கிருபன்

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

Recommended Posts

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

July 29, 2019

polythene.jpg?resize=611%2C320யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை பேண முடியும். அதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடியும். அதன் மூலம் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்த முடியும்.

இந்த செயற்பாட்டை மாணவர்கள் மத்தியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளோம். அதற்கு மாணவர்கள் பூரண ஆதரவை தருவதற்கு முன் வந்துள்ளனர்.அந்த வகையில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் சிற்றுண்டி சாலையில் பொலித்தீன் பாவனையை இல்லாமல் செய்து அதற்கு மாற்றீடாக வாழையிலை , தாமரையிலை ஆக்கியவற்றை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீனுக்கு தடை

http://globaltamilnews.net/2019/127512/

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, கிருபன் said:

யாழ்.பல்கலைக் கழகத்தில் பொலித்தீன் பாவனைகளை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலை கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.

நல்ல முயற்சி!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, Paanch said:

படித்ததினால் அறிவுபெற்றோர் ஆயிரமுண்டு. அதில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் ஒன்று.

வாழ்த்துக்கள்.!!

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா எந்த கொம்பனாலும் பொலித்தீனை தடை செய்ய முடியாது  ஏனென்றால் பொலித்தீன் மனிதனுக்குள்  புகுந்த ஓர் பூதம் எனலாம். 

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

Share this post

Link to post
Share on other sites
30 minutes ago, Paanch said:

தடைசெய்ய முடியாவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும் அதுவும் ஒரு வெற்றிதான்.

உங்களுக்குள் பூதம் இருப்பதுபோல் தெரிகிறது கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். 😌

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

eceea5148f3a9a5df219bbbaa386c110.jpgimage-450w-467461370.jpg

Quellbild anzeigen

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் இது சாத்தியம் இல்லையென்பதை சொல்ல வந்தேன்  கறி கட்டுவது  கைதுடைக்கும் ரிசு பேப்பரும் பொலித்தீன் கவரில் தான் வரும் கறி கட்டுவது , மீன் வாங்குவது  ,மரக்கறி வாங்குவது முதல் அனைத்திலும் முன்நிற்பது இந்த பொலித்தீன்தான் இதே திரியில் இன்னும் ஓராண்டு கழிந்து எந்த நிலையென்பதை நான் கேட்பேன் மறக்க வேண்டாம் பாஞ் 

இந்த பொலித்தின் தடையை  அமுலாக்கி தோல்வியும் கண்டோம் என்ற ரீதியில் சொன்னது

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

Edited by Lara

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Paanch said:

இத்தனை வளர்ச்சிபெற்ற அமெரிக்காவில் இன்றும் அனேகமாகப் பாவனையில் இருப்பது கடதாசிப் பைகள்தான். 

கடதாசிப்பைகள் காருக்கும் வேனுக்கும் சரிவரும் கால்மிதித்து செல்லும் சைக்கிழுக்கும் , மோட்டார் சைக்கிழுக்கும் கடதாசிப்பை சரிவராது பாரம் மிகுந்த பொருட்களை வாங்கி சுமந்து செல்ல

அமெரிக்கா எங்கே இலங்கை  எங்கே வளர்ச்சி பெற்ற நாடுகளின் குப்பைகளை கூட இறக்குமதி செய்து  இங்கே அதை  உக்க அல்ல எரிக்கச்செய்திருக்கிறார்கள் அத்தனையும் பிளாஸ்திக்கு, மனித எச்சங்களாம், பொலித்தீன்கள் ஆஸ்பத்திக்கழிவுகள் இதுதான் இலங்கை 

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை

4 hours ago, Lara said:

பாஞ்ச் அவர்கள் கூறியது போல் கடதாசிப்பைகள் பயன்படுத்தலாம். துணிப்பைகளையும் பயன்படுத்தலாம்.

அத்துடன் உக்கக்கூடிய பொலித்தீன் பைகளையும் தயாரிக்கலாம். புலிகள் காலத்தில் இருந்தது போல்.

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 1. நெகிழி பைகளை விட மாற்று பொருள்களை, இயற்கையாக மீள் சுழற்சிக்கு உள்ளாகும் பொருட்களை  மலிவான விலையில் தரல்  வேண்டும் 
 2. அங்காடிகளில் சொந்த பைகளை, நெகிழி உட்பட, கொண்டுவருபவர்களுக்கு ஒரு பண சலுகை தரப்படல் வேண்டும்  
 3. பாடசாலைகளில் நெகிழி  பற்றிய அறிவை விழிப்புணர்வை வளர்க்க வேண்டும் 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கடதாசி , துணிப்பையை  பயன்படுத்தலாம் ஆனால் மக்கள் தான் அதைசெய்ய வேண்டும்  ஒவ்வொரு வீட்டிலும் மாற்றம் வந்தால் தான் உண்டு இல்லையேல் இந்த பொலித்தீன் , பிளாஸ்திக்கு பாரிய சவால்

புலிகள் காலத்தில் ஓர் நெருப்புப் பெட்டியை கூட பொலித்தீன் பையால் சுத்தி வச்சிருந்த காலமும் இருக்கு  , நனையாமல் இருக்க 

செய்தி தலைப்பில் கூறப்படுவது யாழ் பல்கலைக்கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்யும் முயற்சி. எனவே மாணவர்களுக்கு அதுபற்றி அறிவுறுத்துவார்கள்.

