Jump to content

ஞாயிறு வகுப்பு என்ற போர்வையில் யாழில் மீண்டும் மதமாற்ற முயற்சி: விரட்டியடித்த கிராமமக்கள்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

67803228_2497158487007140_3865635965590568960_n-696x452.jpg

பொன்னாலையில் ஆக்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) பிரதேச மக்களால் துரத்தியடிக்கப்பட்டது.

அந்த வீட்டை சுற்றிவளைத்த பிரதேச மக்கள், கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை துரத்தியுள்ளனர்.

கடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது.

ஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

யாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக்கும் குறித்த வீட்டுக்காரர் தமக்கு வீட்டை வழங்கினர் எனவும் கிராம சேவையாளரிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக கிராம சேவையாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தான் அனுமதி வழங்கியிருக்கவில்லை என்றார்.

இதையடுத்து அங்கு போதனையில் ஈடுபட்டிருந்தவரையும் அவரோடு வந்தவர்களையும் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு மக்கள் தெரிவித்தனர். அவர்கள் தாம் போகமாட்டார்கள் எனவும் மீண்டும் இங்கு வருவார்கள் எனவும் கூறினர்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்களை அவர்களை அச்சுறுத்தி வெளியேற்றினர். மீண்டும் ஊருக்குள் வந்தால் உரிய வகையில் கவனிக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டனர்.

67634509_2497158200340502_4068093577098428416_n-300x193.jpg67634509_2497158200340502_4068093577098428416_n-300x193.jpghttp://www.pagetamil.com/67197/?fbclid=IwAR099u7LUKjlfp-FBVaTGk-DVL0H6wVuCUUCCq6y372tB6USLwKV9DILXPY

67368453_2497158423673813_68160893432878 67634509_2497158200340502_40680935770984 67822342_2497158357007153_26974428500643

Link to comment
Share on other sites

  • Replies 114
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சைவ சமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

மறுவளமாக, பிறப்பால் சைவ சமயத்தவரான ஒருவர், தீட்சை பெறாவிட்டாலும், அவை சைவ சமயத்தில் இருந்து நீக்கிவிட முடியாது (excommunication).

அப்படி தீட்சை பெறாதவர், பல சமய அநுட்டானக்களில் பங்குபற்ற  முடியாதே தவிர, சைவ சமயம் என்ற சமயக் கட்டமைல் இருந்து ஒதுக்கி விட முடியாது.

அதனால், ஏனைய சமயத்தவர், தம்முடைய வழிபாட்டிடத்திற்கு ஒருவரோ அல்லது பலரோ சென்று, பகிரங்கமாக சமய மாற்றம் செய்யும் படி வேண்டிக் கேட்டலன்றி, எந்த நபவரையாவது வேறு எந்த முறையிலும் சமய மாற்றம்  முயல்வது, சமூகத்தினுள் வேண்டாத வக்கிர, விகார, குரோத   உணர்வுகளை ஏற்றப்படுத்தும்.

ஏற்கனவே, பிளவுகளால் ஓர் இனமாகஅழிந்து போயுள்ளோம்.

சமயத்தை வைத்து பிளவுகள் ஏற்றப்படத்துவதற்கு இடம் கொடுக்க முடியாது.

மறு வளமாக,   சாதி என்பதை தூக்கிப்பிடிக்கும் சைவ சமயத்தவரும், சமயம், கோவில்கள், வழிபாடு  என்பதில் தூக்கி எறியப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

24 minutes ago, Kadancha said:

சைவமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

நயன்தாரா பிரபுதேவாவுடனான காதலின் போது கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியிருந்தார். பின் காதல் முறிவு ஏற்பட்டதும் மீண்டும் கிறிஸ்தவராக மாறினார். 😎

எனவே சைவ/இந்து சமயத்தவரும் மதம் மாற்ற முடியும். ஆனால் ஏனைய மதத்தவர்கள் போல் செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வீடொன்றில் இருந்து தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட கிராம சேவகரின் அனுமதி தேவையா? நான் கேள்விப் படவில்லையே? இங்கே என்ன சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்று யாராவது விளக்குவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

சைவ சமயத்தவர்  இதை செய்வதில்லை.

