Jump to content

`டைப் செய்ய வேண்டாம்; நினைத்தாலே போதும்!’ - ஃபேஸ்புக்கின் அடுத்த `பிக்’ ப்ளான்


Recommended Posts

`இது என்னடா புது வம்பா இருக்கு’ என்று பலரும் இப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். `நினைத்தாலே டைப்பாகிடுமா?’ என்பது பலருக்கும் பீதியை கிளப்பியுள்ளது. அப்படியொரு முயற்சியைத்தான் ஃபேஸ்புக் முன்னெடுத்துள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்றால், அறிவியல் உலகில் இதெல்லாம் சாத்தியம்தான் என்கிறார்கள். குறிப்பாக, பிசிஐ என்று தொழில்நுட்ப ரீதியான வார்த்தை ஒன்றை பயன்படுத்துகிறார்கள். பிரெய்ன் - கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் என்பதுதான் இதற்கு விளக்கம். இதுதொடர்பாக கலிபோர்னியா மற்றும் சான்ஃபிரான்சிஸ்கோ பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தயாரித்த அல்காரிதம் மூலம், ஒருவர் நினைப்பதை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எபிலிப்சிபி நோயால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மூளையில் எலெக்ட்ரோகார்டிகோகிராஃபி கொண்டு அவர்கள் மூளையின் செயல்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. அப்போது, அவர்களிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு சத்தமாகப் பதிலளிக்குமாறு கூறப்பட்டது. நோயாளிகள் பேசும்போது, மூளையின் செயல்பாடுகளை அல்காரிதம் பதிவுசெய்தது. 76 சதவிகிதம் அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே, அந்த வார்த்தைகளை அந்த அல்காரிதம் சரியாகக் கணித்திருக்கிறது. இதன்மூலம், பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாகக் கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக். இது விரைவில் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்றாலும், எதிர்காலத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

https://www.vikatan.com/technology/gadgets/facebook-is-getting-closer-to-reading-your-mind

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக்கின் கனவு: மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் கருவியை உருவாக்க திட்டம்

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைMICHAEL BRENNAN

மக்கள் மனதில் நினைப்பதை தட்டச்சு செய்யும் திறனுடைய கருவியை உருவாக்கும் திட்டம் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.

மூளை செயல்பாட்டை பேச்சாகப் புரிந்துகொள்ளும் இயந்திர அல்கோரிதம்களை உருவாக்கும் ஆய்வுக்கு ஃபேஸ்புக் நிதி உதவி அளித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குத் தயாராகும் கைகால் வலிப்பு நோயாளிகளில் சிலருக்கு மூளையில் எந்த இடத்தில் வலிப்புக்கான மூலம் உருவாகிறது என்பதை பதிவு செய்வதற்காக மூளையில் மின் முனைகள் பொருத்தப்பட்டிருக்கும். அத்தகைய நோயாளிகளின் உடலில் இந்த தொழில் நுட்பம் வேலை செய்தது.

நிமிடத்திற்கு 100 சொற்களை புரிந்துகொள்ளும் வகையில் உடம்புக்குள்ளே பொருத்தப்படும் தேவை இல்லாமல், வெளியிலேயே அணிகிற கருவி ஒன்றை கண்டுபிடிக்க முடியும் என்று ஃபேஸ்புக் நம்புகிறது.

தசை சுருக்கம்

எளிய, பல விடைகளைக் கொண்ட கேள்விகள் சிலவற்றுக்கு சத்தமாக விடையளிக்கும்படி நோயாளிகளிடம், சான் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியோ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கேட்டுக்கொண்டனர்.

பேச்சு திறனிழந்தோருக்கு இந்த பணி உதவும் என்று எட்டி சாங் (வலது) மற்றும் டேவிட் மோசஸ் நம்புகின்றனர்.படத்தின் காப்புரிமைUCSF Image captionபேச்சு திறனிழந்தோருக்கு இந்த பணி உதவும் என்று எட்டி சாங் (வலது) மற்றும் டேவிட் மோசஸ் நம்புகின்றனர்.

அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியை, 75 சதவீத முறையும், அவர்கள் தேர்ந்தெடுத்த விடையை, 61 சதவீத முறையும் அடையாளம் காண்பதற்கு அல்காரிதம்கள் கற்றுக்கொண்டன.

"இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையில் பேச்சை குறிவிலக்கம் (டிகோடிங்) செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது" என்று தெரிவிக்கும் பேராசிரியர் எட்டி சாங், "இங்கு ஒருவர் கேட்கின்ற கேள்விகள், அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில்கள் என உரையாடலின் இரு பக்கங்களையும் குறிவிலக்கம் (டிகோடிங்) செய்வதற்கான முக்கியத்தவத்தை இதில் காட்டுகிறோம்" என்கிறார்.

"பேச்சு என்பது ஏதோ வெற்றிடத்தில் தோன்றுவது அல்ல என்கிற நமது நம்பிக்கையை இது உறுதி செய்கிறது. பேச்சு குறைபாடு உடைய நோயாளிகள் சொல்ல முயல்வதை குறிவிலக்கம் (டிகோடிங்) செய்கிற எந்தவொரு முயற்சியும், அவர்கள் செய்தி பரிமாற முயலுகிற எல்லா பின்னணியையும் கணக்கில் எடுத்துகொண்டு மேம்படுத்தப்படும் என்று அவர் விளக்குகிறார்.

