• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
ampanai

இந்து சமய அமைப்புகளும் போராட்டமும்

Recommended Posts

நல்லூரில் மௌன பேரணி

தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும்  இந்து ஆலயங்கள்  பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும்  இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

இந்த பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும்  சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது இந்து அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் இந்து சமயபேரவை ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாகும்.    

இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் என்ற வகையில் சகல சைவ பெருமக்கள் அனைவரையும் ,ந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/நல்லூரில்-மௌன-பேரணி/71-236147

அனைத்து இந்து சமய அமைப்புகளும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்

இலங்கையில் இந்து சமயத்துக்கு ஏற்பட்டு வரும் நிட்டூரம் கொஞ்சமல்ல.  ஆனாலும் அது பற்றி பலமாகக் குரல் கொடுப்பதற்கு இந்து சமய அமைப்பிலும் தமிழ் அரசியலிலும் ஆட்கள் இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். இதன் காரணமாக இந்து சமயத்தின் வரலாற்றுத் தொன்மையை இழந்து போகின்றோம்.
இந்து சமயம் நிந்திக்கப்படுவது கண்டு இதயம் குமுறுகின்ற சமயத் தலைவர்கள் இருக் கின்றனராயினும் அவர்களுக்கான நம் ஆதரவு போதாது என்பதுதான் உண்மை.
 
அண்மையில் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் தென்கயிலை ஆதீன சுவாமிகள் மீது சுடுநீர் ஊற்றப்பட்டது.  இதற்குக் கண்டனம் தெரிவித்து நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் அகிம்சை வழிப்போராட்டம் நடைபெற்றது. பகிரங்கமான அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அதில் பங்குகொண்டவர்களின் எண் ணிக்கை போதுமானதல்ல என்பதைக் கூறித்தானாக வேண்டும். தவிர, முக்கியமான சில இந்து அமைப்புக்களும் அதில் கலந்து கொள்ளவில்லை என் பது இங்கு கவனிக்கத்தக்க விடயம்.
 
இதற்கு மேலாக, மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தில், நுழைவாயில் வளைவு அமைப் பது தொடர்பில் ஏற்பட்ட தடைகள் குறித்து ஆராய்வதற்காக கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி இந்துமாமன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துமாமன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில் இந்து மதத் தலைவர்கள் உள்ளிட்ட இந்து அமைப்புகளினது பிரதிநிதிகள், ஆலயபரிபாலன சபையினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 
உணர்வுபூர்வமாக நடந்த இந்தக் கூட்டத்தில் மன்னாரில் இருந்தும் ஏனைய மாவட்டங் களில் இருந்தும் பலர் பங்கேற்றனர். ஆனாலும் இந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத சில இந்து அமைப்புகள் இருக்கவே செய்கின்றன. ஓர் எதிர்ப்பு நடவடிக்கையைச் செய்யும் போது அதில் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செய் வதே சிறப்பானது. அது கனதியாகவும் இருக்கும். இதைவிடுத்து அவரவர் தத்தம் கடன் கழிப்புக்காக எதிர்ப்புப் போராட்டத்தை நடத்துவ தென்பது இந்து மதத்துக்கு ஆரோக்கியமான தல்ல என்பதை சம்பந்தப்பட்ட இந்து அமைப்புகள் சிந்தித்தாக வேண்டும். துண்டம் துண்டமாக கூட்டம் நடத்துவது, துண்டம் துண்டமாக எதிர்ப்புப் போராட்டம் செய் வதானது முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
 
இவை யாவற்றுக்கும் மேலாக, இந்து சமயத்துக்கு நடக்கின்ற நாசகாரத்தை எதிர்க்கின்ற விடயத்தில் அரசியல் கலக்குமாக இருந்தால், அஃது ஒற்றுமைப்படும் இந்து சமயத்தை உடைப்பதற்கான மிகப் பெரும் இராஜதந்திரம் என்பதைப் புரிந்து கொள்வது கட்டாயமானது.
 
Share this post

Link to post
Share on other sites

நாம் எவ்வளவு தான் மதத்தை மனிதப்பண்புகளை மதித்து நடந்தாலும், எம்மை சுற்றி இருப்பவர்கள் தான் சிலவேளைகளில் எமது நாம் விரும்பாத நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள ஆர். எஸ். எஸ். அமைப்பிற்கு பெரும்பாலான இலங்கை வாழ் இந்துக்கள் / சைவர்கள் எதிரானவர்கள். அதற்கான காரணங்களும் வலுவானவை. ஆனால், அதே எதிர்ப்பாளர்களால் நடக்கும் புத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்த வலுவான மாற்றுக்கருத்தையும் வைக்க முடியவில்லை.

