• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

Recommended Posts

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

Aug 02, 2019

 
 

வல்வெட்டித்துறை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று

கடந்த 1989ஆம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்த விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை நடத்தியது.ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச்சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் நடத்தினர்.72 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடுயின்றி 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன

.13882312_155572854873682_4021262686146229333_n

வல்வை நூலகம் தீயிடப்பட்டிருந்தது. பல ஆயிரக்கணக்கான நூல்கள், தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன. 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்

 

.download

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES யின் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES யின் 17.08.89 இதழில் இந்த செய்தி வெளிவந்தது

.67553722_2174695792640622_1725553126062161920_n-300x222

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.13934596_155572874873680_5065849071357984479_n

அன்று இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் பல ஓடிவிட்டன. இன்றும் அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் அந்த மக்களின் மனங்களில் நிலைத்து நிக்கின்றன.இன்று வல்வைப் படுகொலையின் 30 வது ஆண்டு நிகழ்வு வல்வெட்டித்துறையில் நினைவு கூரப்படுகின்றது.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/வல்வெட்டித்துறை-படுகொலை/

 

Share this post


Link to post
Share on other sites

 

 

புண்ணிய பாரதத்தின் புனிதர்கள் சிதைத்துவிட்ட எமது பண்பாட்டுக் கோலங்கள்

 

எனது நெஞ்சத்தில் இரத்தவடுக்களை ஏற்படுத்திச் சென்ற அந்த மூன்று நாட்களை என்னால் மறக்கமுடியாது. எனது எட்டு மாதக் குழந்தை தாய்ப்பாலுக்காக அழுத அந்த சோகம்….

 

“என்ரை பிள்ளைகளை கொல்லாதை, என்னைக் கொல்லு” என்று மன்றாடிய அந்தத் தாயை – எனது மாமியை – கூட்டு வீழ்த்திவிட்டு “ஐயோ… அம்மா……” என்ற கதறல் வெளியே கேட்குமுன் என் இரண்டு மைத்துனர்களைத் துப்பாக்கியால் சுட்ட அந்தக் கொடூரம்….

 

நினைக்க நெஞ்சம் துடிக்கின்றது.

புண்ணிய பாரதத்தின் புனிதக் காவலர்கள் எமது வல்லை மண்ணில் ஏற்ிபடுத்திய அந்த வெறியாட்டம் பதினாறு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையிலும்….

அவர்களால் ஏற்படுத்திச் சென்ற அவலங்களை நினைக்கும்போது….

இரண்டு மைத்துனர்களின் சடலங்களும் அருகருகே கிடத்தப்பட்டிருக்க, துப்பாக்கிச் சூட்டில் குற்றுயிரான எனது மாமியாரையும் பக்கத்தில் படுக்க வைத்து, அடுத்த அறையில் துக்கத்துடனும், பயத்துடனும் துடித்துக் கொண்டிருந்த எனது மனைவி, பிள்ளை இறந்துவிட்ட மைத்துனரின் குடும்பங்கள்.. அவர்களோடு நானும்….

 

வீட்டைச் சுற்றி கடலை எண்ணையின் நாற்றம்…கேற்றின் வெளியே தலைகாட்டும் இந்திய இராணுவச் சிப்பாய்கள்…தமையன்மாரையும் இழந்து என்னையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தில் துடித்த எனது மனைவி.

 

மனைவியின் வேண்டுதலில் நானும், எனது மருமகனும் ( பதினைந்து வயதுப் பையனும்) உடல் முழுக்க எனது மைத்துனரிகளின் இரத்தத்தைப் பூசிக் கொண்டு மைத்துனருக்கருகே நானும் மருமகனும்….. எவ்வளவு நேரம் படுத்துக் கிடப்பது… இரத்தநெடி…பயம்….எல்லாம் சேர்ந்து எமது தலையைச் சுக்குநூறாக வெடிக்க வைத்தது.

