• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
பெருமாள்

சமூக வலைத்தளங்கள் மூலம் கல்விக் கடனாளிகளை தேடும் வங்கிகள்

Recommended Posts

கல்விக்கடனைத் திருப்ப செலுத்தாதவர்களை அவர்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் வங்கிகள் கண்டுபிடித்து வருவது தெரியவந்துள்ளது. 

வங்கிகளில் கல்விக் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் ஒரு புதிய முறையை கையாண்டு வருகின்றனர். அதன்படி வங்கி அதிகாரிகள் ‘டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்’ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தத் தளத்தின் உதவியுடன் வங்கி கடனை செலுத்தாதவரின் பெயர், கல்வித் தகுதி மற்றும் அவரின் வேலை விவரம் ஆகியவை வைத்து சமூக வலைத்தளங்களில் தேடி வருகின்றனர். அதன்பின்னர் இந்தக் கணக்கை வைத்து கல்விக் கடனை திருப்ப செலுத்தாதவர்களை வங்கி தொடர்பு கொள்கிறது.

105537_l1.JPG

முன்னதாக கல்விக் கடன் திரும்ப செலுத்தாதவர்களை வங்கிகள் அவர்கள் கொடுத்துள்ள மின்னஞல் கணக்கு மற்றும் தொலைபேசி எண் ஆகியவை வைத்து தொடர்பு கொண்டு வந்தது. எனினும் வங்கி கடன் வாங்கியவர்கள் இதிலிருந்து தப்பிக்க தங்களின் தொலைபேசி எண்ணை மாற்றி வந்தனர். அத்துடன் தங்களின் வீட்டையும் மாற்றி வந்தனர். எனவே அவர்களை கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்தச் சூழலில் வங்கிகள் இந்தப் புதிய முறையை உபயோகித்து வருகின்றன. 

102839_l2.JPG

பொதுவாக ஒருவர் ஏதாவது ஒரு வலைத்தளத்திற்கு சென்று ஆராயும் போது அந்தத் தளம் ‘உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதவிடுங்கள்’ என அறிவுறுத்தும். அது போன்று பதிவிடப்படும் மின்னஞ்சல் முகவரி மூலம் உரியவரின் அடிப்படை தகவல்கள், ஃபேஸ்புக் கணக்கு விவரம் உள்ளிட்ட பல அத்தளத்திற்குள் பதிவாகும். அதனைக் கொண்டு வங்கி அதிகாரிகள் தங்களின் கடனைத் திரும்ப செலுத்தாதவர்கள் பட்டியலை இண்டர்பேஸ் ஆய்வின் மூலம் கண்டறிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

http://www.puthiyathalaimurai.com/news/india/68633-banks-use-social-media-to-track-edu-loan-defaulters.html?fbclid=IwAR3_pknnitqf1XBZqKSUvFCrgM_6dT6nYASAHLV2up5hST6KspEP8CrlGi8

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • பாட்டலியின் சாரதி இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்     எழுத்தாளர் Bella Dalima   Colombo (News 1st) முன்னாள் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான துசித்த திலும்குமார என்பவர் இரகசிய வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக இன்று இரண்டாவது நாளாக கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2016 ஆம் ஆண்டில் இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நகர்த்தல் பத்திரமொன்றின் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைப்பு விடுத்து மன்றில் ஆஜராகிய பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக பணிபுரிந்த இரண்டாவது சந்தேகநபர் துசித்த திலும்குமார என்பவர் பிற்பகல் 2 மணியளவில் மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி டி சில்வாவின் உத்தியோகப்பூர்வ அறைக்கு அழைக்கப்பட்டார். தனிப்பட்ட விருப்பின் பேரிலா அல்லது எவரினதும் அச்சுறுத்தலின் பேரிலா இரகசிய வாக்குமூலம் வழங்க எதிர்பார்ப்பதாக சந்தேகநபரிடம் வினவிய நீதவான் வாக்குமூலம் பதிவு செய்துகொண்டுள்ளார். இரகசிய வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக உரிய உத்தரவை பிறப்பிப்பதாக மேலதிக நீதவான் அறிவித்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கீத் ஜயசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/பாட்டலியின்-சாரதி-இரண்டா/
    • தமக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் இரா.சம்பந்தன் சபையில் விளக்கம்   எழுத்தாளர் Bella Dalima   Colombo (News 1st) அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ இல்லம் மற்றும் வாகனம் வழங்கப்பட்டமை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவாகி இரண்டு வருடங்களின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில், 2017-இல் தமக்கு மாளிகை வழங்கப்பட்டதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவருக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியின் கீழ் வாடகைக்கு மாளிகையொன்றையும் பணியாளர்களையும் அமர்த்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை முன்வைத்ததாக சம்பந்தன் சுட்டிக்காட்டினார். தாம் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மாளிகையில் தொடர்ந்தும் வசிக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவையோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையோ அனுமதிக்குமாறு கோரவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, 2017 ஆம் ஆண்டில் மற்றுமொரு சலுகையாக தனக்கு வழங்கப்பட்ட CAT- 1094 என்ற இலக்கமுடைய பென்ஸ் ரக காரை 2019 ஜனவரி முதலாம் திகதி எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார். இரண்டு வருடங்களாக தன்னிடம் இருந்த அந்த காரை 2082 கிலோமீட்டர்கள் மாத்திரமே தாம் பாவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். உண்மையாக என்ன நடந்தது என்பது தனக்கு தெரியும் எனும் நிலையில், இவ்வாறான அழுக்கான சூழல் தொடரக்கூடாது என சம்பந்தன் பாராளுமன்றில் வலியுறுத்திக் கூறினார். இதேவேளை, சம்பந்தன் மீது தாம் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் பதிவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை எனவும் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இரா.சம்பந்தன் உள்ளிட்ட அனைத்து வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய தினேஷ் குணவர்தன, இந்த விவகாரத்தில் அரசாங்கம் பக்கசார்பாக செயற்படவில்லை என்பதையே இது காட்டுவதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அனைத்து முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அவர்களது பதவி தொடர்பில் வழங்கப்பட்ட வசதிகளில் சாதாரண நடைமுறை பின்பற்றப்படும் எனவும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். https://www.newsfirst.lk/tamil/2020/01/22/தமக்கு-வழங்கப்பட்டுள்ள-வ/