எனவே, வருங்காலங்களில் இலங்கையில் கூட ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஆதரவு அதிகரிக்கலாம். 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

முதலில் மறவன் புலவையும் , சிவ சேனைையையும் பெளத்த மத ஆக்கிரமிப்பிற்கெதிராக காத்திரமான ஒர் செயற்றிட்டத்தை வைக்கச் சொல்லுங்கோ பார்க்கலாம்... ஒரு கண்டனம் தெரிவிக்கவே வக்கில்லை. பெளத்த மதத்துடன் மோதினால் இந்தியனே கழட்டி விட்டுடுவான் என்று தெரியும். இதுக்குள்ள ஆர் . எஸ். எஸ் வந்து ... பௌத்தர்களுடன் மோதி ..பண்ணும் காமடிக்கும் ஒரு எல்லை வேண்டும்

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, ampanai said:

எனவே, வருங்காலங்களில் இலங்கையில் கூட ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புக்களுக்கு ஆதரவு அதிகரிக்கலாம். 

இலங்கைல rss அமைப்பு இருக்கு. அவங்கள் சிங்களவனோடையும் மலையக தமிழர்களோடையும் சொறிலங்கா ராணுவத்தோடையும் கூட்டு வைச்சிருக்காங்கள். அவங்களுக்கு இந்துக்கள் மேல அக்கறை இல்லை என்டு கூட இருக்கிறவை கண்டுபிடிச்சிருகீனமாம். அவங்கள் இந்திய காப்பரேட் முதலாளிகளோட கைப்பிள்ளை மாதிரி இருக்கினமாம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ampanai said:

தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல் உட்பட பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஆட்சேபித்தும்  இந்து ஆலயங்கள்  பாதிப்புக்குள்ளாவதானால் அச்சமடையும்  இந்துக்களின் மண உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்கிலும் அமைதி வழியிலான மௌன பேரணி 3 ஆம் திகதி காலை 9மணி தொடக்கம் 10மணி வரை நல்லை ஆதீன முன்றலில் இடம்பெறவுள்ளது என இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உபதலைவர் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார்.

ஈழம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதற்கு இந்த இராவணன் காலத்து புராதன "நான்கு ஈச்சர ஆலயங்கள்"வரலாற்று ஆதாரங்களாகும்....!!

காலம்:  ஈழத்திற்கு விஐயனின் வருகையான கி.மு 483-கி.மு 445 முன்னரே ஈழத்தின் பூர்வீக தமிழர்களான நாகர்கள் காலத்தில் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திராதே யுகத்தில் கட்டப்பட்டு வழிபாடு நடந்த சிவ ஈச்சர ஆலயங்கள் இவை....!!

ஈழத்தில் சிங்கள மொழி மற்றும் இனம் என்பதே இல்லாத ஒரு ஒரு தேசம்.....அது ஒரு கனாகாலம்..... இன்றைய காலம் ஒன்றி உணர்த்தி நிற்கின்றது. இன்னும் சில காலங்களில் இவை யாவும் சரித்திரத்தில் மட்டும்தான் இருக்கும் ....

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

Share this post

Link to post
Share on other sites
20 minutes ago, ampanai said:

அம்பனை, 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்படி கட்டிடம் கட்டும் மனித நாகரிகங்கள் இருந்தனவா? ஹோமோ சேபியன்ஸ் வெறும் 300,000 ஆண்டுகளுக்கு முன் தானே உருவானார்கள்? அவர்களுக்கு முன் இருந்த ஹொமினொய்ட் மூதாதையர் அலைந்தல்லவா திரிந்தார்கள்? 

Share this post

Link to post
Share on other sites
50 minutes ago, Justin said:

அம்பனை, 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இப்படி கட்டிடம் கட்டும் மனித நாகரிகங்கள் இருந்தனவா? 

இல்லை, அப்படி கட்டிடங்களை கட்டும் திறமை இருந்திருக்காது, உண்மை. 
ஆனால், ஒரு வித வழிபாடு அந்த இடங்களில் இருந்திருக்கின்றது.  

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

ஈழம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதற்கு இந்த இராவணன் காலத்து புராதன "நான்கு ஈச்சர ஆலயங்கள்"வரலாற்று ஆதாரங்களாகும்....!!

காலம்:  ஈழத்திற்கு விஐயனின் வருகையான கி.மு 483-கி.மு 445 முன்னரே ஈழத்தின் பூர்வீக தமிழர்களான நாகர்கள் காலத்தில் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் திராதே யுகத்தில் கட்டப்பட்டு வழிபாடு நடந்த சிவ ஈச்சர ஆலயங்கள் இவை....!!