சைவ சமயத்தில், தீட்ச்சை பெறுவதில் மூலம் மட்டும் சைவ சமயத்தவர் ஆகிவிட முடியாது.

மறுவளமாக, பிறப்பால் சைவ சமயத்தவரான ஒருவர், தீட்சை பெறாவிட்டாலும், அவை சைவ சமயத்தில் இருந்து நீக்கிவிட முடியாது (excommunication).

அப்படி தீட்சை பெறாதவர், பல சமய அநுட்டானக்களில் பங்குபற்ற  முடியாதே தவிர, சைவ சமயம் என்ற சமயக் கட்டமைல் இருந்து ஒதுக்கி விட முடியாது.

அதனால், ஏனைய சமயத்தவர், தம்முடைய வழிபாட்டிடத்திற்கு ஒருவரோ அல்லது பலரோ சென்று, பகிரங்கமாக சமய மாற்றம் செய்யும் படி வேண்டிக் கேட்டலன்றி, எந்த நபவரையாவது வேறு எந்த முறையிலும் சமய மாற்றம்  முயல்வது, சமூகத்தினுள் வேண்டாத வக்கிர, விகார, குரோத   உணர்வுகளை ஏற்றப்படுத்தும்.

ஏற்கனவே, பிளவுகளால் ஓர் இனமாகஅழிந்து போயுள்ளோம்.

சமயத்தை வைத்து பிளவுகள் ஏற்றப்படத்துவதற்கு இடம் கொடுக்க முடியாது.

மறு வளமாக,   சாதி என்பதை தூக்கிப்பிடிக்கும் சைவ சமயத்தவரும், சமயம், கோவில்கள், வழிபாடு  என்பதில் தூக்கி எறியப்படவேண்டும்.

கடஞ்சா, நான் கிறிஸ்தவன் என்பதால் நான் கேட்பது விமர்சிக்கப் படும் இங்கே! ஆனால் நியாயம் யார் சொன்னாலும் ஒன்று தான்.  இங்கே சட்டவிரோதமாகவும் ஒன்றும் நடக்கவில்லை, குரோதம் தூண்டப்பட்டிருப்பது யாரால்? சும்மா தம் பாட்டில் செபிப்போரையும் துரத்துவது தான் இப்படியான மதங்களில் இருக்கும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய அமாரிக்க நாடுகளிலேயே இந்த மாதிரி அமைப்புகள் மிகவும் வெற்றி பெற்றுவருகிறார்கள்.இலங்கையில் நீண்டகாலமாகவே மிகவும் பலமாக காலூன்றி ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்ற மாதிரி கஸ்டப்பட்ட இடங்களில் உதவி என்ற போர்வையில் வெற்றி பெறுகிறார்கள்.

ஒரு காலத்தில் படித்தவர்களையும் படிப்புக்காகவும் மதம் மாற்ற முடிந்தவர்களுக்கு படிக்காதவர்கள் ஏழைகள் கஸ்டப்பட்டவர்களை மனம் மாற்றுவது அவ்வளவு கஸ்டமல்ல.

மதம் மாறுபவர்களுக்கும் எமது அமைப்புக்களோ சமையமோ அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய போவதில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

இலங்கையில் வீடொன்றில் இருந்து தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட கிராம சேவகரின் அனுமதி தேவையா? நான் கேள்விப் படவில்லையே? இங்கே என்ன சட்டம் மீறப்பட்டிருக்கிறது என்று யாராவது விளக்குவீர்களா?

தனிமனிதர்கள் தமது வழியில் கடவுளை வழிபடுவதாக கூறப்படவில்லை. ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. (மற்றவர்களுக்கு போதனை). 

வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை பயன்படுத்துவதற்கு கிராம சேவகரின் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

கடஞ்சா, நான் கிறிஸ்தவன் என்பதால் நான் கேட்பது விமர்சிக்கப் படும் இங்கே! ஆனால் நியாயம் யார் சொன்னாலும் ஒன்று தான்.  இங்கே சட்டவிரோதமாகவும் ஒன்றும் நடக்கவில்லை, குரோதம் தூண்டப்பட்டிருப்பது யாரால்? சும்மா தம் பாட்டில் செபிப்போரையும் துரத்துவது தான் இப்படியான மதங்களில் இருக்கும் மக்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயல்.

