• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
poet

பாடா அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Recommended Posts

Image may contain: one or more people

 

பாடா அஞ்சலி
வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 
. 
சுனாமி எச்சரிக்கை கேட்டு
மலைக் காடுகளால் இறங்கி
கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் 
கவிஞன் நான்.
பிணக்காடான இந்த மணல் வெளியில் 
எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ 
யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட.
.
வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ
ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. 
எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட
எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... 
.
இந்த உலகிலும் பெரிய இடுகாடெது?
பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து
புதிய கொடிகள் நாட்டப்படுகிற 
பெரிய அடக்கத் தலம் அது.
நடுகற்களின் கீழ்
அடிபட்ட பாம்புகளாய் 
கிழிந்த எங்களூர்ச் சிறுமிகளின் 
இறுதிச் சாபங்கள் அலைகிறதே.
எந்த சாபத்துக்கு நான் கல்வெட்டுப் பாடுவேன்.
.
அகலும் வலசைப் பறவைகளின்
புலம்பல்கள் தேயும் மண்ணில்
மொட்டை மரங்கள் பாடுகின்றன
”வரலாறு காடுகளைப் பூக்கச் செய்யும்.”
- 2017

 

 • Like 2

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, poet said:

உதிர்கிற காட்டில் 
எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? 

ஓர வஞ்சமின்றி எல்லாத்துக்கும் அஞ்சலி பாடலாமே!

Share this post


Link to post
Share on other sites

Gowinநல்ல கருத்து. எனக்கு ஏனோ தோன்றாமல் போய்விட்டது. நன்றி நண்பரே. 

Edited by poet

Share this post


Link to post
Share on other sites

BLACK JULY 1983 . கறுப்பு ஜூலை 1983 - வ.ஐ.ச.ஜெயபாலன்

நன்றி அருள்மொழிவர்மன், நன்றி நுணாவிலான். இத்தகைய அன்பு மட்டும்தானே தமிழ் கவிதைகளை வாழவைக்கிறது.

 

 

 