ஈழத்தில் சிங்கள மொழி மற்றும் இனம் என்பதே இல்லாத ஒரு ஒரு தேசம்.....அது ஒரு கனாகாலம்..... இன்றைய காலம் ஒன்றி உணர்த்தி நிற்கின்றது. இன்னும் சில காலங்களில் இவை யாவும் சரித்திரத்தில் மட்டும்தான் இருக்கும் ....

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

இலங்கை முழுக்க இருந்த ஈச்சரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நல்லுரையும் யாழ்ப்பாணத்தையும் தமிழர்களின் கலலாச்சார இடங்கள் என்று தமிழர்களின் வரலாற்றையும் வாழ்வையும் தமிழர்களின் தன்னினத்துக்குள் இரைதேடும் ஆதிக்க மனப்பான்மையே சுருக்கியது. ஐக்கியப்பாட்டிற்காக எந்தக்காலத்திலும் முயன்ற சரித்திரம் தமிழர்களிடம் இருந்ததில்லை. போரில் இறந்த ராணுவத்தில் கணிசமானளவு சிங்கள இராணுவத்தினர் முன்னொருகாலத்தில் தமிழர்களே. இன்றை சிங்களமக்களில் கணிசமானளவினர் முன்னர் தமிழர்களே. நீர்கொழும்பு புத்தளம் போன்ற பகுதிகளில் இந்தமாற்றங்களை இப்போதும் வெளிப்படையாக காணமுடியும். தமிழர்களின் அழிவு தொன்றுதொட்டு தமிழர்களின் தன்னினத்துக்குள் இரைதேடும் குணத்தினால் தொடர்ந்து வருகின்றது. கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதுபோல் இந்த முனைப்புகள்.  இறுதி யுத்ததில் பெண்களை நிர்வாணமாக இழுத்துச் செல்லுகையில் கூப்பிடு தூரத்தில் கெலியில் பூத்தூவி தேரிழுத்து திருவிழா கொண்டாடிவிட்டு பின்னர் எங்காவது பார்க்கில் ரெண்டு காதலர் ஒன்றாக இருப்பதை படமெடுத்து இணையதளங்களில் போட்டு ஒலாச்சாரம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் கூட்டம். இப்போது அல்லேலூயா கூட்டத்தோடு முரண்பட்டு எதையோ புடுங்க முற்படுகின்றது. 

 • Like 5
 • Thanks 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

ஈழம் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதற்கு இந்த இராவணன் காலத்து புராதன "நான்கு ஈச்சர ஆலயங்கள்"வரலாற்று ஆதாரங்களாகும்....!!

இராவணனை பற்றி வட இந்திய இலக்கியமான இராமாயணத்தில் சொல்ல பட்டு இருக்கிறதேயன்றி எந்த தமிழ் இலக்கியத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது? கம்பன் இராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்ததால் இராவணனை நாம் அறிந்து இருக்கிறோம். இராவணன் சிவ பக்தன், ஆனால் தமிழன், தமிழ் பேசினான் என்று எந்த ஆதாரமும் இல்லையே? வட இந்திய கடவுளான சிவனை வழிபடுபவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அவர்களில் தமிழ் பேசாதவர்கள் ஏராளம்.

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, ampanai said:

இல்லை, அப்படி கட்டிடங்களை கட்டும் திறமை இருந்திருக்காது, உண்மை. 
ஆனால், ஒரு வித வழிபாடு அந்த இடங்களில் இருந்திருக்கின்றது.  

மனிதர்களிடையே collective learning என்பது உருவானதே ஹோமோ சேபியன்ஸ் உருவான பின்னர் தான்.  ஒரு 40 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் உருவாகியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வு சொல்கிறது. இப்படி இருக்க கடவுளரும் வழிபாட்டு முறையும் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக எந்த வகையான ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்? புராணங்கள்? இதிகாசங்கள்? ஏனெனில் 1.2 மில்லியனுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஆராயும் தொழில்னுட்பங்களே இன்னும் உருவாகவில்லை.

 • Like 4

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Jude said:

வட இந்திய கடவுளான சிவனை வழிபடுபவர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். அவர்களில் தமிழ் பேசாதவர்கள் ஏராளம்.

சிந்துவெளி முதல் குமரிக்கண்டம் வரை தமிழன் ஆண்ட காலம் முதல் தமிழரின் கடவுளா சிவன் இருந்து வருகிறார். பின்னர் வட இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களும் சிவனை வழிபட வரலாறு தெரியாத சிலர் தான் சிங்களவன் ஸ்டைல்ல சிவன் வட இந்தியர்ட கடவுள் என்டு புளுடாவிட்டு பாக்கினம்.