“அம்மா… என்னாலை இங்கை படுத்திருக்க ஏலாது….. நான் அடுத்த அறையுக்கை போறன்….” பகல் இரண்டு மணிக்கு நடைபெற்ற கொடூரம்…. பகலை விழுங்க மறுத்த அந்த நேரத்தின் பயங்கரம்……

இரண்டாம் நாள் எனது எட்டு வயது குழந்தை பசியால் அழுதது. மகளின் அழுகையைத் துடைக்க தாயால் முடியவில்லை. தாய் உணவு அழுந்தினால்தானே தாயின் மார்பில் பால் சுரக்கும். வெறும் மார்பு குழந்தையின் பசியைப் போக்குமா..? குழந்தை வீரிட்டு அழுதது. குழந்தையின் அழுகுரல் வீட்டிற்கு அப்பால் உள்ள இராணுத்தை வரவழைத்து விடுமோ…! பயத்தாலும் குழந்தையின் பசியைத் தீர்க்க முடியவில்லையே என்ற சோகத்தாலும் மனைவி துடிக்க…… பக்கத்து வீட்டுப்பெண் தடுப்பு வேலியைப் பியத்து, பயத்துடன் வீட்டில் தயாரித்து வந்த தேனீர் குழந்தையின் அழுகையை நிறுத்தியது.

 

மூன்றாம் நாள் விடிந்தது……

“வாத்தியார் மூண்டு நாளாகுது… முத்தத்திலை போட்டு பிணங்களை எரியுங்கோ….” புண்டணி  ஐயரின் வார்த்தைகளை நாம் சிரமேற்கொண்டோம்

எனது மூத்த மைத்துனர், சம்பவம் நடைபெறுவதற்கு முதல்நாள் காலை தருவித்த பத்து அந்தர் விறகு அவர்களின் ஈமக்கிரியைக்கு உதவியது.. அறையிலிருந்த என்னை வெளியே வர எவரும் விடவில்லை. மனைவிமார் , தங்கை, தினைந்து வயது மகனி மண்ணெண்ணையை ஊற்றி சிதைக்குக் கொள்ளி வைத்தனர். அதே தெரவில் இருந்த இரண்டு சகோதரங்கள்கூட இறந்துவிட்ட சகோதரர்களின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்ள முடியாத அவலம்.

மனம் கருகித் துடித்தது….

அந்தக் கொடூரத் தன்மையை வார்த்தைகளால் வடிக்க முடியாது.

சிதை மூட்டப்பட்டு தீ அந்த இருவரின் உடலையம் விழுங்கிக் கொண்டிருந்தது. எரியும் சிதையிலிருந்து எனது மைத்துனர் ஒருவரின்  கை சூட்எனால் எழும்ப…யன்னலூடாக இந்தச் துயரச் சம்பவத்தைப் பார்த்துக் கொணடிருந்த நான்….. “ ஒரு கட்டைடையைத் தூக்கி கைக்கு மேலே போடுங்கோ….”

என் மைத்துனரின் மனைவி ஒரு கட்டையைத் தூக்கி எனது மைத்துனரின் கைமேல் போட…..

சுடலையில் சிதை எரியும்போது உறவினர்களே அருகில் இருப்பதில்லை…..

இங்கு மனைவியும் , தங்கையும் சிதையை மூட்டிய கொடூரம்…….

நினைக்கவே உள்ளம் துடிக்கிறது.

இது புண்ணிய பாரத பூமியின் புனிதர்கள் விளைவித்த பண்பாட்டு கோலங்கள்….!67812341_10156961122991888_236558676021567690321_10156961122681888_531186543829067614025_10156961122981888_639898555284167912488_10156961122296888_256212933417367697116_10156961121911888_5183267215436

Share this post


Link to post
Share on other sites

காந்தியும், புத்தரும் ரத்தக் கண்ணீர் வடித்த மற்றொரு நாட்கள். இந்த படுகொலையின் துப்பாக்கி ரவைகளும் , குண்டு சத்தங்களும், அழு குரல்களும் இப்பவும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலிகள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this