கடவுள் மதங்கள்  சார்ந்து எனது நிலைப்பாடு வேறு

ஆனால் கிராமங்களுக்குள்  சென்று  ஏழை  மக்களை ஆசை  காட்டி  தமது  மதங்களுக்குள்  எவரிழுத்தாலும்

அடித்து  துரத்தப்பட  வேண்டியவர்களே...

சட்ட விரோதமில்லை அல்லது விரோதமானது என்பதை பற்றி இப்பொது கூறமுடியாது?

ஆனால், சமூக அமைதியும், ஒழுங்கும்  என்பது சட்டதிற்கு அப்பாற்றப்பட்டது.

உதாரணமாக, அங்கு வீடுகளில்  வைத்து இப்படியான ஒழுங்கமைப்பட்ட போதனைகள், சமய போதனைகள் , அநுட்டானங்களை சைவ சமயத்தவர் செய்வதில்லை.

அப்படியான எல்லாமே பொது இடத்திலேயே நடைபெறுகிறது.  

அவரவர வீடுகளில், அங்கிருப்பவர்களே சமய அநுட்டானகளை (இது ஒழுங்கமைக்கப்பட்டது இல்லை) செய்கிறார்கள்.

சமயத்தை  பொறுத்தவரையில், அவரவர் sensitivities மதிக்கப்படவேண்டும்.   

ஓர் கேள்வி, ஓர் சர்ச்சைக்குரிய போதனை அல்லது பிரார்த்தனை இல்லை எனில், ஏன் கைவிடப்பட்ட வீட்டில் இது மேற்க்கொள்ளப்பட வேண்டும்?

கிராம சேவையாளர் இங்கு பொய் சொல்கிறாரா?

மதம்மாற்றும் போதனை என்றே செய்தி சொல்கிறது. செய்தியாளர் பொய் சொல்கிறாரா?

சரி, அப்படி மதம் மாற்றும் படி அவர்கள் (போதனைக்குட்பட்டவர்கள்) வலிந்து கேட்டிருந்தால், பகிரங்கமாக செய்ய வேண்டியது தானே? 

குறிப்பு: மதம் மாறும் விருப்புரிமையையும் விட்டுக்கொடாமலே எனது முதல் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

கடவுள் மதங்கள்  சார்ந்து எனது நிலைப்பாடு வேறு

ஆனால் கிராமங்களுக்குள்  சென்று  ஏழை  மக்களை ஆசை  காட்டி  தமது  மதங்களுக்குள்  எவரிழுத்தாலும்

அடித்து  துரத்தப்பட  வேண்டியவர்களே...

கடவுள் மதங்கள் சார்ந்தது அல்ல, ஒருவனது ஆன்மீகம் சார்ந்தது என்பதே சரி!
ஆனால், கட்டாய மதமாற்றம் என்பது தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் வழியில் செய்யப் பட்டாலொழிய அது கட்டாய மதமாற்றம் அல்ல என்பது என் நிலைப்பாடு! ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது? அது இலங்கையில் சட்ட விரோதமானதும் அல்லவே? இங்கே நடந்தது ஏதோ நல்ல விடயம் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கும்பல் நீதி என்ற விஜிலான்ரிசம் விரைவில் எங்களிடையே இருக்கும் மதவெறியர்களால் சிறுபான்மைக் குழுக்கள் மீது வன்முறையாக துஷ்பிரயோகம் செய்யப் படுமென நான் நினைக்கிறேன்.

6 minutes ago, Kadancha said:

சட்ட விரோதமில்லை அல்லது விரோதமானது என்பதை பற்றி இப்பொது கூறமுடியாது?

ஆனால், சமூக அமைதியும், ஒழுங்கும்  என்பது சட்டதிற்கு அப்பாற்றப்பட்டது.