வத்திக்கான் லோர்ட் ஜீசஸ் ஐ வழிபடுபவர்கள் தமிழர் அல்லாதவர்கள் தான் அதிகம். தமிழன் ஊர்ல இருந்து பல்லாயிரம் மைல்கல் தூரத்துல இருக்கிற ஜீசஸ் ஐ தூக்கி பிடிப்பவர்கள் ஈழம் வந்து ஆக்கிரமித்த போது கபட முறையில் சில தமிழனையும் ஜீசஸ் ஐ வழிபட வைத்தனர். அந்த வழித்தோன்றல்கள் சிலர் இப்ப திருக்கேதீஸ்வரத்தில காடைத்தனத்தில இறக்கி இருக்குதுகள்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, Rajesh said:

இந்த விடயத்தை மதங்களுக்கிடையேயான மோதலாக மாற்றாமல் பேச உங்களால் முடியுமா?

குமரிக்கண்டம் சிந்து வெளி நாகரீகங்கள் 1.2 மில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்தனவா? தமிழ் புராதனம் மிக்கது என்பது நிரூபிக்கப் பட்ட ஒன்று! ஆதாரமுள்ள தமிழ் புராதனத்தை விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாற்பட்ட நம்பிக்கைகளோடு  இணைத்து ஏன் புருடா விட வேண்டும்? அது தமிழுக்கோ ஈழத்திற்கோ என்ன நன்மையைக் கொண்டு வரும் என்று சொல்லுங்கள்? 

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
23 hours ago, ampanai said:

ஆனால், அதே எதிர்ப்பாளர்களால் நடக்கும் புத்த மத ஆக்கிரமிப்பிற்கு எதிராக எந்த வலுவான மாற்றுக்கருத்தையும் வைக்க முடியவில்லை.

இதற்கு யாரேனும் பதில் வைத்துள்ளீர்களா? இல்லை என்பதே உண்மை 🙂 

எங்கே ஒரு வெற்றிடம் இருக்கின்றதோ அங்கே ஒன்று தோன்றும். அது மாதமாக மனித வரலாற்றில் இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும். அது இன விரிசலாக இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும். அது பொருளாதார இருந்துள்ளது, இருக்கின்றது இருக்கும்.

இதில் தான் நாம் அனைவரும் சிக்கி சுற்றுகின்றோம்.

Share this post

Link to post
Share on other sites

பொதுவாக மனிதர்காளால், அதுவும் ஆங்கிலேயர்காள் கூறப்படுவது, பூமியின் வயது என்ன?

4.5 பில்லியன்கள். காரணம், அவர்கள் தான் உலகை ஆளுகிறார்கள். இதைத்தான் பாடப்புத்தகங்களில் எல்லோரும் படிக்க வேண்டும்

அவர்கள் 4.5 பில்லியன்கள் என்றாலும் அதுதான் உண்மை இல்லை 45 பில்லியன்கள் என்றாலும் அதுதான் உண்மை.

எமது முன்னோர்கள் 1.2 மில்லியன்கள் (உலகத்தின் வயதில் நாலாயிரத்தில் ஒன்று, வயது 4.5 பில்லியன்கள் ) என்றால் ஆதாரம் கேட்போம். நாளை நாமே இருக்க மாட்டோம்  ஆதாரம் கேட்க.

ஆனால், உலகின் மூத்த குடி தமிழ் மக்கள் என்று மட்டும் கூறி பெருமை எமக்குள்ளேயே கொள்வோம்.

சிக்கல் அவர்கள் இல்லை.

அவர்கள் மட்டும் தான் உண்மை சொல்லுகிறார்கள் என நாமே நம்மை ஒருவித அடிமைகளாக எண்ணி பழக்கப்பட்டு விட்டோம் என்பதை இங்கு வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Justin said:

மனிதர்களிடையே collective learning என்பது உருவானதே ஹோமோ சேபியன்ஸ் உருவான பின்னர் தான்.  ஒரு 40 முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் உருவாகியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வு சொல்கிறது. இப்படி இருக்க கடவுளரும் வழிபாட்டு முறையும் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக எந்த வகையான ஆதாரத்தை வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள்? புராணங்கள்? இதிகாசங்கள்? ஏனெனில் 1.2 மில்லியனுக்கு முந்தைய வாழ்க்கை முறையை ஆராயும் தொழில்னுட்பங்களே இன்னும் உருவாகவில்லை.

