் பரிமாறினார். மிக நன்றாக இருந்தது உணவுகள். மதியமும் இரவு உணவும் வெளியே. அங்கு வாழும் மக்களுக்கு தொழில் வியாபாரம் மட்டும்தான். அந்த மதிற் சுவரின் உள்ளேயே தொடராகக் கடைகள். அத்தனை வகையான பொருட்களும் அங்கே இருந்தன. வழமைபோல் சுற்றுலாப் பயணிகளைக் கண்டவுடன் அதிக விலை கூறுவதும் வழமைபோல் நடந்தது.

முதல்நாள் அவற்றைச் சுற்றிப்பார்த்துவிட்டு அடுத்தநாள் வெளியே உள்ள அவர்களின் மன்னரின் மாளிகை மியூசியம் போன்றவற்றையும் பார்த்துவிட்டு இன்னொரு பகுதிக்குச் சென்றோம். அங்கு பேரீச்ச மரங்களும் பலவகையான பூங்கன்றுகளும் நடப்பட்டுச் சோலையாகக் காட்சியளித்தது. வானுயர்ந்த சுவர்களினூடே நடந்து படிகளில் ஏறி மேலே சென்றால் அழகிய கடலும் கரையும் காட்சியளிக்க வியந்தபடி பார்த்துக்கொண்டு நின்றோம். மன்னரும் அவரின் பெண்கள், பிள்ளைகள் மட்டும் முன்னர் பார்க்கும் இடமாக இருந்தது இப்பொழுது அனைவரும் பார்க்கும் படியாக இருந்தது.

நாங்கள் சென்றபோது முப்பது பாகை வெப்பநிலையுள்ளேயே இருந்ததால் பெரிதாக வெய்யில்  எம்மைத் தாக்கவில்லை. இஸ்லாமிய நாடாக இருந்ததால் பிள்ளைகள் நான் எல்லோரும் சுடிதார் உடைகளையும் அங்கு கொண்டு போயிருந்தோம்.  அங்கத்தையைப் பெண்கள் ஆண்கள் எல்லோரும் நன்றாக நட்பாகக் கதைத்தனர்.  

மூன்றாம் நாள் காசா பிளங்கா ( Casa  Blanca ) என்னும் ஊருக்கு தொடருந்தில் சென்றோம். மூன்று மணி நேரம். முதலே இடம் பதிவு செய்திருந்ததால் எப்பிரச்சனையும் எழவில்லை.  ஆனாலும் நாம் ஏறும்போது நாம் பதிவு செய்த இடத்தில் வேறு மூவர் அமர்ந்திருந்தனர். நாம் எமது இடம் என்றதும் எழுந்து சென்றுவிட்டனர். ஒருமணிநேரம் பொதுவாகக் கதைத்துக்கொண்டும் வெளியே புதினம் பார்த்துக்கொள்வதுமாய் நேரம் போக, பின்னர் எதுவுமற்ற வெட்டை வெளியில் எதைப் பார்ப்பது என்று தெரியாது பிள்ளைகள் கொண்டுவந்த காட்ஸை எடுத்து விளையாடி ஒரு மணி நேரத்தைக் கடத்த எனக்கு நித்திரை தூங்கத் தொடங்கிவிட்டது. நான் நித்திரை கொள்ளப்போறன் என்றவுடன் இனிக் காட்ஸ் விளையாடியது போதும் எனப் பிள்ளைகளும் தூங்கத் தொடங்க மனிசன் மட்டும் தூங்காமல் எமக்குக்காவல் இருந்து தொடருந்து நின்றதும் எழுப்பினார். நாம் போனில் அலாம் வைத்ததுதான் எனினும் மனிசன் தூங்கவில்லை.

அங்கு சென்றபோது கடும் வெய்யில் 35 பாகை செல்ஸியஸ். முதலில் உலகின் மூன்றாவது பெரிய மசூதி ஒன்று அங்கே இருப்பதாகவும் ஒரு இருப்பது நிமிடத்தில் நடந்து போகலாம் என்றும் மக்கள் கூற நடக்காத தொடங்கினோம். பெரிதாக ஆள் நடமாட்டம் இல்லை. ஆங்காங்கே சில கட்டடங்கள் காணப்பட்டாலும் வெயில் காரணமாக யாரையும் வெளியே காணவில்லை. எனக்கோ இந்தச் சுட்டெரிக்கும் வெய்யிலில் இதைக் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டுமா என்ற மனநிலை. ஆனாலும் அதை வெளிக்காட்டாது அவர்களோடு நடக்க தூரத்தே பெரிய தூபி ஒன்று தெரிகிறது. நேரம் மதியம் பன்னிரண்டு மணி. கிட்ட நெருங்க நெருங்க அதன் பிரமாண்டமும் அதைக் கட்டியுள்ள இடமும் கண்ணைக் கவர்கின்றது. மெக்கா மெதீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் கூடும் மசூதி அதுதான் என்கின்றனர்.