நான் சொல்ல வந்தது புலிகள் காலத்தில் உக்கக்கூடிய பொலித்தீன் பைகள் தயாரித்தது போல் தயாரித்தால் அவற்றை பேப்பர், துணிப்பைகள் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பயன்படுத்தலாம்.

நாடு முழுக்க பொலித்தீன் பயன்பாட்டை முற்றாக தடுக்க முடியாது. வெளிநாடுகளில் கூட கடதாசிப்பைகளுடன் பிளாஸ்டிக் பைகளும் பாவனையில் உள்ளது.

ஆனால் பைகளுக்கு பணம் அறவிடுவார்கள். அதனால் பலர் மீண்டும் மீண்டும் பணம் கொடுத்து பைகளை வாங்காமல் தாம் ஒரு தடவை வாங்கிய பையை வைத்து மீண்டும் பயன்படுத்துவர்.

இலவசமாக வழங்கப்பட்டால் எறியப்படும் பைகள் அதிகமாக இருக்கும்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
8 hours ago, Lara said:

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

Share this post

Link to post
Share on other sites

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

traditional-palm-leaf-packs-box-500x500.

👌

ஓலைப்பெட்டிகளையெடுத்து பெண்டுகள் கடைக்கு செல்லமாட்டார்கள் இப்ப உள்ளவர்கள்   கன்ட் பேக் தான் பேசனாம்

 • Sad 1

Share this post

Link to post
Share on other sites
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அது போக யாழ்ப்பாணத்தில் குப்பை கொட்டும் இடங்கள் மேடுகளாக இருக்கிறது அத்தனையும் பொலித்தீன்கள் அந்த இடம் பெயர் ஞாபகம் இல்லை.

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல்கலையில்  உள்ளவர்கள் அனைவரும் உடனே திருந்த மாட்டார்கள் பல்கலையில் பல சவால்கள் எடுப்பார்ர்கள் ஆனால் அது கிடப்பில் தான் இருக்கும் பல  மாணவர்களை கண்டாச்சு  கன நல்ல பொடியன்கள் இந்த யூனிவசிட்டி போய்த்தான் எல்லாவற்றையும் பழகித்து வருகிறானுகள் 

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

Share this post

Link to post
Share on other sites

ஆவின் பால் பாக்கெட் கவர்களை திரும்ப ஒப்படைத்தால் அதற்கு பணம் தருவோம் என ஆவின் அறிவித்துள்ளது. குப்பையில் பால் பாக்கெட் கவர்களை வீசுவதை தடுக்க இத்திட்டத்தை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும், மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், பால் உள்ளிட்ட குறிப்பிட்ட சில அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு விலக்கு அளித்தது.

Share this post

Link to post
Share on other sites
On 7/31/2019 at 12:52 AM, Paanch said:

ஆரம்பத்தில் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியபோது இவனுகளால் குருவி சுடவும் முடியுமா என்று பரிகசித்த நண்பர்களும் உண்டு, சொந்தங்களும் உண்டு. 

குருவி சுட்டவர்களும் உண்டு குருக்களை சுட்டவர்களும் உண்டு  கூட இருந்து விட்டு ஓடியவர்களும் உண்டு 

On 7/30/2019 at 10:33 PM, ஏராளன் said:

கல்லுண்டாய்வெளி அராலி எல்லைப்புறமாக ஓர் குப்பைமேடு இருக்கு.

இலங்கையில் பொலித்தீன் உற்பத்திக்கு தடை போட்டால் சரிவரும் தமிழ்நாட்டைபோல!

குண்டுகளே புலிகள் இல்லாத போது வந்து  வெடித்து விட்டது அவ்வளவு தடையிருந்தும் அத்தனையும் சீ 4 என்று சொல்கிற அதிசக்தி வாய்ந்தது அப்படீருக்க இந்த பொலித்தீன் அப்படி இலகுவில்  கட்டுப்படுத்த முடியாத ஒன்று 

உப்பளங்கள் இருந்தும் உப்பு இறக்குமதி இதுதான் இலங்கை 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.