Share this post


Link to post
Share on other sites

சுடுகாட்டில் நின்று மனசு புலம்பினால் அது இப்படித்தான் இருக்கும்......!   👍

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • உங்களை அப்படி செயற்பட அரசாங்கமும், அதன் வருடிகளும் விடுவார்கள் என்றால், எப்பவோ அது தொடங்கப்பட்டிருக்கும். அபிவிருத்தி உங்களிடம், அதிகாரம் அவர்களிடம், நினைத்தவுடன் பிடுங்கப்படும்.  தெரியும் தமிழன் சும்மா இருக்கமாட்டான், ஏதோ முன்னேறிக்கொண்டே இருப்பான். முடிந்தவுடன் அதிகாரம் வேலை செய்யும். கொழும்பில் இருந்து விரட்டுவது, பின் திரும்ப வந்து கட்டியெழுப்புமட்டும் கொள்ளை அடித்ததை முழுங்கி விட்டு தூங்குவது. பின் எழும்பி விரட்டி விட்டு பொறுக்குவது. இதென்ன புதிதா இந்த நாட்டுக்கு? 
  • கானமழை பொழிகின்றான்-கண்ணன் யமுனாதீரத்தில் யாதவகுலம் செழிக்க (கானமழை)   ஆனந்தமாகவே அருள்பெருகவே முனிவரும் மயங்கிடும் மோகனரூபன் (கானமழை)   குயிலினம் கூவிட மயிலினம் ஆடிட ஆவினம் கரைந்திட அஞ்சுகம் கொஞ்ச கோவலர் களித்திட கோபியர் ஆட கோவிந்தன் குழலூதி (கானமழை)  
  • கமலா ஹாரிஸ் தேர்வு: ஒபாமா பாராட்டு   ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாரக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக கலிபோர்னியா செனட்டர் கமலா ஹாரிஸை அக்கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தேர்வு செய்தார். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தேர்வுக்கு ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கூறும்போது, “ துணை அதிபரை தேர்ந்தெடுப்பது ஒரு அதிபரின் முதல் முக்கிய முடிவு. நீங்கள் ஓவல் அலுவலகத்தில் இருக்கும்போது, நீங்கள் செய்யும் தேர்வு முழு நாட்டின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கலாம் .அந்த தருணங்களில் சரியான தீர்வையும், ஆலோசனையும் வழங்குபவர் உங்கள் அருகில் தேவை” என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண் ஒருவர் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்க வரலாற்றிலேயே துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமெரிக்க ஆப்பிரிக்க பெண் என்ற பெருமையைப் பெறுவார். இவரின் தாய் இந்தியர், பூர்வீகத்தில் தமிழகப் பெண் ஆவார். ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தல் நடந்தபோது, கடந்த 2019-ம் ஆண்டில் ஜோ பிடனுக்கு எதிராகக் கட்சிக்குள் கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். ஆனால், தன்னால் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியவில்லை, நிதி திரட்டமுடியவில்லை என்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றார். இந்த சூழலில் கமலா ஹாரிஸை ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ளது. https://www.hindutamil.in/news/world/569569-biden-nailed-decision-on-kamala-harris-for-running-mate-1.html  
  • தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி   விருதுநகர் கரோனா ஊரடங்கு ஊரை முடக்கினாலும் கருணை உள்ளங்களை முடக்கவில்லை. அப்படி கருணை உள்ளம் கொண்ட ஓர் ஆசிரியர் தான் ஜெயமேரி. அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் 'அருகாமைப் பள்ளி', என்றொரு திட்டத்தைத் தொடங்கி தான் வசிக்கும் பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வியை நற்பண்பை கொண்டு சேர்க்கிறார். அருகாமையில் ஒரு பள்ளி உருவான கதையை ஜெயமேரியிடம் கேட்டோம். "பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலை. வீட்டிற்கு வெளியே வெயிலில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தந்தால் என்ன என்ற யோசனை ஓடிக் கொண்டே இருந்தது. அருகில் உள்ள கல்லூரி மாணவியும், என் மகள்களும் கை கொடுத்தனர். அக்கம்பக்கத்தில் வசிக்கும் தீப்பெட்டித் தொழிலாளர்களின் பிள்ளைகள் ஆர்வத்துடன் வந்தனர். கைகளைக் கழுவி, சமூக இடைவெளி விட்டு அமர வேண்டும் என்று ஏற்கெனவே சொல்லியிருந்ததால் அதையே பின்பற்றினர். முதல் நாளன்று, வானம் பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான நூல்களை பிள்ளைகளிடம் வாசிக்கக் கொடுத்தேன். அதில் உள்ள பஞ்சு மிட்டாய் புத்தகத்தில் இருந்த "எலி ஏன் ஓடியது" என்ற அழ.