உதாரணமாக, அங்கு வீடுகளில்  வைத்து இப்படியான ஒழுங்கமைப்பட்ட போதனைகள், சமய போதனைகள் , அநுட்டானங்களை சைவ சமயத்தவர் செய்வதில்லை.

அப்படியான எல்லாமே பொது இடத்திலேயே நடைபெறுகிறது.  

அவரவர வீடுகளில், அங்கிருப்பவர்களே சமய அநுட்டானகளை (இது ஒழுங்கமைக்கப்பட்டது இல்லை) செய்கிறார்கள்.

சமயத்தை  பொறுத்தவரையில், அவரவர் sensitivities மதிக்கப்படவேண்டும்.   

ஓர் கேள்வி, ஓர் சர்ச்சைக்குரிய போதனை அல்லது பிரார்த்தனை இல்லை எனில், ஏன் கைவிடப்பட்ட வீட்டில் இது மேற்க்கொள்ளப்பட வேண்டும்?

கிராம சேவையாளர் இங்கு பொய் சொல்கிறாரா?

மதம்மாற்றும் போதனை என்றே செய்தி சொல்கிறது. செய்தியாளர் பொய் சொல்கிறாரா?

சரி, அப்படி மதம் மாற்றும் படி அவர்கள் (போதனைக்குட்பட்டவர்கள்) வலிந்து கேட்டிருந்தால், பகிரங்கமாக செய்ய வேண்டியது தானே? 

குறிப்பு: மதம் மாறும் விருப்புரிமையையும் விட்டுக்கொடாமலே எனது முதல் கருத்து.

 வலிந்து கேட்டால் செய்ய வேண்டும், பகிரங்கமாகச் செய்ய வேண்டும் இல்லா விட்டால் அது "சட்ட விரோதமாக வாய்ப்புண்டு" இதெல்லாம் உங்கள் perceptions  மட்டுமே!  அப்படி ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன? மற்றவருடைய உணர்வுகளை மதிக்க வேண்டுமென அவாவும் உங்களுக்கு இப்படியான தனியார் வீட்டில் வெளிக்கும்பல் போய் ஒரு மதக் குழுவை அச்சுறுதியது அவர்களது மதம் சார்ந்த நபர்களின் உணர்வுகளை மதிக்காத செயல் என்பது தெரியவில்லை! ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கடவுள் மதங்கள் சார்ந்தது அல்ல, ஒருவனது ஆன்மீகம் சார்ந்தது என்பதே சரி!
ஆனால், கட்டாய மதமாற்றம் என்பது தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் வழியில் செய்யப் பட்டாலொழிய அது கட்டாய மதமாற்றம் அல்ல என்பது என் நிலைப்பாடு! ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது? அது இலங்கையில் சட்ட விரோதமானதும் அல்லவே? இங்கே நடந்தது ஏதோ நல்ல விடயம் என்று தான் பலர் நினைக்கிறார்கள். ஆனால் இந்த கும்பல் நீதி என்ற விஜிலான்ரிசம் விரைவில் எங்களிடையே இருக்கும் மதவெறியர்களால் சிறுபான்மைக் குழுக்கள் மீது வன்முறையாக துஷ்பிரயோகம் செய்யப் படுமென நான் நினைக்கிறேன்.

மன்னிக்கணும்

செய்தவர்கள் அந்தக்கிராம  மக்கள்

புலத்திலிருந்து  சென்றவர்களல்ல....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Lara said:

தனிமனிதர்கள் தமது வழியில் கடவுளை வழிபடுவதாக கூறப்படவில்லை. ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை செய்ததாக கூறப்பட்டிருக்கிறது. (மற்றவர்களுக்கு போதனை). 

வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை பயன்படுத்துவதற்கு கிராம சேவகரின் அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

அப்படியெந்த அனுமதியும் தேவையில்லை என்று தான் எனக்குத் தெரிந்த வடக்கு வாழ்க்கை சொல்கிறது. இங்கே "மற்றவர்கள்" என்போர் யார்? அவர்கள் "சைவர்கள்" என்று அடையாள அட்டை வைத்திருந்த ஆட்களாமா?

