• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
poet

இருமை. - வ.ஐ.ச.ஜெயபாலன்.

Recommended Posts

 

”காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.”

Image may contain: one or more people, glasses and close-up

.

இருமை.
- வ.ஐ.ச.ஜெயபாலன்.
.
நான் சிறுசாய் இருக்கையில்
உலகம் தட்டையாய் இருந்தது.
எங்க பாட்டிக்குத் தெரிந்த ஓர் அரக்கன்
ஒருமுறை உலகைப் பாயாய்ச் சுருட்டி
ஒளித்து விட்டானாம்.
அப்போதெல்லாம்
பகல்தொறும் பகல்தொறும்
ஏழு வண்ணக் குதிரைத் தேரில்
சூரியன் வருகிற வழி பார்த்திருந்து
பாட்டி தொழுவாள் நானும் தொடர்வேன்.
.
ஒரு நாள் வகுப்பறையில்
என் அழகான ஆசிரியை
உலகை உருண்டையாய் வனைந்து
பிரபஞ்சத்தில் பம்பரம் விட்டாள்.
சூரியனை தேரினால் இறக்கி
பிரபஞ்சத்தின் அச்சாய் நிறுத்தினாள்.
பின்னர் கல்லூரியிலோ
ஆசிரியர்கள் பிரபஞ்சத்துள்
கோடிகோடி சூரியன் வைத்தார்.
.
இப்படியாக என்
பாட்டியின் மானச உலகில்
வாழ்வு மனசிலாகியது.
கற்ற உலகிலோ எனது அறிவு
கவசம் பூண்டு ஆயுதம் தரித்தது.
இந்த இருவேறு உலகும்
என் இருப்பு நதியின்
எதிர் புதிர்க் கரைகள்.
.
நதியின் அக் கரையோ
முன்பொரு காலத்தில்
அங்கு உண்மை பேசியதால்
ஏழை விறகு வெட்டிக்கு
பொற்கோடரியும் தருகிறாள்
வனதேவதை.
இக் கரையோ எதிர்காலத்தில்,
அங்கு மனிதனையே
பிரதிமை செய்கிறார்கள் விஞ்ஞானியர்கள்.
.
காற்றரனாய்
தீபத்தில் கூப்பிய கரம்போல்,
அலைப்புறும் என்மீது
நம்பிக்கைகளும் விஞ்ஞானங்களூம்.

Share this post


Link to post
Share on other sites

கழுவித் துடைத்து சோறூட்டிய பாட்டிக்கு ஒரு அன்பான பாட்டி என்று கூடச் சொல்லத்  தோணவில்லை.பிரம்பால் மொழியில் அடிக்கும் ஆசிரியை "என் அழகான ஆசிரியை"யாம். ம்....அப்பவே பழுத்தாச்சு ( பகிடிக்கு).....!   😂 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

உங்கள் அன்புக்கு நன்றி சுவே.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • 😂   நானும் மக்கள் வீதத்தில் அசுர வளர்ச்சி என்றவுடனே அரபுகாரர்களையும் அவர்களை பின்பற்றும் ஆசியநாடுகளை சேர்ந்தவர்களையும் தான் நினைத்தேன்.
    • இரண்டு பேருக்கும் மட்டுமல்ல  குடும்பத்துக்கே கோலாகலம் தான்.
    • கறுப்பி வந்து சேருமட்டும் சிலர் என்ற கணக்குத்தான்😜
    • என்ன சிலர் என்று போட்டிருக்கு. ஏற்கனவே பலர் ஆதரவு தெரிவித்திருக்கிறமே? குமாரசாமி ஒராள் வந்தாலே பத்து பேருக்கு சமம்.அப்புறம் என்ன?
    • சங்கக்காரவின் அரைச்சதத்தோடு மெரில்போன் கிரிக்கெட் கழகம் வெற்றி     By Mohamed Azarudeen -     பாகிஸ்தான் லாஹூர் நகரில் நேற்று (19) நடைபெற்ற முல்டான் சுல்டான்ஸ் மற்றும் மெரில்போன் கிரிக்கெட் கழகம் இடையிலான கண்காட்சி T20 போட்டியில், மெரில்போன் கிரிக்கெட் கழகம் 72 ஓட்டங்களால் வெற்றியை பதிவு செய்தது. சர்வதேச கிரிக்கெட்டை பாகிஸ்தான் மண்ணுக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்குடன் பாகிஸ்தான் சென்றுள்ள, குமார் சங்கக்கார தலைமையிலான மெரில்போன் கிரிக்கெட் கழகம் (MCC) அங்கே மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றது. அந்தவகையில், மெரில்போன் கிரிக்கெட் கழக வீரர்கள் அவர்களின் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தில் இறுதியாக விளையாடும் போட்டியாக, சஹீட் அப்ரிடியின் PSL அணியான  முல்டான் சுல்டான்ஸ் உடனான T20 போட்டி அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மெரில்போன் கிரிக்கெட் கழகத் தலைவர் குமார் சங்கக்கார, முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தனது தரப்பிற்காக பெற்றுக் கொண்டார்.  குமார் சங்கக்காரவின் முடிவுக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய மெரில்போன் கிரிக்கெட் கழக அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற தவறினாலும், அணித்தலைவர் குமார் சங்கக்கார, மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் ரவி போபரா ஆகியோர் அதிரடி கலந்த பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.  தொடர்ந்து இந்த இரண்டு வீரர்களும் அரைச்சதம் விளாச மெரில்போன் கிரிக்கெட் கழக அணியினர் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். மெரில்போன் கிரிக்கெட் கழகம் சார்பான துடுப்பாட்டத்தில் ரவி போபரா ஆட்டமிழக்காது 37 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் 7 பெளண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்கள் பெற, குமார் சங்கக்கார 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 3 பெளண்டரிகள் உடன் 52 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம், முல்டான் சுல்டான்ஸ் அணியின் பந்துவீச்சு சார்பில் அலி சபீக் 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் இல்யாஸ், ஜூனைட் கான் ஆகியோர் தங்களிடையே தலா ஒரு விக்கெட் வீதம் பகிர்ந்து கொண்டனர். பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 185 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய முல்டான் சுல்டான்ஸ் அணியினர் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவினர். முல்டான் சுல்டான்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பாக குஸ்தீல் ஷாஹ், போராட்டமான ஆட்டம் காண்பித்து 26 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 45 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேநேரம், மெரில்போன் கிரிக்கெட் கழகத்தினுடைய பந்துவீச்சு சார்பாக இடதுகை சுழல் வீரரான இம்ரான் கையூம் வெறும் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்ற, ப்ரட் கிளாஸ்ஸன் 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தார். இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் குமார் சங்கக்காரவின் மெரில்போன் கிரிக்கெட் கழகம் தமது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை, இரண்டு வெற்றிகளுடனும், இரண்டு தோல்விகளுடனும் நிறைவு செய்து கொள்கின்றது.  போட்டியின் சுருக்கம்