Sign in to follow this  
ampanai

மன அழுத்தத்தை குறைக்க ரெட் ஒயின் குடிக்கலாமா??

Recommended Posts

ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். 

பரபரப்பான வாழ்க்கை சூழலில் கடும் மன உளைச்சலுக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகியிருப்போம்.  நம் மன அழுத்தத்தை போக்க ரெட் ஒயின் சிறந்த நிவாரணி என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் என்னும் பொருள்தான் நமக்கு ஏற்படும் பதட்டம் மற்றும் மன உளைச்சலால் உண்டாகும் சோர்வு ஆகியவற்றை போக்குகிறது.  

ரெட் ஒயினில் இருக்கக்கூடிய ரெஸ்வரேட்ரால் நரம்பு மண்டலத்தில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.  மேலும் திராட்சையின் தோல் மற்றும் விதையிலும் இந்த பொருள் காணப்படுகிறது.  இதனை கொண்டுதான் ஒயின் தயாரிக்கப்படுகிறது.  இது உடலில் நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் செய்கிறது.  மன கவலை, சோர்வு மற்றும் பதட்டம் கொண்டவர்களுக்கு இந்த ரெஸ்வரேட்ரால் மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆகையால் அவ்வப்போது ரெட் ஒயின் குடித்து வரலாம்.  இதனால் மன அழுத்தம் குறைந்து மனம் ஆற்றுப்படும்!

https://food.ndtv.com/tamil/drinking-red-wine-may-be-good-for-depression-2079113?pfrom=home-mostviewedblogposts

Share this post


Link to post
Share on other sites

எலிகளில் செய்யப் பட்ட ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்கிறார்கள். ஆனால், அவசரப் பட்டு குடிகாரர்களுக்கு ஒரு சாட்டாக நாம் மாற்றி விடக் கூடாது.  சிவப்பு வைன், திராட்சையின் தோல், கச்சான் ஆகியவற்றில் இது தாராளமாக இருக்கிறது. சிவப்பு வைனில் அதிகளவு இருப்பது உண்மை. ஆனால், எவ்வளவு அதிகமாக உள்ளெடுத்தாலும் இயற்கையாக வைனிலும் ஏனையவற்றிலும் இருக்கும் றிஸ்வெரட்ரோல் குடலினால் உறிஞ்சப் பட்டு ஈரலுக்குப் போகும் போதே பெரும்பகுதி உடைக்கப் பட்டு கழிவாக மாற்றப் பட்டு விடுகிறது. இது பின்னர் சிறுநீரிலும் மலத்திலும் வெளியேற்றப் படுகிறது. எனவே, போத்தல் கணக்கில் வைன் குடித்தாலும் அல்கஹோல் ஏறுமேயொழிய றிஸ்வெறட்ரோல் உடலில் அதிகரிக்காது. 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this