3 minutes ago, விசுகு said:

மன்னிக்கணும்

செய்தவர்கள் அந்தக்கிராம  மக்கள்

புலத்திலிருந்து  சென்றவர்களல்ல....

இந்தக் கருத்தில் எது நான் புலத்தில் இருந்து சென்றோர் செய்ததாக உங்களுக்கு விளக்கம் கொடுத்தது? எனக்கு பிரெஞ்சு மொழியில் எழுத வராது, மன்னிக்கவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இந்தக் கருத்தில் எது நான் புலத்தில் இருந்து சென்றோர் செய்ததாக உங்களுக்கு விளக்கம் கொடுத்தது? எனக்கு பிரெஞ்சு மொழியில் எழுத வராது, மன்னிக்கவும்!

இல்லை

தாயக மக்களின் முடிவுகளுக்கு 

புலத்தவர்  கட்டுப்படணும்  என்பது  தானே  தங்கள் பல  நாள்  கருத்து

Link to comment
Share on other sites

கும்பல் நீதி வழங்குவதை நான் பொதுவாக ஆதரிப்பதில்லை. ஆனால் இப்படியான விடயங்களில் என் நிலைப்பாடும் மாறுகின்றது.
இப்படியாக ஒரு வீட்டை / மைதானத்தை வாடகைக்கு/பொறுப்புக்கு எடுத்து நோய் தீர்க்கின்றோம், பிணி தீர்க்கின்றோம் என்று மாஜிக் காட்டி (அதற்கு என்றே நடிப்பதற்கும் ஆட்களை செட் பண்ணி) மக்களை ஏமாற்றும் இந்த கூட்டத்திற்கு பின்னால் நன்கு நிறுவனப்படுத்தப்பட்ட பலமுள்ள அமைப்புகள் இருக்கின்றன. அரசாங்கங்கள் இருக்கின்றன. நன்கு செலவழிக்க கூடிய பணபலம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. இவற்றினை சட்ட ரீதியில் எதிர்ப்பது என்றால், தடுத்து நிறுத்துவது என்றால் இவற்றிற்கு நிகரான பலமுள்ள அமைப்புகளால் தான் முடியும்.சாதாரண மக்களால் முடியாது. அவர்கால் செய்யக் கூடியது அடித்து விரட்டுவது மட்டுமே.

அடுத்த முறை வெறும் வெருட்டல்கள் மட்டுமல்லாமல் செருப்பால் அடித்து விரட்டுமாறு ஆலோசனை கூறி  விரட்டியவர்களை பாராட்டி வாழ்த்தும் தெரிவிக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இல்லை

தாயக மக்களின் முடிவுகளுக்கு 

புலத்தவர்  கட்டுப்படணும்  என்பது  தானே  தங்கள் பல  நாள்  கருத்து

தாயக மக்களில் வாள்வெட்டுக் குழு, கஞ்சா குழு இப்போது இது போன்ற வேலையற்று வெட்டியாக திரியும் "மதமாற்றத் தடுப்புக் குழு" எனப் பல குழுக்கள் உண்டு! அவற்றையெல்லாம் நாம் தலை சாய்த்து ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று நான் எழுதிய நினைவு எனக்கு இல்லை. ஆனால் அரசியல் சார்ந்து தங்கள்  தலைமையை தாயக மக்கள் தெரிவு செய்தால் அதற்கு இங்கிருந்து கொக்கரித்தல் சரியல்ல என்பதே எனது கருத்து! இதை விட நான் ஏதும் மாறி எழுதியிருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

நான் கவனித்த ஒரு விடயம், இந்த தமிழ் தேசியம் என்று தில் காட்டித் திரிவோரில் பெரும்பாலோருக்கு  தமிழ் மொழியைக் கிரகித்தலே பெரிய சவாலாக இருக்கிறது! என்ன மர்மமோ தெரியவில்லை!  

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

அப்படியெந்த அனுமதியும் தேவையில்லை என்று தான் எனக்குத் தெரிந்த வடக்கு வாழ்க்கை சொல்கிறது. இங்கே "மற்றவர்கள்" என்போர் யார்? அவர்கள் "சைவர்கள்" என்று அடையாள அட்டை வைத்திருந்த ஆட்களாமா?