Hassan 11 mosque என்று அழைக்கப்படும் அம் மசூதி ஏழு ஆண்டுகள் மூவாயிரம் வேலையாட்களை வைத்து இரவுபகல் பாராது கட்டப்பட்டதாகக் கூறினார். கால்களைக் கழுவதற்கென்றே பல அழகியவேலைப்பாடுடன் இடங்களைத் தயார் செய்துள்ளனர். உள்ளே 25 ஆயிரம் பேரும் வெளியே கிட்டத்தட்ட 80 ஆயிரம் பேரும் நிற்கமுடியும்படியாக இடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த Architect தான் இதை வடிவமைதந்துள்ளாராம். உள்ளே உள்ள வேலைப்பாடுகளும் ஒலி அமைப்புக்களும் ஆச்சரியமாக இருந்தன.

பார்த்து முடிய சரியான களைப்பும் பசியும் எடுக்க அக்கம்பக்கம் எந்தக் கடைகளோ உணவகங்களோ இல்லை. கொண்டுபோன தண்ணீரைக் குடித்துவிட்டு கடற்கரை ஓரமாக நடந்து கற்களில் ஏறி அமர்ந்துகொண்டோம். கடற்கரையில் பல இளவட்டங்கள் தான் அமர்ந்திருந்தனர். அதற்குப் பக்கத்தில் சில பெட்டிக் கடைகள் போன்று இருத்தாலும் சுத்தமாக இல்லாததால் நாம் அங்கே எதையும் வாங்கவில்லை.

ஒரு அரை  மணிநேரம் சென்றபின் எழுந்து வீதி ஓரம் சென்றபின் ஒரு டாக்சியை மறித்தோம். அது நிற்கவில்லை. தொடர்ந்து நடந்துகொண்டே போன டாக்ஸிகளை மறிக்க எவையுமே நிற்காது செல்ல என்னடா இது என்று எரிச்சல் வந்தது. சிறிது தூரம் நடந்தபின் ஒருவர் காரை நிப்பாட்டிவிட்டு இறங்க மக்கள் அவரிடம் எமக்குடாக்ஸி வேண்டும் என்று கூற அவர் உடனே தொலைபேசியை எடுத்து யாருடனோ கதைத்தவாறே நின்றுவிட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில் டாக்ஸி வரும் என்று கூறியபடி எம்முடன் உரையாடாத தொடங்கிவிட்டார். ஆனாலும் எனக்கோ சந்தேகம். ஏன் அவர் இதில போற டாக்ஸியை நிப்பாட்டாது ஏன் யாருக்கோ போன் செய்தவர் என்று மக்களிடம் கேட்க, அம்மா நாங்கள் ஐந்துபேர். எங்களை அவங்கள் கடத்திக்கொண்டு போகேலாது. அவருக்குத் தெரிஞ்ச கார் காரனைக் கூப்பிடுறார் போல என்று விட்டு தன பாட்டுக்கு அவருடன் பேசிக்கொண்டு நிற்க டாக்ஸி வந்துவிட்டது.

அங்குள்ள மிகப் பெரிய சொப்பிங் மோலான  Morocco Mall என்று அழைக்கப்படும் சொப்பிங்  சென்டருக்கு வந்து சேர்ந்தோம். அதன் நடுவே மிகப்பெரிய Aquarium ஒன்று அமைக்கப்பட்டிருந்தது பார்ப்பதற்கு அழகாகஇருந்தது. பெரிதாக mall என்னைக் கவரவில்லை. ஆனாலும் அங்கங்கே நடன, இசை நிகழ்வுகள்நன்றாக இருந்தன. கடைகளில் பொருட்களின் விலை மிக அதிகம். லண்டனில் இல்லாத கடைகளும் பொருட்களுமா என்று மனத்தைத் தேத்தியபடி மத்திய உணவை உண்பதற்காக மேல் மாடிக்குச் சென்றால் அது அழகாக இல்லை. உணவுகளை பார்த்தாலும் வாங்கி உண்ணவேண்டும்போல் ஆவலைத் தூண்டவில்லை. எதையாவது வாங்கி வாருங்கள் என்றுவிட்டு  போய் ஒரு  இடத்தில் இருந்துவிட்டோம் நானும் கணவரும்.  

36808282_10210271821585535_7608207584708

36755028_10210271821865542_8375840702906

36712481_10210271821025521_2877058227764

67414568_2076882452621133_34856181268238

67229153_10212440804088742_8627929882745

67276829_10212440808968864_1652248131787

67930762_10212440809568879_5186846104309

67368061_10212440811968939_3581244680316

67538693_10212440813448976_1525694334840

67536473_10212440814168994_1925187797300

67570733_10212440814569004_5796754416941

67311993_10212440806208795_3336370740592

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோன் couscous, tagine சாப்பிடீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

மொரோக்கோன் couscous, tagine சாப்பிடீர்களா?

ஓம் ஓம் ஒருநாள் உண்டதுதான்

67683189_10212440989253371_4107384509152

67413723_10212440999853636_9001787961020

67304571_10212441000373649_7242843611715

67431256_10212440998253596_2380142679259

67269098_10212441002373699_8986480280965

67297082_10212441002453701_4108584892382

67414373_10212441002173694_1262768084930

67425466_10212441004213745_2461299698384

67396444_10212441004333748_3460691863214

67220292_10212441004613755_4000531340645

67579326_10212441007133818_6781924849838

66473844_10212441007373824_2959873361963

67502410_10212441008533853_6910825717563

67600963_10212441008893862_3894116980357

67456574_10212441009973889_9573231276693

67802945_10212441010693907_1276180550536

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.