Jump to content

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் யார்?


Recommended Posts

இலங்கை தனித்து பெளத்த சிங்கள நாடு என்ற மமதைத்தனம் நாட்டை படுபாதாளத்தில் தள்ளிவிட்டது. 

நாட்டின் வர்த்தக முயற்சிகள் தள்ளாடிக் கொண்டிருக்கின்ற நிலையில், கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அதிலும் குறிப்பாக சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியானது பல்வேறு துறைகளிலும் பாதிப்பை விளைவித்துள்ளது.

இவை ஒருபுறமிருக்க, உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக் குதலுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தொடர்பில்லை என்பதாக இப்போது கதை விடப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து குறித்த குண்டுத்தாக்குதலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதமே நடத்தியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பில் ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. தவிர, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்குதல் நடத்தலாமென இந்தியா வின் புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்த தான தகவல்களும் உண்டு.

நிலைமை இதுவாக இருக்கையில், ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கை மீது தாக்கு தல் நடத்துவதை விட்டு விடுமாறு இந்த நாட்டின் ஜனாதிபதி பெளவியமான வேண்டுதல் ஒன்றை முன்வைத்திருந்தார்.

இவையயல்லாம் நடந்துமுடிந்த நிலையில் இப்போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக் கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என படைத்தரப்பு அதிகாரிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்பாகக் கூறிவருகின்றனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்தஞாயிறு தினத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்கு தலை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளே நடத்தினர் என முதலில் தெரிவித்தவர்கள் இப்போது அதிரடியாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதத்துக்கும் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கும் தொடர்பில்லை எனக் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுவதன் பின்னணியில் இருக் கக்கூடிய காரணங்கள் என்ன என்பது ஆய்வுக்குரிய விடயம்.

இவற்றுக்கு மேலாக ஒட்டுமொத்தமாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்த முஸ்லிம் எம்.பிக்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அடுத்து அமைச்சர் ரிசாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் எனக் கேட்டிருந்த பெளத்த பிக்குகள், இப்போது வாய்பொத்தி மெளனமாக இருக்கின்றனரெனில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதம் தாக்குதலை நடத்தவில்லை என்று கூறுவதற்கும் பெளத்த பிக்குகளின் மெளனத்துக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா என்று ஆராய்வதும் அவசியமாகிறது.

http://valampurii.lk/valampurii/content.php?id=19157&ctype=news

Link to comment
Share on other sites

உயிர்த்தஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள் யார்? என்ற தொடர் விசாரணை இலங்கை என்ற நாட்டில் நீதியை தேடிய தொடர் பயணம் என்ற போர்வைக்குள் அரங்கேற்றும் பல உள்குத்துக்களை காட்டுகின்றது. 

இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு விசாரணை என்பதெல்லாம் கூட அரசியல். இது தொடர் தமிழன அழிப்பில் தொடங்கி இன்று சகல அரசியல் விசாரணைகளிலும் புற்று நோயாக பரவிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- ஐஎஸ் அமைப்பின் தலைமைக்கு தொடர்பா? ஐநா நிபுணர்கள் விசேட அறிக்கை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களிற்கு ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி உரிமை கோரியிருந்தார் ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு அதன் விசேட கண்காணிப்பாளர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை முன்னெடுத்த தேசிய தவ்ஹீத் ஜமாத்தும் ஜேஎம்டீ அமைப்பு 2014 இல் உருவாக்கப்பட்டவை என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது. 

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தாக்குதலிற்கு முன்னர் 50 உறுப்பினர்களை கொண்டிருந்தது எனவும் ஐநா குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஜேஎம்ஐ அமைப்பு 2015 இல் உருவாக்கப்பட்டதாகவும் அது சுமார் 150 உறுப்பினர்களை கொண்டிருந்ததாகவும்  அவர்களில் பலர் சிரியா சென்று ஐஎஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றனர் எனவும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் இணையம் மூலம் ஐஎஸ் அமைப்பு உள்ளுர் வெடிகுண்டுகளை தயாரிக்கும் முறை குறித்து கற்றுள்ளனர் மேலும் தாங்கள் தயாரித்த குண்டுகளை பரிசோதனை செய்துள்ளனர் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலிற்கு உரிமை கோரியுள்ள போதிலும் உறுப்பு நாடுகள் மேற்கொண்ட விசாரணைகள் ஐஎஸ் அமைப்பிற்கு இந்த தாக்குதலுடன் நேரடி தொடர்பில்லை என்பதும் அந்த அமைப்பு முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் உள்ளுரிலேயே உருவாக்கப்பட்டதுடன் ஐஎஸ் அமைப்பின் நடவடிக்கைகளால் உந்தப்பெற்று முன்னெடுக்கப்பட்டது எனவும் எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

easter-day-attack.jpg

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஐஎஸ் அமைப்பின் பிரச்சாரங்கள் தொடர்ந்தும் கவனத்தை ஈர்ப்பவையாக உள்ளதையும் உள்ளுர் குழுக்கள் எதிர்பாராத இடங்களில் உருவாகி  குறிப்பிடத்தக்க பயங்கரவாத திறனை உருவாக்குபவையாக மாறக்கூடிய ஆபத்துள்ளதையும் புலப்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது எனவும் அறிக்கையில் ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