நாங்கள் வீடு மாறினாலே கிராம சேவகர் அலுவலகத்தில் விலாசம் மாற்ற வேண்டும். வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை இன்னொருவர் பயன்படுத்துவதானால் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதிலும் போதனைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

இங்கு யாரும் அவர்கள் கிராம சேவகரின் அனுமதி பெற்றார்களா என கேட்கவில்லை. அவர்களாக தானே தாம் பெற்றதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்த கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே அவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள்.

தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட்டார்கள் என நீங்கள் எழுதியதற்கு, அவர்கள் தங்கள் வழியில் வழிபடவில்லை மற்றவர்களுக்கு போதனை செய்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது என விளக்கம் தந்தேன். மற்றவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் தான் சைவர்களோ? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

கும்பல் நீதி வழங்குவதை நான் பொதுவாக ஆதரிப்பதில்லை. ஆனால் இப்படியான விடயங்களில் என் நிலைப்பாடும் மாறுகின்றது.
இப்படியாக ஒரு வீட்டை / மைதானத்தை வாடகைக்கு/பொறுப்புக்கு எடுத்து நோய் தீர்க்கின்றோம், பிணி தீர்க்கின்றோம் என்று மாஜிக் காட்டி (அதற்கு என்றே நடிப்பதற்கும் ஆட்களை செட் பண்ணி) மக்களை ஏமாற்றும் இந்த கூட்டத்திற்கு பின்னால் நன்கு நிறுவனப்படுத்தப்பட்ட பலமுள்ள அமைப்புகள் இருக்கின்றன. அரசாங்கங்கள் இருக்கின்றன. நன்கு செலவழிக்க கூடிய பணபலம் கொண்ட சக்திகள் இருக்கின்றன. இவற்றினை சட்ட ரீதியில் எதிர்ப்பது என்றால், தடுத்து நிறுத்துவது என்றால் இவற்றிற்கு நிகரான பலமுள்ள அமைப்புகளால் தான் முடியும்.சாதாரண மக்களால் முடியாது. அவர்கால் செய்யக் கூடியது அடித்து விரட்டுவது மட்டுமே.

அடுத்த முறை வெறும் வெருட்டல்கள் மட்டுமல்லாமல் செருப்பால் அடித்து விரட்டுமாறு ஆலோசனை கூறி  விரட்டியவர்களை பாராட்டி வாழ்த்தும் தெரிவிக்கின்றேன்.

உங்கள் கருத்தோடு நான் முற்றாக முரண்படுகின்றேன்! எல்லா மதத்திலும் இருக்கிற ஏமாற்றுக் காரர்கள் போலவே இவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நோயில் இருந்து விடுதலை என்றோ, அதிகம் பணம் தருகிறார்கள் என்றோ மதம் மாறினால் அது அவனது உரிமை! அதை ஒருவர் ஊக்குவித்தால் சட்டம் இருந்தால் முறையிடலாம்! இலங்கையில் முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் போன சட்டம் அது. நான் சொன்னது போல போதனையைத் தடுக்க வேண்டிய, அதுவும் இது போல அடித்து விரட்ட வேண்டிய தேவை இல்லை. இந்த ஆக்ரோஷத்தை ஆளில்லா வீடுகளில் இருந்து கஞ்சா புகைக்கும் இளைஞர்களிடம் ஏன் இந்த விஜிலான்ரிகள் காட்டுவதில்லை என யோசிக்கிறேன்! பயமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைவ/இந்து மத வழிபாடுகளில், கோவில்களில் சாதிய நடைமுறைகளினால் மக்களை பிரிக்கும்போது கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மக்கள் மாறுவதை தடுக்கமுடியாது.