"தற்போது, எஞ்சிய கண் அசைவுகள் அல்லது தசை சுருக்கத்தை கணினி இடைமுகத்தை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தி, பக்கவாதத்தால் பேச முடியாமல்போன நோயாளிகள் மெதுவாக சொற்களை செல்வது குறைக்கப்பட்டுள்ளது" என்கிறார் எட்டி சாங்.

"ஆனால், பலவேளைகளில் சரளமாக பேசுவதற்கு தகவல்களை வழங்க வேண்டிய திறன் அவர்களது மூளையில் இன்னும் உள்ளது. அவர்களிடம் இருப்பதை வெளிப்படுத்த நமக்கு தொழில்நுட்பம் தேவைப்படுகிறது" என்று சாங் குறிப்பிடுகிறார்.

"பாதுகாப்பான இடம்"

விஞ்ஞானி டேவிட் மோசஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். "குறைவான சொற்களை பயன்படுத்தி இதனை நாம் சாதித்துள்ளதை மனதில் கொள்ள வேண்டியது முக்கியமானது. ஆனால், எதிர்கால ஆய்வுகளில் மூளையின் இருப்பதை மொழிபெயர்ப்பதில் நெகிழ்வுத்தன்மையும், துல்லியமும் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்".

ஒயர்படத்தின் காப்புரிமைUCSF

"நிகழ்நேரத்தில் 1,000 சொல் பட்டியலில் நிமிடத்திற்கு 100 சொற்களை குறிவிலக்கம் செய்யலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். சொல் தவறு விகிதம் 17%-க்கு குறைவாக இருக்கும்" என்று ஃபோஸ்புக் அதன் வலைப்பூவில் எழுதியுள்ளது.

"பேச்சை இழந்த நோயாளிகளுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக மின்முனைகள் பொருத்துவதை பயன்படுத்தி இந்த கருத்தை நிரூபிப்பதன் மூலம், அல்கோரிதம்களை குறிவிலக்கமாக்குவதிலும், வெளியில் அணியக்கூடிய கருவி உருவாக்குவதில் நமது மேம்பாடுகள் பற்றி சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தகவல் அளிக்கும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி திரையில் பார்ப்பதைவிட அல்லது மடிக்கணினியை திறப்பதைவிட, கண்களை பார்த்துகொண்டு, எதையும் தவறவிடாமல் பயனுள்ள தகவல்களையும், பின்னணியையும் நம்மால் பராமரிக்க முடியும்.

இந்நிலையில், மூளை ஹேக்கிங் கருவியை மனிதரிடத்தில் சோதனை செய்வதை தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென எலன் மஸ்க்கின் நியூராலிங் நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளது.

இத்தகைய ஆய்வுகளின் அறநெறிகளையும், எதிர்காலத்தில் இது வழங்கும் வாய்ப்புகளையும் ஆராய்வதற்கான நேரம் இது என்று களப்பணியாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

"எனக்கு சுதந்திரமான எண்ணத்திற்கும், கற்பனைகளுக்கும், அவற்றின் தோற்றத்திற்குமான பாதுகாப்பான இடம் மூளை" என்று நியூரோ அறநெறியிலாளர் பேராசிரியர் நிட்டா ஃபராஹானி எம்ஐடி மீளாய்வில் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/science-49191733

இது சரி வந்தால் எனக்கு ரொம்ப சுலபமா இருக்கும், ஆனால் நினைக்கிறதெல்லாம் எழுதினால் மோசமா இருக்குமே! எடிற் பண்ற வசதியையும் தாங்கடாப்பா.

Link to comment
Share on other sites

கத்தி எல்லார் வீட்டிலும் உள்ளது. ஆனால், நம் முன்னோர்கள் 'கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு" என்கிறார்கள் !

"பேச்சை இழந்த நோயாளிகளுக்கு உதவும் முயற்சியின் ஒரு பகுதியாக மின்முனைகள் பொருத்துவதை பயன்படுத்தி இந்த கருத்தை நிரூபிப்பதன் மூலம், அல்கோரிதம்களை குறிவிலக்கமாக்குவதிலும், வெளியில் அணியக்கூடிய கருவி உருவாக்குவதில் நமது மேம்பாடுகள் பற்றி சான் பிரான்சிஸ்கோவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் தகவல் அளிக்கும் என நம்புகிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது."

அதேவேளை எம்மவர்கள் காதல் பற்றிய பாட்டுக்கள் மூலம் இந்த தொழில்நுட்பத்தை நீண்டகாலம் பயன்படுத்தி வருகிறார்கள் 🙂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, suvy said:

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

ஓம் என்ன என்ன நீங்க நினைக்கிற எனக்கு விளங்குது என்று சொல்வது நமக்கு மட்டும் உள்ளால கேட்குது என்ன அண்ண

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

இவர்கள் இனிதான் கண்டு பிடிக்க வேண்டும். ஏற்கனவே வீட்டில ஒண்டு இருக்கு, இசகு  பிசகாய யோசிக்கவும் முடியல்ல ,சுழிச்சுக்கொண்டு அங்கால இங்கால  போய்வரவும் முடியல்ல....!  😂

அப்பிடி என்னத்த இசகு பிசகா யோசிச்சிருப்பீங்க?!
எங்க சுழிச்சு ஓட பாக்கிறீங்க?!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.