எந்த ஆதாரங்களும் இல்லாமல் மடைத்தனமான பொய் புளுகுகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்டவையே இந்து  புராணங்கள். தமிழர்களின் தொன்மை வரலாற்று சிறப்பையும் அவர்களின் பரிணாம முன்னேற்றத்தையும் இந்த அறிவுக்கு சிறிதும் ஒவ்வாத இந்து புராண இதிகாசங்கள் சிதைத்து விட்டன என்பதே உண்மை. இந்த புராணங்களை நம்பி தனது அறிவியல் வளர்ச்சியை இழந்த தமிழர்கள் இன்றும் அதே மனப்பாங்குடன் இந்து புராண இதிகாசங்களை தமக்கு உரியவை என்று நம்பி ஏமாந்த சோணகிரிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

புராணங்களால் அள்ளி விதைக்கப்பட்ட  மூடப்பழக்கங்களை தமது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் தம்மை விட அதை கடைப்பிடிக்காத இனங்கள் பல சமூக அரசியல் பொருளாதார பலத்துடன் வாழ்வதை நடைமுறையில் பார்ததும் இன்னமும் திருந்தாமல்  இருப்பது அடுத்த பல தலைமுறைகளுக்கும் மூட பழங்கங்களை விதைப்பது போன்ற நடவடிக்கைகள்  போது தமிழரது அடிமைத்தனம் தொடரும் என்பதையே உறுதி செய்கின்றன. பிரெஞ்சு புரட்சிபோல் பழமை வாதத்தை தூக்கி எறியும் பாரிய கலாச்சாரப் புரட்சி ஏற்பட்டாலே தமிழர்கள் தமது பெருமையுடன் அடுத்த இனங்களுக்கு நிகராக தோழமையுடன்  தலைநிமிர்ந்து வாழ வழிவகுக்கும்.  அவ்வாறான  தலை நிமிர்வு தமிழரிடையே ஏற்படாமல் தடுக்கவே மறவன் புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் மூலம் மக்களிடையே நஞ்சு தெளிக்கப்படுகிறது. 

Edited by tulpen
 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, ampanai said:

பொதுவாக மனிதர்காளால், அதுவும் ஆங்கிலேயர்காள் கூறப்படுவது, பூமியின் வயது என்ன?

4.5 பில்லியன்கள். காரணம், அவர்கள் தான் உலகை ஆளுகிறார்கள். இதைத்தான் பாடப்புத்தகங்களில் எல்லோரும் படிக்க வேண்டும்

அவர்கள் 4.5 பில்லியன்கள் என்றாலும் அதுதான் உண்மை இல்லை 45 பில்லியன்கள் என்றாலும் அதுதான் உண்மை.

எமது முன்னோர்கள் 1.2 மில்லியன்கள் (உலகத்தின் வயதில் நாலாயிரத்தில் ஒன்று, வயது 4.5 பில்லியன்கள் ) என்றால் ஆதாரம் கேட்போம். நாளை நாமே இருக்க மாட்டோம்  ஆதாரம் கேட்க.

ஆனால், உலகின் மூத்த குடி தமிழ் மக்கள் என்று மட்டும் கூறி பெருமை எமக்குள்ளேயே கொள்வோம்.

சிக்கல் அவர்கள் இல்லை.

அவர்கள் மட்டும் தான் உண்மை சொல்லுகிறார்கள் என நாமே நம்மை ஒருவித அடிமைகளாக எண்ணி பழக்கப்பட்டு விட்டோம் என்பதை இங்கு வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.

அம்பனை,

பூமியின் வயதை, மனித இனத்தின் வரலாற்றை கணிப்பதற்கான ஆய்வுகள் மேற்கு நாடுகளில் தான் செய்யப் பட்டிருக்கின்றன. ஆதாரங்களை எல்லாருக்கும் தெரியக் கூடியதாகபிரசுரம் செய்திருக்கிறார்கள்.  இதை மறுக்கும் கருத்தை வைப்பவர் அதை நிரூபிக்கும் வகையில் ஆய்வைச் செய்ய வேண்டும், பிரசுரிக்க வேண்டும். இது தான் நடைமுறை. இதில் அடிமை மனப்பான்மை எங்கே இருக்கிறது? எந்த ஆய்வும் செய்யாமல் ஒரு கருத்தை வெளியிட்டு "உன் தோல் நிறம் உடையவன் சொல்கிறேன் நம்பு" என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு விளங்கவில்லை!

புராணங்கள், இதிகாசங்கள், சமய நம்பிக்கைகள் என்பவை அறிவியலில் இருந்து முற்றிலும் வேறான belief system. அவற்றுக்கு ஆய்வோ ஆதாரங்களோ தேவையில்லை! ஆனால், ஒரு புராதனம் நிரூபிக்கப் பட்ட மொழியின் வரலாற்றில் அறிவியலுக்குத் தொடர்பில்லாத புராணக் கதைகளைப் புகுத்தினால் அந்த மொழியின் உண்மையான தொன்மையைக் கேள்விக்குள்ளாக்குவார்கள். மகாவம்சத்தைக் கட்டிக் கொண்டு சிங்களவர்கள் படும் அவமானத்தைப் பார்த்த பின்னும் நாம் திருந்த வேண்டாமா?