ஊர்கூடி தேர் இழுக்க முடியாதபோது, அங்கே அவர்கள் எல்லோரையும் ஒன்றாக இணைத்து வழிபடுவதனால் மக்கள் இயல்பாகவே அங்கே போகின்றார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு உதவிக்கல்விப் பணிப்பாளராக உள்ள அண்ணன் சொன்னார் அவரவருக்கு அவரவர் பகுதியில் கோவிலை கட்டி கொடுத்தால் ஏன் பிரச்சனை வருகுது என்று! (நான் மனதில நினைச்சன் நீங்கள் பணிபுரியும் இடம் நல்லா வரும் என்று)

Link to comment
Share on other sites

சத்தியசாயி பாபா பஜனை யாழில் வீடுவீடாக செய்து படத்திலிருந்த வீபூதியும் சிவலிங்கமும் எடுத்து கொடுத்துக்கொண்டிருந்த போது யாரும் அவர்களை அடித்து விரட்டியதாகவோ அல்லது சட்டம் ஒழுங்கு பிரச்சணை பற்றி பேசியதையோ நான் கேள்விப்பட்டதில்லை. 

இந்துக்கள் (சைவர்கள்) இங்கு கங்கணம் கட்டி நிற்பது போதனை செய்வோர் கிறித்தவர்கள் என்பதானால் மட்டுமே.

இங்கு ஒரு மதவெறி இன்னொரு மதவெறியை எதிர்க்கின்றது. 

இரண்டும் எம்மை அழிவை நோக்கியே கொண்டு செல்லும்

Link to comment
Share on other sites

31 minutes ago, Justin said:

ஒருவன் காசுக்கு மாறட்டும், நம்பிக்கை வைத்து மாறட்டும் தெரிவை அவனிடமே விட்டு விடுங்கள்! ஒரு குழுவோ போதகரோ மதத்தை எடுத்துச் சொல்வதில் என்ன தீமை வந்து விடப் போகிறது?

அவர்கள் மூளைச்சலவை செய்வதும் அதற்கு பலர் எடுபட்டுப்போவதும் தீமை தானே? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நாங்கள் வீடு மாறினாலே கிராம சேவகர் அலுவலகத்தில் விலாசம் மாற்ற வேண்டும். வெளியிடத்திலுள்ள ஒருவரின் வீட்டை இன்னொருவர் பயன்படுத்துவதானால் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். அதிலும் போதனைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி தேவைப்பட்டிருக்கலாம்.

இங்கு யாரும் அவர்கள் கிராம சேவகரின் அனுமதி பெற்றார்களா என கேட்கவில்லை. அவர்களாக தானே தாம் பெற்றதாக கூறியதாக சொல்லப்படுகிறது. அதை உறுதிப்படுத்த கிராம சேவகரை தொடர்பு கொண்ட போது தன்னிடம் அனுமதி பெறவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே அவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள்.

தனிமனிதர்கள் தங்கள் வழியில் கடவுளை வழிபட்டார்கள் என நீங்கள் எழுதியதற்கு, அவர்கள் தங்கள் வழியில் வழிபடவில்லை மற்றவர்களுக்கு போதனை செய்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது என விளக்கம் தந்தேன். மற்றவர்கள் அடையாள அட்டை வைத்திருந்தால் தான் சைவர்களோ? 😀

கிராம சேவையாளரிடம் குடும்ப அட்டைப் பதிவும் வெளியாரின் வீட்டில் ஒரு போதனைக் கூட்டம் நடப்பதும் ஒன்றா? அப்படி எந்த அனுமதியும் தேவையில்லை. சரி, ஏன் காவல் துறைக்குப் போகவில்லை? சட்ட விரோதமென்றால் கம்பியெண்ண வைத்திருக்கலாமே? இல்லாத சட்டத்தை  உருவாக்கி விட்டு அதை தாங்களே அமல் செய்தும் இருக்கீனம்!

மற்றவருக்குப் போதித்தார்கள் என்றால் "மற்றவர்" யார் என்றே கேட்டேன். நான் கிறிஸ்தவன். ஒவ்வொரு ஞாயிறும் எனக்கும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கும் ஆலயங்களில் போதிக்கிறார்கள் தான். அதனால் அது மதமாற்றக் கூட்டம் ஆகி விடுமா? அங்கே இருந்தோர் சுய விருப்பில் அந்த வீட்டில் இருந்திருந்தால் அதைக் கேட்க யாருக்கு உரிமை இருக்கிறது? எவருக்கும் இல்லை என்பதே என் கருத்து!