வள்ளியப்பா பாடலுக்கு படம் வரைந்து , கலர் அடித்து, பாட்டுப் பாடி, கதைகள் சொல்லி என காலை 10 மணிக்கு ஆரம்பித்த வகுப்புகள் 12 மணி வரை தொடர்ந்த்து. அன்று வந்திருந்த பேச்சுத்திறனற்ற மாற்றுத்திறனாளி குழந்தையின் முகத்தில் கண்ட மகிழ்ச்சி தான் அருகாமையில் ஒரு பள்ளியில் அடிநாதம். பள்ளிக்கே போனதில்லையாம் அந்த 6 வயது குழந்தை. அந்தக் குழந்தையின் கையிலும் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருந்தேன். அதைப் பார்த்துக் கொண்டே இருந்த குழந்தை சிறிது நேரத்தில் அழகாக ஒரு மரம் வரைந்து கொடுக்க, அந்தப் படம் ஆயிரம் கதைகளைச் சொல்லியது. இந்தப் பள்ளியில் எடுத்த எடுப்பிலேயே பாடங்களைக் கற்பிப்பது இல்லை. கதைகளும், படங்கள் வரைதலும் அவர்களுக்கு பிடித்திருக்கின்றன. பிஸ்கட்டுகளும், ஆரஞ்சு மிட்டாய்களுமாக அன்பைப் பகிர்ந்து கொண்டோம். அருகாமைப் பள்ளி இப்படி வாரந்தோறும் வெள்ளிக்கிழமையின் இயங்குவதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால், இப்போது தினமுமே பிள்ளைகள் வந்துவிடுகின்றனர்" என்றார் மகிழ்ச்சியாக. அந்த மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளக்கூடியது. அத்துடன் நிறைவடைந்துவிடவில்லை விருதுநகர் மாவட்டம் க.மடத்துப்பட்டி பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் ஜெயமேரியின் கருணை. அந்தப் பள்ளியில் பயில்பவர்கள் பெரும்பாலானோர் தூய்மைப் பணியாளர்களின் பிள்ளைகளே. மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்து வரும் குழந்தைகள் என்பதால் வாரத்தில் பாதி நாட்கள் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் தான் பள்ளிக்கு வருவார்களாம். அதனாலேயே ஜெயமேரி தன்னால் இயன்ற அளவுக்கு சத்துமாவு உருண்டை, கடலைமிட்டாய், சிறுதானிய அடை ஆகியனவற்றைக் கொண்டு செல்வாராம். கரோனா ஊரடங்கு அறிவித்த பின்னர் அந்த சிறு பிள்ளைகளை பசி இன்னும் பயங்கரமாக மிரட்டியுள்ளது. ஒரு குழந்தை ஆசிரியருக்கே ஃபோன் செய்து பசி தாங்க இயலவில்லை எனக் கூறியுள்ளது. அன்றைய தினமே ஜெயமேரி தன்னால் இயன்றளவுக்கு தனது பள்ளிக்குழந்தைகளுக்காக வீட்டிலேயே உணவு சமைத்துக் கொண்டு விநியோகித்திருக்கிறார். 50 குழந்தைகளுக்கு தயாரித்து உணவு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரது பள்ளிக்குழந்தைகள் 50 பேரையும் கடந்து பல குழந்தைகள் அந்தப் பகுதியில் பசியுடன் இருப்பதைப் பார்த்து தனது நண்பர்கள், குறிப்பாக முகநூல் நண்பர்களுடன் இணைந்து தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தினமும் 100 குழந்தைகளுக்கு கலவை சாதங்கள் கொண்டு சேர்த்திருக்கிறார். அவரது பள்ளிக் குழந்தைகள் வசித்த பகுதியும் கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியாக குழந்தைகள் மீண்டும் உணவு கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அப்போது கருணை உள்ளம் கொண்டோரின் உதவியுடன் அரிசி உள்ளிட்ட 21 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய பைகளை தன்னார்வலர்கள் மூலம் கொண்டு சேர்த்துள்ளார். எது தடையாக வந்தாலும் தனது பள்ளிக் குழந்தைகளின் பசி தீர்க்க வேண்டும் என்பது மட்டுமே அவரின் ஒற்றை இலக்காக இருந்துள்ளது. தனது இலக்கை நிறைவேற்ற கணவர் கருப்பசாமி பெரும் உதவியாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதேவேளையில் தன்னால் மட்டுமே இந்த உதவியை முழுமையாக செய்திருக்க முடியாது. தனக்கு தன்னார்வலர்கள் பலரும், முகநூல் நட்புக்களும், சக ஆசிரியர்களும் உதவியாக இருப்பதாக அத்தனை பேரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். ஒருமுறை தனது சக ஆசிரியை ஒருவர் அவரின் மகளுக்கு குழந்தை பிறந்ததையொட்டி கோயிலுக்குச் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் கொண்டு ஒரு நாள் உணவை குழந்தைகளுக்கு வழங்கியதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். க.மடத்துப்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கு பசிப்பிணியைப் போக்கியும், தான் வசிக்கும் தாயில்பட்டியில் உள்ள குழந்தைகளுக்கு அறிவுப்பசியைத் தீர்த்தும் 'அருகாமைப் பள்ளி' ஆசிரியை ஜெயமேரி உயர்ந்து நிற்கிறார். https://www.hindutamil.in/news/blogs/569578-teacher-feeds-the-students-and-lit-s-literacy-lamp-at-the-same-time-4.html      
  • நானும் இதில் ஒரு பகுதிதான்.ஆனால் இது பலரின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு. பெரும்பாலான சமையல்கள் என்னுடையதுதான்.ஆனால் அதை அழகிய பதிவாக கொண்டுவருவது என் குழந்தைகள் . இந்த pandemic இல் அவர்கள் செய்யும் ஒரு ஆக்கபூர்வமான வேலை இது .சமையல் எனக்கு பிடித்தமான கலை ஆனால் அதற்கான time கிடைப்பதில்லை .இப்போது இந்த pandemic அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறது. பார்க்கலாம் பிடித்த இந்த வேலையை எத்தனை நாள் செய்ய முடியுமென்று...  video வை பதிவேற்றியதற்கு மிக்க நன்றி😀