.ஐஎஸ் அமைப்பு தற்போது இலங்கையில் இடம்பெற்றது போன்ற ஐஎஸ் அமைப்பினால் உத்வேகம் பெறப்பட்ட தாக்குதல்களை நம்பியுள்ளது என ஐநாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.virakesari.lk/article/61837

 

Link to comment
Share on other sites

  • 1 year later...

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பூஜித் பொறுப்பேற்று பதவி விலகினால் அவருக்கு தூதுவர் பதவியை வழங்க தயார் என சிறிசேன தெரிவித்தார்- முன்னாள் பாதுகாப்பு செயலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிரதிபொலிஸ்மா அதிபர் பூஜித்ஜயசுந்தர பொறுப்பேற்றால் வெளிநாட்டு தூதுவர்பதவியை அவருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன முன்வந்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


2019 ஏப்பிரல் 21 ம்திகதி இடம்பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று அக்காலப்பகுதியில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜித்ஜயசுந்தர பதவிவிலகினால் அவருக்கு ஓய்வூதிய த்தை வழங்குவதுடன் வெளிநாடொன்றின் தூதுவராகஅவரை நியமிப்பதாக ஏப்பிரல் 24 ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இது குறித்து தனதுஆலோசனையை பூஜித்ஜயசுந்தர நாடினார் என ஹேமசிறிபெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
எனினும் பாரதூரமான விடயம் என்பதால் நான் அதனை தவிர்த்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நான் பூஜித்தை அந்த விடயத்தினை அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆராயுமாறுகேட்டேன் என ஹேமசிறி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் பிடியிலிருந்து பொலிஸ்மாஅதிபரை விடுவிக்க முடியும் எனவும் மைத்திரிபாலசிறிசேன அவருக்கு தெரியப்படுத்தினார் என ஹேமசிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/69893

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/8/2019 at 16:59, கிருபன் said:

ஆனால் உண்மையில் இவ்வாறான தாக்குதல்கள் குறித்து ஐஎஸ் அமைப்பிற்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என ஐநா தெரிவித்துள்ளது

குண்டுத்தாக்குதலின் சூத்திர தாரிகளை ஐ. நா. வெளிப்படுத்தி விடும் என்று பயப்படுகிறார்களோ?

Link to comment
Share on other sites

உயிர்த்தஞாயிறு தாக்குதல் -மைத்திரியின் பேரம் அம்பலம்

உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு உறுதிமொழி அளித்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதல் நடைபெற்றது.

இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அழைத்து உயிர்த்தஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தால் பல்வேறு சலுகைகளை அளிப்பதாக உறுதிமொழி அளித்துள்ளார்முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன .

இதன்படி ஓய்வூதியத்தை அளித்தல் அத்துடன் அவர் விரும்பும் நாட்டில் தூதுவராக நியமித்தல் என்பனவே அவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலரின் இந்த வாக்குமூலம் மைத்திரிபாலவிற்கு பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

https://www.ibctamil.com/srilanka/80/150876?ref=home-imp-parsely

Link to comment
Share on other sites

ஹரின் பெர்னான்டோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது; கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரிப்பு

 

 

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களின் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவால் பேராயர் மீது உண்மைக்கு புறம்பான, அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராயர், ஆயர்கள் அல்லது எந்தவொரு காத்தோலிக்க பாதிரியார்களோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருக்கவில்லை என பேராயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

http://thinakkural.lk/article/70279

 

 

முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் குற்றச்சாட்டை நிராகரித்தார் சிறிசேன

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்

.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய பூஜிதஜயசுந்திர தாக்குதலுக்கான பொறுப்பையேற்று பதவிவிலகினால் அவரை வெளிநாட்டு தூதுவராக நியமிப்பதாகவும் ஓய்வுதீயத்தை பெற்றுதருவதாகவும் சிறிசேன தெரிவித்தார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டிருந்தார் .
ஆனால் முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையொன்றில் இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளதுடன் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை தீயநோக்கம் கொண்டவை என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்காலத்தில் உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுமுன்னிலையில் ஆஜராவதற்கு வாய்ப்பு கிடைத்தால் அவர் உண்மையை தெளிவுபடுத்துவார் என அவரது செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

http://thinakkural.lk/article/70286

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.