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, Justin said:

இதில் அடிமை மனப்பான்மை எங்கே இருக்கிறது? எந்த ஆய்வும் செய்யாமல் ஒரு கருத்தை வெளியிட்டு "உன் தோல் நிறம் உடையவன் சொல்கிறேன் நம்பு" என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்று எனக்கு விளங்கவில்லை!

ஜஸ்ட்டின்,
நீங்கள் அவரக்ளின் ஆய்வை ஏற்றுக்கொண்டு அடுத்த இடத்திற்கு செல்கிறீர்கள். நான் செல்லவில்லை. நான் அந்த ஆய்வை ஏற்கவில்லை. நாங்கள் கருத்தில் ஒவ்வாது இருக்கலாம். அதில் நாம் இருவரும் உடன்படலாம்.

ஆனால், நீங்கள் ஒரு பக்க ஆய்வை ஏற்றுக்கொண்டும் மறுபக்க கருத்தை அது ஆய்வு இல்லாதது என்றும் நிராகரிப்பதே ஒரு அடிமைத்தன போக்கு என்பதே என் கருத்து. ஒரு புராணம் என்ற வட்டத்திற்குள் வைத்துவிடுகிறீர்கள். அதை விட ஆய்வு பெரிது என்கிறீர்கள்.

தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்திருந்தால், அங்கே வேறு விதமாக எமது ஒரு சரித்திரம் எழுதப்பட்டிருக்கும். அதனால் தான் ஆளும் வர்க்கத்தால் தான் எங்கும் சரித்திரம் எழுதப்படுகின்றது. அப்படித்தான் மகாவம்சம் எழுதப்படுகின்றது.

நான் குறிப்பிட்டது வெற்றி மற்றும் தோல்வி அடைந்தவனை. ஆனால்,  நீங்கள் தோல் பற்றி குறிப்பிட்ட்து ஒரு அநாகரிகமான கருத்தாக பார்க்கின்றேன்.

நன்றி

அவர்களின் ஆய்வை நீங்கள் ஏற்கவில்லை என்றால் நீங்கள் எந்த ஆய்வை ஏற்றுக்கொள்கின்றீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் ஆய்வுக்கான ஆதாரங்கள் எவை? எப்போது அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன?  செவிவழி வந்த கட்டுக்கதைகளையும், புராண புரட்டுக்களையும் ஆய்வாக அறிவுள்ள மனித சமூகத்தால் ஏற்க முடியாது. 

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

ஜஸ்ட்டின்,
நீங்கள் அவரக்ளின் ஆய்வை ஏற்றுக்கொண்டு அடுத்த இடத்திற்கு செல்கிறீர்கள். நான் செல்லவில்லை. நான் அந்த ஆய்வை ஏற்கவில்லை. நாங்கள் கருத்தில் ஒவ்வாது இருக்கலாம். அதில் நாம் இருவரும் உடன்படலாம்.

ஆனால், நீங்கள் ஒரு பக்க ஆய்வை ஏற்றுக்கொண்டும் மறுபக்க கருத்தை அது ஆய்வு இல்லாதது என்றும் நிராகரிப்பதே ஒரு அடிமைத்தன போக்கு என்பதே என் கருத்து. ஒரு புராணம் என்ற வட்டத்திற்குள் வைத்துவிடுகிறீர்கள். அதை விட ஆய்வு பெரிது என்கிறீர்கள்.

தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்திருந்தால், அங்கே வேறு விதமாக எமது ஒரு சரித்திரம் எழுதப்பட்டிருக்கும். அதனால் தான் ஆளும் வர்க்கத்தால் தான் எங்கும் சரித்திரம் எழுதப்படுகின்றது. அப்படித்தான் மகாவம்சம் எழுதப்படுகின்றது.

நான் குறிப்பிட்டது வெற்றி மற்றும் தோல்வி அடைந்தவனை. ஆனால்,  நீங்கள் தோல் பற்றி குறிப்பிட்ட்து ஒரு அநாகரிகமான கருத்தாக பார்க்கின்றேன்.

நன்றி

அம்பனை,
தோல் நிறம் பற்றி நான் குறிப்பிட்டது மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள்!

