Jump to content

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுவதை கண்டித்து மௌன பேரணி

தமிழர் பிரதேசத்தில் விகாரைகள் அமைக்கப்படுதல் , பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளை முன்னேடுப்பதனையும் ஆட்சேபித்து மௌன பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவரும் , இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 

vikari.jpg

பௌத்த மேலாதிக்க செயற்பாடுகளால் இந்துக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்துக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்குடன் அமைதி வழியிலான மௌன பேரணி ஒன்றினை எதிர்வரும் சனிக்கிழமை காலை 09 மணியளவில் நல்லை ஆதின முன்றலில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. 

குறித்த பேரணியானது எந்த அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. இந்து அமைப்புக்களின் ஒன்றியம் , இந்து சமய பேரவை ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ள பேரணி. எனவே கட்சி பேதங்களின்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து இந்துக்களின் மனவுணர்வை வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். 

 

https://www.virakesari.lk/article/61677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் அமைதிப் போராட்டம்….

August 3, 2019

Jaffna-hindu-Protest.jpg?resize=696%2C45இந்து ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை அமைதிப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்து அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் ஒழுங்கமைப்பில் இந்த போராட்டம் மிக அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பௌத்தர்கள் வாழாத பிரதேசங்களில் விகாரைகள் அமைப்பதனூடாக இலங்கைவாழ் இந்துக்கள் அனைவரும் அச்சத்தில் மூழ்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளரான அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். போராட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கடிதமொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.

 

http://globaltamilnews.net/2019/127988/

Link to comment
Share on other sites

ஓர் எதிர்ப்பு நடவடிக்கையைச் செய்யும் போது அதில் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செய் வதே சிறப்பானது. அது கனதியாகவும் இருக்கும்.

இதைவிடுத்து அவரவர் தத்தம் கடன் கழிப்புக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவ தென்பது இந்து மதத்துக்கு ஆரோக்கியமான தல்ல என்பதை சம்பந்தப்பட்ட இந்து அமைப்புகள் சிந்தித்தாக வேண்டும்.

துண்டம் துண்டமாக கூட்டம் நடத்துவது, துண்டம் துண்டமாக எதிர்ப்புப் போராட்டம் செய் வதானது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுலயும் மாவையர் நிற்கிறமாதிரி இருக்கு 

இது சிங்கள பெளத்த நாடு என்று சொன்ன ஆட்களே நம்ம கிட்ட இருக்கு அப்படி இருக்க இந்த மெளனமான  போராட்டமென்பதே தோல்வியடையும் என்பது எல்லோருக்கும் தெரியும் 

சில நேரம் இந்த போராட்டத்த வைத்து மாவையர் போர் வெடிக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாரு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் ஆயிரம் விகாரைகள் திட்டத்தை நிறுத்தக் கோரி கடிதம்

சைவத் தமிழ் மக்­க­ளின் வாழ்­வி­டங்­க­ளில் போலி­யான வர­லாற்றை உரு­வாக்கி விகா­ரை­கள் அமைத்­தலை நிறுத்­து­தல், வட­கி­ழக்­கில் புதி­தாக ஆயி­ரம் விகா­ரை­கள் அமைக்­கும் அர­சின் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை தடை செய்­தல் உள்­ளிட்ட 9 கோரிக்­கை­களை இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­யம் முன்­வைத்­துள்­ளது.

20190803_092209.jpg

அந்த அமைப்­பின் ஏற்­பாட்­டில் நல்லை ஆதீ­னம் முன்­பாக நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் ஒன்று  முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

போராட்­டத்­தின் முடி­வில், ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்தியப் பிரதமர் நரேந்­திர மோடி ஆகி­யோ­ருக்கு மனு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ் பேசும் மக்­கள் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்­து­வ­ரும் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளில் வர­லாற்­றுக் காலம் முதல் அமைக்­கப்­பட்­டி­ருந்த இந்து ஆல­யங்­கள் அழிக்­கப்­ப­டு­வ­தும் ஆலய வளைவு உடைக்­கப்­ப­டு­வ­தும், பௌத்­தர்­கள் வாழ்ந்­தி­ராத பிர­தே­சங்­க­ளில் விகா­ரை­கள் அமைக்­கப்­டு­வ­தும் இலங்கை வாழ் இந்­துக்­களை அச்­சத்­தில் ஆழ்த்­தி­யி­ருப்­பதை நன்கு உணர்ந்த நிலை­யில் இந்து அமைப்­புக்­க­ளின் ஒன்­றி­ய­மா­னது அமைதி வழி­யில் மேற்­படி அதர்ம செயல்­க­ளைக் கண்­டித்­தும் மத நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தி­யும் அகிம்மை முறை­யில் கவ­ன­வீர்ப்பை இந்து சம­யப் பேர­வை­யு­டன் இணைந்து முன்­னெ­டுத்­துள்­ளது.