Link to comment
Share on other sites

அற்புதமான போதனைகள் நிறைந்த கிருத்துவ மதத்தை மதமாற்றும் மதவெறிபிடித்த சிலர் நடைபாதை, தெருவோர, பெட்டிக்கடை வியாபாரப் பொருளாக மாற்றுவது, விற்பனையாகாத பொருட்களை கூவி விற்பது போல வியாபாரப் பொருளாக மாற்றுவது, கிருத்துவ போதனைகளை உணர்ந்தவர்களின், கிருத்துவ போதனைகளை உண்மையாக கடைபிடிப்பவர்களின் மனதையும் கடுமையாக வேதனைப்படுத்தும் என்பது தான் உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Lara said:

அவர்கள் மூளைச்சலவை செய்வதும் அதற்கு பலர் எடுபட்டுப்போவதும் தீமை தானே? 😀

என்ன தீமை? இது தவறு அல்லது குற்றம் என்றால் அந்தத் தவறின் victim யார்?

Link to comment
Share on other sites

5 minutes ago, Justin said:

உங்கள் கருத்தோடு நான் முற்றாக முரண்படுகின்றேன்! எல்லா மதத்திலும் இருக்கிற ஏமாற்றுக் காரர்கள் போலவே இவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நோயில் இருந்து விடுதலை என்றோ, அதிகம் பணம் தருகிறார்கள் என்றோ மதம் மாறினால் அது அவனது உரிமை! அதை ஒருவர் ஊக்குவித்தால் சட்டம் இருந்தால் முறையிடலாம்! இலங்கையில் முயற்சி செய்தும் நிறைவேற்ற முடியாமல் போன சட்டம் அது. நான் சொன்னது போல போதனையைத் தடுக்க வேண்டிய, அதுவும் இது போல அடித்து விரட்ட வேண்டிய தேவை இல்லை. இந்த ஆக்ரோஷத்தை ஆளில்லா வீடுகளில் இருந்து கஞ்சா புகைக்கும் இளைஞர்களிடம் ஏன் இந்த விஜிலான்ரிகள் காட்டுவதில்லை என யோசிக்கிறேன்! பயமோ? 

கஞ்சா அடிக்கின்றவர்களை இப்படி போய் அடித்து விரட்டினால் அவர்களும் அடிக்க வந்தவர்களை அடித்து விரட்டுவார்கள் என்ற பயமும் அவர்களை எதிர்க்காமல் விடுவதற்கான காரணங்களில் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இன்றைய போக்கு தொடருமாயின் அதுவும் நடக்க கூடிய வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கின்றது. ஏனெனில் கஞ்சா அடிப்பவர்களை இனம் கண்டு காவல்துறையிடம் பிடித்து கொடுக்கும் போது அக் காவல் துறையே அவர்களை விடுவிப்பது நடக்கின்றது என்பதால்.

இந்த 'கும்பல்' செய்தது சட்டப்படி சரியா தவறா எனக் கேட்டால் சட்டப்படி இது தவறுதான். ஆனால் எல்லா நியாயங்களும் இருக்கின்ற சட்டங்களினூடாக மாத்திரம் நிறுவப்படுவதில்லை. அதிகாரம் என்பதே மக்களிடம் இருந்து பிறப்பது தான்.

மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவது என்பது கண்டிப்பாக கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அது எந்த மதத்தவர்கள் செய்தாலும் தவறுதான். இந்தியாவில் இந்து மதவெறியர்கள்  வன்முறையினூடாக செய்ய நினைப்பதை இந்த மதமாற்றக் கூட்டம் இங்கு மக்களை ஏமாற்றி செய்ய முனைகின்றது/ இவ்வாறு செய்வதில் வெற்றி பெற்றும் வந்திருக்கின்றது.

Link to comment
Share on other sites

வலிந்து, கூவி மதமாற்றம் செய்யும் மதவெறிச் செயலைச் செய்வது எந்தவகையிலும் ஓர் இறை ஊழியம் ஆகிவிடாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.