ஆனால்  அறிவியல் உண்மைகள் வென்றவர்களால் நிர்ணயிக்கப் படுகின்றன என்ற உங்கள் கருத்தை நான் முற்றாக நிராகரிக்கிறேன்! வரலாறு அப்படி இருக்கலாம்! அறிவியலும் விஞ்ஞானமும் அப்படி அல்ல என்பது என் கருத்து மட்டும் அல்ல, அனுபவமும் கூட. மேற்கத்தைய உலகம் வளர்த்த அறிவியல் பாரம்பரியம், வெறுமனே ஒன்றை ஊகித்து விட்டு அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல! ஆய்வுகள் செய்து எடுகோள்களை நிரூபிக்கிறார்கள். உதாரணமாக 4.5 பில்லியன் ஆண்டுகள் முன்பு பூமி உருவானதை யாரும் பார்த்துச் சாட்சி சொல்லவில்லை! ஆனால், பூமி எவ்வளவு வேகமாக ஆரம்ப வெப்பக் கோளத்தில் இருந்து குளிர்வடைகிறது என்றும், பாறைகளின் வயதை வைத்தும் 4.5 பில்லியன் ஆண்டுகள் பூமி இருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு நிகராக புராணங்கள் எந்த அளவீடுகளையும் முன் வைப்பதில்லையென்பதால் அவை பூமியின் வயதை நிர்ணயிப்பதில் நம்பிக்கையான பங்கைச் செலுத்தவில்லை. ஆனால், மத நோக்கங்களுக்காக ஒருவர் பூமியின்/மனித குலத்தின் வயதை நம்பி ஏற்றுக் கொள்வதில் பிரச்சினையில்லை! அந்த ஏற்றுக் கொள்ளலை விஞ்ஞானம் நம்ப வேண்டும் எதிர்பார்ப்பது தான் பிரச்சினைக்குரியது!  

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
10 hours ago, Rajesh said:

சிந்துவெளி முதல் குமரிக்கண்டம் வரை தமிழன் ஆண்ட காலம் முதல் தமிழரின் கடவுளா சிவன் இருந்து வருகிறார். பின்னர் வட இந்தியாவை ஆக்கிரமித்த ஆரியர்களும் சிவனை வழிபட வரலாறு தெரியாத சிலர் தான் சிங்களவன் ஸ்டைல்ல சிவன் வட இந்தியர்ட கடவுள் என்டு புளுடாவிட்டு பாக்கினம்.

வத்திக்கான் லோர்ட் ஜீசஸ் ஐ வழிபடுபவர்கள் தமிழர் அல்லாதவர்கள் தான் அதிகம். தமிழன் ஊர்ல இருந்து பல்லாயிரம் மைல்கல் தூரத்துல இருக்கிற ஜீசஸ் ஐ தூக்கி பிடிப்பவர்கள் ஈழம் வந்து ஆக்கிரமித்த போது கபட முறையில் சில தமிழனையும் ஜீசஸ் ஐ வழிபட வைத்தனர். அந்த வழித்தோன்றல்கள் சிலர் இப்ப திருக்கேதீஸ்வரத்தில காடைத்தனத்தில இறக்கி இருக்குதுகள்.

சிந்துவெளி முதல் குமரிக்கண்டம் வரை தமிழன் ஆண்ட காலம் என்று ஏன் இப்படி தமிழன் ஆண்ட பிரதேசத்தை குறுக்கி விட்டீர்கள்? தமிழன் வத்திக்கானையும் ரோம சாம்ராஜ்யத்தையும் சீனப் பேரரசையும் ஜப்பானையும் ஆண்ட காலத்தை மூடி மறைக்க சொல்லி உங்களுக்கு சிங்களவன் லஞ்சம் தந்தானா அல்லது வட இந்தியனுக்கு காவடி எடுக்கிறீர்களா? தமிழர் கடவுளான முருகனை ரோமர்கள் லோர்ட் ஜீசஸ் ஆக்கி வழிபட ஆரம்பித்த வரலாற்றை எந்த முஸ்லிமின் ஆதரவுக்காக மூடி மறைக்கிறீர்கள்? 🤪😇

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites
On 8/2/2019 at 10:17 PM, Justin said:

ஒரு குறிப்பிட்ட மதத்தின் பாற்பட்ட நம்பிக்கைகளோடு  இணைத்து ஏன் புருடா விட வேண்டும்?

இங்க புருடா விடுறது நீங்க தான்!

சிவன் வட இந்திய கடவுள் என்டு புருடா விட்டுட்டு மதங்களுக்கிடையேயான மோதலாக மாற்றாமல் பேச உங்களால் முடியுமா? என்ட விதண்டாவாதம் வேறை.

இது போன்ற புருடா விடுற ஆட்களுக்கு சில அல்லக்கைகள் இருக்கத்தான் செய்யும்.