இலங்­கை­யின் ஜனாதிபதி, பிரதமர் மற்­றும் இந்­திய தலைமை அமைச்­சர் மற்­றும் இலங்­கை­யின் இந்து சமய விவ­கார அமைச்­சர் ஆகி­யோ­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்து உரிய நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு இந்­துக்­கள் அனை­வ­ரும் அச்­ச­மின்றி சமய வழி­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­வதை உறு­திப்­ப­டுத்தி உத­வு­மாறு தய­வாக வேண்­டு­கின்­றோம்.

இலங்கை வேந்­தன் இரா­வ­ணண் காலம் முதல் இந்­துக்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு பாரா­ம­ரிக்­கப்­பட்­டு­வந்த கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் பகு­தி­யை­யும் அங்­கி­ருந்த ஆல­யங்­க­ளை­யும் தடை­யே­து­மின்றி மீள­வும் அமைத்து வழி­பாடு செய்­ப­வ­தற்­கும் இந்­தப் பகுதி சைவத் தமி­ழ­ரின் நிர்­வா­கத்­தின் கீழ் தொடர்ந்து இருப்­ப­தை­யும் உறு­திப்­ப­டுத்­தல். இந்­தப் பிர­தே­சத்­துக்கு அண்­மை­யில் பௌத்த விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடுத்­தல். வவு­னியா வெடுக்­கு­நாறி சிவன் ஆல­யத்­துக்­குச் செல்­லும் பாதை­யூ­டாக தடை­யின்றி போக்­கு­வ­ரத்­துச் செய்­வது, அடி­வா­ரத்­தி­லி­ருந்து மலை உச்­சிக்­குச் செல்­வ­தற்­கான ஏணிப் படி­களை அமைக்க பொலி­ஸா­ரும் தொல்­லி­யல் திணைக்­க­ள­மும் தடை ஏற்­ப­டுத்­தாது இருத்­தல்.

மத­நல்­லி­ணக்­கத்­தைச் சிதைக்­கும் நோக்­கில் இடித்து அழிக்­கப்­பட்ட வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க திருக்­கே­தீச்­சர ஆலய வளைவை முன்பிருந்த இடத்­தில் சமா­தா­ன­மான முறை­யில் மீள அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து மத நல்­லி­ணக்­கத்­தைப் பேணு­தல்.

தொல்­லி­யில் திணைக்­க­ளம் நடு­நி­லைமை தவறி பக்­கச்­சார்­பா­கச் செயற்­பட்டு பௌத்த வர­லாற்­றுச் சின்­னங்­கள் காணப்­ப­டாத இடங்­க­ளில் விகா­ரை­கள் அமைப்­பதை ஊக்­கப்­ப­டுத்தி வரு­வதை வன்­மை­யா­கக் கண்­டிப்­ப­தோடு அத்­தி­ணைக்­க­ளத்­துக்கு தகு­தி­யான சைவத் தமி­ழர் களை­யும் நிய­மித்து குறித்த திணைக்­க­ளம் பக்­கச்­சார்­பின்றி செயற்­படு வதை உறு­திப்­ப­டுத்­து­தல்.

20190803_093332.jpg

மத­மாற்­றங்­க­ளைத் தடை செய்­தல்.

முல்­லைத்­தீவு செம்­ம­லைப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள நீரா­வி­ய­டிப் பிள்­ளை­யார் ஆல­யத்­தின் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­யா­தி­ருத்­தல்.

நீரா­வி­ய­டிப்­பிள்­ளை­யார் ஆல­யப் பகு­தி­யில் பௌத்த மத வழி­பாட்­டுத் தலங்­கள் இருந்­த­மைக்­கான ஆதா­ரமே இல்லை என்று தொல் பொருள் திணைக்­க­ளமே கூறி­யுள்ள நிலை­யில் அங்கு விகா­ரை­கள் அமைத்­த­லைத் தடை செய்­ய­தல்.

வடக்கு, கிழக்கு பிர­தே­சத்­தில் பௌத்த மேலா­திக்க செயற்­பா­டு­களை நிறுத்­து­தல்.

மேலே விவ­ரிக்­கப்­பட்ட எமது நியா­ய­மான கோரிக்­கை­களை சாத­க­மா­கப் பரி­சீ­லித்து அவற்­றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய பொருத்­த­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து மத நல்­லி­ணக்­கத்­தை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத் தித் தரு­மாறு அன்­பு­டன் வேண்­டு­கின்­றோம், என்­றுள்­ளது.

 

https://www.virakesari.lk/article/61904

Link to comment
Share on other sites

தேர்தல் வருவதால் கொழுந்துவிட்டு எரியும் இந்து சமய பிரச்சனைகளை தமிழரசுக்கட்சி கும்பல் கைகளில் எடுத்துள்ளனர்.

ஆனால் இந்துக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரையில் இதுபோன்ற ஏமாற்றுக் கும்பல்களும் இருக்கத்தான் செய்யும்!

Link to comment
Share on other sites

On 8/3/2019 at 12:32 PM, கிருபன் said:

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பிரமச்சாரிய சுவாமிகள் தலைமையில் இந்து அமைப்புகள் ஒன்றியமும் இந்துசமயப் பேரவையும் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டங்கள் வெற்றியளிக்கட்டும்!

இந்த போராட்டத்துக்குள்ளேயும் ஆர்னால்ட் தன்ற கேவல புத்திய காட்டிருக்கார்! அதெப்பிடி எந்தவொரு மதமும் தோன்ற முதல்ல இருந்த இந்து சமயம் "எம் மதமும் சம்மதம்" என்று சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக் குடிகள் என்று கூறுகின்ற நம்மவர் களில், சிலர் இலங்கையின் ஆதிச் சமயம் இந்து சமயம் என்ற உண்மையைக் கூறமறுக் கின்றனர்.
 
அது மட்டுமன்றி, அதன் தொன்மையை அங்கீகரிப்பதன் ஊடாகவே இலங்கையில் தமிழினம் வாழ முடியும் என்ற நிதர்சனத்தையும் மறந்து போகின்றனர்.
 
இதுவே மிகப்பெரிய துரதிர்ஷ்டமாகும்.
 
அதாவது இந்து சமயம் ஆதியானது என்பதை யாழ்ப்பாண நாக விகாராதிபதி வணக்கத்துக்குரிய ஸ்ரீ விமல தேரர் குறிப்பிட்டுள்ளதுடன் இந்து சமயத்தை எதிர்க்கின்றவர்கள் உண்மையான பிக்குகள் அல்ல எனவும் அவர் துணிச்சலோடு கூறியுள்ளார்.
 
அதேநேரம் கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, பெளத்த மதத்துக்கு முன் னுரிமை கொடுக்க வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
 
ஆனால் மன்னார் ஆயர் அவர்கள் திருக்கேதீச்சரத்து நுழைவாயில் வளைவை நிறுவு வதற்குத் தடை செய்து வருவதுடன் மதத்தின் பெயரால் தனக்கு இருக்கக்கூடிய மரியாதைத் தகைமையினைப் பயன்படுத்தி, மன்னார் பிரதேச சபைத் தவிசாளரான முஸ்லிம் இனத்தவரைத் தனது ஆயர் இல்லத்துக்கு அழைத்து;
 
திருக்கேதீச்சர நுழைவாயில் வளைவு அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கூறியுள்ளார். முஸ்லிம் இனத்தவரான மன்னார் பிரதேச சபைத் தலைவர் தமது இனத்துக்கு இப்போ திருக்கின்ற பாதகமான சூழ்நிலையில், வளைவுக்கான அனுமதியை இரத்துச் செய்துள்ளார்.
 
நிலைமை இதுவாக இருக்கும்போது தமிழினம் உருப்படுமா என்பதை தமிழ் மக்கள் முத லில் தீர்மானிக்க வேண்டும்.
 
Link to comment
Share on other sites

விகாரைகள் அமைப்பதை எதிர்ப்பதோடு மதம்மாற்றுவதில ஈடுபடும் கிறீஸ்தவ மதம்மாற்ற   வெறியர்கள் கும்பலையும் ஒருகை பாக்கவேண்டிய தேவை இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.