இந்த கும்பலுக்கு வட இந்தியா என்டு ஆரிய கூட்டம் உருவாக முதலே சிவ வழிபாடு தமிழர்கள் மத்தியில் இருந்தது என்ற உண்மை தெரிந்தாலும் கப்சிப் தான்.

தமிழர் பகுதிகளில இயங்கும் கிறீஸ்தவ மதம்மாற்றக் கும்பலுக்கும் திருக்கேதீஸ்வரத்தில் கைவரிசையைக் காட்டிய கிறீஸ்தவ காடையர்களுக்கும் வக்காலத்து வாங்கும் அல்லக்கைகளுக்கு சிவனை வட இந்திய கடவுள் என்டு லேபிள் இடவேண்டிய தேவை இருக்கிறதை புத்தியுள்ள மனுஷர்கள் விளங்குவீனம்.

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Rajesh said:

இந்த கும்பலுக்கு வட இந்தியா என்டு ஆரிய கூட்டம் உருவாக முதலே சிவ வழிபாடு தமிழர்கள் மத்தியில் இருந்தது என்ற உண்மை 

சிவனுக்கு தமிழ் புரியாது என்று தானே வட மொழியான சமஸ்கிரத்த்தில் மந்திரம் சொல்கிறீர்கள்?

வட இந்திய வழி வந்த பிராமணர் வந்து தானே உங்கள் கலியாணம் முதல் கருமாதி வரை எல்லா சடங்கும் செய்ய வேண்டும்?

எந்த வட இந்தியன் சிவன் தமிழ் கடவுள் என்று தமிழில் மந்திரம் சொல்லுறான்? தமிழனே சமஸ்கிரத்த்தில் மந்திரம் சொல்ல பிராமணனை தேடி அலையிறான்.

சைவம் அந்நிய மதம், தமிழர் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறி  வட இந்திய கடவுள்களை அந்நிய பிராமணர் சொல்லி கொடுத்தபடி வட மொழியான சமஸ்கிரதத்தில் வழிபடுகிறார்கள். இது உலகறிந்த உண்மை. இதற்குள் உங்கள் புருடா எங்கும் எடுபடாது. பரிதாபம்😁🤣😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, Rajesh said:

இங்க புருடா விடுறது நீங்க தான்!

சிவன் வட இந்திய கடவுள் என்டு புருடா விட்டுட்டு மதங்களுக்கிடையேயான மோதலாக மாற்றாமல் பேச உங்களால் முடியுமா? என்ட விதண்டாவாதம் வேறை.

இது போன்ற புருடா விடுற ஆட்களுக்கு சில அல்லக்கைகள் இருக்கத்தான் செய்யும்.

இந்த கும்பலுக்கு வட இந்தியா என்டு ஆரிய கூட்டம் உருவாக முதலே சிவ வழிபாடு தமிழர்கள் மத்தியில் இருந்தது என்ற உண்மை தெரிந்தாலும் கப்சிப் தான்.

தமிழர் பகுதிகளில இயங்கும் கிறீஸ்தவ மதம்மாற்றக் கும்பலுக்கும் திருக்கேதீஸ்வரத்தில் கைவரிசையைக் காட்டிய கிறீஸ்தவ காடையர்களுக்கும் வக்காலத்து வாங்கும் அல்லக்கைகளுக்கு சிவனை வட இந்திய கடவுள் என்டு லேபிள் இடவேண்டிய தேவை இருக்கிறதை புத்தியுள்ள மனுஷர்கள் விளங்குவீனம்.

சிவன் யாரின் கடவுள் என்று  நம்பும் உரிமை யாருக்கும் உண்டு! அப்படி நம்புவது மத நம்பிக்கை, அறிவியல் அல்ல! அதை நான் பேசவில்லை. 

 நான் புருடா என்றது 1.2 மில்லியனுக்கு முன்னரே ஈச்சரங்கள் அமைக்கும் மனித நாகரீகங்கள் இருந்தது என்பதையும், குமரிக்கண்டம் இருந்தது என்பதையும் தான்! அமெரிக்கப் பாணியில் சொல்வதானால் "குமரிக்கண்டம்" is not a thing! லெமூரியா என்ற நிலப்பரப்பு மில்லியன் ஆண்டுகள் முன்பு இருந்திருக்கலாம் என்று ஒரு எடுகோளை வெளியிட்டது ஐரோப்பியர்கள். அதை எடுத்து "குமரிக்கண்டம்" என்று பெயரிட்டது 1900 இல் இருந்த சில தமிழார்வலர்கள். இது ஒரு myth மட்டுமே! எந்த ஆதாரமும் இல்லை! 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this